8 டிச., 2010

பெண் எப்போது அடிமையானாள்?...

பெண்களை "சூத்திரர்களான" நாலஞ்சாதியருக்கு கீழாக மதிக்க வேண்டும் என்கிறது மனுதர்மம்.இந்துமதம் என்கிற ஆரிய மதம் பெண்களை வெறும் உயிரற்ற பொருளாகத்தான் மதிக்கிறது. மற்றும் சில சமூகங்களில்  பர்தா என்றும், கோஷா என்றும்,திரை என்றும் அதாவது பெண்கள் அறைக்குள் இருக்கவேண்டியவர்கள் என்றும்.முகத்தை மூடிக்கொண்டு வெளியில் போகவேண்டியவர்கள் என்றும். ஆண்கள் பல பெண்களை மணக்கலாம், ஆனால் பெண்கள் ஏக காலத்தில் ஒரு புருசனுக்கு மேல் கட்டிக்கொண்டு வாழக்கூடாது என்றும் கூறப்படுகிறது. "கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை" என்கிற வாக்கியபடி பார்த்தல், கற்பு என்பது சொல் தவறாமை: அதாவது நாணயம், சத்தியம், ஒப்பந்தத்திற்கு விரோதமிலாமல் என்றுதான் இருக்கிறது.தவிர புருஷர்கள் கற்புடையவர்கள் என்கிற பதம் காணக் கிடைகாதமைக்கு ஆணாதிக்கமே காரணம்.

கற்புக்காக புருசனின் கொடுமைகளை சகித்துக் கொண்டிருக்கவேண்டும் எனும் கொடுமையான மதங்கள், சட்டங்கள் மாயவேண்டும். ஆணின்தன்மை கோபம்.வீரம், வண்மை, ஆளும்திறன் கொண்டு விளங்குகிறது என்றும், பெண்ணின்தன்மை அன்பு, மேன்மை, சாந்தம், பேணும் திறன் கொண்டு விளங்குகிறது என்றும் சொல்கின்றனர். நாம் வேண்டும் பெண் உரிமை என்பது என்னவெனில் ஆணைப்போலவே பெண்ணுக்கு வீரம், வண்மை, கோபம், ஆளும்திறன் உண்டென்பதை ஆண்மக்கள் ஒப்புக்கொள்ளவேண்டும் என்பதே. மனித சமூக வளர்ச்சிக்கு இருபாலரின் குணங்களும் சமமாக இருக்கவேண்டும் என்பதே எமது கருத்தாகும். இருபாலரும் சமமாகவே இருக்க இயற்கையில் இடம் இருக்கிறது. ஆனால் அது செயற்கையால் - ஆண்களின் சூழ்ச்சியால் மாறுபட்டு வருகிறது.

