23 மார்., 2011

எங்கே போகிறது இந்தியா? - பகுதி ஐந்து...


ஜனநாயக திருநாட்டில் பிரதமர்தான் மக்களின் முதன்மை வேலைக்காரர். நமது அடுத்தடுத்த வேலைக்காரர்களாக மத்திய மாநில அமைச்சர்களும், மாநில முதலமைச்சர்களும் இருக்க வேண்டும். ஒவ்வொரு அரசு அதிகாரியும் நேர்மையாகவும், மக்களின் நலனுக்காக வேலை செய்பவராகவும் இருக்கவேண்டும். குறிப்பாக காவல்துறை மிக நேர்மையாக செயல்பட்டு மக்களின் பாதுகாப்பையும், பாதிக்கப்பட்டவர்களின் உரிமையையும் மீட்டுத்தர உறுதுணையாக இருக்க வேண்டும். எந்த திட்டங்களை நிறைவேற்றினாலும் அதனை மக்களிடம் நேர்மையாக கொண்டு சேர்க்கும் பிரதநிதிகளாகத்தான் நாம் நமக்காக அவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம்.

ஆனால் இங்கு நடப்பதெல்லாம் அப்படியே தலைகீழாக அல்லவா இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட பிரிவினர் குழுவாக சேர்ந்துகொண்டு தங்கள் நலனுக்காக அத்தனை நிர்வாகங்களையும் குளறுபடியாக்கியுள்ளனர். மக்களாட்சி மலர்ந்த காலத்தில் அரசியல்வாதிகளை தீர்மானிக்கும் சக்திகளாக பெரிய நிறுவனங்களின் முதலாளிகள் இருந்தனர். ஆனால் காலவோட்டத்தில் அரசியல்வாதிகளே பெரிய நிறுவனங்களை ஆரம்பித்து முதலாளிகள் ஆனார்கள். இப்போது இந்தியாவில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும்
மிகப்பெரிய நிறுவனங்களின் முதலாளிகளாக இருக்கின்றனர். இதில் சில கம்யூனிஸ்ட் தலைவர்கள் மட்டும்தான் விதிவிலக்காக இருக்கின்றனர்.

தமிழகத்தில் கருணாநிதியின் குடும்பத்தினர் வைத்திருக்கும் நிறுவனங்கள் பற்றி ஊருக்கே தெரியும் என்பதால் நேரடியாக விசயத்துக்கு வருகிறேன். அரசு பதவிகளில் இவர்கள் இருப்பதால் இவர்களின் ஊடகங்களுக்கும், பத்திரிக்கைகளுக்கும் தாராள அரசு விளம்பரங்களை தருகிறார்கள். இது தவறான கொள்கையாகும். ஆனால் இவர்களை விமர்சிக்க வேண்டிய மாற்று ஊடகங்களும் அதே அரசு விளம்பரங்களுக்காக பணிந்து போகிறது. இதே போல மிடாஸ் ஆரம்பித்துவிட்டு டாஸ்மாக்கை அரசு மயமாக்கினார் ஜெயலலிதா, ஆட்சி மாறியது. ஆனால் மிடாஸ்தான் இன்றைக்கும் டாஸ்மாக்கின் முன்னணி சரக்கு விற்ப்பனையாளர். 

அந்த காலங்களில் நடந்த மன்னராட்சிக்கும் இப்போது நடக்கும் மக்களாட்சிக்கும் எந்த வித்தியாசங்களும் இல்லை. என்ன, அந்தக்கால மன்னர்கள் மக்களுக்காக போரிட்டு உயிர் பிரிவதை பெருமையாக நினைத்தனர். இந்தக்கால மன்னர்கள் தாங்கள் கொள்ளையடித்த பணத்திற்காக விசுவாசிகளை பலிகடாவாக்குகின்றனர்.

பிரதமராக பதவி வகிக்ககூடியவர் இந்த தேசநலனில் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளார் என்பதை நாம் தினசரி ஒரு சிரிப்பு நடிகரைப்போல அவர் பேசுவதை கேட்டு சிரிப்பாய் சிரிக்கிறோம். இதில் சில நண்பர்கள் அவரை குற்றம் சொல்லி என்ன ஆவது. அவர் ஒரு குரங்கு. குரங்காட்டி சொல்வது போல ஆடுவதுதான் அவர் வேலை என சப்பைக்கட்டு கட்டுகின்றனர். இப்படி ஒரு ஈனப்பிழப்புக்கு டெல்லி ரயில்வே நிலையத்தில் பாட்டு பாடி பிச்சை எடுக்கலாம். இந்தியா சுதந்திரம் பெற்றபின் பெரும்பாலும் காங்கிரஸ் கட்சிதான் இந்த நாட்டை நிர்வாகிக்கும் சக்தியாக இருந்துவருகிறது. ஆனால் இன்னும் ஏழை நாடாகவே இந்தியா இருக்கிறது. இடையில் வந்த பி.ஜெ.பி.யோ  பக்கத்து நாடான சீனா ஜெட் வேகத்தில் முன்னேற நாமோ ஆமை வேகத்தில் போவதையே " இந்தியா ஒளிர்கிறது பார்" என இருட்டில் நின்றுகொண்டு விண்மீன்களை காட்டியவர்கள்.

