16 டிச., 2010

செட்டு மாத்திரைகளும், சில பதிவர்களும் பின்னே ஞானும்...

கடந்தவாரம் "நான் இறந்து போயிருந்தேன்" என்று ஏற்கனவே பாரத் பாரதி என்ற வலை தளத்திற்காய் நான் எழுதிய சவால் கவிதையை ( சாவு கவிதை என்று கேட்டிருப்பின் பொருத்தமாக இருந்திருக்கும்) பதிவேற்றியபோது ஆரம்பித்தது மெதுவான இருமல். அந்த போட்டியில் வெற்றி பெற்றதாக யாரையும் இன்னும் அறிவிக்கவில்லை. எல்லோருமே சுமாராக எழுதிவிட்டோமா என்ன? . அந்தக்கவிதைக்கான பின்னூட்டத்தில் சில அன்பு உள்ளங்கள் ( நன்றி மறப்பது நன்றன்று) பதறிப்போய் ஆறுதல் சொல்லியிருந்தனர். அவர்களுக்கு என் வந்தனம். இத்தனை மிகுந்த இடர்ப்பாட்டிலும் மேலதிக இடர்ப்பாடாய் தொடர்ந்த அழைப்புகளால் என்னை வெறுப்பேற்றி செல்பேசியை அணைக்க வைத்த விந்தை மனிதன் அனேகமாக அடுத்த இலக்காக ஜோதிஜியையோ, அல்லது கேபிளையோ குறிவைத்து தாக்குதல் நடத்தியிருப்பதாக செய்தி பரவியது. சில பேருக்கு மைக்கைப் பார்த்தால் ஒரு வியாதி... "அன்பார்ந்த.." அப்டீன்னு ஆரம்பிச்சு ஒண்ணேமுக்கால் மணிநேரத்துக்குக் குறையாமல் குதறி எடுத்து விடுவார்கள். இந்தாளுக்கு செல்ஃபோன் போல... ஹ்ம்ம்... 

மருதுவரைப்பார்த்தால் என்ன மருந்து கொடுப்பாரோ! அல்லது ஊசி போடுவாரோ!! எனப்பயந்துபோய் தெரிந்த மெடிக்கலில் செட் மாத்திரை வாங்கி வந்து முழுங்கிக் கிறங்கியதால் ஒரு முழு பாட்டில் மதுவை ஒரே ஆளாக அடித்தது மாதிரி இந்த உலகம் திடீரென வேகம் பெற்று சுழன்றதில் சில பூர்வ ஜென்ம தொடர்புகள் கிடைக்கபெற்றன. எத்தனை செட் மாத்திரைகள் போட்டாலும் வேலைக்கு ஆகாது என கிடைத்த தொடர்பு இடைவெளியில் சன்னலுக்கு வெளியே தோன்றி மிரட்டும் பிசாசுபோல விந்தைமனிதன் வந்து பயமுறுத்த அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்றபோது எல்லா டெஸ்டுகளும் எடுத்து வா என என்னை பயமுறுத்தாமல் ஒரு வாரத்தில் சரியாகிவிடும் என அதே செட் மாத்திரைகளை(கவனிக்க : அதே!) எழுதி தந்தார். என்ன கூடுதலாய் நூறு ரூபாய் பீஸ் கொடுக்கவேண்டி வந்தது.

