9 பிப்., 2011

துரோணா - 4...


மைந்தனைப் பெறு கின்றது மாசிலாப் 
புந்தியன் பொடு போற்றி வளர்ப்பதுந் 

தந்தை மாண்டுழித் தன்முறைக் கேற்பன 
அந்த மாங்கட னாற்றுதற் கேயன்றோ? - விவேக சிந்தாமணி ..


உங்களின் ஜாதகம் உங்கள் எல்லோருக்கும் எந்த அளவுக்கு சாதகமாக இருந்திருக்கிறது?. நாம் எல்லோருக்குமே நம் எதிர்காலத்தை பற்றி தெரிந்து கொள்ள அதீதமான ஆர்வம் இருக்கும். நாத்திகம் பேசும் ஆட்கள் கூட ரகசியமாய் தங்கள் ஜாதகத்தை அலசுவார்கள். விஞ்ஞான முனேற்றம் வெகுவாக வளர்ந்திருக்கும் இந்தக்காலத்தில் ஜாதக உண்மைகள் எந்த அளவுக்கு என்பதை சுஜாதா ஒருமுறை இப்படி சொல்லியிருக்கிறார் 'எவன் ஒருவன் மிகச்சரியாக எதிர்காலத்தை கணிக்கிரானோ, அவனே உலகின் முதல் பணக்காரனாக இருப்பான்' என்று. 

ஜாதகம் எழுதுவது இந்துக்களின் வாழ்வியல் கடமைகளில் ஒன்று. பிறந்து ஒரு வருடத்துக்கு பிறகுதான் ஜாதகமே எழுதுவார்கள். அதற்கு முன் பெயர் வைப்பதற்காக மட்டுமே ஜாதகம் கணிக்கப்படும். முன்பெல்லாம் ஜோசியக்காரர்களே பெயர் சூட்டி விடுவார்கள், அத்தனை பெயரும் கடவுள் பெயர்களே. பின்பு நாமெல்லாம் வடமொழியில் லைக்கி பெயர் வைப்பதால் முதலெழுத்து இப்படி இருக்கவேண்டும் என சொல்லிவிடுவார்கள் கடைசியில் ஷ் முடியுமாறு பெயர் வைப்பதுதான் இப்ப பேஷன். 

விதி என் வாழ்வில் நான் பிறப்பதற்கு முன்னமே ஜாதகத்தை எழுதியது. நான் கருவான போதே ஏன் வீட்டினர் அண்ணனின் ஜாதகம் பார்க்க போக ஜோசியன் நான் என் பூர்விக வீட்டில் பிறந்தால் அண்ணனுக்கு ஆகாது என்று சொல்லவே ஜோசியனின் வாக்கை மதித்தோ அல்லது என் அண்ணன் மேல் குடும்பத்தினர் வைத்திருந்த பாசத்தாலோ வீட்டை தற்காலிகமாக இடம் மாற்ற முடிவெடுத்து என் அம்மா வழி தாத்தா வீட்டிற்கு சொந்தமான இடத்தில் தற்காலிகமாக தங்குவதற்கு ஒரு ஓட்டு வீடு கட்டப்பட்டது. அதுதான் எங்களுக்கு நிரந்தரம் ஆகபோகிறது என என் தாத்தாவுக்கு தெரிந்திருந்தது போலும், நன்றாகவே தன் சொந்த செலவில் கட்டிக்கொடுத்தார். 

காலம் காலமாக பங்காளிகளுடன் வாழ்ந்த என் பாட்டி எங்களுடன் வரமறுத்து சித்தப்பாவுடன் பூர்வீக வீட்டில் இருந்துவிட்டார். நான்தான் கடைசிப்பிள்ளை. எனக்கு முன்பே நான்கு சகோதரிகள். ஒரு சகோதரன், இந்த சகோதரனுக்காக வேண்டிதான் எங்கள் இடமாற்றமே நடந்தது. அப்புறம் நான் பிறந்தபிறகு பழநி முருகன் கோவிலுக்கு முதல் மொட்டை போட்டு முருகனுக்கே என்னை தத்து கொடுத்துவிட்டனர். அதனாலேயே பத்து வயசு வரைக்குமே வீட்டுல யாராச்சும் என்னை அடிச்சா நான் முருகனின் தத்து பிள்ளை என்னை அடிச்சா முருகன் உங்க கண்ணை குத்திருவான்னு பயமுறுத்துவேன்.

