courtesy by : gapingvoid art |
எல்லாம் வாங்கியபின் அர்ச்சனைக்கு வரிசை கட்டினோம். வியாழன் என்பதால் கூட்டம் வேறு அதிகம். கிடைத்த சப்பை பிகரை நோக்கியவாரே நகர்ந்தோம். அது குன்ஸா சிரிக்கும்போது தெரிந்த சொத்தைப் பல்லு பயமுறுத்தினாலும் கிடைத்த பிகரை தக்கவைக்கும் முயற்சியில் நண்பன் மொத்த சாமானையும்.என் கையில் கொடுத்துவிட்டான்.
சரியாக எங்கள் முறை வரும்போது வாசலில் அந்த ஏரியா உ.பி குடும்பத்தினரை சுமந்த டாடா சுமோ(அப்ப அதுதான் பெரிய கார்ர்ர்ர்ர்) வந்து நின்றது. உடனே ஐய்யருங்க எங்களை பின்னுக்குத் தள்ளி அக்குடும்பத்தை வரவேற்றனர். கரை வேட்டிக் காரருக்கும் அவர் வீட்டு அம்மணிக்கும் பெரிய மாலை போட்டு பிரமாதமாக பூஜை செய்தனர். அரை மணி நேரத்துக்கும் மேல் அவர்களுக்கே ஒதுக்கப்பட்டது. கடைசியில் உ.பி பத்து ரூபாய் தட்டில் போட்டார். ஐய்யமாருங்க வாசல் வரை சென்று வழியனுப்பிய பின்னர்தான் வந்தனர்.
நண்பனுக்கோ அவனின் சப்பை பிகர் அவனுருகே உரசிக்கொண்டு நின்றதால் அரை மயக்கத்தில் இருந்தான். அவனிடம் பூஜை பொருட்களை ஒப்படைத்துவிட்டு தலைவலிப்பதாய் சொல்லி வெளியே வந்துவிட்டேன்.
அங்குதான் கடவுள் பற்றிய தேடல் துவங்கியது.
கடவுள்னு ஒருத்தர் கோவில்ல இருந்தா இவனுங்க பன்னுற அயோக்கியத்தனத்த எப்படி பொருத்துக்குறாரு. அதுலயும் குரு நம்மை சரி செய்வார் என இங்க அவர தாஜா பன்ன வந்தா அவரவிட ஐயமாருங்க பெரிய ஆளா இருப்பாங்க போல. என் மனசுக்குள் கடவுள் பெரிய ஒலக்கய எடுத்து நச்சு நச்சுன்னு அடிக்கவும் இன்ஸ்டண்ட் புத்தனானேன். அப்ப கடவுள் என்பது இங்க இல்லை. பிக்காலிப் பயலுவோ(நன்றி அபி அப்பா) நம்மை ஏமாத்துறாங்க. அதனால ஒடனே நீயே தேடு என எனக்குள் திருவிளையாடல் படம் ஓடியது. அப்புறம் என்ன இனி ஆண்டவனை தேடிப்பாத்திட வேண்டியதுதான். ஆனா அந்தப் பயல் அதான் கடவுள் எந்தக் கோவில்லயும் இல்லை என நானே, ஆமாங்க நானேதான் முடிவு பன்னேன்.
அர்ச்சனை முடிந்து வெளியே வந்த நண்பன் எனக்கான பையைக் கொடுத்தான். நான் அதனை அப்படியே வாயிலில் இருந்த பிச்சைக்கரனிடம் கொடுத்தேன். அவென் என்னிய ஒரு பைத்தியக்காரனை பாக்குற மாதிரியே ஒரு லுக்க போட்டான். என் நண்பனிடம் இப்ப எதுவும் பேசாதே என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தேன்.
அதன் பிறகு ஓஷோ, ஜே.கே.தீவிரமாகப் படித்து. அங்கிருந்து வேதாத்ரி மகரிஷியின் தத்துவங்களில் ஈர்க்கப்பட்டு அங்கேஆசிரியப் பயிற்சி வரைக்கும் போனேன். அப்போதுதான் ஒரு நண்பர் ”WHY I AM NOT A CHRISTIAN” படிக்கக் கொடுத்தார். அதன் பின் ”நான் ஏன் இந்து அல்ல” தொடர்ச்சியாக பெரியார் புத்தகங்கள் படித்த போதுதான் ராகுல சாங்கிருத்யானின் " வால்காவிலிருந்து கங்கைவரை" என்னை புரட்டிப் போட்டது.
