24 டிச., 2010

தலைவர்களும், தொண்டர்களும் அப்புறம் மக்களும்..

இந்தியா ஒரு ஆன்மீக புண்ணிய பூமி, உலகமெலாம் மென்பொருள் அறிவாளிகளை அனுப்பிய தேசம், மிகுந்த புத்திசாலிகள் நிறைந்த நாடு என நம்மை நாமே பெருமையாக பேசுவது உண்டு. ஆனால் உண்மையில் நாம் நமக்கான நிர்வாகிகளை ஒழுங்காக தேர்வு செய்திருக்கிறோமா? என்றால் இல்லை என்றுதான் கோரசாக பதில் சொல்லுகிறோம். உலகின் ஆகப்பெரிய ஜனநாயக நாடான நமது நாட்டின் இன்றைய நிலைமை கொஞ்சம் கவலைக்கிடமாக இருப்பது ஊடகங்களை கவனிப்பவர்களுக்கு தெரியும், பொதுவாகவே எந்த அரசு அலுவலகங்களிலும் லஞ்சம் கொடுக்காமல் வேலை நடக்காது. காரணம் ஆளும் வர்க்கம், ஒரு காலத்தில் மன்னர் ஆட்சி நடந்து முடிந்து, ஆங்கிலேயர் ஆதிக்கம் வந்து போய்விட்டபின்னும் நம்மிடம் இருக்கும் அடிமை மனோபாவம் மாறவேயில்லை. 

இந்தியாவின் அத்தனை அரசியல் கட்சி தலைவர்களுமே மன்னர்களைபோல்தான் தங்களை நினைத்துக்கொள்கிறார்கள், அவர்களுக்கான தொண்டர்களும் குறுநில மன்னர்களாக தங்களை நினைத்துகொண்டு தங்கள் ஒரு அரசியல் கட்சியின் தனித்த அடையாளமாக காட்டிக்கொள்வதில்தான் முனைப்பாக இருக்கிறார்கள்.இந்தியாவின் தற்போதைய பெரிய அரசியல் கட்சியான காங்கிரசை நிர்வாகிக்கும் ராஜீவ் குடும்பத்தினர், தங்கள் பெயருக்கு பின்னால் காந்தி என்ற பெயரை போலியாக வைத்துகொண்டு ஒட்டுமொத்த இந்தியாவையும் ஏமாற்றுகிறது. காந்தி என்ற அவர்களின் பெயரின் பிற்பாதியை எடுத்துவிட்டால், அவர்களால் அரசியலில் பிழைக்க முடியாது. தமிழகத்தின் அரசியலை எடுத்துகொண்டால் கலைஞரின் குடும்பம் மொத்தமும் அதிகாரத்தை பகிர்ந்து கொண்டு கோலோச்சுகிறது, பிரதான எதிர்கட்சியான அ.தி.மு.க வின் செயலாளர் (நிரந்தர) அவருக்கும் , அவரின் தோழிக்கும் வாரிசு இல்லையென்றாலும் தோழியின் சொந்த பந்தங்கள்தான் அந்த கட்சியின் உரிமையாளர்கள், பா.ம.க, ராமதாஸ் மற்றும் அவர்தம் குடும்பதினர்களால் நிர்வாகிக்கப்படும் கட்சி, மாற்று அரசியல்வாதியாக இருப்பார் என நம்பப்பட்ட விஜயாகந்துக்கு அவரும் மனைவியும், மச்சானும் நிர்வாகிகள். மற்ற அரசியல் கட்சிகளை பற்றி பேசத்தேவையில்லை, அதன் காரணம் உங்களுக்கே தெரியும்.

