16 பிப்., 2011

துரோணா - 5 ...


பொருட் பாலை விரும்புவார்கள் காமப்பால் இடைமூழ்கிப் புரள்வர் கீர்த்தி
அருட்பாலாம் அறப்பாலைக் கனவிலுமே விரும்பார்கள் அறிவொன்று இல்லார் குருப்பாலர் கடவுளர்பால் வேதியர்பால் புரவலர்பால் கொடுக்கக் கோரார் 
செருப்பாலே அடிப்பவர்க்கு விருப்பாலே கோடி செம்பொன் சேவித்து இடுவார். - விவேக சிந்தாமணி..

காதலில் எத்தனையோவகையை பார்த்துவிட்டோம்.போதாகுறைக்கு அதனை சினிமாவும் கற்பனைக்கு எட்டியவரை காட்டியாயிற்று.. இது ஒரு மாணவனுக்கு டீச்சர் மேல் உண்டான காதல், ஆனால் இதில் டீச்சர் ஒன்றும் அறியாத அப்பாவி.. ஏனென்றால் நண்பனுக்கு வந்தது ஒருதலைக்காதல் ..

நம்ம நண்பனின் பெயர் கம்பன்,வெளியூரில் இருந்து எங்கள் ஊருக்கு படிக்க வந்தவன். அவன்தான் நம்ம ஹீரோ, தொடர்ந்து அவனைப்பற்றி பேசுறதுக்கு முன்னால என்னோட சுயபுராணம் கொஞ்சம் ...

நாங்க அப்போது +2 படித்துகொண்டிருந்தோம் , பத்தாவது முடித்தவுடன் நான் கட்டிடவியல் படிக்க ஆசைப்பட்டேன், ஆனால் அப்பாவோ சுத்துப்பட்டுல நம்ம ஊருக்குதான் கம்ப்யூட்டர் வந்திருக்கு அதனால் அதைத்தான் படிக்க வேண்டும் எனப் பிடிவாதமாக சேர்த்துவிட்டார், எனவே நமக்கு பிடிக்காமலே சேர்ந்த படிப்பு அது, அதனால் கொஞ்சம் கவனக்குறைவாகவே இருப்பேன் , அதனால் டீச்சருக்கு என்னையும் நண்பன் கணேஷையும் சுத்தமா புடிக்காது,

இந்தக் கணேஷ் இருக்கானே அவன் ஒரு ஊமைக்குசும்பன் எப்பவுமே அவன் பேசுறதுக்கு டபுல் மீனிங்தான். நானும் அவனும்தான் படா தோஸ்த்.. ரெண்டு பேரும் அடிக்கிற லூட்டி தாங்காம டீச்சர் அடிக்கடி வகுப்பை விட்டு பத்தி விட்ரும்..

போதாகுறைக்கு எங்களோட சீனியர் ஒருத்தனும்(பேரு மதி ) எங்களோட படித்தான், அவனோட கிளாஸ்மேட்தான் நம்ம டீச்சர், இந்தமாதிரி ஒரு நிலைமைக்கு என்ன காரணம்ன்னா அப்ப கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சவங்க ரொம்ப கொறைவு , ”ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைபோல்” டீச்சர் எங்க ஊரு என்பதாலும் மேலும் கம்ப்யூட்டரில் டிப்ளோமா செஞ்சதால் எங்கள் வகுப்புக்கு அவங்கள டீச்சரா போட்டுட்டாங்க, அவங்களுக்கு தெரியுமா கூடப்படிச்சவனுக்கே சொல்லிகொடுக்க வேண்டியிருக்குன்னு? அதனால அவனமட்டும் வாங்க, போங்கன்னு சொல்வாங்க, எங்கள நீ, வான்னு சொல்வாங்க போதாதா!.. அதை அடிக்கடி சொல்லி மதியை அவங்க முன்னாடியே கிண்டல் செய்வோம், அதனால் நாங்க ரெண்டு பேரும் கிளாஸ்ல இருக்கிற மாதிரியே நெனைக்க மாட்டங்க, எங்களுக்கும் அது ரொம்ப வசதியா போய்ட்டதால சிகிரெட் புடிக்கனும்னா வெளிய வந்துருவோம்,