கண்ணுக்கு தெரிந்தே எத்தனை ஏரிகளை கான்க்ரீட் ஆக மாற்றிவிட்டார்கள். இப்போதும் சாலை போடும்போது எங்காவது மழைநீர் வடிகால்கள் செய்கிறார்களா"? கடுமையான மழை நேரங்களில் சென்னை மிதக்கும். இதில் சென்னையை சிங்கப்பூர் ஆக்கும் வாய்ச்சவடால்கள் வேறு. தங்க நாற்க்கர திட்டத்தின் மூலம் போட்ட அத்தனை சாலைகளும் அழகாகத்தான் இருக்கிறது. ஆனால் டோல் வரியில் அவர்கள் வாங்கும் கட்டணத்திற்கு என்ன வரைமுறை வைத்திருக்கிறார்கள் என்பது யாருக்காவது தெரியுமா?

ஓட்டுக்கு பணம் கொடுக்ககூடாது, தேர்தல் செலவுகளை கண்காணிக்க வேண்டும். என ஆயிரம் நடைமுறைகளை அமுல்படுத்தும் தேர்தல் கமிசன் ஏன் தேர்தல் அறிக்கைகளுக்கும் தடை ஏற்படுத்தக்கூடாது?.  இப்போதெல்லாம் வருகிற தேர்தல் அறிக்கைகள் இலவசங்களை அறிவிக்கும் தூண்டிலாகத்தான் இருக்கிறது. இதுவும் ஒரு வகையில் லஞ்சம் கொடுத்து ஓட்டு வாங்குவதைப்போலதானே!!!. உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவோம். தடையில்லா மின்சாரம் தருவோம். பாக்கெட்டில் விற்கப்படும் தண்ணீர் விற்ப்பனையை ஒழித்து அனைவருக்கும் சுகாதாரமான குடிநீர், தரமான சாலை வசதிகளை தருவோம் என எந்த அறிக்கையாவது இருக்கிறதா"?. கிரைண்டர் தாரேன், மிக்சி தாரேன்., அரிசி தாரேன்னு சொல்லி மக்களை பிச்சைக் காரர்களாய் மாற்றும் முயற்சிதானே இப்போது வெளியாகியிருக்கும்.

டாஸ்மாக் இருப்பதால்தான் ஒரு ரூபாய்க்கு அரிசி தருகிறோம் என சப்பைக்கட்டு கட்டுகிறார்களே!. ஒரு குவார்ட்டரின் விலை நூறு ரூபாய். இந்த காசுக்கு தினசரி அவன் ஐந்து கிலோ தரமான அரிசி வாங்கி சாப்பிடுவானே. இருநூறு ரூபாய் தினசரி கூலி வாங்கி நூறு ரூபாய்க்கு குவார்டர் அடித்துவிட்டு மீதியை சைடிஷ் க்கு செலவழித்துவிட்டு ஆரோக்கியத்தை தொலைத்துவிட்டு முதல்வரின் மருத்துவ காப்பீட்டு அட்டைகளை கையில் வைத்துக்கொண்டு தனியார் மருத்துவமனைகளில் வரிசையில் நிற்கிறான். டாஸ்மாக்கை வைத்திருக்கும் அதே வேளையில் கள்ளுக்கடைகளுக்கும் அனுமதி தரலாமே. அவன் பத்து ரூபாயில் ஆரோக்கியமான பானத்தையாவது அருந்துவான். இதனால் நிறைய விவசாயிகளும் ஏழைத் தொழிலாளர்களும் பயன்பெறுவார்களே!. ஆனால் பெருமுதலாளிகள் மென்மேலும் பணம் சம்பாதிக்க அல்லவா வழிவகை செய்திருக்கிறார் இன்றைய முதல்வர்.

இன்னும் இருக்கு... அது அடுத்த பகுதியில்... 

