17 மார்., 2011

1967 ஐ காங்கிரஸின் நினைவுகளில் தட்டியெழுப்புவோம்! தேர்தல் களத்தில் சூன்யத்தைப் பரிசளிப்போம்!!...


காங்கிரசுக்கு இறுதிச்சடங்குகளை செய்யத் தேவையான சாமக்கிரியைகளைப் பற்றி நானும்கேஆர்பி அண்ணனும் பேசிக் கொண்டிருந்தோம். நம்மால் என்ன செய்ய இயலும் என்பதனைப் பற்றிய ஆலோசனைகளை பதிவர் கும்மி உடல்நலன் குன்றி இருந்தபோதிலும் மிகுந்த ஆர்வத்துடன் நீண்ட நேரம் தொலைபேசி உரையாடலில் பகிர்ந்து கொண்டார். அண்ணன் குழலியுடனான தொலைபேசி உரையாடலில் அவர் திமுகவையும் சேர்த்துப் புதைக்க வேண்டும் என்ற கருத்துக்களை பகிர்ந்தார்.

இருக்கும் மிகச்சில நாட்களில் மிகச்சிறு அளவில் இருக்கும் தமிழ்(உணர்வுள்ள)  இணையஜீவிகள் - ப்ளாக், டிவிட்டர், ஃபேஸ்புக் மற்றும் வாசகர்கள்- (அதிலும் நேரடியாக தேர்தல் களப்பணிக்கு தயாராக இருப்பவர்கள் மிக மிகக் குறைவு) மிகப்பெரும் அஜெண்டாவை வைத்துக்கொண்டு செயல்படுவது என்பது நடைமுறைச் சாத்தியங்களற்ற ஒன்று என்பதை நண்பர் கும்மி தனது கருத்தாகச் சொன்னார். இவ்வாறு களப்பணியாற்றத் தயாராக இருக்கும் தமிழ் இணையவாசிகள் ஏனைய தமிழ்தேசிய இயக்கங்களுடன் ஒருங்கிணைந்து, அவர்களின் வழிகாட்டுதலுடன் செயல்படுவதே சரியானதாக இருக்கும் என்றும் அவர் சொல்லிக் கொண்டிருந்தார்.

காங்கிரஸ் போட்டியிடும் 63-ல் நிச்சயம் தோற்றுப்போகும் என்ற தொகுதிகளில் கவனம் குவிப்பதை விடுத்து, காங்கிரஸ் கடுமையான போட்டியைக் கொடுக்கக்கூடிய தொகுதிகளிலும், ஏறத்தாழ ஜெயித்துவிடும் என்ற நிலை இருக்கும் தொகுதிகளிலும் கூர்மையான செயல்பாடுகளை மேற்கொள்ளுதல் சிறந்த பலனைத் தரும் என்பதும் கும்மி அவர்களின் ஆலோசனை.

இணையத்தமிழ் வாசகர்களும், ப்ளாக்,டிவிட்டர், ஃபேஸ்புக் முதலானவற்றில் பங்களிப்போருமாக இருப்பவர்களில் தேர்தல் பணிக்கு வர விரும்புவோருக்காய் பொதுவான ஒரு ஃபோரம் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்பது எனது கருத்து. அப்படி நமக்குள்ளேயே ஒரு ஒருங்கிணைப்பும், ஏனைய இயக்கங்களினுடன் ஒத்திசைந்து செயல்படுவதும் அவசியமானது என்று கருதுகிறேன்.

