22 மார்., 2011

பயோடேட்டா - அ.தி.மு.க ...


பெயர்                               : அனைத்திந்திய அன்னா திராவிட முன்னேற்ற கழகம்
இயற்பெயர்                   :அகிலாண்ட நாயகி அம்மா திராவிட(ரல்லாத) 
                                             முன்னேற்றக் கம்பெனி பி.லிமிடெட்
தலைவர்                         : அன்று எம்.ஜி.ஆர் இன்று சசிகலா & Co
துணை தலைவர்கள்  : இந்து ராம், துக்ளக் ‘ஷோ’
மேலும் 
துணைத் தலைவர்கள்  : அப்புடியெல்லாம் பேசப்புடாது
வயது                                    :  எம்.ஜி.ஆர் சமாதிக்கு அருகில் இன்னொரு இடத்தை 
                                                    கட்சிக்கு தேடும் வயது
தொழில்                         : ஹைதராபாத்தில் திராட்சை வளர்த்தல், கொடநாட்டில் 
                                             தேயிலை வளர்த்தல் , மிடாசிலிருந்து டாஸ்மாக் 
                                             சப்ளை லைனை வளர்த்தல், ஓய்வு நேரத்தில் 
                                             அறிக்கை விளையாட்டு
பலம்                                : எம்.ஜி.ஆரும், இரட்டை இலையும்
பலவீனம்                       : பின்னங்கால் பிடரியில்பட ஓடிக்கொண்டிருக்கும் 
                                             இரண்டாம், மூன்றாம் மட்டக் கட்சித் தலைவர்கள்
நீண்ட கால சாதனைகள் : சிங்கிளா நின்னு சிக்சர் அடிப்பது
சமீபத்திய சாதனைகள்   : இஷ்டம்ன்னா இரு, கஷ்டம்ன்னா ஓடீப்போ
நீண்ட கால எரிச்சல்         : எம்.ஜி.ஆர் புகழ்பாடும் கட்சியினர்
சமீபத்திய எரிச்சல்            : தி.மு.க வின் தேர்தல் அறிக்கை
மக்கள்                               : இன்னமும் ஆயிரத்தில் ஒருவன், ஒளி விளக்கு 
                                                படங்களை பார்ப்பவர்கள்
சொத்து மதிப்பு             : கோர்ட்டில் இருப்பதால் கருத்து சொல்ல முடியவில்லை
நண்பர்கள்                      : பணிக்கர்கள், நம்பியார்கள் இன்னபிற 
                                              ஜோதிட சிகாமணிகள்
எதிரிகள்                          : காங்கிரஸ்காரர்கள் அல்ல
ஆசை                                : நிரந்தர முதல்வர்
நிராசை                            : துனைப் பிரதம்ர்
பாராட்டுக்குரியது      :கருணாநிதி மாதிரி வளைந்து கொடுக்காமல் நரசிம்மராவ்,
                                             வாஜ்பாய், அத்வானி உட்பட டெல்லிக்காரர்கள் 
                                            கண்களில் விரலை விட்டு ஆட்டியது
பயம்                                   : வருங்காலத்தில் விஜயாகாந்த்?!
கோபம்                              : கேள்வி கேட்டால் வருவது

காணாமல் போனவை    : அரசியல் நாகரீகம்
புதியவை                        :    “ராவண லீலைகள்”
கருத்து                             :பெர்னாட்ஷா, ஷேக்ஸ்பியர் யாருன்னு தி.மு.க 
                                             தொண்டனிடம் கேட்டா  “அண்ணாவோட
                                             சிஷ்யப்புள்ளைங்க”னு சொல்லுவான். அ.தி.மு.க 
                                             தொண்டனிடம் கேட்டா “இதுங்கெல்லாம் அம்மா 
                                             வளர்க்கிற நாய்க்குட்டி பேரான்னு கேப்பான்.
டிஸ்கி                              :“தள்ளாத சென்னா ரெட்டி தப்பா பிஹேவ் பன்னாரு”, 
                                             “நரசிம்மராவுக்கும் எனக்கும் தலைமுறை இடைவெளி 
                                             இருக்கு”, “ அத்வானிக்கு செலக்டிவ் அம்னீஷியா” 
                                             “வாஜ்பாய் வெறும் ட்ரைவர்தான், நாந்தான் எஞ்சின்”, 
                                             ”சோனியாவுக்கு பதிபக்தி இல்லை”, “நானும் 
                                             பப்பாத்திதான்”,  இந்த ஸ்டேட்மெண்ட்லாம்
                                            ஞாபகம் இருக்குங்களா மேடம்?!.