கிட்டத்தட்ட எட்டு வருடங்கள். சுத்த சைவமாக இருந்தேன். முட்டை கலந்திருக்கும் என்பதால் பிரெட் கூட தொடமாட்டேன். குடிப் பழக்கம் அறவே இல்லை. சிங்கப்பூரில் சைவ உணவுக்கு தேக்கா தவிர்த்து நாயா அலையனும். சமயங்களில் வெறும் சாதமும், கீரையும் வாங்கிக்கொள்வேன். சீன உணவில் கீரையில் கூட கொஞ்சம் நெத்திலி கிடக்கும். ஒவ்வொன்றாக பொருக்கி எடுத்துவிட்டு சாப்பிடுவேன். தாய்லாந்து போனால் சைவ உணவு தேடும் என்னை ஒரு ஜந்துவாக பார்ப்பார்கள்.
அப்புறம் நானே சமைக்க முயற்சி பன்னேன். அதாவது தினம் ஒரு கீரை வாங்கி அலசிவிட்டு சிறிய துண்டுகளாக வெட்டி சும்மா வதக்கிவிட்டு சோற்றில் போட்டு சாப்பிடுவேன். தினசரி கீரை வாங்கும்போது அங்கிருக்கும் இரண்டு கீரைகளை மட்டும் வாங்க மாட்டேன். ஒன்று மரவள்ளி தழை, மற்றது சர்க்கரை வள்ளி தழை. ஒரு நாள் அந்த சீனன் ”ஏன் இதுகளை மட்டும் வாங்க மாட்டேங்கிறே அதுவும் நல்ல கீரைதான்” என்றார். நான் அவரிடம் ”நாங்கள் இதை சாப்பிட மாட்டோம் ஆட்டுக்கு உணவாக கொடுப்போம், அப்புறம் அந்த ஆட்டை அடிச்சு சாப்பிடுவோம்” என்றேன். அதன்பிறகு இப்போதுவரை அந்தக் கீரையை சாப்பிடவில்லை என்றாலும் சமீபமாக நாட்டு ஆட்டுக் கறி சாப்பிடுகிறேன்.
நான் செய்த பிஸினெஸ் ஓவ்வொரு முறையும் என் ஆத்ம நண்பர்களால் ஆட்டைய போடப்படும் போதும். மீண்டும் அங்கிட்டு இங்கிட்டு பணம் பொரட்டி அடுத்த பிஸினஸ் ஆரம்பிப்பேன். இப்படியாக போன வாழ்க்கையில் விடிவெள்ளியாக யூ.ஜி.கிருஷ்ண மூர்த்தி என ஒருத்தர் வந்தார். அண்ணசாலை லேண்ட்மார்க் புத்தக கடையில் ஒரு நாள் யூ.ஜி யின் புத்தகம் ஒன்றைப் பார்த்தேன். அதன் பின்னட்டையில் “எனக்கு சுடும் அதிகாரம் இருந்தால், நான் முதலில் சுடுவது ஆசிரியர்களைத்தான்” என்றிருந்தது. நான் அங்கு கிடைத்த அவரின் மூன்று புத்தகங்களையும் அப்போதே வாங்கிவிட்டேன்.
