24 ஜன., 2011

துரோணா ... - 2


அறம் கெடும் நிதியும் குன்றும் வியும் மாயும் காலன் 
நிறம் கெடும் மதியும் போகி நீண்டதோர் நரகில் சேர்க்கும் 
மறம் கெடும் மறையோர் மன்னர் வணிகர் நல் உழவோரென்னும் 
குலம் கெடும் வேசை மாதர் குணங்களை விரும்பினோர்க்கே. சீவக சிந்தாமணி - 122 வது பாடல். 

அம்மாவைத்தவிர யாருமே என்னை அடித்ததில்லை. பள்ளியில் வாத்தியாரிடம் வாங்கிய அடியை கணக்கில் கொள்ளவேண்டாம்,  அது நம் மேல் கொண்ட அக்கறையின் மேல் அடிப்பது. ரவி என்னை அறைந்ததும், கடும் கோபமாகி நான் அவன்மேல் பாய்ந்தேன், இருவரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டதை பார்த்து அந்த பெண்மணி கத்தவே, நண்பர்கள் ஓடி வந்து எங்கள் இருவரையும் பிரித்துவிட்டனர். நண்பர்கள் இரு கோஷ்டியாக என்னை ஆதரித்தும், எதிர்த்தும் பிரச்சினை ஆனது. 

அப்போது அந்த பெண்மணி..

"மண்ணு திங்கறத, மனுஷன் திங்க ஆசப்படுறான், சின்னத்தம்பிய  வரசொல்லுங்க, அவரும் கொஞ்சம் திங்கட்டும்" என ஆடைகளை போட்டுக்கொண்டே அவளது தீர்ப்பை சொல்ல, இன்னொரு அண்ணன் கணேஷ் ஓங்கி அவளை ஒரு அறை விட்டு "மொதல்ல நீ இங்கிருந்து போடி" என்று அவளுக்கான பணத்தை தந்து அனுப்பினார். 

அன்று இரவு முழுதுமே நான் சமாதானம் ஆகவில்லை. ரவி கூட கொஞ்சம் இறங்கிவந்து "டேய், உங்க வீட்டுக்கு தெரிஞ்சா எங்களை சும்மா விட மாட்டாங்க, அதனாலதாண்டா... " என்றான். உண்மைதான், மிகுந்த கட்டுப்பாடுகளை கொண்டதுதான் என் வீடு. இப்படி ஒரு விசயம் தெரிந்தால் என் வீட்டில் பிரச்சினை ஆகும். மேலும் அந்த சமயத்தில்தான் என் அண்ணன் பெரிய குடிகாரனாகி வீட்டில் அவனால் ஏற்ப்பட பிரச்சினைகளால் நொந்துபோய் இருந்தனர். நான் தப்பு செய்யமாட்டேன் என்கிற அளப்பரிய நம்பிக்கையில்தான் என்னை சுதந்திரமாக விட்டிருந்தனர்.

ஆனால் நான் ...

இந்த மாபெரும் பரந்த உலகில் எல்லா மனிதர்களும், சந்தர்ப்பத்தால் தப்பு செய்துவிட்டதாக சொல்பவர்களைத்தான் நான் சந்தித்து இருக்கிறேன், யாரும் விரும்பியே தவறுகளை செய்ததாக சொல்வதில்லை. ஆனால் நான் அப்போது செய்த அத்தனை தவறுகளுமே நான் திட்டமிட்டு செய்தவை. 

பத்தாம் வகுப்பு முடிந்து என் வாழ்வு தலைகீழாக மாறும் என அந்த விடுமுறையில் நான் நினைக்கவில்லை. ஆறாம் வகுப்பு முதல் என் நண்பர்கள் வட்டத்தை குறைத்துக்கொண்டு எந்நேரமும் படிப்பு அல்லது நூலகம் என்று இருந்தவன் நான். அப்படிப்பட்ட நான் பள்ளி திறந்தவுடன் பதினொன்றாம் வகுப்புக்குள் நான் நுழைந்தபோது அதுவரை வழக்கமாக என்னுடன் படித்தவர்களுடன் சில பழைய மாணவர்களும் இருந்தனர்.அவர்கள் பத்தாம் வகுப்பில் பெயிலாகி எப்படியோ மீண்டும் பாசாகி படிக்க வந்தவர்கள்.மெல்ல இவர்களின்பால் என் கவனம் திரும்பியது. அவர்களுக்கு படிப்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான், சைட் அடிப்பது, எல்லோரையும் கலாய்ப்பது, வகுப்புகளை கட் அடித்துவிட்டு சிகெரெட் பிடிப்பது, சமயங்களில் தண்ணி அடிப்பது என அவர்களின் உலகம் களைகட்டும், பெரும்பாலும் பாலியல் கதைகளால் நிரம்பி வழியும் அவர்களின் நாவசைவில் கிறங்கி நானும் அவர்களின் பின்னால் சுற்ற ஆரம்பித்தேன். அவர்கள்தான் சரோஜாதேவி, மருதம் போன்ற தீவிர பாலியல் இலக்கியங்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தனர்.