இந்தியாவில் இருக்கும் பாதுகாப்பு அமைப்புகள் மிகுதியாக இப்படி அரசியல்வாதிகளை பாதுக்காக்கவே செயல்படுகிறது. தங்கள் உயிரை பாதுகாத்துகொள்வதில் அவர்கள் காட்டும் முனைப்பும் அக்கறையும் சாதாரண மனிதர்கள் விசயத்தில் அவர்கள் ஏன் காட்டுவதில்லை?. சாதரண மக்கள் தினசரி சாலைகளில் அடிபட்டு செத்துபோகிறார்கள், ஆனால் அவர்களுக்கான முறையான சாலை பாதுகாப்போ, மருத்துவ வசதிகளோ இல்லை. ஆனால் இன்றைக்கு அரசியல்வாதிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் நாட்டின் வசதிமிகுந்த தனியார் மருத்துவமனைகளில் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள். எந்த அரசியல்வாதியும் அரசாங்க மருத்துவமனைகளுக்கு போவதே இல்லை. இப்படி அரசியல்வாதிகள் திமிர்த்தனத்துடன் இருக்க காரணமே அவர்களிடம் இருக்கும் தொண்டர்கள் கூட்டம்தான். இன்றைக்கு இருக்கிற அத்தனை அரசியல் கட்சிகளின் தொண்டர்களும் தங்கள் சுயநலம் பற்றிய கவலையில் இருப்பவர்கள்தாம். அவர்களுக்கு நாடு, மக்கள் பற்றிய அக்கறையெல்லாம் துளியும் கிடையாது. கறை ( (கறை படிந்தவர்கள் என்பதாலா?) வேட்டிகளை கட்டிக்கொண்டு, அல்லது சட்டை பைகளில் தங்கள் தலைவர்களின் படம் தெரியும்படி வைத்துகொண்டு இவர்கள் அடிக்கும் கூத்து நீங்கள் அன்றாடம் பார்ப்பவைதான்.

அன்றாடம் நாம் பார்க்கும், படிக்கும் ஊடகங்களும் இந்த அரசியல்வாதிகளுடயது என்பதால், அவர்களும் மானாட, மயிலாட, ஜோடி No.5 . அல்லது குடும்பதில் இருக்கும் எல்லோரையும் கெட்டவர்களாகவே காட்டும் சீரியல்கள் என இப்படி மூளையை மழுங்கடிக்கும் நிகழ்சிகளை தந்து நம்மை சிந்திக்கவிடாமல் ஆக்கிவிட்டார்கள்.  நாம் நம் பிள்ளைகளையும் இதற்க்கு பழக்கி விட்டதால், உடல் விளையாட்டுகளை அவர்களும் மறந்தே போய்விட்டனர். திட்டமிட்டே உருவாக்கபடும் அடிமை வாழ்வுக்கு நாம் ஏறக்குறைய தயாராகிவிட்டோம்.  

இதற்கான மாற்று இப்போது வராது என்றே நான் நினைக்கிறேன். ஒரு ஓட்டு மொத்த புரட்சி ஏற்பட்டால் ஒழிய மாற்றங்கள் வர வாய்ப்பே இல்லை. அதுவரைக்கும் ஏறும் விலைவாசியை பொறுத்துக்கொண்டு மக்களாகிய நாம் வாய்மூடி வாழத்தான் வேண்டும். 

பதிவுலகத்திலும் மாற்று சிந்தனைகள் மிகக்குறைவாக இருப்பதும் வருத்தமே. எழுதும் பதிவர்களும் மிகுதியாக காதல் கவிதைகளை எழுதுகிறேன் என வரிகளை மாற்றிபோட்டு எரிச்சல்படுத்திக்கொண்டும், அல்லது மொக்கையாக எழுதி அதனை நகைச்சுவை என்றுவேறு சொல்லி வெறுப்பேற்றியும் வருகிறார்கள். அல்லது நாளிதழ்களை படித்துவிட்டு எழுதுவதும், மிகுதியாக சினிமா சம்பந்தப்பட்ட விசயங்களை எழுதுவதும், இதற்கென்று ஒரு குழுவாக நூறு பின்னூட்டங்களுக்கு மேல் காப்பி, பேஸ்ட் செய்தும் அதனை பெருமையாக சொல்லிக்கொண்டும் இந்த அரசியல்வாதிகள் மற்றும் அவர்தம் தொண்டர்களுக்கு தாம் சளைத்தவர்கள் இல்லையென நிரூபிக்கிறார்கள்..இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்,  பதிவர்களே கொஞ்சம் அறிவுபூர்வமா சிந்திக்கப்பா...

20 கருத்துகள்:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

padichiten

RK நண்பன்.. சொன்னது…

anne romba sariya sonnenga.. ongala ellam paathu thaan anne eluthave bayama irukku..

aanal padikka aasai koodi irukku..

take care...