அதில் ஒரு விசயத்தை மிகத் தெளிவாக சொல்லியிருப்பார், நீ ஒரு போதும் கடவுளைத் தேடாதே. அது மிகப்பெரிய வலி. ஒரு வேளை கடவுளுக்கு உன்மேல் பிரியம் இருந்தால் அவர் உன்னைத் தேடி வருவார். நீ எப்போதும் போலவே இயல்பாக வாழு என்பார். அதன்பிறகு எனக்கு கடவுள் தேவைப்படவில்லை. எப்போதாவது திருவண்ணாமலை போவேன். இரண்டு நாள் இருப்பேன். ஒரே ஒருமுறை மட்டும் மனைவி இரண்டாவது பையன் கருவில் இருந்தபோது பிரசவத்தில் சிக்கலும், கையில் பைசாவும் இல்லாமல் இருந்தபோது திருவண்ணாமலை மலை மீதமர்ந்து தனியாக ப்ரார்த்தனை செய்தேன். கடவுளும் போனா போகுது என சுகப்பிரசவம் அருளினார். மருத்துவமனையில் சேர்த்துவிட்டு கையில் மீதமிருக்கும் 150 ரூபாயுடன் நின்றபோது தம்பி சரவணனின் அம்மா 30000 ஆயிரம் ரூபாயை கையில் தந்தார்.
இப்படித்தான் இருக்கனுன்னு எல்லாரும் ஆசைப்படுறோம். அதற்கான முயற்சிகளையும் நாம் கைவிடுவதில்லை. ஆனால் எப்படியெப்படியோ வாழ நேர்கிறது. பத்தாம் வகுப்புவரை மிக நேர்மையான அப்பாவியான பையனாக இருந்த நான பதினொன்றாம் வகுப்பில் ஏற்கனவே பத்தாம் வகுப்பில் பெயிலான சீனியர்கள் அட்டெம்ப்டில் பாசாகி மீண்டும் எங்களுடன் படிக்க வந்த போது அவர்களின் ஆசியால் சிகெரெட்டில் துவங்கி மதுவில் உற்சாகமானது ஒரு வாழ்வின் அபத்தம். ஒரு நாளைக்கு ரெண்டு பாக்கெட் சிகிரெட் யாருக்குமே தெரியாம அடிக்க முடியுமா? நான் அடிச்சேன். ஒரு சிகிரெட் அடிக்கும் நேரத்தைவிட அதனை மறைக்க நான் படும்பாடு துயரங்கள் நிறைந்தவை. அப்போதும் ஒரு காதல் இருந்தது. ஆனால் என் பாதை உனக்கு சரிப்படாது என அவளுக்கு தெளிவாக சொல்ல பாலகுமாரனின் புத்தகங்கள் எனக்கு உதவின. அப்போது மறுத்த எனக்கு அதன்பின் அடுத்த வருடமே நான் திகட்ட திகட்ட காதலில் எப்படி கரைந்து போனேன் என்றும் இப்போதும் விளங்கவில்லை. நீ என்னடா காதலிச்சே நான் உன்னை காதலிக்கிறேன் பாருன்னு இப்போதும் என்னை தன் சிறிய மனதிற்குள் சிறை வைத்துவிட்ட மனைவிக்கு, அவள் காதலை அதே அளவு இல்லாவிட்டாலும் முடிஞ்ச அளவு திரும்பக் கொடுக்க முடியாமல் மலேசியாவில் பொருள் தேடியலைகிறேன்.
அப்போதும் சரி அதன்பிறகு எப்போதும் சரி கடவுள் தேடல் என்னை இன்னொரு விளிம்புக்கு தள்ளியவாரே இருந்தது. ஆனால் என்னைக் கடந்து செல்லும் நட்புகளால் நான் மிகவும் காயப்பட்டேன். யாருக்காவது இரக்கப்பட்டால் அவர்கள் என்னை கொன்று புதைத்து விடுவார்கள். அது வைத்திருந்த அத்தனை தொடர்புகளையும் தூக்கியெறிந்து முகம் அறியாத இணைய நண்பர்களிடம் என்னை திருப்பியது.
நல்லவேளை ஜக்கி, நித்தி, கல்கி மாதிரி ஆளுங்க சகவாசம் தேவைப்படல, இருந்திருந்தா நானும் பகுதி நேர கடவுளா மாறி சென்னையில் (இங்கதான் இளிச்ச வாயனுங்க அதிகம்) ஒரு ஆசிரமம் ஆரம்பிக்கும் வாய்ப்பு எங்க முப்பாட்டன் மின்னடியானின்(குல தெய்வம் பேரு) பேரருளால் கைவராமலே போய்விட்டது.