இந்தத் தேர்தல் பணிகளில் பிரதானமாய் காங்கிரஸுக்கு எதிராய் எடுத்துவைக்கப்பட வேண்டிய பிரச்சாரங்களாக நான் கருதுபவை:

1) மிக முக்கியமானதாக ஈழப்படுகொலைகள். ஒரு இனத்தையே கருவறுத்த குரூரத்தை துண்டுப் பிரசுரங்கள் மூலமாகவும், ஒளிப்பதிவுகளின் மூலமாகவும் கொண்டு செல்லுதல். வைகோ எழுதி இயக்கிய "ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்" என்ற ஆவணப்படத்தினை இதற்காக பயன்படுத்திக் கொள்ள முடியுமா என்பது பற்றி மதிமுக தோழர்கள் மூலமாக நான் முயல்கிறேன். அப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் எனில் அந்த ஆவணப்படத்தினை பல்லாயிரம் குறுவட்டுக்களில் படியெடுத்து விநியோகிக்க வேண்டும்

2) தமிழக மீனவர் படுகொலைகளை எவ்வித இடையூறுகளுமின்றி நடத்திக் கொண்டிருக்கும் சிங்கள அரசிற்கு கால்தாங்கும், மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசின் அயோக்கியத்தனத்தைப் பற்றிய பிரச்சாரங்கள்

3) கேவலமான பொருளாதாரக் கொள்கைகளினால் மக்களின் வாழ்க்கைத் தரத்தினைச் சீரழித்து, விண்ணளந்த பெருமாளைப்போல சிகரத்தை எட்டி நிற்குமளவு விலைவாசி உயரக் காரணமாக இருந்த கையாலாகாத்தனங்கள், அற்பத்தனங்கள் பற்றிய பிரச்சாரம்

4) அரசுக்கிடங்குகளில் இருக்கும் தானியங்கள் அழுகிப்போனாலும் போகுமே ஒழிய, அடித்தட்டு மக்களுக்கு இலவசமாகக் கொடுக்கமாட்டோம் என்று மேட்டிமைத்திமிர்த்தனத்துடன் இறுமாந்திருந்துவிட்டு இன்று அதே அடித்தட்டு வர்க்கத்திடம் "போடுங்கம்மா ஓட்டு" என்று பல்லை இளித்து பசப்பும் பொறுக்கித்தனம் பற்றிய பிரச்சாரங்கள்

5) இதுவரையிலும், மீனவர் பிரச்சினையானாலும் சரி, காவேரிப் பிரச்சினையானாலும் சரி, முல்லைப்பெரியாறு பற்றிய பிரச்சினை, ஒகேனக்கல் பிரச்சினை என தமிழக நலன் சம்பந்தப்பட்ட எந்தப் பிரச்சினைகளிலும் வாய்மூடி கள்ளமௌனம் சாதிக்கும் சாமர்த்தியம் பற்றிய பிரச்சாரம்

6) காமன்வெல்த் போட்டிகளில் துவங்கி ஆதர்ஷ் ஊழல், ஸ்பெக்ட்ரம் என்று நீளும் காங்கிரஸின் லட்சணமான முகத்தினை மக்களுக்கு விளக்கும் பிரச்சார யுக்திகள்

7) அந்தந்த பகுதி சார்ந்த உள்ளூர்ப் பிரச்சினைகளில் காங்கிரஸின் பங்களிப்பு எவ்வாறு இருந்தது என்பதைப் பற்றிய விளக்கங்கள்.

இவற்றை மையப்படுத்தி ஏனைய தமிழுணர்வாளர்களுடன் இணைந்து தீவிரமாக வீதிப் பிரச்சாரங்களில் கலந்துகொள்ள வேண்டும். தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலைபார்க்கும் இளைஞர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆகியோரின் தேர்தல் பணிகளின் தீவிரத்தை ஏற்கனவே சிவகங்கைச் சீமான் சிதம்பரம் அனுபவித்திருக்கிறார்.

63-ல் மிகக்கடுமையாக வேலைசெய்ய வேண்டியதாக இருக்கும் 25 தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து நான்கு அல்லது ஐந்து பேர்கொண்ட சிறு குழுக்களாக வீதிநாடகங்களை அரங்கேற்றுவது போன்ற வேலைகளைச் செய்யவேண்டும்.

