5 பிப்., 2011

பயோடேட்டா - நவீன இலக்கியவாதி...

பெயர்                                   : நவீன இலக்கியவாதி 
இயற்பெயர்                        :  'எளுத்தாளர்'
தலைவர்                             :  சாருவுக்கும்,ஜெமோவுக்கும் போட்டி நடக்கின்றது
துணைத் தலைவர்              : உயிர்மை,காலச்சுவடு, தமிழினி பதிப்பக

                                                         உரிமையாளர்கள்
மேலும்
துணைத் தலைவர்கள்  
  : ICICI அக்கவுண்டுக்கு பணம் அனுப்புபவர்கள்
வயது                                   : 100 ஆண்டுகள் (உத்தேசமாக பாரதி காலத்துக்குப்பின்)
தொழில்                              : எழுதுவதும், புலம்புவதும்
பலம்                                     : இண்டலக்சுவல் ஒளிவட்டம்
பலவீனம்                             :  அதே ஒளிவட்டம் சக 'எளுத்தாளர்'களாலேயே 

                                                     கிழிக்கப்படுவது
நீண்ட கால சாதனைகள்        :  "என்ன லண்டன்ல கூப்டாக, அமெரிக்கால 

                                                                  கூப்டாக...ஏன் அண்டார்டிகாவுலகூட கூப்டாக"
                                                                  டைப் வசனங்கள்
சமீபத்திய சாதனைகள்           : "ஹலோ தன்ராஜா... நான் இப்போ ரொம்ப 
                                                                 பிஸீஈஈஈ..."( நன்றி: கவுண்டமணி)
நீண்டகால எரிச்சல்                : சுஜாதா
சமீபத்திய எரிச்சல்                   : ப்ளாக்கர்கள் எல்லாம் புஸ்தகம் 

                                                              போட வந்துட்டாங்களே...
மக்கள்                                  : சினிமா ரசிகர்களுக்கு சளைத்துவிடாமல் கோஷ்டி 

                                                 பிரிந்துஅடித்துக்கொள்ளும் வலைப்பதிவு ரசிகமணிகள்
சொத்து மதிப்பு                          : பழைய புத்தகக்கடைக்குப் போட்டியாக...
நண்பர்கள்                                  : என்ன கிறுக்கினாலும் அதிலும் 'அர்த்தம்' 

                                                             கண்டுபிடிப்பவர்கள்
எதிரிகள்                                      : சரோஜாதேவிக்கு இணைவைத்து 

                                                            'பாராட்டுபவர்கள்'
ஆசை                                           : ஒரு லட்சம் காப்பிகளோடு சாகித்ய அகாடெமியும்
நிராசை                                       : இரண்டுக்குமே வாய்ப்பில்லை
பாராட்டுக்குரியது                    : எவ்வளவு 'அடிச்சாலும்' தாங்குவது
பயம்                                             : பாராட்டுக் கடிதங்களில் 

                                                          'கொண்டை' தெரிந்துவிடுமோ?
கோபம்                                        : "நாம 1000 பக்கம் எளுதுனா அவன் 

                                                            2000 பக்கம் எளுதுறானே?"
காணாமல் போனவை              : பாரதி போன்ற பிதாமகன்களுக்கு இருந்த 

                                                                 சமூகக்கோபமும், அறச்சீற்றமும்
புதியவை                                    : ஜால்ரா தட்டுவது

                                                      ( சாமியார்களுக்கும் (சக) எளுத்தாளர்களுக்கும்)
கருத்து                                        : அப்படி ஏதாச்சும் இவங்க எழுத்துல இருக்கான்னு 

                                                       கண்டுபிடிக்க முயற்சி பண்ணிட்டு இருக்கேன்
டிஸ்கி                                          : இலக்கியம் மண்ணாங்கட்டி தெருப்புழுதி 
                                                        இதெல்லாம் மக்களுக்கானது இல்லையா???

35 கருத்துகள்:

எஸ்.கே சொன்னது…

ரொம்பவே ரசிச்சேன் சார்!