இன்றைய தினம் காதலைப்பற்றி பேசுகிறவர்கள், "காதலென்பது, அன்பல்ல, ஆசையல்ல, காமமல்ல என்றும்," " அன்பு, ஆசை, காமம், நேசம்" வேறு , காதல் வேறு" என்றும்."அது ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் தங்களுக்குள் நேரே சொல்லமுடியாத ஒரு தனிகாரியதிற்க்கு ஏற்படுத்தப்பட்டது என்றும், அதுவும் "இருவருக்கும் இயற்கையாக உண்டாக்ககூடியது என்றும்" "அக்காதலுக்கு இணையானதாக உலகில் வேறு ஒன்றும் இல்லையென்றும்" அதுவும் " ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடமும், ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடம் மாத்திரம்தான் இருக்கமுடியும்" என்றும். பிறகு அந்தப்படி இருவருக்கும் காதல் ஏற்பட்டுவிட்டால் பிறகு எந்தக்காரணம் கொண்டும் எந்தகாலத்திலும் அந்தக்காதல் மாறவே மாறாது என்றும். அந்தப்படி அக்காலத்தில் வேறு யாருடனும் காதல் ஏற்படாது என்றும், அப்படி ஏற்பட்டால் அது காதலல்ல என்றும் அதை விபச்சாரம் என்றுதான் சொல்லவேண்டுமே ஒழிய ஒருபோதும் அது காதலாகாது என்றும், பிறகு ஒரு பெண்ணிடத்தில் காதல் ஏற்பட்டுவிட்டால் வேறு எந்தப்  பெண்ணிடமும் காதலோ, விரகமோ, மோகமோ ஏற்படாது என்றும் சொல்லப்படுகின்றன. இந்தப்படி ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடத்தில் காதலேற்ப்பட்டு பின்பு காதலில்லாமலும் போகலாம் அது போலவே பெண்ணுக்கு ஆணிடத்திலும் காதல் ஏற்ப்பட்டு பின் காதலிலாமலும் போகலாம். ஆகவே ஒரு மனிதன் ஒரு வஸ்துவை பார்த்த மாத்திரத்தில், கேட்ட மாத்திரத்தில், தெரிந்த மாத்திரத்தில் அந்த வஸ்து தனக்கு இருக்கலாம் - தனக்கு வேண்டும் என்று விரும்புகிறானோ, அது போலதான் இந்தக்காதல் என்பதும் ஏற்படுவதாக இருக்கிறதே ஒழிய வேறு எந்தக்காரணம் என நமக்கு புலப்படவில்லை.

இந்து மதத்தில் அறுபதினாயிரம் பெண்கள் வரையிலும், இஸ்லாத்தில் நான்கு பெண்கள் வரையிலும், கிறித்துவத்தில் எண்ணிக்கை குறிப்பிடப்படாமலும் பெண்களை மனம் செய்ய இடம் இருக்கிறது. இந்து மதத்தில் இந்துக்கடவுள்கள் பல திருமணங்கள் செய்துகொண்டதாகவும் மேலும் பல வைப்பாட்டிகள் வைத்திருந்ததாகவும் மத ஆதாரங்கள் காணப்படுவதுடன் மேலும் அந்தக்கடவுள்களை அந்தப்படியே அதாவது பல மனைவியர் மற்றும் வைப்பட்டிகளுடனே தமிழர்கள் - இந்துக்கள் பூசை, கல்யாண உற்சவம் முதலியன செய்து வருகிறார்கள். இஸ்லாமிய மதத்திலும் நாயகம் முகம்மது நபி அவர்கள் ஏக காலத்தில் ஒன்றுக்கு மேற்ப்பட்ட மனைவிகளுடன் இருந்ததாக ஒப்புகொள்ளப்படுகிறது. ஆகவே இதை மறுப்பவர்களோ இம்மாதிரி கடவுள்களையோ, நபியையோ குடறம் சொல்லுகிறவர்கள் ஒரு காலும் தங்கள் மதத்தின் பேரால் அல்லது கடவுளின் பேரால் மறுக்கிறோம் என்று சொல்லிக்கொள்ளமுடியாது. 

விபச்சாரம் என்கிற வார்த்தையின் அனுபவ தத்துவத்தை கூர்ந்து பார்த்தால் "விபச்சாரம்" என்பது பெண்கள் அடிமைகள் என்கிற குறிப்பு வார்த்தையாகத்தான் கொள்ளவேண்டும். அதாவது நமது நாட்டில் விபச்சாரம் செய்வதற்கென்று பெண்களைத்தான் பழி சுமத்தி சாதியை விட்டு தள்ளி வைக்கிறார்களே ஒழிய - வீட்டை விட்டு துரத்தியிருக்கிரார்களே ஒழிய, அடித்தும், உதைத்தும், வைத்தும் வைக்கிறார்களே ஒழிய சில சந்தர்ப்பங்களில் கொலை கூட செய்திருக்கிறார்கள் என்பதையும் நாம் கேள்விப்படிருகிறோம். சில இடங்களில் விபசாரம் ஆண்களுக்கு தற்பெருமை, கீர்த்தியாகவும், சில ஆண்கள் தங்களை பெருமையாகவும் சொல்வதைப்பார்த்து இருக்கிறோம். மக்களும் விபச்சாரி மகன் என்றால்தான் கொபித்த் கொள்கிறார்களே ஒழிய, விபசாரன் மகன் என யாரயும் சொல்வதில்லை. 