Unknown சொன்னது…

//காந்தி என்ற அவர்களின் பெயரின் பிற்பாதியை எடுத்துவிட்டால், அவர்களால் அரசியலில் பிழைக்க முடியாது//
:-)
பதிவு முழுக்க அனல் பறக்குது பாஸ்!
:-)

RVS சொன்னது…

கொஞ்சம் உருப்புடியாகவும் எழுதுங்கப்பா அப்படின்னு சொல்றீங்க... சரிதான் செந்தில்.. ;-)

மாணவன் சொன்னது…

// மிகுதியாக சினிமா சம்பந்தப்பட்ட விசயங்களை எழுதுவதும், இதற்கென்று ஒரு குழுவாக நூறு பின்னூட்டங்களுக்கு மேல் காப்பி, பேஸ்ட் செய்தும் அதனை பெருமையாக சொல்லிக்கொண்டும் இந்த அரசியல்வாதிகள் மற்றும் அவர்தம் தொண்டர்களுக்கு தாம் சளைத்தவர்கள் இல்லையென நிரூபிக்கிறார்கள்..இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம், பதிவர்களே கொஞ்சம் அறிவுபூர்வமா சிந்திக்கப்பா...//

நாகரிகமான முறையில் சுட்டிக்காட்டி நச்சுன்னு சொல்லியிருக்கீங்க அண்ணே

முடிந்தளவு நல்ல பயனுள்ள விடயங்களை பகிர்ந்துகொள்வதற்கு முயற்சிப்போம்.....

நன்றி

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

சரி தான் செந்தில் அண்ணன் ...கவிதை அந்த கொடுமை தாங்கமுடியலை

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

//சிந்திக்கப்பா//

அருண் பிரசாத் சொன்னது…

சரிதான் அண்ணே...சீரியஸா எழுதுனா ஒரு பயலும் எட்டி பார்க்கமாட்டறான்...

அன்புடன் நான் சொன்னது…

தோழரே வணக்கம்... நீண்ட நாட்களாக வர இயலவில்லை தாயகத்திலிருந்து வந்ததிலிருந்து வேலை பளு.

நீங்க சொல்வது உண்மையே....

“அவை”காய் நகர்த்த தெரிந்தவை!
நாம் காயப்பட பழகியவர்கள்.

கடைசியில் சொள்ளிய விடயம் மிக மிக சரியான கோபம்.

திறம் பட்ட பகிர்வு பாராட்டுக்கள்.

ssk சொன்னது…

எல்லாம் கடவுள் நம்பிக்கை என்ற ஒரே தத்துவத்தின் காரணமே. பெரும்பாலான மக்கள் ஆராய்ந்து பார்ப்பவர் அல்லர். ஏனெனில் அது சிரமம். கண்ணை மூடி நம்பிக்கை கொள்வது எளிது. கடவுள் நம்பிக்கை என்பது உலகம் தட்டை என்பதை போன்றது. மனிதர்களின் வாழ்வு அவர்கள் சிந்தனையிலும் செயலிலும் உள்ளது என்பதை மறுப்பது கடவுள் தத்துவம். கடவுள் பற்றிய உண்மை தெரிந்த சிலர் மனு போன்றவற்றை எழுதி சிலர் மட்டும் பயனடைய பலர் மிதிக்க பட்டனர். மிதிக்க பட்ட பலர் விசயம் தெரிந்த வுடன், அவர்களும் முடிந்த வரை இந்த அமைப்பை குறை சொல்லி கொண்டே கொள்ளை அடிகின்றனர். இதுவே அடிப்படை காரணம். இது மதத்தை சொல்வதால் பலர் மறுக்கலாம்.
மேலும் நீதி ஒன்றே யாருக்கும் மற்றும் நீதியை காட்டிலும் அதை செயல் படுத்த வேண்டும். இதை செய்தால் எந்த நாடும் வளம் பெரும், வில்லில் இருந்து புறப்பட அம்பு போல. எந்த சந்தேகமும் இல்லை.
இது நடக்குமா? கடவுளே நீதி கொண்டில்லை?( நாலு வர்ணம், பூணுலுக்கு கீழே எல்லோரும் )
இந்த மாதிரி அழித்துஎழுதியதெல்லாம் நீதி என்று உள்ள நாடு எப்படி முன்னேறும்?.

Unknown சொன்னது…

நன்றாக வாழத்தெரியாத மக்களே நன்றாக ஆளத்தெரியாதவர்களை தேர்ந்தெடுக்கிறார்கள்.(சத்குரு)

vinthaimanithan சொன்னது…

ஆமா என்ன திடீர்னு...? ஓ.. இதான் அநியாயத்தக் கண்டா பொங்கி எழறதா? :))))

ஆனாலும் ர்ர்ர்ரொம்ப பொங்குறீங்கப்பா :))))

அறுவது வயசுப் பெரிசு "கலிமுத்திப்போச்சுடா! நாங்கல்லாம் அந்தக்காலத்துல..."ன்னு அடிச்சு உடுற ஸ்டைல்ல பொங்கி இருக்கீங்க... சரி போவட்டும்... பதிவர்கள் எல்லாம் சேர்ந்து பொங்கணும்னு வேற சொல்றீங்களே! அத்தெ நெனச்சாத்தான் மனசு கஷ்டமா இருக்கு...

