10 மார்., 2011

அலோ.. தன்ராஜா?.. நான் இப்ப ரொம்ப பிசி!!...


தேர்தல் வெகு அருகில் நெருங்கி வந்துவிட்டது ஆனால் தமிழகத்தில் இன்னும் இரண்டு பெரிய கட்சிகளுமே தங்கள் கூட்டணியை முடிவு செய்து வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. தேர்தல் அறிக்கைகளைத் தயார் செய்வதற்கே குறைந்தது ஒரு வாரமாவது பிடிக்கும். 

தி.மு. க கூட்டணியில் காங்கிரஸ் கட்சியால் ஏற்பட்ட தள்ளு முள்ளு தகராறுகள் முடிந்து, தி.மு.க தொண்டர்களின் வெறுப்பையும் மீறி அவர்கள் கேட்ட 63 -க்கே ஒத்துக்கொண்டு விட்டனர். இப்ப காங்கிரஸ்காரர்களின் பிரசினை ஆரம்பமாகிவிட்டது. எந்தெந்த கோஷ்டிக்கு எத்தனை இடம் கொடுப்பது என்று அவர்கள் முடிவு எடுப்பதற்குள் சத்தியமூர்த்தி பவனில்  வேட்டியை கிழித்துக்கொண்டு மீதமிருக்கிற பெஞ்சுகளை உடைத்துவிட்டு இறுதியில் அன்னையின் ஆணைப்படி ராகுலின் பட்டியலை முடிவு செய்து வெளியிடும்போது வேட்புமனு தாக்குதலுக்கான நாள் வந்துவிடும்.

தி.மு.க விலும் காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளை கொடுத்துவிட்டு களிஞ்சரின் குடும்பத்தில் இருக்கிற ஒவ்வொரு ஆள் நீட்டும் பட்டியலை சரிபார்த்து ஆட்களை தேர்வு செய்யவும் இதே நாள் ஆகலாம். ஆனால்  பா.ம.க ,  வி.சி.க இரண்டுக்கும் வேட்பாளர்கள் தேர்வில் பிரச்சினை வராது. ஆனால் கொ.மு.ச புதிய சாதிக்கட்சி என்பதால் அங்கும் பிரச்சினை வரலாம்.

அ.தி.மு.க கூட்டணியை பொறுத்தவரை எல்லாம் மேடம் முடிவு செய்வதுதான் என்பதால் அங்கு வரும் தேர்தலுக்கான நேரம் மிக நெருக்கத்தில் இருந்தாலும் அவர்கள் பக்கத்தில் போதுமான பிரசார நாட்கள் கைவசம் இருக்கிறது என்பதுதான் உண்மை.

சென்னையில் சாலைகள் துரித கதியில் புதிப்பிக்கப் படுகின்றன. மாலை நேரங்களில் கொசு மருந்து வண்டிகள வீதிகள்தோறும் வந்து சாக்கடைகளில் பதுங்கியிருக்கும் கொசுக்களை தட்டி எழுப்பி வீட்டுக்குள் விரட்டிவிட்டு செல்வதால் இரவு முழுவதும் கொசுக்கடியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆல் அவுட்டுக்கு மயங்காத கொசுக்கள் இனி தலைவர்களின் வீரவேச உரைகளால் மயங்கலாம் . கிராமங்களில் இப்போதே மின்வெட்டு துவங்கிவிட்டது என்றாலும் ஏறிப்போன டீசல் விலையைப் பற்றி கவலைப்படாத அரசியல்வாதிகள் ஜென்செட்டு வைத்து முழக்கமிடுவார்கள். 

