13 மார்., 2011

ஸ்பெக்ட்ரம் மசாலா ...



முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற ஒரு விசயமே பிரபல டிவிக்களின் தீபாவளி, பொங்கல் நாட்களில் நடத்தப்படும் பட்டி மன்றங்களுக்கு ஆட்களை வரவழைக்க இப்படித்தான் அறிவிப்பார்கள். இதனால் அறிவாலய அரங்கு நிறைந்த காட்சிகளை பார்த்த பிறகு திருவாளர் ராசாவுக்கு ஒரு புதிய ஐடியா மனதில் உதிக்க உடனே அதனை செயல்படுத்தி பார்க்கும் ஆவலில் தலப்பாவிடம் சொல்லிவைக்க உடனே ஸ்பெக்ட்ரம் விசயத்தில் அதனை பரிசோதனை செய்து பார்க்க முடிவு செய்தனர்.

அதாவது டெண்டர் விட்டால் பத்தாயிரம் கம்பெனிகள் விண்ணப்பிக்கும். பத்தாயிரம் விண்ணப்பங்களில் சரியான கம்பெனிகளை தேர்வு செய்வது என்பது மிகவும் சிரமம் என்பதால் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்று சொல்லிவிடலாம். அது மிகவும் சுலபம். வேலையும் எளிது என தீர்மானம் செய்துதான் அவ்வாறு டெண்டர் விட்டனர். அதன்படியே ஒதுக்கீடும் செய்யப்பட்டது. 

இப்படி செய்ததால் தரமற்ற கம்பெனிகள் சிலவற்றுக்கு ஒதுக்கி விட்டதாக சிலபேர் முனக ஆரம்பித்தனர். அதில் உண்மை இருந்தாலும் சிறிய கம்பெனிகள் முன்னுக்கு வரவேண்டும். என்கிற அரசின் நல்லெண்ணத்தை எவனாவது பாராட்டினானா? 

இதனை கபில்சிபல் மட்டும்தான் சரியாக புரிந்துகொண்டு பாராட்டியிருக்கிறார். அதாவது முதலில் வந்தவனுக்கு முன்னுரிமை என்று கொடுத்ததால் அது தரமற்ற கம்பெனிகள் என்று ஆகிவிடாது டாடா, வோடஃபோன், ரிலையன்ஸ் போன்றவை சாதாரன கம்பெனிகளா என்ன? என ஒரு சரியான வாதத்தினை முன்வைத்திருந்தார்.

எனக்கு என்னமோ இவிங்க சொன்னதுதான் சரியென்று படுகிறது. இப்படியாக மெடிக்கல் சீட்டுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கும் அமுல்படுத்தினால் நன்றாக படித்தவர்கள் மட்டுமல்லாது படிக்காத மாணவர்களுக்கும் அது உதவியாக இருக்கும். இதனால் நிறைய ஏழை மாணவர்கள் டாக்டராகி எளிய மக்களுக்கும் சேவை செய்வார்கள். இப்படி முதலில் வருபவர்களில் படித்த நல்ல மாணவர்களும் இருக்கதானே செய்வார்கள்.

இப்ப சட்டசபைக்கு தேர்தல் நடக்குது இல்லையா! இதுலயும் கட்சி வேறுபாடு இல்லாமே முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்தால் இப்ப எந்த கட்சிக்கு எவ்வளவு சீட் கொடுக்குறது அப்படிங்கிற பிரச்சினையே வராது பாருங்க!. நம்மலப்போல ஆட்களுக்கும் சீட் கிடைச்சா நாமலும் நாலு காசு பாத்து ஸ்கார்ப்பியோ காருல போகலாம் பாருங்க!.  இப்படி முதல்ல வரும் ஆளுங்க இந்த விசயத்துலயாவது ஒரளவுக்கு தரமா வருவாங்க என்பது எவ்வளவு நிதர்சனமான உண்மை. ஏன்னா? இப்ப இருக்கிற எம்.எல்.ஏ பத்தி புதுசா வேற சொல்லனுமாக்கும். 