1987 களில் அப்போதுதான் கருப்பு & வெள்ளை டிவி க்கள் பரவலாக அறிமுகம் ஆனது , கிராமங்களில் சில வசதியான வீடுகளில் மட்டுமே வாங்கி வைத்திருப்பார்கள், அப்படி எங்கள் தெருவிலும் ஒரு வீட்டுக்கு முதன்முதலாக டிவி வந்தது, மாடியில் உயரமான சவுக்கு கம்பத்தில் ஆண்டெனா கட்டி வைத்திருப்பார்கள் ,தூர்தர்சனின் கொடைக்கானல் டிவி ஒளிபரப்பு மட்டுமே தெரியும், வெள்ளியன்று ஒலியும், ஒளியும நிகழ்ச்சியும், ஞாயிறு திரைப்படமும் மட்டும் பார்க்க சகலரையும் அனுமதிப்பார்கள், வீட்டுக்கு வெளியே பெரிய மேசையில் டிவியை வைத்துவிடுவதால் தெருவே அங்குதான் கூடியிருக்கும். என்னுடைய செட்டுங்களோடு நானும் ஐக்கியமாயிருப்பேன், முதல் அத்தியாயத்தில் சொன்ன நண்பர்களும் வருவார்கள், அந்த நண்பர்கள் அனைவருமே அப்போது என் அண்ணனின் செட்டு.

இப்படி ஒருநாள் டிவியில் போட்ட படத்தை பார்த்துவிட்டு என்னால் சிரிப்பை அடக்க முடியாமல் விழுந்து விழுந்து சிரிக்கவே என் அண்ணின் செட்டில் இருந்த ரவியும், செங்குட்டுவனும் என்னைப்பார்த்து வெகுவாக நக்கலடித்தனர். ஏற்கனவே பள்ளியில் பெரிய செட்டுகளுடன் பழக ஆரம்பித்திருந்த எனக்கு அது கோபத்தை வரவழைக்க அவர்கள் இருவரையும் பார்த்து முறைத்தேன், ஆனால் அவர்கள் என்னை சட்டை செய்யாமல் விடாமல் நக்கலடிக்கவே என்னுள் தூங்கிகொண்டிருந்த ஒரு மிருகம் மெல்ல விழித்தது.

அதன்பிறகு பள்ளியில் சிகெரெட் பழகிக்கொண்டேன், மெல்ல பியரில் ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணியையும் பழகிக்கொண்டேன், வீட்டினருகில் இருந்த என் சேக்களிகளை விட்டு விலகி அண்ணனின் செட்டுகளுடன் பழக ஆரம்பித்தேன், என்னுடன் இப்போதும் நெருங்கிய நட்பில் இருக்கும் சத்தி அத்தான் அதற்கு உதவினார். அந்த பழக்கம் இறுக்கமாகி காட்டாற்றின் தகராறில் வந்து முடிந்துவிட்டது.

இந்த சம்பவத்தால் ஏற்ப்பட்ட அவமானத்தை நான் கழுவ நினைத்தேன், ரவி மிகவும் முயன்று தோற்றுப்போன ஒரு பெண்ணை மடக்குவது என்பதுதான் பதிலடியாக இருக்கும் என சபதம் கொண்டேன். அது அடுத்த வாரமே எனக்கு அமையும் என அப்போது நான் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. அந்த பெண்ணில் ஆரம்பித்து எத்தனை பெண்கள்....

ஒரு கட்டத்தில் ரவி மட்டுமல்ல என் சேக்காளிகள் உட்பட அத்தனை பேரும் என் மேல் பொறாமை கொள்ளும் அளவுக்கு போய் அது என் வீட்டினருக்கும் தெரிய ஆரம்பித்தது.

அந்த முதல் பெண் எனக்கு எப்படி கிடைத்தாள்?, அதன்பிறகு நான் சந்தித்த பிரச்சினைகள் அத்தனையும் உங்களிடம் பகிர்ந்து கொள்வேன் ..

தொடரும் ...

21 கருத்துகள்:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

vadai...

க ரா சொன்னது…

அண்ணே ... கலக்கறீங்க..

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//அந்த முதல் பெண் எனக்கு எப்படி கிடைத்தாள்?, அதன்பிறகு நான் சந்தித்த பிரச்சினைகள் அத்தனையும் உங்களிடம் பகிர்ந்து கொள்வேன் ..//


சொல்லுங்க சொல்லுங்கப்பூ....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

speeeeeeeeeeeeeeeeeeeeeedddddddddddddddddddddd........................

