14 மார்., 2011

துரோணா - 8 ...


சேட்டைகள் நிறைந்த என் உலகில் எப்போதும் மகிழ்ச்சி மட்டுமே நிறைந்திருந்தது. அது முதன்முதலாய் நான் ரவுடி அவதாரம் எடுத்தபோது என்னை சிக்கலில் கொண்டுபோய் சேர்த்தது. பனிரெண்டாம் வகுப்பில் கணக்கில் கோட்டை விட்டதும். அடுத்த அட்டெம்டுக்காக மன்னார்குடிக்கு டியூசன் படிக்க வந்தபோது அப்போதுதான் மன்னார்குடி நகராட்சியின் ஒப்பந்த காரராக என் மாமா இருந்தார் . அவருக்கு பின்புலமாக நாங்கள் இருந்தோம் அல்லது இருக்க வைக்கப்பட்டோம். தினசரி ஏதாவது ஒரு பிரச்சினை வந்து அது அடிதடியில் முடியும்.

நாம் தெருவில் போகும்போது சினிமாக்களில் ரவுடிகள் போகும்போது மக்கள் பயத்துடன் ஒதுங்குவார்கள் இல்லையா? அதுமாதிரி நம்மளையும் பார்த்து பயத்துடன் சிலர் ஒதுங்குவதைப் பார்த்ததும் எனக்குள் திமிர் கூடிப்போய் யாராக இருந்தாலும் கவலைப்படாமல் எதிர்க்கும் துணிச்சலை எனக்கு கொடுத்தது. மதியமே குவாட்டர் அடிக்கும் அளவுக்கு நான் என் தரத்தில் கீழிறங்கிப்போனேன். ஏற்கனவே என் அண்ணன் குடிகாரனாகி அது வீட்டில் பெரிய பிரச்சினையை ஏற்படுத்தி இருந்தது. இப்படியான ஒரு நாளில் என் அண்ணனின் நண்பன் தன்னுடைய சிங்கப்பூர் பயணத்திற்காக மன்னார்குடியில் எல்லோருக்கும் ட்ரீட் கொடுக்க அப்போது எதேச்சையாக அங்குபோன என்னையும் கட்டாயப்படுத்தி குடிக்கச்சொல்லவே நானும் அவரிடம் என் அண்ணனிடம் சொல்லக்கூடாது என உறுதிமொழி வாங்கிக்கொண்டு குடித்தேன்.

ஆனால் மறுநாள் காலையில் என் வீட்டில் என்னை அழைத்து ஆளுக்காள் டோஸ் விட ஆரம்பித்தனர். நான் முதலில் குடிக்கவே இல்லை என மறுத்தேன். ஆனால் என் அண்ணன் என்னை அடிக்கப்பாயவும் அவனைத்தடுத்து. "முதல்ல நீ ரொம்ப யோக்யமா? என்னை கண்டிக்க உனக்கு துகுதியே கிடையாது. நான் குடிப்பது என் சொந்த விசயம். அதனைக் கேட்க யாருக்கும் உரிமை இல்லையென்றேன்". அம்மா ஒப்பாரியே வைத்தது. அதுவரை பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த என் தந்தையார் எல்லோரிடமும் "இதுவரைக்கும் அவன் நமக்கு பயந்து குடிச்சிட்டு இருந்தான், இனி பகிரங்கமா குடிக்க ஆரம்பிப்பான் அவ்வளவுதான்" எனச்சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.

அதன்பிறகு வீட்டுக்கு தெரிந்தே குடிக்க ஆரம்பித்தேன். இந்த காலங்களில் என்னுடைய அம்மா என்னை அழைத்து சொன்ன ஒரே அறிவுரை "நீ தப்பான வழில போக ஆரம்பிச்சு இருக்கே, ஆனா இன்னைக்கு அது உனக்கு தப்புன்னு தெரியலே. என்னைக்காவது உனக்கு புரிய வரும்போது உன்னாலே மீண்டும் நல்ல நிலைக்கு வரமுடியாமலே போய்விடும். எனவே இன்னியிலிருந்து உன்னோட எந்த விசயத்திலயும் நாங்க தலையிட மாட்டோம். உன் வாழ்கையை நீயே இனி முடிவு பண்ணிக்க" என்று சொல்லிட்டாங்க.

இந்த காலகட்டத்தில்தான் எனக்கு ஒரு பொண்ணு பழக்கமானுச்சு. அது என்னை லவ்வுதுன்னு எனக்குத்தெரியும் நண்பனிடம் சொன்னதும். "உங்க வீட்டுல நீ அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்ய நிச்சயம் சம்மதிக்க மாட்டாங்க, அதனாலே யூஸ் பண்ணிட்டு விட்டுர்றா!" என்றான். எனக்கு அப்போதிருந்த பெண்களின் தொடர்புகள் பற்றி அவனுக்கு நன்றாகத்தெரியும். நான் எந்தப் பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டாலும் அவர்களிடம் சொல்லும் கண்டிசனே "i enjoy, you enjoy, we enjoy" என்பதுதான். என் நண்பன் மெடிக்கல் ஷாப் வைத்திருந்ததால் பாதுகாப்பு சமாச்சாரங்களுக்கு பிரச்சினை இல்லை என்பதால். வேறு பிரச்சினைகளை நாங்கள் சந்திக்கவில்லை. யாரையும் நான் திருமணம் செய்து கொள்கிறேன் என சொல்லி மடக்கியதில்லை. இவள் என்னை காதலிக்கிறாள் என்று தெரிந்தபின் என்னால் வெறுமனே பயன்படுத்திக்கொள்ளவும் மனசில்லை.