கடைசிப்பிள்ளை என்கிற செல்லம் என்னை நான்கு வயதுவரைக்கும் அம்மாவிடம் பால் குடிக்க அனுமதித்தது. எவ்வளவோ பிராயத்தனம் பண்ணிதான் என்னை இந்த பழக்கத்தில் இருந்து விடுபட வைத்தனர். நான் இருந்த தெருவே எங்களைப்போலவே பங்காளிகள் கூட்டமைப்பை விட்டு தனியாக வந்தவர்கள் வசிக்கும் தெரு என்பதால் எல்லோருமே ஜோவியலாக இருப்பார்கள். என் வீட்டை சுற்றிலும் மாமன் வீடுகளாக இருந்தன. என் வயதொத்த பெண்கள் அதிகம் என்பதால் எனது ஆரம்ப காலங்கள் பெண்கள் மத்தியில்தான் கழிந்தன. 

இப்படியான என் வாழ்வில் நான் செய்யும் சேட்டைகள் மிக அதிகம். அப்படிதான் எங்கள் ஊரில் காமன் பண்டிகை என்றொரு விழா நடக்கும். காமண்டி நடப்பட்டு பதினாலு நாட்களுக்கு பூஜை நடக்கும். அதன்பின் பதினைந்தாம் நாள் இரவு காமன் தகனம் நடைபெறும். அந்த இரவில் ஒரு சிறுவனுக்கும் சிறுமிக்கும் மன்மதன் ரதி வேடமிட்டு அவர்களுக்காக பெரியவர்கள் இருவர் எதிரெதிர் அணியாக பாட்டுபாடுவார்கள். பார்க்க மிக சுவாரஸ்யமாக இருக்கும் இந்த நிகழ்ச்சியை பார்க்க நாங்கள் ஒன்று கூடுவோம். மறுநாள் காமாண்டியை கொளுத்தி காமன் தகனம் நடைபெற்றவுடன் ஒருவர் புலிவேடமிட்டு ஒவ்வொரு வீடாக வசூலுக்கு கிளம்புவார்கள். ட்ரம்ஸ் அதிர்வில் சாராய போதையில் பெரியவர்கள் ஒருபுறமும், உற்சாகத்தில் சிறுவர்கள் நாங்கள் ஒருபுறமும் டான்ஸ் பட்டய கிளப்புவோம். இதபத்தி நண்பன் தஞ்சாவூரான் 'பரவாக்கோட்டையும், வாலண்டைன்ஸ் டே கொண்டாட்டங்களும்' என்கிற இந்தபதிவில் விரிவாக எழுதியுள்ளான்.

இப்படி ஒரு நாள் காமன் பண்டிகை பூஜை நடந்த மறுநாள் காலை நான் வீட்டிற்கு வந்தவுடன் எனக்கும் அம்மாதிரி வேசம் போட்டு ஆடவேண்டும் என ஆசை வந்தது. வீட்டில் எனது பெரிய அக்கவாவைத்தவிர அத்தனை பேரும் வயலுக்கு சென்றுவிட நான் வைக்கோல்போர் அருகே கொஞ்சம் வைக்கோலை பிடுங்கி  அதனை குவித்து கொளுத்தினேன். வைக்கோல் தீவிரமாக பற்றிக்கொண்டு வைக்கோல்போரை தொட்டது ஆனால் நான் அதனைப்பற்றி கவலைப்படாமல் வைக்கோல்ப்போரை சுற்றியும் 'டணக்கு டண்டேனா, டனா' வென பாட்டு பாடிக்கொண்டு சுத்தி ஆடிவந்தேன். அப்போதுதான் அறுவடை முடிந்து புதிதாக போட்ட பிரமாண்ட வைக்கோல்போர் என்பதால் தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிய ஆரம்பிக்கவே பக்கத்து வீட்டில் யாரோ பார்த்து விட்டு சத்தம்போட நான் பயந்துபோய் ஓடி ஒளிந்துகொண்டேன்.