33 கருத்துகள்:

♔ℜockzs ℜajesℌ♔™ சொன்னது…

very nice ...
funny too
:)

ஜாஸ்மின்- ப்ரியா சொன்னது…

பெண்களின் பிரதிநிதியை பற்றி சில வரிகள் பாராட்டியதற்கு மகிழ்ச்சி.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

இயற்பெயர் :அகிலாண்ட நாயகி அம்மா திராவிட(ரல்லாத)
முன்னேற்றக் கம்பெனி பி.லிமிடெட்
//

கம்பெனியின் பெயரில்....
எங்கள் தானைதலைவி, தமிழனின் தலைவிதி, “சகிகலா” பேரு விடுபட்டுள்ளது.. ஹி..ஹி

அதை சேர்த்துப்போடுங்க பாஸ்...

Unknown சொன்னது…

பெயர் விளக்கம் சூப்பர். ம.தி.மு.க பத்தி எதுவும் இல்லையே...

Unknown சொன்னது…

அதே அதே!

பொன் மாலை பொழுது சொன்னது…

தமிழ் நாட்டில் உள்ள ஆரிய சக்திகள் இந்த அம்மாவை எப்படி தமிழர்களுக்கு எதிராக தமிழ் நாட்டுக்கு எதிராக பயன்படுத்துகிறார்கள் என்ற நிலையை யாராவது தொடராகவே எழுதவேண்டும்.

அத்திரி சொன்னது…

superb.................

raja சொன்னது…

நன்றாக இருக்கிறது...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

கலக்கல் பயோடேட்டா...
அசத்தல்.. தல..

sathishsangkavi.blogspot.com சொன்னது…

கலக்கல்....

VJR சொன்னது…

நடுநிலைன்னா என்னான்னு தெரிந்துகொள்ள இந்த பத்திரிக்கைகள் செந்தில் ப்ளாக்கைப் படிக்கச் சொல்லலாம்.

மாயாவி சொன்னது…

மறந்துவிடாதிர்கள் இந்த தேர்தலில் அடியோடு ஒழிக்கபட வேண்டிய கட்சி காங்கிரஸ்.

Unknown சொன்னது…

Mr.KRP,டிஸ்கி சூப்பருங்கோ!

Unknown சொன்னது…

கலக்கல் பாஸ்! :-)

சக்தி கல்வி மையம் சொன்னது…

ஜெயாவின் இன்றைய நிலை...

'பரிவை' சே.குமார் சொன்னது…

பெயர் விளக்கம் சூப்பர்....

vasan சொன்னது…

ப‌ல‌வீன‌ம்: ச‌சிக‌லா, ச‌சிக‌லா குடும்ப‌ம், ச‌சிகால‌ சுற்றம் மற்றும் ச‌சிக‌லா ந‌ட்பும்.

RAM சொன்னது…

Superb

RAM சொன்னது…

SUPERB

settaikkaran சொன்னது…

பயோடேட்டான்னா அது நீங்கதான் எழுதணும். :-))

Jey சொன்னது…

good:)

Amudhavan சொன்னது…

போகிறபோக்கில் எதையோ எழுதிவிட்டுப்போவோம் என்றில்லாமல் ஒவ்வொரு வரியையும் படிக்கிறவர்களை யோசிக்கவைக்கிறமாதிரி எழுதுகிறீர்கள் பாருங்கள், அந்தப் பாணி பிடிக்கிறது.

Santhappanசாந்தப்பன் சொன்னது…

டிஸ்கி பகுதியில், தகரம் கண்டுபிடிப்பதற்க்கு முன்னே, உண்டியலை, கண்டுபிடித்தவர்கள் கம்யூனிஸ்டுகள்னு சட்டமன்றத்தில் முழங்கினாரே, அதை விட்டுவிட்டீர்களே?