இப்போ நம்ம தமிழ்நாட்டு கலாச்சாரத்த எடுத்துக்கிடுங்க. தமிழ் கலாச்சாரத்தை காலங்காலமா புளிபோட்டு பளிச்சுன்னு வெளக்கிக்கிட்டு இருக்குறது தமிழ்'சீ'னிமாதான். அதுல பாருங்க ஒரு பொண்ண மொதல்ல தொட்டவன் யாரோ, அவன் அந்த பொண்ண கற்பழிச்சிருந்தாலுஞ்சரி, அவந்தான் அந்த பொண்ண கட்டணும், இல்லாட்டி கலாச்சாரம் கெட்டுப் போயிடும்னு பதினெட்டுப்பட்டி நாட்டாமையெல்லாம் சொம்ப தூக்கிக்கிட்டு வந்து பஞ்சாயத்து தீர்ப்பு சொல்லுவாங்க இல்லையா? அதே மாதிரி தமிழ்க் கலாச்சாரத்துல வந்த ராசா கலாச்சாரப்படிதானுங்களே நடந்துருக்காரு? பாழாப்போன வடநாட்டுப்பயளுவளுக்குத்தான் கலாச்சார எழவெல்லாம் தெரியலன்னா நாமளும் சேந்துக்கிட்டு அவரை திட்டுனா அதில என்ன ஞாயம் இருக்குன்னேன்?

அதேமாதிரி, இப்ப பொண்ணுபாக்க போறோம். மொதல்ல பொண்ணுபாக்க வாரவனுக்கே கட்டிக் கொடுத்துட்டா பஜ்ஜிசொஜ்ஜி, டீ செலவெல்லாம் மிச்சம் பாருங்க!

நம்மூருல நம்ம குடும்பங்களையே எடுத்துக்கிடுங்களேன். குடும்பத்துல மூத்த புள்ளைக்குத்தான் எல்லா மருவாதியும் கெடைக்கும். ஏன்னா அவன் மொதல்ல பொறந்தவன் இல்லையா? கொள்ளிவெக்கிற உரிமைகூட அவனுக்குத்தான் இருக்கு இல்லையா?

இப்படியாக நாம் அடுக்கிக்கொண்டே போகலாம்.. அதனை நீங்கள் பின்னூட்டங்களில் பின்னுங்கள்...

இந்தி தேவையா என்பது பற்றிய விவாதத்திற்கு இங்கிட்டு பாருங்க "இந்தியாவா? 'இந்தி'யா வா?"

21 கருத்துகள்:

வினோ சொன்னது…

அண்ணா, அப்படி பார்த்தா நாற்காலியில் வேற ஆளு இல்ல இருக்கணும்..

Unknown சொன்னது…

அண்ணே உங்க ப்ளாக்க்கு முதல்ல வரவங்களுக்கு ஏதேனும்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பதிவுலகில் கூட முதல் கமென்ட் போடுரவங்களுக்குதான வடை?

Unknown சொன்னது…

தலப்பாவிடம் ???
Who is that?

Unknown சொன்னது…

//நம்மலப்போல ஆட்களுக்கும் சீட் கிடைச்சா நாமலும் நாலு காசு பாத்து ஸ்கார்ப்பியோ காருல போகலாம் பாருங்க!. //
ha ha haa

♔ℜockzs ℜajesℌ♔™ சொன்னது…

///கலாச்சாரத்த எடுத்துக்கிடுங்க. தமிழ் கலாச்சாரத்தை காலங்காலமா புளிபோட்டு பளிச்சுன்னு வெளக்கிக்கிட்டு இருக்குறது தமிழ்'சீ'னிமாதான்.////

புளி கொட்டை எடுத்ததா இல்ல எடுக்காததா?

just doubt ah ....

♔ℜockzs ℜajesℌ♔™ சொன்னது…

///ஒரு பொண்ண மொதல்ல தொட்டவன் யாரோ, அவன் அந்த பொண்ண கற்பழிச்சிருந்தாலுஞ்சரி, அவந்தான் அந்த பொண்ண கட்டணும்,////

அந்த பொண்ணு கைய புடிச்சு இழுதியா ? ....
ஹி ஹி

♔ℜockzs ℜajesℌ♔™ சொன்னது…

///பதினெட்டுப்பட்டி நாட்டாமையெல்லாம் சொம்ப தூக்கிக்கிட்டு வந்து பஞ்சாயத்து தீர்ப்பு சொல்லுவாங்க இல்லையா?///

யு மீன் totally 18 சொம்பு ?
i am weak in maths so just asked a doubt . . .