ஆட்சி மாறினாலும் இங்கு தேனாறும், பாலாரும் ஓடவா போகிறது என அங்கலாயிப்பவர்கள் ஒரு புறமும். கிரிக்கெட் ஜுரத்தில் படிப்பை கொட்டிவிடும் மாணவர்கள் மறுபுறமும் இந்த தேர்தலைப் பற்றி கவலைப்படாமல் இருக்க. இந்த தடவை ஓட்டுக்கு எவ்வளவு பணம் கொடுப்பாங்க, புதிதாக என்ன இலவச அறிவிப்பு வரும் என கணக்குப் போடும் மக்கள் இன்னொரு புறமும், ஏற்கனவே குழிக்குள் போட்ட ஜனநாயகத்தின் மேல் ஆளுக்கொரு கை மண் அள்ளி போடத் துவங்குகின்றனர்.
 
எனவே இந்த தேர்தலில் நம்ம தலை கவுண்டமணி சொல்ற மாதிரி நீங்க எந்த அரசியல்வாதிக்கு போன் செய்தாலும் அவர்களிடமிருந்து( ஆதரவிற்காக பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இருப்பதால்) வரும் பதில் இப்படித்தான் இருக்கும்...

"அலோ தன்ராஜா? நான் இப்ப ரொம்ப பிசி!!

28 கருத்துகள்:

Unknown சொன்னது…

நல்லா சொன்னீங்க தலைவரே!

மாயாவி சொன்னது…

அருமை அண்ணே

சக்தி கல்வி மையம் சொன்னது…

அரசியல் விளையாட்டு ஆரம்பமாயிடுச்சி...

மாணவன் சொன்னது…

நடக்கட்டும் நடக்கட்டும்.... :)

'பரிவை' சே.குமார் சொன்னது…

நல்லா சொன்னீங்க அண்ணே.

Madhavan Srinivasagopalan சொன்னது…

//"அலோ தன்ராஜா? நான் இப்ப ரொம்ப பிசி!! //

ஹா.. ஹா.. ஹா.
இது செம..

எல் கே சொன்னது…

unga aatharavu yaruku

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//மாலை நேரங்களில் கொசு மருந்து வண்டிகள வீதிகள்தோறும் வந்து சாக்கடைகளில் பதுங்கியிருக்கும் கொசுக்களை தட்டி எழுப்பி வீட்டுக்குள் விரட்டிவிட்டு செல்வதால் இரவு முழுவதும் கொசுக்கடியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆல் அவுட்டுக்கு மயங்காத கொசுக்கள் இனி தலைவர்களின் வீரவேச உரைகளால் மயங்கலாம்.//

என்னையே சிரிக்க வைத்த நகைச்சுவை வரிகள். வாழ்த்துக்கள்.

சசிகுமார் சொன்னது…

//கொசு மருந்து வண்டிகள வீதிகள்தோறும் வந்து சாக்கடைகளில் பதுங்கியிருக்கும் கொசுக்களை தட்டி எழுப்பி வீட்டுக்குள் விரட்டிவிட்டு செல்வதால் இரவு முழுவதும் கொசுக்கடியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறோம்//

மிக அருமை, உண்மையும் கூட

Chitra சொன்னது…

எனவே இந்த தேர்தலில் நம்ம தலை கவுண்டமணி சொல்ற மாதிரி நீங்க எந்த அரசியல்வாதிக்கு போன் செய்தாலும் அவர்களிடமிருந்து( ஆதரவிற்காக பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இருப்பதால்) வரும் பதில் இப்படித்தான் இருக்கும்...

"அலோ தன்ராஜா? நான் இப்ப ரொம்ப பிசி!!


.... :-)))

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அரசியல் சதிராட்டம் ஆரம்பம்...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அலோ கே ஆர் பி'யா நான் இப்ப ரொம்ப பிசி....

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

எல்லாம் உண்மைதாங்க..
தேர்தல் ஏழைகளுக்கு ஒன்றும் பயன்னில்லை..

ஓட்டுக்கு வாங்கும் காசை தவிர..

ஒரு கொடுத்து விட்டு 5 ஆண்டுகள் சம்பாதிப்பது இவர்களது வேலை..

