28 டிச., 2010

"ழ" என்கிற கனவின் விதை...

இளமை எனும் வாழ்வின் வஸந்தபருவத்தில் ஒவ்வொருவருமே கண்கள் முழுக்க கனவுகள் நிரப்பித்தான் திரிவார்கள். காதலைச் சுமந்த கனவுகள், வாழ்க்கையைச் சுமந்த கனவுகள், சமூக மாற்றங்களைப் பற்றிய கனவுகள்... என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதக்கனவு. வர்ணங்களில் மின்னும் கனவுகள் காலவெள்ளத்தில் சாயமிழந்து கறுப்புவெள்ளையாய்த் தேய்ந்துபோவதுதான் பெரும்பான்மையாக இருக்கின்றது. "எனக்கு ஒரு கனவு இருக்கின்றது" என்ற மார்ட்டின் லூதர் கிங்கின் வாசகம் போலவே எங்களுக்கும் ஒரு கனவு இருந்தது. புதிய யுகத்துக்கான மகரந்தங்களைச் சுமந்து வரும் ஒரு பத்திரிகைப்பூவை முகிழ்க்கவைப்பதே அந்தக் கனவு.வாழ்வின் லட்சியங்கள் தள்ளிப்போய்க்கொண்டே இருந்ததால் இதுவும் வெறும் கனவாகத்தான் போய்விடுமோ எனக்கவலை கொண்ட பொழுதில் நாம் ஏன் ஒரு பதிப்பகத்தை ஆரம்பிக்கக் கூடாது என நினைத்தோம். அதுபற்றி விசாரித்தால் அது தமிழ் கூறும் நல்லுலகில் தற்கொலைக்குச் சமமான விசயம் என எச்சரித்தபோது எங்களுக்கு இதன் மேலிருந்த சுவாரசியம் கூடிப்போனது. இங்கு நாங்கள் என்பது நானும் என் மாப்பிள்ளையும் பதிவரும் ஆன தஞ்சாவூரான் என்கிற ராஜாவும். 

எனவே நெருங்கிய நண்பர்களான கேபிளையும், விந்தைமனிதனையும் கூப்பிட்டுப் பேசியதில் அவர்கள் தந்த உற்சாகத்தால் நாங்களும் பதிப்பகத் தொழிலில் இறங்கிவிட்டோம். எங்கள் பதிப்பகம் என்ற விதையின் முதல் தளிராக கேபிள்சங்கரின் "மீண்டும் ஒரு காதல் கதை" என்கிற குறுநாவலையும் அத்துடன் அவரின்  22 சிறுகதைகளையும் சேர்த்து முதல் புத்தகமாக வெளியிட இருக்கிறோம். எங்களின் அடுத்த வெளியீடு எனது "பணம்" தொடர். இதில் மிகுந்த மகிழ்ச்சியான விசயமே முதல் புத்தகம் "மீண்டும் ஒரு காதல் கதை" அச்சில் இருக்கும்போதே நூறு புத்தகங்களுக்கான ஆர்டர் கிடைத்து விட்டதுதான்.

கூடிய விரைவில் எங்களின் முதல் வெளியீட்டு விழாவிற்கான அழைப்பை எல்லோருக்கும் அனுப்புகிறோம். பதிவுலக நண்பர்களின் எழுத்துக்கு முன்னுரிமை தரலாம் என்றிருக்கிறோம். எனவே பதிவுலக நண்பர்கள் தங்கள் படைப்புகளை எங்கள் பதிப்பகத்தின் மூலம் வெளியிட விரும்பினால் அவசியம் தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் படைப்புகளை எங்களின் ஆசிரியர் குழுவினர் பரிசீலித்தபின் உங்கள் படைப்புகளைக்  கண்டிப்பாக பதிப்பிக்கிறோம்.


எங்களது ஆசிரியர் குழுவில் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ள எங்களது நண்பர்கள் விந்தைமனிதன் என்கிற ராஜாராமனுக்கும், கேபிள்சங்கர் என்கிற சங்கர் நாராயணுக்கும் எங்களது நன்றிகள்..