Unknown சொன்னது…

//பயம்: பாராட்டுக் கடிதங்களில் 'கொண்டை' தெரிந்துவிடுமோ?//
சூப்பர் சூப்பர் சூப்பர்

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பெயரில்லா சொன்னது…

>>> புஷ்பம் அழகாக பூத்திருக்கிறதுன்னு எழுத சொன்னா "புய்ப்பம் அழகாக பூத்திருக்கிறதுன்னு".. எழுதுறாங்க...எங்க அப்பா தமிழ் வாத்தியாரு..ஒரு வார்த்தை தமிழ்ல தப்பா பேசுனா கூட அருவா எடுத்து வெட்டிருவாரு(ஊருக்கு வாங்கண்ணே... நம்ம தலைவர் ரசிகர் மன்றம் தொடங்கியதும் கச்சேரியை ஆரம்பிக்கலாம்)

Unknown சொன்னது…

//நீண்டகால எரிச்சல் : சுஜாதா//

இதுதான் தாங்க முடியல! வேற எத வேணாலும் சகித்துக் கொள்ளலாம்.
'சுஜாதா என்ன சாதித்தார்?' என்றெல்லாம் கேக்குறவங்க இருக்காங்க. தாங்கள் பிரபலமாக இப்படி ஒரு கேள்வி கேட்டு கவனத்தை ஈர்ப்பவர்கள் பலர்!
உண்மையான இலக்கியவாதி தலைவர் சுஜாதா தான்!
சூப்பர் தல!

Unknown சொன்னது…

"ஹலோ தன்ராஜா... நான் இப்போ ரொம்ப பிஸீஈஈஈ..."( நன்றி: கவுண்டமணி).. ... மீண்டும் ஒரு முறை தங்களது எழுத்தின் அட்டகாசம் பட்டையை கிளப்புகிறது.

Bibiliobibuli சொன்னது…

//இண்டலக்சுவல் ஒளிவட்டம்//

I like your notion of 'Halo Effect'. :)

vinthaimanithan சொன்னது…

//I like your notion of 'Halo Effect'. :) //
புரியலக்கோவ்! :))))

vinthaimanithan சொன்னது…

அலோ...கேஆர்பியா... நான் இப்போ ரொம்ப பிஸீஈஈஈஈஈ....

Bibiliobibuli சொன்னது…

செந்தில்,

முடிந்தால் ஹோஸ்னி முபாரக் பற்றி ஓர் பயோ டேட்டா போடுங்கள்.

முபாரக்கின் தனிச்சொத்து 17 பில்லியன். குடும்பச்சொத்து 70 பில்லியன். வேறென்ன அமெரிக்கன் டோலார்களின் தான்.

விந்தைமனிதன், கூடிய சீக்கிரமே உங்களைப்பற்றி நான் ஒரு பயோடேட்டா போடப்போகிறேன் பாருங்கள். செந்திலின் தளத்தில் உங்கள் அட்டகாசம் தாங்கமுடியல. :)))

idroos சொன்னது…

Neenga sonna sila vishayangal en siru moolaikku pidipadala.
Purinthavarai rasithen.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

ரசிச்சேன்

நசரேயன் சொன்னது…

//இலக்கியம் மண்ணாங்கட்டி தெருப்புழுதி
இதெல்லாம் மக்களுக்கானது இல்லையா???
//

தெரியலையே

Philosophy Prabhakaran சொன்னது…

// சினிமா ரசிகர்களுக்கு சளைத்துவிடாமல் கோஷ்டி
பிரிந்துஅடித்துக்கொள்ளும் வலைப்பதிவு ரசிகமணிகள் //

சூப்பர்ப்...

காமராஜ் சொன்னது…

இலக்கியம்,மண்ணாங்கட்டி,தெருப்புழுதி எல்லாம் மக்களுக்கானது

மேலே உள்ள அணைத்துக்கும் ஒரு சபாஷ்.

கடைசிக்கு பெரிய்ய சபாஷ்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

நல்ல கடி!

மாணவன் சொன்னது…

சூப்பர்...

எல் கே சொன்னது…

@ராஜாராம்
பாது சூதானமா இருந்துக்கோ.


@செந்தில்

ஊருக்கு போயும் நெட் பக்கமா ?? சரியில்லை

settaikkaran சொன்னது…

//Philosophy Prabhakaran சொன்னது…

// சினிமா ரசிகர்களுக்கு சளைத்துவிடாமல் கோஷ்டி
பிரிந்துஅடித்துக்கொள்ளும் வலைப்பதிவு ரசிகமணிகள் //

சூப்பர்ப்...//

ஒரு ரிப்பீட்டு பார்சல்..! :-)

pichaikaaran சொன்னது…

நீண்டகால எரிச்சல் : சுஜாதா”

உண்மைதான்...