தெருவில் எல்லோரும் போராடி தீயை அனைப்பதற்க்குள் வைக்கோல்போர் முக்கால் வாசி எரிந்து விட்டது. என் வீட்டினரும் செய்தி கேள்விப்பட்டு ஓடிவந்து பார்த்தபோது அங்கு என்னைக் கானாததால் வைக்கோல்போர் எரிந்து போன சோகத்தைவிட நான் காணமால் போனதற்கு அழுது  அரற்ற, எரிந்ததை முதலில் பார்த்த பெண்மணி, நான் வைக்கொல்போரை சுற்றி ஆடியதை மட்டும்தான் பார்த்தேன். அதனால் பிள்ளை உள்ளுக்குள் சிக்கியிருப்பானோ ஏன் பீதியை மேலும் கிளப்ப.ஊரே அல்லோகலம் ஆகி மீண்டும் வைக்கோல்போரை துழாவ நான் கிடைக்கவேயில்லை. 

யாரோ ஒருவர் கயிறு தேடி வீட்டிற்குள் இருந்த பத்தாய ( நெல் சேமிக்கும் கலன்) சந்தில் பார்த்தபோது நான் அங்கு மலங்க மலங்க விழித்துக்கொண்டு அமர்ந்திருந்ததை பார்த்து என்னை குண்டு கட்டாக தூக்கிவந்து அத்தனை பேர் முன்னிலையில் நிறுத்தியபோது என் குடும்பத்தினர் உட்பட அத்தனைபேரும் சோகத்தை மறந்து வயிறு வலிக்க சிரிக்க ஆரம்பித்தனர். காரணம் நான் இடுப்பில் ஒரு கோவணத்துடன் வெற்று உடம்பில் சாம்பலை குழைத்து உடல் முழுதும் போட்டிருந்த புலிவேசம்தான். எனக்கும் என்னை அடிப்பார்களோ என்கிற பயம் போய். அதனை பேரும் பார்த்து விட்டார்களே என்கிற அவமானம் வந்து சேர்ந்தது.

இனி சேட்டைகள் தொடரும் ..

24 கருத்துகள்:

Unknown சொன்னது…

//உங்களின் ஜாதகம் உங்கள் எல்லோருக்கும் எந்த அளவுக்கு சாதகமாக இருந்திருக்கிறது?//
முதல் வரியே அசத்துகிறது பாஸ்! :-)

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

சார்.. ஊஞ்சல் இதழில் ( பட்டுக்கோட்டை பிரபாகர் ) உங்களைப்பற்றி, உங்கள் தளத்தைப்பற்றி நம்ம கேபிள் சங்கர் சார் எழுதி இருக்கார்..வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>>நாம் எல்லோருக்குமே நம் எதிர்காலத்தை பற்றி தெரிந்து கொள்ள அதீதமான ஆர்வம் இருக்கும். நாத்திகம் பேசும் ஆட்கள் கூட ரகசியமாய் தங்கள் ஜாதகத்தை அலசுவார்கள்

உண்மைதான் சார்

Unknown சொன்னது…

அருமையாகச் செல்கிறது தொடர்!

Rathnavel Natarajan சொன்னது…

நல்ல இளமைக்காலம் பற்றிய பதிவு.
இப்போது யாரும் குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வைப்பதில்லை.
வாழ்த்துக்கள்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

wov

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அருமையா போயிட்டு இருக்கு....

ஹேமா சொன்னது…

செந்தில்.....செந்தில் !

Jana சொன்னது…

ம்ம்ம்ம்...(பெருமூச்சு!)

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

Nice

ராஜ நடராஜன் சொன்னது…

நம்ம கேசு போல தெரியுதே:)

RVS சொன்னது…

காமன் பண்டிகை பதிவு... நன்றாக இருந்தது செந்தில்! ;-)

பெயரில்லா சொன்னது…

அண்ணே செம! :)

vasu balaji சொன்னது…

அம்புட்டு வாலா நீங்க:))

அம்பிகா சொன்னது…

சேட்டைகள் தொடரட்டும். அரு்மையா இருக்கு பதிவு.