நிறைய மொழிபெயர்ப்பு நூல்களையும் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். "ழ" என்கிற பெயரில் ஊன்றப்பட்டு அது தன் முதல் தளிரை முகிழ்க்கும் தருணத்தில் "ழ"வை நண்பர்களும் பதிவர்களுமான உங்களிடம் ஒப்படைக்கிறோம். இது கிளைவிரித்து விண்ணளக்கவும், வேர்பரப்பி மண் சிறக்கவும் உங்கள் ஆதரவை வேண்டுகிறோம். 
 

41 கருத்துகள்:

சண்முககுமார் சொன்னது…

வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறோம்


இதையும் படிச்சி பாருங்க

வீரபாண்டி ஆறுமுகம் தகுதி இல்லாதவர்

மாணவன் சொன்னது…

வாழ்த்துக்கள் அண்ணே,

உங்களின் இந்த பணி மென்மேலும் சிறக்க வேண்டும்

dheva சொன்னது…

மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது செந்தில்

'ழ 'வின் வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும்.......என்னுடைய எல்லாவிதமான ஒத்துழைப்புகளும் உங்களுக்கு எப்பொதும் உண்டு என்பதையும் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்......!

பெயரில்லா சொன்னது…

ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு செந்தில் அண்ணா!
"ழ" சிறந்து வளம் பெற வாழ்த்துக்கள் :)

sathishsangkavi.blogspot.com சொன்னது…

வாழ்த்துக்கள் தல...

வினோ சொன்னது…

அண்ணா சூப்பர்...

நான் எப்படி வாங்கறது ?

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

வாழ்த்துக்கள் .

Nagasubramanian சொன்னது…

congratz...
Go ahead.

iniyavan சொன்னது…

சூப்பர் தலைவரே?

போன் நம்பரை மெயில் பண்ணுங்க

செல்வா சொன்னது…

// "மீண்டும் ஒரு காதல் கதை" அச்சில் இருக்கும்போதே நூறு புத்தகங்களுக்கான ஆர்டர் கிடைத்து விட்டதுதான்.
//

மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா .! உங்கள் பதிப்பகத்தில் நல்ல நல்ல புத்தகங்களை அச்சிட்டு எல்லோரையும் மகிழ்விக்க வேண்டுகிறேன் .!

PARTHASARATHY RANGARAJ சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பரே !

PARTHASARATHY RANGARAJ சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
PARTHASARATHY RANGARAJ சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
உமர் | Umar சொன்னது…

வாழ்த்துகள்!

'பரிவை' சே.குமார் சொன்னது…

ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு அண்ணா!
"ழ" சிறக்க வாழ்த்துக்கள்.

புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

வாழ்த்துக்கள்.

தினேஷ்குமார் சொன்னது…

அண்ணா ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது தங்கள் பணிகள் சிறக்க படைத்தவன் அருளும் தங்களுக்கு கிடைக்க பிரார்த்திக்கிறேன் படைத்தவனிடம்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

congrats sir.all of us will support u.tks

மார்கண்டேயன் சொன்னது…

வாழ்த்துகள் செந்தில்,

நான் பதிவில் காலடி வைத்து விஸ்வ ஸௌராஷ்ட்ரம் எனும் முதல் சர்வதேச ஸௌராஷ்டிரா பத்திரிகை ஆரம்பித்தேன் (http://sourashtra.info),

தாங்கள் தமிழர் ஆதலால் பதிப்பகமே ஆரம்பித்துவிட்டீர்கள்,

மிக்க மகிழ்ச்சி, வளருங்கள், வளரவும் வழி கொடுங்கள்.