இப்படி புரச்சிகரமான கருத்துகளை சொன்னது தந்தை பெரியார், இவர் எழுதிய பெண் எப்போது அடிமையானால் என்ற புத்தகத்தில் இருந்து சில கருத்துகளை மட்டுமே உங்கள் முன் வைத்திருக்கிறேன்.

தரவிறக்கி முழுவதுமாக படிக்க...


இந்த இணைப்பு வேலை செய்யாவிட்டால் உங்கள் மின்னஞ்சல் முகவரியை தந்தால் PDF தொகுப்பை அனுப்பி வைக்கிறேன்...

25 கருத்துகள்:

ராவணன் சொன்னது…

பெரியார் சொன்னது இருக்கட்டும்...

ஆணோ பெண்ணோ யாராவது அடிமையாக இருக்கவேண்டும்.
அப்போதுதான் குடும்பவாழ்க்கை சிறக்கும்.

எத்தனை மந்திரிகள் இருந்தாலும் முதல்
மந்திரிக்கு மட்டும் பவர் அதிகம். யார் முதல் மந்திரி என்பது மட்டுமே பிரச்சனை.

Unknown சொன்னது…

நல்ல தகவல் பாஸ்! நன்றி லிங்க் க்கு! :-)

pichaikaaran சொன்னது…

நான் உட்பட யார் என்ன சொன்னாலும் அதை ஆராய்ந்தபின்னரே ஏற்க வேண்டும் என்பார் பெரியார்..

இஸ்லாம் என்ன சொல்கிறது, மனுதர்மம் என்ன சொல்கிறது என்பதெல்லாம் , விருப்பம் உள்ளவர்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்..

அதெல்லாம் வேண்டாம்... பெரியார் சொன்னதை அப்படியே ஏற்றுகொள்கிறோம் .. அதுதான் எளிது என சொன்னாலும், ஓக்கேதான்...

http://rkguru.blogspot.com/ சொன்னது…

பெரியாரின் சிந்தனை தகவல் என்றென்றும் போற்றுதலுக்கு உரியது....

Chitra சொன்னது…

இப்படி புரச்சிகரமான கருத்துகளை சொன்னது தந்தை பெரியார், இவர் எழுதிய பெண் எப்போது அடிமையானால் என்ற புத்தகத்தில் இருந்து சில கருத்துகளை மட்டுமே உங்கள் முன் வைத்திருக்கிறேன்.


....பகிர்வுக்கு நன்றி.

மாணவன் சொன்னது…

அருமை அண்ணே,

இன்னும் இது போன்ற நிறைய தகவல்களை எழுதவேண்டும்

பகிர்வுக்கு நன்றி

தொடரட்டும் உங்கள் பணி

அம்பிகா சொன்னது…

நல்ல பகிர்வு. நன்றி செந்தில்.

vinthaimanithan சொன்னது…

"கற்பெனப்படுவது சொல்திறம்பாமை"- அவ்வையின் இந்த வரிகளை மையமாக வைத்து நாஞ்சில்நாடன் ஒரு கட்டுரை எழுதி இருப்பார்.

அவசியமான அறிமுகம்.