அமைக்கப்படும் ஃபோரத்திற்கு தலைவர் என்று யாரும் இல்லாமல் ஒரு ஒருங்கிணைப்பு மற்றும் வழிகாட்டுதல் குழுவை நமக்குநாமே அமைத்துக் கொள்ளலாம். இவ்வாறாக தொடங்கப்படும் சிறிய அளவிலான ஃபோரத்தைப்பற்றிய செய்திகளை இணையத்தில் பரவலாக அறியப்பட செய்யக்கூடிய வேலைகளையும் நாம் செய்தாக வேண்டும். சிறு பொறிதான் தீயாகப் பரவ ஆரம்பிக்கின்றது. தனித்தனியாய் தன்னார்வலர்களாய் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் தமிழுணர்வாளர்களை ஒருங்கிணைக்கும்போது அதன் ஆற்றல் மிகப்பெரிதாக இருக்குமென்று எண்ணுகிறேன். ஏற்கனவே #tnfisherman என்ற வார்த்தை டிவிட்டர் மூலம் ஏற்படுதிய அதிர்வலைகளை நாம் கவனிக்கவேண்டும்.

நண்பர் கும்மி இது தொடர்பாக "நாம் தமிழர்" இயக்கம், மற்றும் சில இயக்கங்களுடன் பேசுவதாகச் சொல்லி இருக்கிறார். நானும்  என் தொடர்பிலுள்ள நண்பர்களிடம் பேசுவதாக இருக்கிறேன். அண்ணன் கேஆர்பி செந்திலும் இது தொடர்பான வேலைகளில் தீவிரமாக இயங்குவார்.

காங்கிரஸுக்கு போடப்படாமல் தடுக்கப்படும் ஒவ்வொரு ஓட்டும் தமிழினத்தின் வேரில் பாய்ச்சப்படும் ஜீவ ஊற்று என்பதை கருத்தில் கொள்வோம்; களமிறங்குவோம்!

இதற்கென பொதுவான ஒரு வலைப்பூவோ அல்லது இணையதளமோ (சாத்தியப்படின்),  இன்னும் ஓரிரு நாட்களில் துவங்கப்படும்.

நாம் விதையை ஊன்றுவோம். இது விருட்சமாகுமா, இல்லை வீணாய்ப்போகுமா என்பதை நாளைய தமிழகம் முடிவுசெய்து கொள்ளட்டும்.
நாளை மறுநாள் சனிக்கிழமை 19.03.2011 அன்று மாலை ஆறு(6 PM) மணிக்கு இது சம்பந்தமாக ஒரு குழுவாக கூடி முடிவெடுக்கலாம் என நினைக்கிறோம். சமூக அக்கறை உள்ள அனைவரும் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.

கே.ஆர்.பி.செந்தில் : 8098858248
ராஜாராமன் (விந்தை மனிதன்):9443975253

"காங்கிரசுக்கு ஒரு ஓட்டுக்கூட விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நம் கடமை. அப்படியும் காங்கிரசுக்கு யாரேனும் ஓட்டுப்போடுவார்களேயானால் அது இந்த நாட்டுக்கும், திராவிட மக்களுக்கும் செய்கிற துரோகம் மட்டுமல்ல.. தன் தாய், தகப்பன், பெண்டு பிள்ளைகளுக்குச் செய்யும் பெருந்தீங்கு. இந்த நிலையில் காங்கிரஸை ஆதரிக்க வேண்டும் என்று எப்படி தம்பி நான் கூறமுடியும் & நாடு நகைக்காதா? நல்லோர் கை கொட்டிச் சிரிக்கமாட்டார்களா?’’

&55 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணா சொன்ன வார்த்தைகள் இவை. - இன்றும் ஜீவித்திருக்கின்றன இவ்வார்த்தைகள்..கட்டுரை ஆக்கம் : விந்தை மனிதன்..

26 கருத்துகள்:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

கடப்பாரை....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

இனி போயி படிக்கிறேன் ஹி ஹி ஹி ஹி....