இந்த இடத்தில் செட் மாத்திரையின் மகத்துவம் பற்றிக் கூறவேண்டியது ஆழிசூழ் உலகு போல தலைவலி,காய்ச்சல்,ஜலதோஷம் இன்னபிற வியாதிகள் புடைசூழ வாழும் கண்மணிகளுக்கு அவசியமாகிறது. காய்கறி மார்க்கெட்டில் போய் கதம்பமாய் கத்திரி,புடலை, வெண்டை,வெங்காயம் எனக் கூறுகட்டி வாங்கி வருவோமே அதை நினைவுகூர்ந்து கொள்ளுங்கள். தலைவிதியை எழுதும் பிரம்மதேவனின் கையெழுத்துக்கு காப்பிரைட் வாங்கிவைத்துக் கொண்டு ப்ரிஸ்கிரிப்ஷன் எழுதும் டாக்டர்களோடு மாரடித்ததில் மெடிக்கல்காரர்களின் நியூரான்களில் ஆழமாகப் படிந்துபோன விஷயம் ஒன்றுதான். நான்கு அல்லது ஐந்து வகை மாத்திரைகளை மாற்றி மாற்றிக் கொடுத்தால் சின்னச்சின்ன வியாதிகள் பறந்துபோம். சும்மா கோழிரத்தம் பார்ப்பதோடு கிராமப்புற பரிவாரதேவதைகள் திருப்தி அடைவதுபோல...

செட் மாத்திரை என்றவுடன் இன்னொன்றும் ஞாபகம் வந்து தொலைக்கிறது. அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்களிலும் இதே மாதிரி செட் மாத்திரைகளை கர்ணவள்ளல்போல வாரி வழங்குவார்கள். அந்த மாத்திரைகளில் த/அ என்று எழுதப்பட்டு இருக்கும். எனக்கு என்னவோ வந்த வியாதி 'தானா (குணம்) ஆனா'த்தான் உண்டு என்பதன் குறியீடாகவே அது தோன்றுகிறது

மறுநாள் இரவு இடைவிடா இருமலில் அவதியுற்று கிடந்தபோது ஆப்கனில் இருந்து வந்திருந்த நந்தா தொடர்பு கொண்டு சந்திக்கவேண்டும் என்று சொன்னபோது நான், கேபிள், தஞ்சாவூரான் சுரேகா மற்றும் சுரேகா நண்பர் கோபால் என ஒரு மினி பதிவர் சந்திப்பில் வல்லரசு மனிதர்களின் ஆப்கன் அபகரிப்பை பற்றி தொடர்ந்து பேச அதற்கு தொட்டுக்கொள்ள வைத்திருந்த ரெட் லேபில் முழுவதுமாக உள்ளிறங்கி இளவயது போர்னோ கதைகளில் மையல் கொண்டு இரவை பனிரெண்டு மணிக்கு நகர்த்தி வைத்தது. இன்னும் நேரம் நகர்ந்தால் கடிகாரம் ஒன்றுக்குப் போய்விடும் என்ற பயத்தால் (அட... ஒரு மணிக்குய்யா!) சந்திப்பை நாளை தொடரலாம் என தள்ளி வைத்து ஒரு புதிய உணவகத்திற்கு கேபிள் அழைத்து செல்ல அன்றைய இரவும் சமீபமாய் நான் மதுவகைகளை தவிர்த்து வந்ததால் இந்த இருமலுக்கு இதுவே சிறந்த நிவாரண் 90 என்ற அறிவுறுத்தலின் பேரில் அருந்திய ரெட் லேபிளையும் என் உடல் வென்று தூக்கத்தை தின்று விட்டதால் விடிகாலை கிடைத்த அசதியில் தூங்கி விழித்தபோது காலை பத்து மணிதான் என்று தெரிந்தபோது எழுந்த எரிச்சலில் கிளம்பிய இருமல் அடங்க இன்னொரு செட் மாத்திரை போட்டுவிட்டு சும்மா விட்டம் பார்த்து பொழுதை தள்ளினேன். ரசம் சேர்த்து பிசைந்த மதிய உணவு தட்டிலேயே இருந்ததைப்பார்த்து வேறெதாச்சும் செஞ்சு தரவா? எனகேட்ட மனைவியை கும்பிட்டு ஒரு குளியல் போட்டு வெளியே வந்தால் மீண்டும் போனில் நந்தா...