அதன்பிறகு என்னற்ற பிரச்சனைகள் எல்லாமும் நானே சரிசெய்துகொள்வேன் எனும் நம்பிக்கை கடவுளை என்னிடமிருந்து தூரத்தியடித்தது. நம்ம திருடி திங்கிறதுக்கு ஏற்படுத்தின கடவுள வேற யாராவது மனுசப்பயளுக திருடிட்டு போயிடுவாகளேன்னு பெரிய பூட்டா பூட்டி வச்சிருக்கிற எந்தக் கோவிலயும் அதுக்குள்ள இருக்கிற கருங்கல்ல கும்பிட வரிசை கட்டும் பயபுள்ளைகள பாத்ததாக்க ஆச்சர்யமா இருக்கும். மத்ததுக்கு எல்லாம் ஆயிரம் லாஜிக்கு பாக்கும் இவனுக இதுக்கு பாக்க மாட்டானுகளான்னு, ஆனா இப்பவும் தன் எதிர்கால முதலமைச்சர கூட சினிமாவுல தேடுற பயக அப்படித்தான் இருப்பானுகன்னு என் ஆசான் திருவண்ணாமலை போனா மட்டும் ஞானம் வரும் செந்தில் சித்தன் சொன்னதால் நான் இப்பல்லாம் அதெ பத்தில்லாம் நோ யோசனை.
ஆனால் இப்போது நண்பர் நரேன் மூலமாக மீண்டும் ஒரு வியாபரத்திற்காக கடவுள் தேவைப்படுகிறார். எதையும் லாஜிக்குடன் பார்க்கும் லாஜிஸ்டிக் ஆள் நான் என்பதால் இவ்வியாபரத்திற்கு நானே பொருந்துவேன் என நினைத்திருப்பார் போல. இப்ப பக்திதான் Top Most Business என்பதால். அந்தப் பக்கமும் இறங்குகிறோம். இனி பக்திமான்களுக்கு கடவுள் தரிசனம் எளிதாகும். கணினி யுகத்துக்குள் கடவுளுக்கும் Schedule போடப்போகிறோம்.
அதனால் எல்லா முக்கியமான (வருமானம் முக்கியம்)ஆலயங்களுக்கும் தமிழ்நாடு முழுவதும் ஒரு பயணம் இருக்கு.
நாத்திகத்தில் இருந்துகொண்டே பக்தியை ஆராயப்போகிறேன்....
13 கருத்துகள்:
கடவுளைப் பற்றிய தேடுதல் தான் கடவுள் என்று ஒன்று இல்லை என்ற புரிதலை உருவாக்கும்.
மொத்தத்தில் கடவுள் என்பது ஒரு வியாபாரப் பொருள். அந்த வார்த்தையை ஆத்திகன், நாத்திகன் இருவருமே பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
சில விசயங்களில் உங்களைப் போலவே நான் இருக்கிறேன். :-)))
என்னைக் கடந்து செல்லும் நட்புகளால் நான் மிகவும் காயப்பட்டேன். யாருக்காவது இரக்கப்பட்டால் அவர்கள் என்னை கொன்று புதைத்து விடுவார்கள். // உண்மைதான். வலியிலிருந்து வெளிவந்த வார்த்தைகள்.எனக்கும் நேர்ந்ததுண்டு இதுபோல. சட்டென மனதை தைக்கும் வரிகள். இதுவும் கடந்து போகும் என்று நம்மை நாமே தேற்றிக்கொண்டு கரைகின்றன நாட்கள்...
//அதன்பிறகு என்னற்ற பிரச்சனைகள் எல்லாமும் நானே சரிசெய்துகொள்வேன் எனும் நம்பிக்கை கடவுளை என்னிடமிருந்து தூரத்தியடித்தது// உங்களால் சரி செய்யமுடியாத பிரச்சினைகளும் உலகத்தில் உண்டு என்று உணரும்போது மீண்டும் கடவுள் நம்பிக்கை வர வாய்ப்புண்டு.