அஞ்சா சிங்கம் சொன்னது…

ஓய்வு நேரத்தில்
அறிக்கை விளையாட்டு........////

அண்ணே திருத்தி கொள்ளுங்கள் வருடத்திற்கு 10 மாதம் ஓய்வுதான் .....
இப்போ தேர்தலுக்காக இரண்டு மாதம் ஓய்வுக்கு லீவு குடுத்துட்டு வந்திருக்கிறார் ...
முடிந்தவுடன் ஓய்வுக்கு போய்விடுவார் .............

ராஜ நடராஜன் சொன்னது…

எனக்கென்னமோ பெக்....சே!கிக் குறையற மாதிரி இருக்குது:)

முட்டாள் பெண்ணுக்கு இன்னும் கொஞ்சம் சூடு வச்சிருக்கலாம்!

Unknown சொன்னது…

அட்ரா சக்கை... சொக்கா கீது பாஸ்...

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

//இயற்பெயர் :அகிலாண்ட நாயகி அம்மா திராவிட(ரல்லாத)
முன்னேற்றக் கம்பெனி பி.லிமிடெட்//
என் போன்ற ரத்தத்தின் ரத்தங்களின் மனதை காயபடுத்துகிறது உங்களின் விமர்சனம் அ.தி.மு.க.பெயர்ரிற்கு அப்பாற்பட்டதாய் இருக்கட்டும்.

ராவணன் சொன்னது…

இந்து ராம் கருணாநிதி கும்பல்!

ஜீவன்சிவம் சொன்னது…

குமுதம் கூட தோற்றுவிடும் இதன் முன்னால். அருமை. உங்களுக்கு கலைஞருக்கு மேல் ஞாபக சக்தி இருக்கும் போல் இருக்கே.
ஒன்னை கூட விடல

vasu balaji சொன்னது…

அவங்களுக்கு ஞாபகம் இருந்து என்ன பண்ண. நமக்கு ஞாபகம் இருக்காதுங்கறத அவங்க ஞாபகம் வச்சிருக்காங்கல்ல. அதான் மேட்டரு.

ரோஸ்விக் சொன்னது…

நடத்துங்கண்ணே நடத்துங்க .... :-)

கலக்கல்.

Nagasubramanian சொன்னது…

//இயற்பெயர் :அகிலாண்ட நாயகி அம்மா திராவிட(ரல்லாத)
முன்னேற்றக் கம்பெனி பி.லிமிடெட்
துணைத் தலைவர்கள் : அப்புடியெல்லாம் பேசப்புடாது
தொழில் : ஹைதராபாத்தில் திராட்சை வளர்த்தல், கொடநாட்டில்
தேயிலை வளர்த்தல் , மிடாசிலிருந்து டாஸ்மாக்
சப்ளை லைனை வளர்த்தல், ஓய்வு நேரத்தில்
அறிக்கை விளையாட்டு
கருத்து :பெர்னாட்ஷா, ஷேக்ஸ்பியர் யாருன்னு தி.மு.க
தொண்டனிடம் கேட்டா “அண்ணாவோட
சிஷ்யப்புள்ளைங்க”னு சொல்லுவான். அ.தி.மு.க
தொண்டனிடம் கேட்டா “இதுங்கெல்லாம் அம்மா
வளர்க்கிற நாய்க்குட்டி பேரான்னு கேப்பான்.//
சூப்பர்யா!!!

Jayadev Das சொன்னது…

\\பாராட்டுக்குரியது :நரசிம்மராவ்,
வாஜ்பாய், அத்வானி உட்பட டெல்லிக்காரர்கள்
கண்களில் விரலை விட்டு ஆட்டியது\\என்ன பிரயோஜனம், இத்தனை இருந்தும் எதுக்கு சசிகலாவின் கைப்பாவையாய் இவர் இருக்கிறார்? டிஸ்கியில் உள்ள கமெண்டுகளுக்கு மேதாவி சோ ராமசாமி தான் பதில் சொல்லணும்.