டிஸ்க்கவரி புக் பேலசின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் கொஞ்சம் தலையை காட்டிவிட்டு கீழே வந்து பேசிகொண்டிருந்தோம். இன்றைக்கு வேறொரு நல்ல கடைக்கு சாப்பிட அழைத்துப்போங்கள் என்றார் நந்தா. தஞ்சாவூரான் மாப்ளே சொன்ன ஓட்டலுக்கு போனா மணி இரவு ஒன்பதுதான் ஆனதால் இவ்வளவு சீக்கிரமே சாப்பிடுவதா? என வருத்தப்பட்டதில் கேபிள் தலைமையில் சபை கூடி அருகில் உள்ள கடைக்குப் போய் கடமையாற்றி வரலாம் எனப்போய் வி.எஸ்.ஒ.பியுடன் சமரசம் செய்துகொண்டு மறுபடி ஓட்டலுக்கு வந்தால் பரிமாறிய மணிப்பூர்க்காரியுடன் (பேரு கேரோலினாம்) கேபிள் தன் உணவுப் பிரதாபத்தை எடுத்துரைக்க அவள் சமாளிக்க முடியாமல் நாளை வந்தால் கண்டிப்பாக சிறப்பாக தருகிறேன் எனக்கும்பிடு போடாத குறையாக மேலதிக டிப்ஸ்களை பெற்றவாறே வழியனுப்பி வைத்தாள்.

நந்தாவை வீட்டில் இறக்கி விட்டு என் வீடு வந்தேன். அன்று இரவும் என் இமைகள் என்னிடம் சண்டை போட்டு மேற்கொண்டு தலைவலி வந்து கோடாலி தைலத்தில் ஆரம்பித்து கிடைத்த தலைவலி தைலங்கள் அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக அப்பியதில் எரிச்சல் ஏற்ப்பட்டு ஒரு அரை மணி நேரம்  குளித்ததில் உடல் சமாதானமாக மொட்டை மாடியில் எவ்வளவு நேரம் நடந்தேன் என தெரியாத அளவுக்கு சுற்றி வந்ததில் அசதி ஏற்ப்பட்டு வழக்கம் போல் காலையில் தூக்கம். மறுநாள் ஒரு விவாகரத்து பிரச்சினையை சுமூகமாக (சுமூகமா இல்லாததுனாலதானே விவாகரத்தே வருதுன்னு யாராச்சும் அறிவுசீவி கேட்டீங்க...) தீர்த்து வைத்து முடிக்கும்போது மீண்டும் பிரச்சினை வெடிக்க ஆரம்பிக்க துவங்கியபோது என் எரிச்சலும் எல்லை மீற இதற்கு மேல் நீங்கள் படித்துக்கொண்டிருக்கிறீர்கள் எனில் உங்கள் ஆர்வத்தை பாராட்டி இத்துடன் முடித்துக்கொள்வது நல்லதென நினைக்கிறேன்..

34 கருத்துகள்:

Unknown சொன்னது…

//எனக்கு என்னவோ வந்த வியாதி 'தானா (குணம்) ஆனா'த்தான் உண்டு என்பதன் குறியீடாகவே அது தோன்றுகிறத//ு

Unknown சொன்னது…

கோபமா சகோ?

Unknown சொன்னது…

இன்றும் விடுப்பு போல?
இன்று பதிவிட விடுப்பு?

கவி அழகன் சொன்னது…

- என்னமா எழுதிரிங்க வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

எப்பிடி இபிடிலாம் யோசிகிறிங்க...நல்லா எழுதிரிங்க

Unknown சொன்னது…

நல்லா இருக்கு பதிவு

இப்போ எப்படி இருக்கு உடம்பு?

Unknown சொன்னது…

ரெட் லேபிளுடன் சந்திப்பு! சூப்பர் பாஸ்! அதுக்கெல்லாம் ஒரு ரசனை வேண்டும்! நல்லாருக்கு பாஸ்!!! :-)

பெயரில்லா சொன்னது…

அண்ணே எவ்வளவு நகைச்சுவையா எழுதி இருக்கீங்க?!.
தமிழ் படத்துல காமெடியன்கள் அடி வாங்கும் போது சிரிப்பு வருமே அதுமாதிரி ;)
ஹி ஹி! ( தப்பா எடுத்துக்காதிங்க அண்ணே )

த/அ - தலையெழுத்து அவ்வளவுதான்!

