1 மார்., 2011

ஸௌராஷ்டிரா பாஷா கலாசாலோ - ௨௦௧௧ (2011)...


பேரன்புடையீர்,

வருகின்ற மார்ச் 17 மற்றும் 18  ம் தேதிகளில், ஸௌராஷ்டிரா கல்லூரி, மதுரையில், ஸௌராஷ்டிரா பாஷா கலாசாலோ - ௨௦௧௧ (2011) எனும் ஸௌராஷ்டிரா மொழி பட்டறையை அமைத்துள்ளோம்,

பட்டறையில், 1500 ஆண்டு முதல் 2011, உள்ள ஸௌராஷ்டிரா இலக்கியத்தின் வளர்ச்சி, மற்றும் மிக எளிமை வாய்ந்த ஸௌராஷ்டிரா எழுத்துக்களின் எழுத்துப் பயிற்சி மற்றும் நூறு ஆண்டுகளுக்கு முன் உள்ள படைப்புகளின் கண்காட்சி (அனுமதிக்கு பின்) ஆகிய நிகழ்வுகள் செயல்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றோம்,

தாய்மொழி, கல்வித் தகுதி, தொழில், ஆகிய எந்த வரைமுறைகளுக்கும், உட்படுத்தாமல், விருப்பமுள்ள அனைவரும் கலந்து கொள்ளும் விதமாக பட்டறை அமைக்கப்பட்டுள்ளது, 


பட்டறையில் கலந்து கொண்டு தங்களின் மேலான, ஒத்துழைப்பினை நல்கி, ஸௌராஷ்டிரா மொழியினை அழிவிலிரிந்து மீட்டெடுக்க பேருதவி புரியுமாறு பணிவுடன் வேண்டுகின்றோம்,

மேலும் விவரங்களுக்கு: 


ஸௌராஷ்டிரா பாஷா கலாசாலோ - ௨௦௧௧, ஸௌராஷ்டிரா மொழி பட்டறை - 2011என்றும் அன்புடன்,

மார்கண்டேயன்.

17 கருத்துகள்:

Chitra சொன்னது…

விரைவில், படங்களுடன் நிகழ்ச்சியை பற்றிய ஒரு விரிவான பதிவு எதிர்ப்பார்க்கிறோம். நிகழ்ச்சி சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்!

மார்கண்டேயன் சொன்னது…

மிக்க நன்றி, செந்தில்,
தங்களின் இந்த உதவி மூலம், ஸௌராஷ்ட்ர மொழி பற்றிய ஒரு சில விவரங்களாவது பலரை சென்றடைந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி,
என்றும் நட்புடன்,
மார்கண்டேயன்

சக்தி கல்வி மையம் சொன்னது…

ஸௌராஷ்ட்ர மொழி பற்றி வாரம் ஒரு பதிவிட்டு எங்களுக்கும் சொல்லிதரலாமே..

அஞ்சா சிங்கம் சொன்னது…

இந்த முயற்சி மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துக்கள் ....

Unknown சொன்னது…

பகிர்வுக்கு நன்றி தலைவரே

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

நிகழ்ச்சி சிறப்பாக அமையவும், நிகழ்ச்சி பற்றிய பதிவைப் பார்ர்க்கவும் ஆவலாக உள்ளேன்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

அண்ணே.. போனவாரம் நடந்த பதிவர் நிகழ்சியை பற்றி, சீக்கிரமா பதிவு எழுதுங்க..

இது நேயர் விருப்பம்...

Unknown சொன்னது…

\\இது நேயர் விருப்பம்...\\

பட்டா, நாளை அந்தப்பதிவுதான்...

Pranavam Ravikumar சொன்னது…

வாழ்த்துக்கள் செந்தில்!

தமிழ் உதயம் சொன்னது…

நிகழ்ச்சி சிறக்க வாழ்த்துகள்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

வாழ்த்துகள் மக்கா...

Unknown சொன்னது…

//ஸௌராஷ்டிரா மொழி//


இது எந்த இன மக்கள் பேசும் மொழி?
தெரியவில்லை. சொல்ல முடியுமா யாரேனும்?

'பரிவை' சே.குமார் சொன்னது…

நிகழ்ச்சி சிறக்க வாழ்த்துகள்.

அன்புடன் நான் சொன்னது…

விழா சிறக்க வாழ்த்துக்கள்.

ஹேமா சொன்னது…

வாழ்த்துகள் செந்தில்.இந்த மொழி பற்றி விபரமும் தாங்களேன் !

Paleo God சொன்னது…

பட்டறை சிறக்க வாழ்த்துகள்!!

ஆச்சி ஸ்ரீதர் சொன்னது…

கண்காட்சி பற்றி படங்களுடன் பதிவை போடுங்கள்,பங்கு பெறாதவர்கள் தெரிந்துகொள்வோம்