சுஜாதாவை விட நன்றாக எழுதும் எழுதாளர்களுக்கு சுஜாதா அளவுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை...

காரணம் உங்களுக்கே தெரியும்... எனவேதான் எரிச்சல் இருக்கலாம்

பொன் மாலை பொழுது சொன்னது…

நல்லாத்தான் வாரி இருக்கீங்க!
நீண்டகால எரிச்சல்: சுஜாதா
இருக்காதா பின்னே. அவருக்கு இன்றும் இருக்கும் வாசகர் கூட்டம் தமிழில் வேறு எவருக்கும் இல்லை அல்லவா?
இலக்கியவாதி-இந்த சொல் தொடரையே தமிழில் இருந்து ஒழிக்க வேண்டும். எரிச்சலாய் வருகிறது.

iniyavan சொன்னது…

கலக்கல் பயோடேட்டா செந்தில்.

அத்திரி சொன்னது…

அண்ணே சிரிச்சு முடியல.................கிகிகி.................

Anisha Yunus சொன்னது…

//சமீபத்திய எரிச்சல் : ப்ளாக்கர்கள் எல்லாம் புஸ்தகம்
போட வந்துட்டாங்களே...//

வாஸ்தவம்.
நிதர்சனம்.
சத்தியம்.
இன்னும் என்ன வேணும்னாலும் சொல்லலாம்.. ஹி ஹி ஹி... உண்மை, உண்மைதேன்!! :)

Arun Ambie சொன்னது…

//நீண்டகால எரிச்சல்: சுஜாதா //
உண்மை. பலருக்கும் அவர் போலாகும் ஆசை இருக்குமளவு அவர் போலக் கற்கும் ஆசை இருப்பதில்லை.

'பரிவை' சே.குமார் சொன்னது…

ரொம்ப ரசிச்சேன். சூப்பர்.

செந்திலான் சொன்னது…

நீங்கள் சொல்வது சாருவைத்தான் அதனால் சாரு பயோ டேட்டா என்றே பெயர் வைத்திருக்கலாம்

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

மூச்சு விடாம படிச்சேன்.....ஹா ஹா ஹா ஹா மூச்சு முட்டுதுய்யா..ஹா ஹா ஹா......

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//நீண்டகால எரிச்சல் : சுஜாதா//

அட ங்கொய்யால....

ஆச்சி ஸ்ரீதர் சொன்னது…

தாக்கிட்டிங்களே

VR சொன்னது…

அறிவழகன் பயோடேடா தான் இது. இன்னும் சில பாயிண்ட்டுகள் விட்டு போச்சு என நினைக்கிறன்.

பிடித்தது: ஆயிரம் ரூபாய்க்கு வாங்கும் ஜட்டி, நாப்பது ஆயிரம் ரூபாய்க்கு கண்ணாடி.
பிடித்தவர்கள்: மலையாள தேசத்து மக்கள்
பிடிக்காதவர்கள்: தமிழ் நட்டு மக்கள் குறிப்பாக நடுநிலை விமர்சகர்கள்
நீண்டநாள் சாதனை: தனக்கு தானே பாராட்டு கடிதம் எழுதி கொள்வது (கொல்வது)
அடிக்கடி சொல்லுவது: ரெமி மார்டின் குடிக்கும் ஏழை எழுத்தாளன்
நீண்ட கால எதிர்பார்ப்பு: அமெரிக்க பயணம், இலத்தீன் அமெரிக்க பயணம் (யாரும் இளிச்சவாயன் சிக்கலை இன்னும்)

இப்படிக்கு,
ICICI அக்கவுண்டுக்கு பணம் அனுப்பி ஏமாந்து போன ஒரு இளிச்சவாயன்.

vinthaimanithan சொன்னது…

@ VR
நீங்களுமாய்யா :)))

மங்குனி அமைச்சர் சொன்னது…

பாராட்டுக்குரியது : எவ்வளவு 'அடிச்சாலும்' தாங்குவது///


ஹா,ஹா,ஹா .......................... எல்லாம் மக்களின் நன்மைக்காகத்தான் சார்

ஈரோடு கதிர் சொன்னது…

||எளுத்தாளர்||

இதுதான் ஆப்புங்குறதா!!!?

Jegan சொன்னது…

நீங்க சாருவை பத்தி எழுதலை என்பதை நம்பிட்டேன் நம்பிட்டேன்.