இப்படியாக நகர்ந்த ஒருநாளில் எட்டுக்குடிக்கு திருவிழாவுக்கு போய்விட்டு வந்தபோது ஒரு காஸ்ட்லியான கழுத்து மணி ஒன்று அவளுக்கு வாங்கி வந்திருந்தேன்.. அதனை என் வீட்டில் வேலை செய்யும் பையனிடம் கொடுத்து அவளிடம் சேர்ப்பிக்கச்சொல்லிவிட்டு நான் அன்று இரவு வயலுக்கு போய்விட்டேன். மறுநாள் காலை வீட்டுக்கு வந்தபோது அதே மணியை என் சகோதரியின் மகள் அணிந்திருந்தாள். வீட்டில் எல்லோரும் என்னைத் திருடனைப்போல் பார்த்த பார்வையில் விசயம் தெரிந்துவிட்டதை உணர்ந்தேன்.

அன்று மாலை அதற்க்கான பஞ்சாயத்து வீட்டில் கூடியது. அதாவது எங்கள் வீட்டில் வேலை செய்யும் பையன் அவளிடம் மணியை சேர்ப்பித்தபோது பின்னாளில் என் சகோதரி நின்றத்தை அவன் கவனிக்கவில்லை. அப்புறமென்ன பெரிய ரகளை நடந்து, அவளோ தனக்கு எதுவும் தெரியாது என்றும் நான்தான் அவளை தொந்தரவு செய்கிறேன் என்றும் சொல்ல. வீட்டில் கடுப்பாகி பெரிய சண்டையே நடந்திருக்கிறது. ஆனால் இது எதுவுமே தெரியாத நான் மாட்டிக்கொண்டு பஞ்சாயத்தில் நின்றபோது. இனி அவளைப் பார்க்ககூடாது என என் சகோதரி கண்டிசன் போட, நானோ அது என் சொந்த விருப்பம் என பதில் சொல்ல. என் அம்மாவோ "தம்பி அவ உன்னைத்தான் கட்டிக்குவேன்னு தைரியமா சொல்லிருந்தா, நாங்க கட்டிவைப்போம். ஆனா நீதான் அவ பின்னாடி சுத்துனேன்னு சொல்றா? இவ எப்புடி நமக்கு சரியா வருவா? எனக்கேட்டதும், நான் அவளை விசாரித்துவிட்டு சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு வெளியே கிளம்பிவிட்டேன்.

அதற்கடுத்த நாள் அவளை ரகசியமாக சந்தித்து "ஏண்டி அப்படி சொன்னே?" எனக்கேட்டதும். "என்னை என்ன செய்யச் சொல்றே? எனக்கு பயமா இருந்துச்சு அதான் அப்படி சொன்னேன்" என்றாள். அவளையும் யூஸ் பண்ணிட்டு விட்டுருக்கனும் என ஏனோ அப்போது எனக்குத் தோன்றியது.

சேட்டைகள் தொடரும்...

9 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

முதல் ஆளா படிச்சிருக்கேன்...

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

”துரோணா-8” மட்டுமே படித்தேன்.

நீங்கள் உள்ளது உள்ளபடி சுயசரிதம் போல எழுதுவதிலிருந்து நீங்கள் மிகவும் துணிச்சலானவர் என்று புரிகிறது.

படிக்கும் எனக்குத்தான் சற்று பயம் ஏற்படுகிறது.

உண்மைகளை இப்படிப் புட்டுப்புட்டு வைக்கலாமா, நண்பரே.

கடைசியில் அது பிறரையும் இது போலெல்லாம் செய்து வாழ்க்கையை வீணாக்கிக் கொள்ளக்கூடாது என்ற அறிவுரையை வழங்குவதாக இருந்தால் OK.

raja சொன்னது…

முதல் சில அத்தியாயங்கள் நன்றாக இருந்தது.. ஆனால் போக போக மிக மோசமான விஷயங்களை GLORYFY செய்து எழுதுகிறீர்களோ என்று எனக்கு படுகிறது.. தமிழ் சினிமாக்காரர்கள் ரியலிசம் எனும் பெயரில் இதைத்தான் செய்கிறார்கள்... செந்தில் உங்கள் எழுத்தின் மீதான நல்ல எண்ணத்தில் தான் இதை சொல்லுகிறேன் . புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

யப்பா மக்கா....
நீங்க மும்பைக்கிதான் லாயக்கு வந்துருங்க....முமபைக்கு....

Unknown சொன்னது…

//கடைசியில் அது பிறரையும் இது போலெல்லாம் செய்து வாழ்க்கையை வீணாக்கிக் கொள்ளக்கூடாது என்ற அறிவுரையை வழங்குவதாக இருந்தால் OK.//

இதை படிக்கும் தான் சற்று பயம் ஏற்படுகிறது.

'பரிவை' சே.குமார் சொன்னது…

THURONA - vithiyasamana pathaiyil panippathu pol therikirathu. anna... konjam nasukkaka ezhuthalamey?

Unknown சொன்னது…

நான் எழுதும் இந்தத்தொடரில் உள்ளவற்றில் பெரும்பாலனவற்றை நான் எழுதவில்லை என்பதுதான் உண்மை. உங்களின் வேண்டுகோளை ஏற்று இனி வருகிற அத்தியாங்களில் கவனமாக எழுதுகிறேன்.

மாயாவி சொன்னது…

கொஞ்சம் குறைச்சுக்கலாம். எதை என்று உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை.

Unknown சொன்னது…

நீங்கள் வலையுலக தேசாந்திரியாக தோன்றுகிறது.
நிறைய அனுபவக்குவியல்.

சொல்லாததும் உண்மையாக இருக்கட்டும்..

உங்களைப்போல எழுத முயற்சி செய்பவர்கள் ஏராளம்.

உங்களின் சறுக்கல்களும் அதிகமாய் கவனிக்கப்படுவதாய் தெரிகிறது.