அன்பரசன் சொன்னது…

//விபசாரன் மகன் என யாரயும் சொல்வதில்லை.//

:)

பெயரில்லா சொன்னது…

//புருஷர்கள் கற்புடையவர்கள் என்கிற பதம் காணக் கிடைகாதமைக்கு ஆணாதிக்கமே காரணம்// உங்களுக்கு காண கிடைக்கவில்லை என்றால் அதற்கு உங்கள் அறியாமைதான் காரணமே அன்றி நீங்கள் குறைகூறும் மதங்கள் கிடையாது. பெரியார் அந்த காலகட்டங்களில் சில புரச்சி கருத்துகளை கூறினார் என்பது உண்மை என்றாலும் அவரே அவரது சொல்லுக்கும் செயலுக்கும் சம்பத்தமில்லாமல் நடந்துகொண்டார் என்பதை சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு விவாதத்தில் நிருபணமானது. ஒன்று மதங்களை பற்றி ஒழுங்காக படித்து தெரிந்துகொள்ளுங்கள் அல்லது பெரியார் சொன்னது எல்லாம் சரிதான் என்று கண்மூடிதனமாக ஒப்புகொள்வது என்பதுதான் பகுத்தறிவு என்றால் அதையே தொடருங்கள், யாருக்கும் எந்த நஷடமும் இல்லை...!!!

காமராஜ் சொன்னது…

மனுதர்மமும்,இஸ்லாத்தும்,கிறித்துவமும் உன்னதமானவைகளாக இருந்திருப்பின் பெரியார்,மார்க்ஸ் புத்தர் இன்னும் ஏனையோர் தேவையில்லாது போயிருப்பர்.

Unknown சொன்னது…

பகிர்வுக்கு நன்றி. என் பதில், கருத்து எழுத சென்று அது ஒரு பதிவாகிவிட்டது. இன்று முடிந்தால் அப்பதிவை காணவும்.

நன்றி

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ஈரோட்டுப்பெரியாரின் பதிவு சூப்பர்

"ராஜா" சொன்னது…

அருமையான தகவல்கள் நண்பரே ஆனால் நடைமுறை வாழ்க்கையில் இதெல்லாம் சாத்தியபட நாம் இன்னும் இரண்டு மூன்று தலைமுறைகள் தாண்டவேண்டும் என்று நினைக்கிறேன்

பெயரில்லா சொன்னது…

//ராவணன் சொன்னது…

பெரியார் சொன்னது இருக்கட்டும்...

ஆணோ பெண்ணோ யாராவது அடிமையாக இருக்கவேண்டும்.
அப்போதுதான் குடும்பவாழ்க்கை சிறக்கும்.//

குடும்ப வாழ்க்கையில் அடிமை என்ற சொல்லுக்கு என்பதற்கு இடமே இல்லை. அவசியமும் இல்லை. பரஸ்பர புரிதல் இருந்தாலே போதுமானது. விட்டுக்கொடுப்பதற்குப் பெயர் அடிமைத்தனமாகாது.

RK நண்பன்.. சொன்னது…

அருமையான பகிர்வு அண்ணா.... பெரியாரின் எண்ணம் இப்போதுதான் நிறைய நடைமுறைக்கு வருகிறது/ஏற்றுக்கொள்ளப்படுகிறது... அவரது சிந்தனைகளை பின்பற்றினாலே போதும்..

RK நண்பன்.. சொன்னது…

இன்று அவரை வைத்தும் அரசியல் செய்பவர்கள் திருந்த வேண்டும்..

RK நண்பன்.. சொன்னது…

இந்திரா கூறியது...
///குடும்ப வாழ்க்கையில் அடிமை என்ற சொல்லுக்கு என்பதற்கு இடமே இல்லை. அவசியமும் இல்லை. பரஸ்பர புரிதல் இருந்தாலே போதுமானது. விட்டுக்கொடுப்பதற்குப் பெயர் அடிமைத்தனமாகாது.////

நச்சின்னு சொன்னிங்க.... உங்கள் கருத்தோடு ஒத்துபோகிறேன்...

vinthaimanithan சொன்னது…

@ uaetamilan
என்னடா அண்ணன் சீரியஸான பதிவா போட்டுட்டாரேன்னு நான் கன்னத்துல கைய வெச்சிட்டு இருந்தேன். நல்ல வேளை நீங்க வந்தீங்க... செம காமெடி பாஸ்.