// மணிப்பூர்க்காரியுடன் (பேரு கேரோலினாம்) //
கடமையில் கருத்தாய் இருந்திருக்கீங்க ;)

Arun Prasath சொன்னது…

எப்டி எல்லாம் யோசிக்கறீங்க... சூப்பர்

vinthaimanithan சொன்னது…

அடடா... ஒரு கைப்புள்ளய போயா இந்த அடி அடிச்சிருக்கேன்! கொஞ்ஞ்ஞ்ஞ்சம் ஓவராத்தான் போயிட்டனோ!
ஆமா, ரெம்ப மெனக்கெட்டு ஒரு காமெடி பதிவு போட்டீங்க... உங்க வாசகர்கள் யாருக்கும் சிரிக்கவே தெரியாதா? சின்னப்புள்ளத்தனமா நலம்விசாரிச்சிட்டு இருக்காங்க! அட எல்லாரும் கொஞ்சூண்டு சிரிங்கப்பா!

இனி டெம்ப்ளேட் பின்னூட்டம் போடுறவங்களுக்கு நாலு செட்டு 'தானா ஆனா' மாத்திரைய கொடுக்கணும்

மாணவன் சொன்னது…

//தலைவிதியை எழுதும் பிரம்மதேவனின் கையெழுத்துக்கு காப்பிரைட் வாங்கிவைத்துக் கொண்டு ப்ரிஸ்கிரிப்ஷன் எழுதும் டாக்டர்களோடு மாரடித்ததில் மெடிக்கல்காரர்களின் நியூரான்களில் ஆழமாகப் படிந்துபோன விஷயம் ஒன்றுதான்//

நல்லாருக்கு அண்ணே, தொடருங்கள்...

இப்ப உடம்பு எப்படி அண்ணே இருக்கு?
விரைவில் குணமாக வேண்டும்....

iniyavan சொன்னது…

இப்போ நல்லா இருக்கீங்களா?

வி ஓ எஸ்பி, ரெட் லேபிள் அப்புறம் மெடிக்கல் மாத்திரைகள்....

இது சரியா செந்தில்.

உமர் | Umar சொன்னது…

//இந்தாளுக்கு செல்ஃபோன் போல//

நெசம்மாவா? அப்படி ஒண்ணுந்தெரியலையே எனக்கு!

உமர் | Umar சொன்னது…

டிஸ்கவரி புக் பேலஸ்ல பட்டுக்கோட்டை பிரபாகர் புத்தகம் ஏதாவது வாங்கினீங்களா? பதிவுல புல் ஸ்டாப்பை தேட வேண்டியதா இருக்கு.

'பரிவை' சே.குமார் சொன்னது…

இப்போ எப்படி இருக்கு உடம்பு?
பதிவு நல்லா இருக்கு.

Unknown சொன்னது…

நல்லாயிருக்குங்க பதிவு..

இப்போ உடம்பு பரவாயில்லைங்களா..

THOPPITHOPPI சொன்னது…

அண்ணே என்ன ஆச்சி பதிவில் மாற்றம், எழுத்தில் தவறு.

RK நண்பன்.. சொன்னது…

////இதற்கு மேல் நீங்கள் படித்துக்கொண்டிருக்கிறீர்கள் எனில் உங்கள் ஆர்வத்தை பாராட்டி இத்துடன் முடித்துக்கொள்வது நல்லதென நினைக்கிறேன்..///

appo innum nerayya irukka???? ha ha ha

RK நண்பன்.. சொன்னது…

anne enna thidirnu ippadi kelambiteenga....

athu enna yaara paarthalum cable anna+food inaithu pesuranga??