Unknown சொன்னது…

பந்திக்கு முந்திக்கொள்வது தானே நம்ம பரம்பரை பழக்கம் # பசி இல்லாவிட்டாலும் கூட.

♔ℜockzs ℜajesℌ♔™ சொன்னது…

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

பதிவுலகில் கூட முதல் கமென்ட் போடுரவங்களுக்குதான வடை?///

அப்போ மத்தவங்க ப்ளாக் ல வந்து உக்காந்து இருந்து

197

198

199

200

ன்னு போட்டு வடை யா ஆட்டைய போடுற ரொம்ப நல்லவர் போலீஸ்காரைஎல்லாம்
என்னனு சொல்ல ?
முருகா . . . .

ஜாஸ்மின்- ப்ரியா சொன்னது…

முதலில் காதலித்தவன் இதயத்தை வருடுகிறான். அடுத்து காதலிப்பதாய் சொன்னவன் கண்ணீர் துளிகளை பரிசளிக்கிறான். பெண் பார்க்கும் கொடுமை..நானும் அனுபவித்து வருகிறேன்.

Sivakumar சொன்னது…

பஜ்ஜி சரி அது என்ன சொஜ்ஜி? 1950 தமிழ் சினிமா காலத்துல இருந்து இந்த வார்த்தைய கேட்டுட்டு வர்றேன். ஒரு வெஜ் பப், பெப்சி ரேஞ்சுக்காவது பொண்ணு வீட்டுக்காரங்க மாறவே மாட்டேங்குறாங்க....இந்த சமுதாயத்த எப்படி காப்பாத்த போறனோ...KICK YOU GUYS!

raja சொன்னது…

தனி ஈழத்தை முதலில் வலியுறுத்தி பேசிய தமிழர்களுக்கு முன்னுரிமை கொடுத்திருக்கலாம். நீங்கள் (இந்தியா)எதையாவது கொள்ளைஅடித்து வாயில் போட்டுகொள்ளுங்கள்.

இராமநாதன் சாமித்துரை சொன்னது…

உங்களுக்கு தானைத்தலைவர் மீது நக்கல் ., இருக்கட்டும்...இருக்கட்டும்..

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

"ஸ்பெக்ட்ரம் மசாலா ..." காரசாரமா நல்லா ருசியா இருக்குது. பாராட்டுக்கள்.

vasu balaji சொன்னது…

செல்லாது செல்லாது.

1. அப்புடின்னா எந்த மந்திரி காசடிச்சாலும் முதல்/பிரதமந்திரிக்குத்தான்னு கேக்க முடியுமா?

2. செந்திலே சொல்லிட்டாருன்னு அழகிரிய கெளப்பி விடுற வேலையிது:))

Unknown சொன்னது…

கொளுத்திப்போட்ட உங்களுக்கு நல்லது தலைவரே!

settaikkaran சொன்னது…

ரெண்டு பெண்டாட்டியிருக்கிற தலீவருங்க முதல் பெண்டாட்டிக்குப் பிறந்த குழந்தைகளை மட்டும் கவனிச்சுக்கிட்டா, அப்பாலிக்கா பிரச்சினையே வர வாய்ப்பிருக்காது! :-)

..........ஏதோ நம்மால முடிஞ்சது...! :-)))

Madhavan Srinivasagopalan சொன்னது…

//அதேமாதிரி, இப்ப பொண்ணுபாக்க போறோம். மொதல்ல பொண்ணுபாக்க வாரவனுக்கே கட்டிக் கொடுத்துட்டா பஜ்ஜிசொஜ்ஜி, டீ செலவெல்லாம் மிச்சம் பாருங்க!//

இது செம சூப்பரு..

சசிகுமார் சொன்னது…

வெளியூர் போகும் பொது மொதல்ல போனா தானே பஸ்சுல சீட் புடிக்க முடியும்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

காரசாரமா நல்ல ருசியா இருக்குது.