தமிழ் உதயம் சொன்னது…

நல்ல துவக்கம். வெற்றி பெற வேண்டும்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

காங்கிரஸ் அட்ரஸ் இல்லாமல் போகும் நாள் விரைவில்.....

vinthaimanithan சொன்னது…

அய்யா, நாஞ்சில் மனோ, இந்த பதிவுலயுமா உங்க பஜ்ஜி,வடை யாவாரத்தை பாக்கணும்?வேண்டாமே, ப்ளீஸ்!

vinthaimanithan சொன்னது…

தமிழ்ப்பதிவுலகில் பரபரப்பாக அரசியல், சமூக விமர்சனக் கட்டுரைகளை எழுதிவரும் பதிவர்கள் அனைவரையும் களப்பணிக்கு எதிர்பார்க்கிறேன்.

"இணையத்தில் மட்டும் 'பொங்கும்' கொட்டை எடுத்த புளிகள்" என்று கிண்டல் செய்யப்படுவதை நண்பர்கள் பொய்யாக்க வேண்டுமென்று தாழ்மையுடன் வேண்டுகிறேன்

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

63 இடங்களை வாங்கிய முறையும் மிகவும் கேவளமானது..

Unknown சொன்னது…

அன்பின் மனோ, சில கமெண்டுகளை நீக்கியிருக்கிறேன்.. தவறாக கருத வேண்டாம்..

ஆக்கபூர்வமான கருத்துக்களை மட்டும் தெரிவித்தால் போதும்..

vinthaimanithan சொன்னது…

என்னுடைய தொலைபேசி என்கள் 1) 9443975253. 2) 9500790916. எதேனும் ஒன்றுக்கு கூப்பிடலாம். பிஎஸ்என்எல் எண்ணை விட ஏர்டெல் எண்ணுக்கு கூப்பிடுதல் நலம்.

முன்கை எடுத்த செந்திலண்ணனுக்கு நன்றி. சனிக்கிழமை மாலை கணிசமான நண்பர்களின் பங்களிப்பை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.

ராஜ நடராஜன் சொன்னது…

மாற்றத்துக்கும்,எழுச்சிக்கும் கரம் கொடுப்போம்.புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

தமிழின அழிவுக்கு காரணமான காங்கிரஸ் பற்றி எடுத்துரைப்பது
சரியான விஷயமே, இயன்றதை செய்யலாம்.

சக்தி கல்வி மையம் சொன்னது…

தமிழக மீனவர்களைப் பற்றி கவலைப்படாத ஜெர்மனி சனியனை விரட்டுவோம்..

Unknown சொன்னது…

வேரோடு பிடுங்கப்பட வேண்டிய விஷயம் இது.............நன்றி தலைவரே தொடரட்டும் உம் பணி

ttpian சொன்னது…

அடப் பாவி மக்கா...

பச்சைப் புடவை, தமிழ்நாட்டை சுரண்ட வழி கொடுக்க மாட்டிர்களா?

raja சொன்னது…

தங்களோடு எனது சிறு பங்களிப்பு நிச்சியம் இருக்கும்.

vijaykarthik சொன்னது…

face book மூலம் எகிப்தின் சரித்திரம் மாறியுள்ளது,என்னால்முடிந்தள்ளவு பிரச்சாரம் செய்வேன் காங்கிரசை வேரொடும் வேரோடு மண்ணாக தமிழ் நாட்டில் இருந்து ஒழிக்க,பிளாக்கிலும் எழுதுவோம்,facebookலும் குழுமம் அமைத்து எதிர்ப்போம்,கண்டிப்பாக வெற்றி பெருவோம்,
எனது கருத்தை கீழே பதிந்துள்ளேன்
http://vijaykartthi.blogspot.com/
face book id: anandhamvijay

மாரல் பொலிஸ்! சொன்னது…

யோவ் கேஆர்பி, ஏன்யா இந்த வெட்டி வேலை? இணையத்துல புல்லு புடுங்கிட்டு இருக்குறவங்கல்லாம் ஒண்ணா சேருவாங்களாம். பொர்ச்சி பண்ணுவாங்களாம். எங்க... பொர்ச்சி பதிவா எழுதி பொங்குனாஒரு பயலைக்கூட காங்கலியே!!! களப்பணி ஆத்தலாம் அப்டீன்னு இணையத்துல இருக்கவனையெல்லாம் பாத்து கேக்குறப்பவே தெரியுது ஒங்க குரூப்போட அறிவுத்தெறம.