RK நண்பன்.. சொன்னது…

nalla neram thappi thavari naan antha nerathula call pannala.. illa ungalukku innoru adimai sikki iruppan....(great escape) :-)

anne inimel busya iruntha mothallaye sollirunga.. illaatti naanum vaangi kattikka vendi varum.. :-)

செங்கோவி சொன்னது…

சூப்பரா எழுதியிருக்கீங்க நண்பரே..த/அ-தலையெழுத்து அவ்வளவு தான் என்று சொல்வோம்.

---செங்கோவி
ஸ்பெக்ட்ரம் விசாரணையும் வாழைப்பழக் காமெடியும்

ஹேமா சொன்னது…

இப்போ தலைவலி சுகமாயிடிச்சா செந்தில் !

க ரா சொன்னது…

கேபிளாரும் நீங்களும் சேர்ந்து கோக் மட்டும்தான் சாப்பிடுஙீங்கன்னு நினச்சேன் :)

காமராஜ் சொன்னது…

இருமல் மருந்து சாப்பிட்ட கதையா ? நடக்கட்டும் செந்தில்.

ஈரோடு கதிர் சொன்னது…

என்னது விவாகரத்து எல்லாம் முடிச்சு வைக்கறீங்களா?

:))

Bibiliobibuli சொன்னது…

இருமிக்கொண்டே வெளியில் போனது தவறு. ஞான் பெற்ற செல்வம் பெறுக இவ் வையகம் என்ற நோக்கம் எல்லாம் இந்த விடயத்தில் செல்லுபடியாகாது, செந்தில். :)

"The bloating sensation you are experiencing is "FAT"".

ஓவரா தண்ணியடிச்சு லிவர் கெட்டுப்போனாலும் இப்பிடி "Bloating Sensation" வருமோ, வராதோ?? :)))

vinthaimanithan சொன்னது…

பாவம் கேஆர்பி... நைட்டெல்லாம் விஜயகாந்து கணக்கா கண்ணு செவந்து ஒரு நகைச்சுவைப்பதிவு எளுதினா பின்னூட்டத்துல ஒரே 'செண்டி' மழையா பேயுது. இதுக்குத்தான் தலைப்பாடா அடிச்சிக்கிட்டேன்... "ஓ! இதான் அநியாயத்தைக் கண்டா பொங்குறதா" ரேஞ்சுல மட்டும் எளுதுங்க... நீங்க பொங்க... உங்க ரீடர்ஸ் பொங்க ஒரே பொங்கலோ பொங்கலா இருக்கும்னு அப்பவெ சொன்னேன்...கேட்டியளா?

ஜோதிஜி சொன்னது…

கொடுத்த கருத்து வேறு?

வந்தவர்கள் புரிந்து கொண்டவிதம் வேறு?

Philosophy Prabhakaran சொன்னது…

@ விந்தை மனிதன்
// ரெம்ப மெனக்கெட்டு ஒரு காமெடி பதிவு போட்டீங்க... உங்க வாசகர்கள் யாருக்கும் சிரிக்கவே தெரியாதா? சின்னப்புள்ளத்தனமா நலம்விசாரிச்சிட்டு இருக்காங்க! அட எல்லாரும் கொஞ்சூண்டு சிரிங்கப்பா! //

காமெடியா சீரியசான்னு சரியா புரிஞ்சிக்க முடியல... அதான் யாரும் சிரிக்கலை...

வினோ சொன்னது…

நீங்களுமா மெடிக்கல் செட மாத்திரை... :(

இப்படி இருக்கு இப்போ அண்ணா?

PARTHASARATHY RANGARAJ சொன்னது…

இந்த விஷயம் தெரியாம நா வேற ஒரு அரைமணி நேரம் அலை பேசியில மொக்கைய போட்டுட்டனே

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

super'a irukku makkaa....

Unknown சொன்னது…

//இப்போ எப்படி இருக்கு உடம்பு?//

இந்த விசாரிப்புக்கள் சுகமா? ரணமா?

Unknown சொன்னது…

இந்த விசாரிப்புக்கள் எல்லாம் உஙகளுக்கு சாதாரணமா? இல்லை ரணமா?