8 மார்., 2011

ரம்யாவின் காதல்கள்...

ரம்யாவுக்கு வயது பதினேழு
கண்களைத் திருடும் பேரழகி
காலையில் துளிர்க்கும் பனித்துளி
காதலிப்போர் பட்டியலில்
முந்தி இருந்தது மூன்றுபேர்

ஒருவன் கூடப்படிக்கிற ரமேஷ்
மானே தேனே மயிலே என்று
மலைமலையாய் எழுதிய
கவிதை நோட்டுகளில் இருந்து
உருவப்பட்ட வாசகங்கள்
ஒய்யாரமாய்ச் சிரித்தன
ஃப்ளக்ஸ் போர்டுகளில்
திருமண வாழ்த்துக்களாக
நண்பர்களுக்கு...

இன்னொருவன் மெக்கானிக் சிவா
காதல் பட பரத் மாதிரி உடம்பு
'மைக்கு'மோகன் மாதிரி மனசு...
பள்ளியிலிருந்து வீடுவரை
வீட்டிலிருந்து பள்ளிவரை
பாடிகார்ட் வேலை தவிர
வேறெதுவும்
முயற்சியில்லை.

மூன்றாமவன்
அவள் அண்ணனின் நண்பன் முகிலன்
வீட்டிற்குள் வந்து போகும் உரிமையும்
அண்ணனின் அனுமதியும் இருந்ததால்
அவள் அவனுக்கே சொந்தமென்று
ஆகாசக்கோட்டையில் மிதப்பவன்

ரம்யாவின் கண்களில்
டாக்டர் கனவும்
பாடப் புத்தக சிலபஸும்

இப்படியும் ஒரு வதந்தி

ஒரேநேரத்தில் ரம்யா
மூவரையும் லவ்வுவதாகவும்...

18 கருத்துகள்:

மாயாவி சொன்னது…

ஜில்லுன்னு ஒரு கவிதை சூப்பர்ண்ணா

மாயாவி சொன்னது…

சூடான அரசியல் செய்திகளுக்கு தினமும் இருமுறை புதிய செய்திகளுடன் ஒரு வலை பூ….

http://mugamuddi.blogspot.com

சக்தி கல்வி மையம் சொன்னது…

Nice.,

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

’லவ்வுவதாக’ என்ற இளம் வார்த்தை, வயதான எனக்கே மிகவும் லவ்வுவதாக இருக்குது. பாராட்டுக்கள்.

பெயரில்லா சொன்னது…

ஜில்லுன்னு மூன்று காதல் :-)

ஜாஸ்மின்- ப்ரியா சொன்னது…

விழிகளில் பூத்த நீர் கடலில் கலக்கும் நேரத்தில் அது துவர்ப்பாக இருக்கும் என என்னலாம். மொழிகளில் உதித்த ரணங்கள் இதழில் கலக்கும் நேரத்தில் அது இனிப்பாக இருக்கும் என சொல்ல இயலாது!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அட்டகாச கலக்கல் முக்கவிதை...

பெயரில்லா சொன்னது…

“லவ்வுவதாகவும்“
புதுசா இருக்கே..

vasu balaji சொன்னது…

ரைட்டு. ஆணாதிக்க பஸ்ஸுக்கு டிக்கட்டு. பட் ஐ லைக் இட்டு=))

ஹேமா சொன்னது…

மகளிர் தின விஷேசக் கவிதையோ !

Pranavam Ravikumar சொன்னது…

கவிதை Super!

'பரிவை' சே.குமார் சொன்னது…

கவிதை சூப்பர்ண்ணா.

Unknown சொன்னது…

சூப்பரு தலைவரே

அஞ்சா சிங்கம் சொன்னது…

இந்த டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு .........

ஊருக்குள்ள பல பேரு இப்படிதான் திரியிறானுங்க ...................
எல்லாத்துக்கும் ஒரு முடிவு உண்டு டாஸ்மாக் கடையில் .............

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

:)))

settaikkaran சொன்னது…

இது லவ்வென்று சொல்லப்பட்டாலும் லவ்வில்லை என்று விவாதிக்கப்படுகிற ஈர்ப்பாகவே இருக்க வேண்டும். பதினேழு வயதில், மூன்று பேரையும்...லவ்வுவது...: ஈர்ப்பாகத்தான் இருக்குமோ?

:-)

ரோஸ்விக் சொன்னது…

//இப்படியும் ஒரு வதந்தி

ஒரேநேரத்தில் ரம்யா
மூவரையும் லவ்வுவதாகவும்...
//

இது உண்மையா இருந்தாலும் இருக்கும்ண்ணே.... :-)

ஆச்சி ஸ்ரீதர் சொன்னது…

இப்படி வதந்திய கிளப்பியே பொண்ணுங்க பேர கெடுப்பதில் என்ன சந்தோஷமோ?