பனித்துளி சங்கர் சொன்னது…

தமிழகத்தின் உண்மை நிலையை அழகாகப் படம் பிடித்து காட்டி இருக்கிறது தங்களின் பதிவு நண்பா . பகிர்வுக்கு நன்றி

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

சேலத்துல முக்கிய பிரமுகர் கைதாமே?

தமிழ் உதயம் சொன்னது…

வாழ்க பாரதம்... வளர்க ஜனநாயகம்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நடக்கட்டும் நடக்கட்டும்..

Unknown சொன்னது…

நான் இப்ப ரொம்ப பிசி!

Avargal Unmaigal சொன்னது…

கவுண்டமணி :டேய் நம்ம தமிழ் மக்களுக்கு அறிவே இல்லைடா. ஒரு கட்சியையே 10 அல்லது 20 வருஷம் ஆட்சி செய்யவுட்டா அவன் சொத்தை சுருட்டி சோர்ந்து போய் ஒருவேளை நாட்டுக்கு நல்லது பண்ணுவான்டா. ஆனா நம்ம தமிழ் மக்கள் என்ன பண்றாங்க ஐந்து வருஷதுக்கு ஆட்சியை மாத்தி மாத்தி விடறாங்க. அவங்க ஐந்து வருஷம் சம்பாதிச்ச காசை ஐந்து வருஷம் செலவு பண்ணிட்டு மறுபடியும் வந்துடறான் கொள்ளை அடிக்க.


மேலும் படிக்க.....http://avargal-unmaigal.blogspot.com/2011/03/2011-vs.html

ஈரோடு கதிர் சொன்னது…

நாள் குறைவு என்பதால் செலவு குறைவுன்னு சந்தோசப்படுவாங்க!!!

ங்கொய்யாலே....
வாக்குப் பதிவு முடிஞ்சு 1 மாசம் காத்திருக்கனுமே!!!?

settaikkaran சொன்னது…

ரைட்டு! :-)

Unknown சொன்னது…

பதுங்கியிருக்கும் கொசுக்களை தட்டி எழுப்பி வீட்டுக்குள் விரட்டிவிட்டு செல்வதால் இரவு முழுவதும் கொசுக்கடியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறோ//

தேர்தல் வரை நீங்களும் உறங்காமல் உழைக்கதான் இந்த ஏற்பாடோ. ஆனாலும் செம காமெடியான் வரிகள்தான்.

vasu balaji சொன்னது…

=)).பூந்து விளையாடுங்க. இதெல்லாம் அவனுவ படிக்க மாட்டானுவளே:(

Yaathoramani.blogspot.com சொன்னது…

அனைவரின் மன நிலையை
அப்படியே பதிவு செய்துவிட்டீர்கள்
தொடரட்டும் உங்கள் அரசியல் விமர்சனங்கள்
ஆவலாக உள்ளோம்

உங்களில் ஒருவன் சொன்னது…

தோழரே நிச்சயம் ஒருநாள் நாம் அனைவரும் நிம்மதி பெருமூச்சுவிடுலாம் அந்த கட்சி ஆட்சிக்கு வந்தவுடன், கவலை படாதீர்கள்,,,

ஸ்வர்ணரேக்கா சொன்னது…

//ஏற்கனவே குழிக்குள் போட்ட ஜனநாயகத்தின் மேல் ஆளுக்கொரு கை மண் அள்ளி போடத் துவங்குகின்றனர்.//

-- தப்பித் தவறி கூட ஜனநாயகம் எழுந்துவிடக்கூடாது பாருங்க...வாஸ்தவமான வரிகள்..

TamilTechToday சொன்னது…

No 1 Free Indian Classified Site உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க Free Classified New Website . Just Post Your Post Get Free Traffic ....http://www.classiindia.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.classiindia.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)
நன்றி

raja சொன்னது…

ELECTION IS VERY SOON.. WRITINGS LA.. KONJAM KAARAM THOOKALA IRUNDHAAL NANTRU ( EXCUSE MY NHM IS GOT VIRUS)