எனக்கு சிப்பு சிப்பா வர்து :))) போயி பொழப்ப பாருங்கய்யா

Sriakila சொன்னது…

விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நேரத்தில் தேவையான பதிவு..

THE IRON MAN! சொன்னது…

மாரல் பொலிஸ்! கூறியது
//போயி பொழப்ப பாருங்கய்யா//

நல்லவரே, உங்க பொழப்ப பாத்தாச்சில்ல..சந்தோஷம். களப்பணி ஆத்துறோம் இல்ல டீ ஆத்துறோம்..நீங்க ராஜபக்சேக்கு பல்லு குத்த போங்க..!

மாரல் பொலிஸ்! சொன்னது…

வாங்கய்யா இர்ர்ரும்பு மனுசா! எங்களுக்கு இல்லாத தமிழ்ப்பற்று, இனப்பற்றையெல்லாம் நீங்க கத்துக்கொடுக்க வேண்டாம். நா சொன்னத நல்லா பாருங்கய்யா. ஏதோ எணைய பொர்ச்சியாளருங்க பூரா சேந்து 'கலப்பனி'ஆத்தப்போறதா சீனப் போடுறீங்களே, அதத்தான் சகிக்க முடியல. இந்த கமெண்ட்ல கொஞ்சம் மேல எட்டிப்பாருங்க. ஒரு பரமாத்துமா டீ,வட, பஜ்ஜி வியாபாரம் பண்ணிட்டு போயிருக்கு.

ஒங்க கேஆர்பிய வெளிப்படையா அறிவிக்க சொல்லுங்களேன். இந்த பதிவ பாத்துட்டு, தெனமும் தமிழ்மணத்துல சமூகக்கோபம் வந்து பொங்கிப் பொங்கி பதிவெழுதுற பொர்ச்சிக்காரங்க எத்தன பேரு கலப்பனி ஆத்த வந்துருக்காங்கன்னு சொல்லச் சொல்லுங்களேன். உங்க இணைய கொட்டை எடுத்த புளிங்க ஒரு அம்பது சேந்துருக்குமா?

அந்தாளுதான் வேலவெட்டி இல்லாம அறைகூவல் விடுக்குறாருன்னா வந்துட்டீங்க பெர்சா பேசுறதுக்கு.

சொம்மா நாலு சினிமா கிசுகிசு எழுதுனமா, பத்து பதினஞ்சி கமெண்டு, ஓட்டு வாங்குனமா, மாத்தி மாத்தி முதுக சொறிஞ்சிக்கினமான்னு இல்லாம என்னாத்துக்கு நீங்கல்லாம் சமூகப் பதிவு எழுதுறீங்க? 'நாங்களும் ரவுடி' தான்னு சீனப் போடவா?

அய்யா கேஆர்பியாரே, பெர்சா பதிவு போட்டீங்களே, எத்தன பேரு வந்துருக்காங்கன்னு லிஸ்டை போடுங்க.

THE IRON MAN! சொன்னது…

தம்பி..சொந்த ஊரு இத்தாலியா? நீ நடத்து.