பெயரில்லா சொன்னது…

//ஜாதகம்//

>>> நேரில் பேசுகிறேன்.

Philosophy Prabhakaran சொன்னது…

// கடைசியில் ஷ் முடியுமாறு பெயர் வைப்பதுதான் இப்ப பேஷன் //

நான் அடிக்கடி வேதனைப்படும் விஷயங்களில் இதுவும் ஒன்று...

Philosophy Prabhakaran சொன்னது…

மிரள வைத்துவிட்டது நீங்கள் இணைத்துள்ள புகைப்படம்...

ஜோதிஜி சொன்னது…

ஜாதகம் ஒருவருக்கும் சாதகமா இல்லையா என்பதை விட தொடக்கத்தில் எத்தனை வேகமாக இருக்கிறார்கள் என்பதை விட அவர்களின் இந்த வேகமே பல பாடங்களை அனுபவங்களை கற்றுக் கொடுக்கின்றது. பள்ளி இறுதி வரையிலும் முதல் தரத்தில் வந்தவர்கள் மேல் நிலையில் காணாமல் போய் விடுகிறார்கள். மேல்நிலை பள்ளியில் முதல் தரத்தில் வந்தவர்கள் கல்லூரியில் தெள்ளவாரியாக மாறியிருக்கிறார்கள். ஆனால் 12 ஆம் வகுப்பு வரை அம்மாஞ்சியாக இருந்தவர்கள் கல்லூரியில் நுழைந்து சூடுபிடித்து தனக்கான இடத்தை உருப்படியாக பிடித்து வேலைக்குச் சேரும் வரைக்கும் பட்டையைக் கிளப்பி மேலே மேலே என்று வந்து விடுகிறார்கள். என்னுடைய பல நண்பர்கள் இன்னும் எனக்கு ஆச்சரியம் அளித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் தொழில் வாழ்க்கையில் உள்ளே வந்த போது இவனா இந்த அளவுக்கு வளர்ந்து இருக்கின்றான் என்று யோசித்த பலரும் எவரும் 20 மதிப்பெண்கள் கூட பெறாதவர்கள். பள்ளி பாடத்திற்கும் வாழ்க்கை பாடத்திற்கும் சம்மந்தம் இல்லாதவர்கள் பெற்றுள்ள வெற்றி இன்னமும் யோசிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இது அவரவர் ஜாதகமா? முயற்சியா? விதியா? முன் ஜென்ம பலனா? இல்லை அன்றாட செயல்பாடுகளை உணர்ந்து வாழ்ந்தவர்களா? மொத்தத்தில் நாம் எழுதக் கற்றுக் கொண்டதை போல சிலர் மற்றவர்களின் வாழ்க்கையை நிர்ணயிக்க கற்றுக் கொண்டு விடுகிறார்கள்.

சசிகுமார் சொன்னது…

பயங்கர குரும்புக்காரனா நீங்க அடுத்து கொளுத்த போவது எது சீக்கிரம் சொல்லுங்க சார்.

Unknown சொன்னது…

நல்லாருக்கு நல்லாருக்கு தொடருங்கள் சார்

சக்தி கல்வி மையம் சொன்னது…

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

கவிதைகளை அநதந்த உணர்சிகள் மேலோங்க எழுதியுள்ளீர்கள் ...பாராட்டுக்கள் ...
///////

என்னையும் ஞாபகம் வைத்துகொண்டதற்கு நன்றி..
என் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு அதனால் கடந்த வாரம் பதிவிடவில்லை..
See,
http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_10.html

'பரிவை' சே.குமார் சொன்னது…

செந்தில் அண்ணா...
கலக்கல்... வைக்கப் போரை கொளுத்தியவரா நீங்க?

Pranavam Ravikumar சொன்னது…

கலக்கல்...வாழ்த்துக்கள்!