லேசா பொங்குனதுக்கே பாதிப்பேரு மெரண்டு கமெண்ட் பாக்ஸ் பக்கம் தலைவெச்சிக்கூட படுக்கலையே... இதுல என்னத்தைப் பொங்குறது?

//ஒரு ஓட்டு மொத்த புரட்சி ஏற்பட்டால் ஒழிய மாற்றங்கள் வர வாய்ப்பே இல்லை// அது என்ன பொரச்சி??? சொல்றத தெளிவா சொல்லோணும். மாற்று அரசியலின் கொள்கைகள், அதன் நோக்கங்கள், கூறுகள் பற்றித் தெளிவாகச் சொல்லி இருக்கலாமே? (யோவ்! அப்டியெல்லாம் எளுத ஆரமிச்சா கமெண்ட் பாக்ஸ் காத்தாடும்னு மொணகுறது என் காதில விழுது :)))) )

சரி சரி ... விந்தைமனிதனைக் கும்முறவங்க எல்லாம் வரிசையா க்யூகட்டி நில்லுங்கப்பா! (எல்லாருக்கும் ஒரு வாய்ப்பு தரணுமில்ல?)

அன்பரசன் சொன்னது…

//எழுதும் பதிவர்களும் மிகுதியாக காதல் கவிதைகளை எழுதுகிறேன் என வரிகளை மாற்றிபோட்டு எரிச்சல்படுத்திக்கொண்டும்//

எங்கயோ இடிக்குதே!!!

Bibiliobibuli சொன்னது…

Human Expression என்பது பதிவுலகிலும் அறிவார்த்தம் நிறைந்ததாக இருக்கவேண்டும் என்று சொன்ன கடைசி பந்தி மிகவும் நன்று.

சௌந்தர் சொன்னது…

பதிவுலகத்திலும் மாற்று சிந்தனைகள் மிகக்குறைவாக இருப்பதும் வருத்தமே. எழுதும் பதிவர்களும் மிகுதியாக காதல் கவிதைகளை எழுதுகிறேன் என வரிகளை மாற்றிபோட்டு எரிச்சல்படுத்திக்கொண்டும், அல்லது மொக்கையாக எழுதி அதனை நகைச்சுவை என்றுவேறு சொல்லி வெறுப்பேற்றியும் வருகிறார்கள்.///

கவிதை எழுதுவது அனைவரும் இலக்கியவாதிகள் கிடையாது. அந்த பதிவில் போய் உங்களுக்கு அந்த பதிவை படிக்கும் போது என்ன தோன்றுகிறதோ அதை பின்னூட்டம் போடுங்க அப்போது அந்த பதிவர் மாற்றி கொள்ளாம் நீங்கள் போய் அருமை என்று கமெண்ட் போட்டால்...அந்த பதிவர் தான் எழுதிய பதிவு நன்றாக இருக்கிறது என்று நினைப்பார். பின்னூட்டம் போடும் போது உண்மையை சொல்லுங்க ள்.



அல்லது நாளிதழ்களை படித்துவிட்டு எழுதுவதும், மிகுதியாக சினிமா சம்பந்தப்பட்ட விசயங்களை எழுதுவதும், ////

நாளிதழ்களை படித்து விட்டு அந்த செய்தியை பதிவிடுவது தவறா...அந்த செய்தி நிறைய பேருக்கு தெரியாமல் இருக்கலாம் அதனால் பதிவிடலாம்.

இதற்கென்று ஒரு குழுவாக நூறு பின்னூட்டங்களுக்கு மேல் காப்பி, பேஸ்ட் செய்தும் அதனை பெருமையாக சொல்லிக்கொண்டும்.///

மற்றவர்கள் இப்படி தான் இருக்க வேண்டும் என்று நாம் சொல்ல முடியாது. தனக்கு வரும் பின்னூட்டம் அதிகம் என்று வலைபதிவு ஆரம்பித்த கொஞ்ச நாள் பெருமையாக சொல்லி கொள்ளாம்...சிறிது நாளில் அது சலிப்பு தட்டி விடும்...