நட்புடன்,
மார்கண்டேயன்,
http://markandaysureshkumar.blogspot.com

அருண் சொன்னது…

வாழ்த்துக்கள் அண்ணா,இத்துறையில் தடம் பதித்து தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள்.அப்பிடியே உங்கள் கவிதைகளையும் தொகுத்து வெளியிடலாமே?
-அருண்-

க ரா சொன்னது…

வாழ்த்துகள் அண்ணா.. தொடர்ந்து கலக்குங்க :)

AKM சொன்னது…

நிறைய எழுத்தாள பறவைகள் வந்து மகிழும் வேடந்தாங்கலாய் உங்கள் ழ விருட்சமாகி தமிழ் வம்சம் வளர்க்க என் வாழ்த்துக்கள்..

அந்த கலர்கனவு கருப்பு வெள்ளையாய் கரைவது பற்றி படித்தபோது உண்மையிலேயே வலித்தது..ம்.. எல்லோருக்கும் இப்படியான ஏதோ ஒரு கனவு கனவாகவே இருக்கிறதுதானே..
வாழ்த்துக்கள்
அன்புடன்
ஏகேஎம்

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு அண்ணா!
"ழ" சிறக்க வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

"அ"கரம் கண்டிருக்கும்
"ழ"கரம் விரைவில்
சிகரம் தொட வாழ்த்துக்கள்.

பெயரில்லா சொன்னது…

ரொம்ப மகிழ்ச்சி செந்தில் sir !
"ழ" சிறந்து வளம் பெற வாழ்த்துக்கள் :)
:)
:)

ILA (a) இளா சொன்னது…

வாழ்த்துகள்!

ஹேமா சொன்னது…

"ழ"வித்தியாசமாயிருக்கு.
வாழ்த்துகள்.

செந்தில்..."காலில் மிதிபடும் கடவுள்" உங்கள் கவிதை இப்போ GTBC வானொலியில் !

நீச்சல்காரன் சொன்னது…

வாழ்த்துக்கள் அண்ணே!

Unknown சொன்னது…

வாழ்த்துக்கள் Boss! :-)

ஜோதிஜி சொன்னது…

பேசிக்கொண்டுருப்பதை விட செயல்படுத்திக் காட்டுவதில் உள்ள உங்களின் ஆர்வத்திற்கு என் வாழ்த்துகள்.

Bibiliobibuli சொன்னது…

வாழ்த்துக்கள் "ழ", செந்தில், ராஜா (தஞ்சாவூரான்), சங்கர் நாராயணன், ராஜாராமன்.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. சொன்னது…

"ழ" தமிழின் தனித்தன்மையான எழுத்து.. (மலையாளத்துல இருக்கான்னு தெரியல)..

வா"ழ்"த்துக்கள்.

ஜி.ராஜ்மோகன் சொன்னது…

ரொம்ப மகிழ்ச்சியான விஷயம் செந்தில்! நீங்கள் உங்கள் எண்ணம் போல் சிகரம் தொடுவீர்கள்!

"ழ" பெயரே வித்தியாசமாக உள்ளது. புத்தக வெளியீடு விழாவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

Paleo God சொன்னது…

பெயரைப்போன்றே வெளியீடுகளும் சிறக்க வாழ்த்துகள் செந்தில். மகிழ்ச்சி! :))

Sukumar சொன்னது…

வா'ழ'துக்கள்

Unknown சொன்னது…

அன்பின் செந்தில்,
மேன்மேலும் உயர வாழ்த்துக்கள்!

அன்புடன்,
மதுமணி,
மதுக்கூர்.

Unknown சொன்னது…

எங்களது "ழ" பதிப்பகத்திற்கு வாழ்த்தும், ஆதரவும் அளித்த அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்...

Thoduvanam சொன்னது…

உங்கள் முயற்சிக்கு என் மனம் கனிந்த வாழ்த்துக்களும்,ஆதரவும்.
புத்தாண்டு படைப்பாக மிளிரட்டும்..

Ravichandran Somu சொன்னது…

வாழ்த்துகள்!

a சொன்னது…

"ழ"விற்க்கு வாழ்த்துக்கள்.........................

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

வாழ்த்துக்கள் தல, எங்கள் ஆதரவும் ஒத்துழைப்பும் எப்போதும் உண்டு....!