Sathish A சொன்னது…

மாரல் போலிசு கிறுக்கா, உனக்கு இதெல்லாம் புரியாது, போய் அந்த இத்தாலிகாரி/ராஜபக்சே கால கழுவு நேரம் ஆயிருச்சு... பேர பாரு மாறல் போலிசு மன்னகட்டி போலிசு...

vinthaimanithan சொன்னது…

நண்பர் சதீசுக்கு,

மாரல் பொலிஸ் போன்றவர்களைத் திட்டுவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை. உங்களுக்கும் Iron manக்கும் வந்த தார்மீகக் கோபம் நிஜமாகவே மகிழ்ச்சியாக உள்ளது. மெல்லத் தமிழினி துளிர்க்கும் என்ற நம்பிக்கை முளைவிடுகின்றது.

இம்மாதிரியான நபர்கள் மறைமுகமாக நமக்குத் தூண்டுகோலாக இருக்கின்றனர். நாம் இணையத்தில் மட்டுமல்லாது களத்திலும் வல்லவர்கள் என்று காட்டிவிட்டால் இவர்கள் நவத்துவாரங்களையும் மூடிக்கொள்வார்கள். எனவே இவர்களை உதாசீனம் செய்யுங்கள்.

வலியவந்து வம்புக்கு இழுத்தும், பதில் தருகிறேன் என்று தனது தரத்தில் இருந்து இறங்கிவிடாமல் பெருந்தன்மையாக விட்டுப்போகும் அண்ணன் கேஆர்பிக்கு வாழ்த்துக்கள்

மேலும் இம்மாதிரியான அடையாளங்களற்ற அநாமதேயங்களின் வாய்வீச்சுக்கு இணையத்தில் மட்டும் முழங்கிப் பின் காணாமல் போகும் நம்மவர்களும் ஒரு காரணம்தானே?

இன்றைய சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை ஆறு மணிக்கு நடைபெறும். மேலும் விவரங்களுக்கு கேஆர்பி அண்ணன் அல்லது என்னைத் தொடர்பு கொள்ளவும். இதுவரை சுமார் 15 நபர்கள் ஒருங்கிணைந்திருக்கிறோம்.

கடைசியாக....

மாரல் பொலிஸ் அவர்களுக்கு,

நாங்கள் வெறுமனே ஹிட்ஸ் கூட்டவும், எல்லாவற்றையும் விமர்சித்தும் வெட்டிஞாயம் பேசியும், சமூக அரசியல் விமர்சனங்களை எழுதவும், பேசவும் செய்யவில்லை. எனவே எங்களைப்பார்த்து "நீ என்ன கிழித்துவிட்டாய்?" என்று கேட்பதில் அர்த்தமோ, நியாயமோ இல்லை. அதற்கென்று வேறு நபர்கள் இருக்கிறார்கள். அங்கே போய் கேள்... மன்னிக்கவும்...கேளுங்கள் உங்கள் நியாயத்தை.

ஆனால் ஒன்று, இங்குபோல் கேள்வி கேட்டுவிட்டு மரியாதையுடன் வெளிவர அங்கு முடியாது. கிழித்து விடுவார்கள்.

நாங்கள் எத்தனை பேர் என்று லிஸ்ட் கொடுத்தால் என்ன செய்வதாக உத்தேசம்? உளவுத்துறைக்கு மாமா வேலை பார்க்கப்போகிறீர்களா? ஐந்து பேர் இருந்தாலும், தீச்சுடர்போல செயல்படுவோம். ஐயமிருப்பின் நீங்களும் எங்கள் குழுவுடன் இணைந்துகொள்ளுங்கள். இருகரம் நீட்டி வரவேற்போம்

பெயரில்லா சொன்னது…

நல்ல துவக்கம். வெற்றி பெற வேண்டும்.

velu சொன்னது…

hi Moral police. it is sure we dont worry abt the 3 constituencies in erode area. Modakurichi Erode west and kangeyam. erode west DMK will send Yuvaraj to old Rahul to discus their strength.if they win more than 5 seats in TN it will be great achievement for them and people for like you

Mark K Maity சொன்னது…

wonderfulllllllll plan. all the best...
target tamils who dont use internet or computer..I think it ppl are already know everything.