மதங்கள் எல்லாம் உளுத்துப்போன கட்டடங்கள். அவற்றுக்கு முட்டுக் கொடுத்து ஏன் பாஸ் எனர்ஜிய வேஸ்ட் பண்றீங்க?

Jayadev Das சொன்னது…

ஒரு ஆண் பல பெண்களிடம் சுகம் காண்கிறான், அதையே பெண்களும் செய்ய ஆரம்பித்தால் அதுதான் பெண் சுதந்திரம். என்ன கருமாந்திரம்டா இது. தூ...

Jayadev Das சொன்னது…

பெரியார் கொள்கைகள் எவ்வளவு சொத்தையானவை என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? இந்த காணோளிகளைப் பாருங்கள், பெரியார் கொள்கைகள் தோலுரித்து உண்மையையைக் காட்டியுள்ளார்கள். மொத்தம் முப்பதுக்கும் மேல் உள்ளன, பார்க்கப் பார்க்க விறுவிறுப்பாகவே இருக்கும்.

http://www.youtube.com/watch?v=WNlPbvPfg_E

குறையொன்றுமில்லை. சொன்னது…

இன்னும் இதுபோன்ற நல்ல தகவல்களைப்பகிரவும்.

பெயரில்லா சொன்னது…

new download link:

http://rapidshare.com/files/436029773/Pen-Eppodhu-Adimaiyaanaal-Periyar.pdf

YUVARAJ S சொன்னது…

பாஸ்......

தொழில் : தரகு மட்டுமல்ல
பலம் : சரளமான ஆங்கிலம், எதிராளியை க(விழ்)ணிக்கும் திறமை

இதெல்லாம் ரெண்டு பதிவு முன்னால நீங்க எழுதுனது பாஸ்!!!!

நீரா ராடியா என்ற பெண்ணை (அவர் குற்றவாளியாகவே இருந்தாலும்) character assassination பண்ணிட்டு, இன்னொரு பக்கம் "பெண் ஏன் அடிமையானால்?"...விபச்சாரம், வெங்காயம், புடலங்காய் னு ஒரு பதிவு....

இப்படி தான் தான் எழுதனும். குட், கீப் இட் அப். உலகத்துலையே நீர் ஒருத்தன் தான் வோய் உத்தமர்!

PARTHASARATHY RANGARAJ சொன்னது…

நல்ல ஒரு விஷயம் , இது உறைக்கும்படி சொல்லப்படவேண்டியது பெண்களுக்கு , இவனை அவள் வைத்திருக்கிறாள் , ஒரு பெண்ணை நான்கு பேர் சேதப் படுத்துவார்கள் , அவர்களே அவனை மணக்கவிருக்கும் ஒருவனிடம் எப்படி செய்தோம் என்று விளக்கவுரை கொடுப்பார்கள் , முதலாளியின் மனைவிக்கு ஒருவன் விரட்டி விரட்டி செக்ஸ் தொல்லை தருகிறான் , ஒரு பெண்ணை காதால் கேட்க முடியாத அளவிற்கு திட்டி மாமியார்காரி விரட்டிவிடுவாள் , இவையனைத்தும் ஒரு நாள் நான் பார்த்த மெகா சீரியல் ஊறுகாய்கள் , பார்க்க முடியாமல் சானலை மாற்றும் அளவிற்கு உள்ள எனக்கு இளகிய மனமா , அல்லது இதை கண் கொட்டாமல் பார்க்கும் வீட்டு பெண்களுக்கு கொடூரமான குணமா என்று தெரியவில்லை . ஊட்டி ஊட்டி இவர்களை இப்படி ஆக்கியது ஆண்கள்தான் என்றாலும் , இது பெரியார் வாழ்ந்த காலம் அல்ல , பெண்கள் அவர்கள் விடுதலைக்காக கொதித்து எழுவதற்கு , கொஞ்சம் விழித்து கொண்டாலே போதும்