இந்த அரசியல்வாதிகள் மற்றும் அவர்தம் தொண்டர்களுக்கு தாம் சளைத்தவர்கள் இல்லையென நிரூபிக்கிறார்கள்..இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம், பதிவர்களே கொஞ்சம் அறிவுபூர்வமா சிந்திக்கப்பா..///

முயற்சி செய்றோம்.....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

எல்லாருமே சீரியசா எழுத ஆரம்பிச்சா எப்பிடிண்ணே? அததுக்கு ஆளு வேணும்ணே! எல்லாப் பதிவுகளையும் சிறப்பாவே எழுதிட முடியாது, சில மொக்கைகளும் வரத்தான் செய்யும், அதுதானே இயல்பு? சிறப்பா எழுதுறவங்கதான் எழுதனும்னா, ப்ளாக்குடைய சிறப்பம்சமே அடிபட்டுப் போகுதே?

குழு பின்னூட்டங்கள், கல்லூரியில் நண்பர்கள் குழு செய்யும் குறும்புகள் போன்றது. பணிச்சுமை தரும் மன அழுத்தங்களுக்கு அது ஒரு வடிகால். உண்மையில் சொல்லப் போனால், அவ்வாறு கும்மி அடிக்கையில் வயது குறைந்தது போலவே எல்லோரும் உணர்கிறோம். அதைத்தவிர, அதை வைத்து வேறொன்றும் ஆகப்போவதில்லை. அதற்கும் அரசியல்வாதிகள்-தொண்டர்களுக்கும் ஒப்பீடு சரியல்ல. அது வெறும் பொழுதுபொக்கு, இது சுயநலம்!

அதே நேரம், நகைச்சுவைப் பதிவுகள் பிரபலமடையும் வேகத்தைக்கண்டு நிறையப் பதிவர்கள் அதே போல் எழுத ஆரம்பித்துள்ளார்கள். எதுவுமே அளவுக்கு மீறினால் சலிப்புதான்!

மாற்றுச் சிந்தனைகள் குறைந்து வருவது எனக்கும் வருத்தமே, ஊர்கூடித்தான் தேர் இழுக்க வேண்டும், நானும் முயற்சிக்கிறேன்!

Enfielder சொன்னது…

French Revolution போல இந்தியாவிலும் மக்கள் புரட்சி வர வேண்டும் ...
அதுவரை வேறு எதையும் நாம் எதிர்பார்க்க முடியாது ...

vinthaimanithan சொன்னது…

வெல்டன் பன்னிக்குட்டி ராமசாமி!

சரியோ தவறோ, உங்கள் வாதம் கூர்மையாக இருக்கின்றது.

hariharan சொன்னது…

அரசியல் நிலைமையையும் அன்றாடம் வருகிற செய்திகளைப் பார்த்தும் நாம் சந்திக்கின்ற பெரும்பாலான மத்தியதர வர்க்க மக்கள் புலம்புகிறார்கள் சிலர் வலைப்பூக்களில் தங்களின் வேதனைகளை எழுதுகிறார்கள் , எங்காவ்து ஊழல் நடந்தால் உடனே அரசியல்வாதிகளை தான் திட்டுகிறோம், சமீபத்திய ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தான் டாடா போன்ற பெருமுதலாளிகளின் ‘புனிதம்’ வெளிப்பட்டது, இது வரை நடந்த ஊழலில் / ஆட்சியில் நடந்த பொருளாதார சீர்திருத்தங்களால் அதிகம் பலனடைந்தது இண்டியாவின் 5 சதவீத மக்கள் தான். அதிகார வர்க்கம் செயின்ற ஊழல்கள் எளிதாக மறைக்கப்படுகின்றன. சுதந்திர இந்தியாவில் ஊழல் செய்யாத நேர்மையான அரசியல்வாதிகள் நம் கண்களுக்கு தெரிவதில்லை , ஆனால் புதிதாக யாராவது மாற்றம் தருவார்கள் என்று நாம் விஜயகாந்தைப் பார்த்து ஏமாறுகிறோம் இவர்களுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்று அறிய முற்படவேண்டும்.முதலாளித்துவ கட்சிகளுக்கு அரசியல் என்பது ஒரு மூல்தனம் போட்டு நடத்தும் தொழிலாக இருக்கிறது. இந்த கலாச்சாரத்தை உடைக்க மாற்று சிந்தனைகளை வலைப்பூக்கள் விதைக்கலாம்.

ரோஸ்விக் சொன்னது…

கடைசிப் பாராவுக்காக ஒரு அன்பு முத்தம் அண்ணனுக்கு...

இதுவும் "ஒரு" காரணம் பதிவுலகில் அதிக ஈடுபாடு காட்டாததற்கு.