கடவுள் நல்லவங்கள சோதிப்பான் , ஆனா கை விடமாட்டான்.. இது உங்கள் ஒரு காலத்து வழிகாட்டி பாலகுமாரன் சொன்னாரோ ,அது என்ன படங்க ,தொண்டை வரைக்கும் வருது ஆனா வர மாடீகிது...சும்மா தோணிச்சு சொன்னேன் , மத்தபடி தூள் கெளப்புங்க நல்ல பிசினஸ் தான், சீசன் சமயத்துல அள்ளலாம் ...நம் நண்பர் பேரிச்சை பழ வியாபாரத்துல செம கல்லா கட்டினாரு சமீப சீசன்ல!
//கடவுள்னு ஒருத்தர் கோவில்ல இருந்தா இவனுங்க பன்னுற அயோக்கியத்தனத்த எப்படி பொருத்துக்குறாரு//
இதுதானுங்க நம்ம எண்ணமும். அத்தனை சீர்கேடும் கடவுள் பெயரால் நடக்கிறதே!
இன்று வரை துன்பம் துரத்துகிறது. ஆனால் மரணம் எனும் விடுதலையாவது உண்டென சாவதானமாக நடக்கிறேன்.அடுத்தவருக்கு தீங்கு செய்யக் கூடாதென்பதில் அவதானமாக இருக்கிறேன்.
சுவாரசியமான எழுத்துநடை!
கடவுளை மற !மனிதனை நினை !!! உங்கள் கடவுள் வயபாரம்துக்கு அதரவு தரும் மனிதன் தான் " கடவுள் " உங்கள் அருகில் இருபவனை எங்கை போய் தேடபோகிர்கள்
God is business. It will surely come out well. Good luck.
|| இப்பவும் தன் எதிர்கால முதலமைச்சர கூட சினிமாவுல தேடுற பயக அப்படித்தான் இருப்பானுகன்னு என் ஆசான் திருவண்ணாமலை போனா மட்டும் ஞானம் வரும் செந்தில் சித்தன் சொன்னதால்||
செந்தில் சித்தன் மட்டமல்ல,என்னைப் போன்ற பல 'சித்தர்கள்' இதை சொல்லிக்கொண்டேதான் இருக்கிறோம். :))
I like the honesty in your writings.
Thanks for sharing your thoughts.
//ஐய்யமாருங்க வாசல் வரை சென்று வழியனுப்பிய பின்னர்தான் வந்தனர்//
ங்கொய்யால, இவனுங்க இம்சையதான் தாங்க முடியல கோயில்ல. கடவுளுக்கே பி.ஏ மாதிரி, ஒவ்வொருத்தனும் ஆண்டவனை பாக்க அப்பாயிண்ட்மெண்ட்க்கு ரேட் பேசுறானுங்க. இவனுங்க மேல இருக்கிற கடுப்புல நான் கோயிலுக்கு போறதயே குறைச்சிட்டேன்.
கடவுள் நம்பிக்கைக்கு வளர்ப்பு என்பதோடு வாழ்க்கைப் பிரச்சினையும் ஒரு முக்கிய காரணம் என சகோ.சார்வாகனிடம் சொல்லி விட்டு வந்தேன்.
நீங்கெல்லாம் பத்தாம் வகுப்பு வரைதான் அப்பாவி.நாங்கெல்லாம் கல்லூரி வரை பீடி,சிகரெட்,மது,மாத்திரை,கஞ்சா (எல்லாம் அனுபவிக்கும் சந்தர்ப்பங்கள் இருந்தும் கூட)தொட்டதேயில்லை.எல்லாம் காதல் படுத்தின பாடு:)
"எங்க முப்பாட்டன் மின்னடியானின்(குல தெய்வம் பேரு) பேரருளால் கைவராமலே போய்விட்டது."
என் பாட்டி மின்னடி (முன்னடி?), மொடக்காளி என்று கும்பிடுவதைப் பார்த்து இருக்கிறேன். எந்த ஊர் சாமிகள் இவை- கொரட்டியா?
"எங்க முப்பாட்டன் மின்னடியானின்(குல தெய்வம் பேரு) பேரருளால் கைவராமலே போய்விட்டது."
என் பாட்டி மின்னடி (முன்னடி?), மொடக்காளி என்று கும்பிடுவதைப் பார்த்து இருக்கிறேன். எந்த ஊர் சாமிகள் இவை- கொரட்டியா?
கருத்துரையிடுக