இனைப்பு :

தமிழக மக்கள் உரிமை கழகம் மற்றும்  மே பதினேழு இயக்கம் இணைந்து நடத்திய   கருத்தரங்கம்  - "தமிழக மீனவர் படுகொலையும் மக்களை திசை திருப்பும் சதியும் " 

நிகழ்ச்சியில் ஆற்றப்பட்ட உரைகள் காணொளி பதிவுகள்

http://www.youtube.com/watch?v=q8yxkhKWqG4

http://www.youtube.com/watch?v=L1as3_xwU0Q

http://www.youtube.com/watch?v=Gs4XXoyrCm4

திருமுருகன் உரை 

http://www.youtube.com/watch?v=mP-NmEfzKLk

http://www.youtube.com/watch?v=Fq0qHM6DPFk

http://www.youtube.com/watch?v=bB4EYqP049Y

மகேஷ் உரை 

http://www.youtube.com/watch?v=JkbQ65HPRUA

13 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

முதல் மழை..

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

/////
டாஸ்மாக் இருப்பதால்தான் ஒரு ரூபாய்க்கு அரிசி தருகிறோம் என சப்பைக்கட்டு கட்டுகிறார்களே!. ஒரு குவார்ட்டரின் விலை நூறு ரூபாய். இந்த காசுக்கு தினசரி அவன் ஐந்து கிலோ தரமான அரிசி வாங்கி சாப்பிடுவானே.//////

தூண்டியலில் புழுவைகாட்டி ஆளையே விழுங்குகிறார்கள்.. என்ன செய்ய...
அரசு நடத்த வேண்டிய கல்வி தனியார் வசம்..
தனியார் நடத்த வேண்டிய டாஸ்மாக் அரசிடம்...

சக்தி கல்வி மையம் சொன்னது…

அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..

சக்தி கல்வி மையம் சொன்னது…

இக்த இலவசங்கள் எப்போது ஒழிகிறதோ அப்போதுதான் தமிழ்நாடு உறுப்படும்..

பெயரில்லா சொன்னது…

டும்டும்..டும்டும்...
இளிச்சவாயங்கள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும்...

பெயரில்லா சொன்னது…

//!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

இக்த இலவசங்கள் எப்போது ஒழிகிறதோ அப்போதுதான் தமிழ்நாடு உறுப்படும்..//


எப்பவுமே உறுப்புடாதுனு சொல்ல வறீங்களோ..

raja சொன்னது…

இப்படி ஒரு ஈனப்பிழப்புக்கு டெல்லி ரயில்வே நிலையத்தில் பாட்டு பாடி பிச்சை எடுக்கலாம். ..... அந்த பாட்டுபாடுற தகுதிகள் கூட இந்த கொள்ளைக்கூட்டத்தலைவர்களுக்கு இல்லை. மக்கள் வாழ்வின் விளிம்புக்கு தள்ளபட்டு கிளர்ச்சியாளர்களாக மாறாத வரை விமோசனமே இல்லை.

'பரிவை' சே.குமார் சொன்னது…

//பிரதமராக பதவி வகிக்ககூடியவர் இந்த தேசநலனில் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளார் என்பதை நாம் தினசரி ஒரு சிரிப்பு நடிகரைப்போல அவர் பேசுவதை கேட்டு சிரிப்பாய் சிரிக்கிறோம்//


அருமையான பதிவு ..

பொன் மாலை பொழுது சொன்னது…

நன்றாக விளாசி இருக்கிறீர்கள்.பதில் சொல்லத்தான் யாரும் இல்லை. நாமல்லவா பதில் சொல்லவேண்டும்?

Sivakumar சொன்னது…

பார்லிமெண்ட்ல இத்தனை அமளி துமளி நடந்தாலும் ஒரு மேடம் டம்மியா உக்காந்து மிக்சர் சாப்புடறாங்கலே...எங்க போய் முட்டிக்கறது...மீரா..ஓ....மீரா..

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//தமிழகத்தில் கருணாநிதியின் குடும்பத்தினர் வைத்திருக்கும் நிறுவனங்கள் பற்றி ஊருக்கே தெரியும் என்பதால் நேரடியாக விசயத்துக்கு வருகிறேன். அரசு பதவிகளில் இவர்கள் இருப்பதால் இவர்களின் ஊடகங்களுக்கும், பத்திரிக்கைகளுக்கும் தாராள அரசு விளம்பரங்களை தருகிறார்கள். இது தவறான கொள்கையாகும்.//

இதை நாம் போயி கேட்டால் உள்ளே தூக்கி போட்ட்ருவாங்களே மக்கா...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ம்ம்ம்ம் வெளு வெளுன்னு வெளுத்துட்டீங்க போங்க...

பெயரில்லா சொன்னது…

எங்க ஆட்சியில தப்பு நடக்கிரது அப்ப்டினு ஓதுகிரொம். - பிரதமர்

ps: they are making hell lot of mistakes. i just made few typos.