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

அடுத்த பாகம் எப்போ வரும்..

மாணவன் சொன்னது…

// வெறும்பய கூறியது...
அடுத்த பாகம் எப்போ வரும்.//'

என்னா ஒரு ஆர்வம்....ஹிஹி

அன்புடன் நான் சொன்னது…

எனக்கெல்லாம் அந்த வயதில் எதுவுமே அமையல....

Jana சொன்னது…

அண்ணே நாம ரொம்ப நல்லபிள்ளையாகவே இருந்திட்டோமோ என்று தோணுது...
களவும் கற்றுமற என்ற தத்துவத்தை ரொம்ப டீப்பாக பலோ பண்ணீட்டீங்க என்று தோணுது..

Unknown சொன்னது…

சூப்பர் அண்ணே! நாமெல்லாம் வேஸ்ட் ஆக்கிட்டோம்!

raja சொன்னது…

ஸார் உங்களிடமிருந்து ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதன் எதிர் வினையை கட்டுரையையும் எதிர்ப்பார்த்தேன். நீங்கள் சற்று காட்டமாகவும் சரியாகவும் எழுதக்கூடியவர்.

Yaathoramani.blogspot.com சொன்னது…

நீளம் கருதி தொடரும் போடுகிறீர்கள் என நினைக்கிறேன்
தங்கள் நடைசரளமாக படிக்க ஏதுவாகவே உள்ளது.
எனவே முழுமையான பதிவாகவே போடலாம்
வாழ்த்துக்கள்

தமிழ் உதயம் சொன்னது…

சுவையான வாழ்க்கை வரலாறு தான்.

ANaND சொன்னது…

இந்த பதிவுக்கு ஏன் துரோணா நு வச்சிங்க பாஸ்

பெயரில்லா சொன்னது…

>>> பரபரப்பாக உள்ளது. அடுத்த பதிவை எதிர்நோக்கி...காத்திருக்கிறேன்!

ஜோதிஜி சொன்னது…

செந்தில் இது போன்ற கதைகள் என்ன புரிதல்களை படிப்பவர்களுக்கு உருவாக்கும் என்று நினைக்குறீங்க? நான் பார்த்தவரைக்கும் ஒரு கிளுகிளுப்பு அல்லது தேவையில்லாத எதிர்வினைகளைத்தான் ந்யூரான்கள் பதிந்து வைத்துக் கொள்ளும்.

புரிந்தால் நலம்.

ஜி.ராஜ்மோகன் சொன்னது…

அழகி ,ஆட்டோகிராப் ............. துரோணா . கலக்குங்க !!!!!!!!!

அகலிக‌ன் சொன்னது…

ஜோதிஜி சொன்ன‌து "தேவையில்லாத எதிர்வினைகளைத்தான் ந்யூரான்கள் பதிந்து வைத்துக் கொள்ளும்."

உண்மைதான் மறுப்பதற்கில்லை என்றாலும் நரிக்கறி தின்றதை பகிர்ந்துகொள்ளவும் ஒரு ஆள் வேண்டுமே

'பரிவை' சே.குமார் சொன்னது…

யான வாழ்க்கை வரலாறு தான். நாமெல்லாம் வேஸ்ட்.

ஆர்வா சொன்னது…

சீக்கிரம் பகிர்ந்துக்கோங்க.. செம விறுவிறுப்பா இருக்கு


முத்தங்களுக்கு மட்டுமே அனுமதி

தமிழ் உதயன் சொன்னது…

அண்ணே பெயர்களில் உண்மை வேண்டாம். மற்றபடி இது ஒரு தனிமனிதனின் வாழ்வியல் சம்பவங்கள் என்பதை தாண்டி நிறைய உணர்த்தக்கூடிய விஷயங்கள் இருக்குமாறு பார்த்துகொள்ளவும்.

vinthaimanithan சொன்னது…

"எத்தனைபேர் தொட்டமுலை
எத்தனைபேர் நட்ட குழி
எத்தனைபேர் பற்றியிழுத்த இதழ்"

பட்டினத்தார் நினைவுக்கு வருகிறார்.ஆமா... என்கிட்ட சொன்ன ஒரிஜினல் கதையில பத்து சதம்கூட எழுத்துல வரலையே? ஏன்? வாசகர்கள் மேல அவ்ளோ நம்பிக்கையா? கோழிக்கொழம்பு வைக்கப்போறேன்னு சொல்லிட்டு சும்மா காரக்கொழம்பை பரிமாறிட்டுப் போயிருக்கீங்கண்ணே!