இப்படி போய்க்கிட்டிருந்த வகுப்புல நம்ம திருநாமத்த(என் பேருதான் அவனுக்கும்) கொண்ட நண்பன் ஒருவன் நம்ம ஹீரோ டீச்சர காதலிக்கிற விசயத்த போட்டு ஒடைச்சான், நமக்கு ஒரு கிலோ அல்வா சாப்பிட்ட மாதிரி இருந்த்துச்சுங்க , அப்புறம் என்ன! கொஞ்ச நாளைக்கு நம்ம மக்களோட செலவெல்லாம் அவனோடதுதான், என்ன நம்ம கையும் , வாயும் சும்மா இருக்காது , சுவர் விளம்பரம், ரேடியோ விளம்பரம் , போஸ்டர்ன்னு ஒன்னுவிடாம போட்டு விட்ருவோம் , மேலும் அவன கூப்பிட்டு விசாரித்தபோது , விசாரணை என்றால் எங்க ஸ்கூல் பாத்ரூம்தான் போலீஸ் ஸ்டேஷன் அங்கதான் முதலில் அவனை சும்மா விளையாட்டா கேட்டோம், முதலில் சத்தியம் செய்து மறுத்த அவன், ரெண்டு தாங்கு தாங்கினவுடன் ஒத்துக்கொண்டான், மேலும் ”தன்னோட அப்பாவுக்கு தெரிஞ்சா கொன்னே போட்ருவார்ன்னு சொன்னான்” போதாதா! ”விடுங்கடா நான் காதலிக்கவே இல்லை” என்று கதறும் வரைக்கும் கறந்துக்கிட்டுதான் விட்டோம்!.

ஆனா! இது கடைசிவரைக்கும் டீச்சருக்கு தெரியாம போய்ட்டுது , நாங்க பன்ற சேட்டை தங்காம எனக்கும் கணேசுக்கும் ரெகார்ட் நோட்டுல 4 மார்க் கொறைச்கிட்டங்க, அதனால கணேஷ் அவங்ககிட்டே போய் ”நீ என்னோட ரெகார்ட் மார்க்கதான் குறைக்கமுடியும் தியரில நான் பர்ஸ்ட் மார்க் வாங்கிட்டா வேலைய விட்டுட்டு போவியான்னு” சவால் விட்டான் , அதுக்கு அவங்க அவனை மொறச்சுக்கிட்டே போய்ட்டாங்க, நான்கூட ”என்னடா இப்பிடி சொல்லிட்டே இதல்லாம் ஆவுற கதையாடா விட்டுட்டு வாடான்னு” அழைச்சிக்கிட்டு வந்திட்டேன், ஆனால் அவனோ சொன்னபடி செய்து காட்டினான், தியரில ஃபர்ஸ்ட் மார்க்  வாங்கினவன் கணக்குல பெயில் ஆயிட்டான். அப்புறம் ஸ்கூலுக்கு மார்க்லிஸ்ட் வாங்க வந்தபோது அந்த டீச்சர் எங்களிடம் மன்னிப்பு கேட்டாங்க. அவங்களே வந்து மண்ணிப்பு கேட்டதாலே நாங்களும் அதுக்கு அப்புறம் பெரிசு பண்ணல .
அப்புறம் நாங்க ( நானும்தான்) கணக்குல பெயிலாயிட்டதால் மேற்க்கொண்டு படிக்கல, பிறகு சிங்கப்பூர் போயிட்டு வந்தபிறகு அவங்கள போய்ப்பார்த்தேன் ரொம்ப அன்பா விசாரிச்சாங்க , இவங்கள போய் நோகடிசுட்டோமே என வருத்தப்பட்டேன்.

+2 முடிந்த பின் எப்பவாவது என் அத்தை பெண்ணைப் பார்க்க அவர்கள் வீட்டிற்கு போவேன், அப்படிதான் ஒருநாள் அது என்னிடம் கடிதம் ஒன்றை காட்டியது, அது நம்ம ஹீரோ கம்பன் அதுக்கு எழுதிய கடிதம், அதில் சிக்கல் என்னவென்றால் அந்தக் கடிதம் ஒரு பதில் கடிதம் போல எழுதப்பட்டிருந்தது, அதுக்கும் அந்தக் கடிதம் பார்த்து ஒரே குழப்பம், எங்க மாமாவுக்கு தெரிந்தால் பிரச்சினை பெரிதாகி அவனை உண்டு இல்லை என ஆக்கிவிடுவார் என்பதால், நானே அந்த கடிதத்தை வாங்கிகொண்டு கம்பன் வீட்டிற்கு சென்றேன், அவனை தனியே அழைத்துசென்று விசாரித்தால், முதலில் நான் அந்த கடிதத்தை திருடிக்கொண்டு வந்ததாக சொன்னான், பிறகு ரெண்டு போட்டவுடன் ”அந்த பெண்ணும் தனக்கு கடிதம் எழுதியது அதனால்தான் நான் பதில் போட்டேன்” என்று சொன்னான்,  நான் “அந்த லெட்டர கொடுடா” என்றால் ”தரமுடியாது” என்று சொன்னான் ,

நமக்குதான் நம்ம நண்பன பத்தி தெரியுமே, ”தருகிறாயா இல்லை உங்க அப்பாகிட்டே சொல்லட்டுமா?” என்றவுடன் நடுங்கிக்கொண்டு வந்து கொடுத்தான், ”இதை யாருடா உனக்கு கொடுத்தது?” என ரெண்டு போட்டேன், அதற்க்கு ”அவன் எங்களுடன் படித்த பாஸ்கரன் கொடுத்தான்” எனவும் , தொடர்ந்து கடிதம் கொடுப்பன் நானும் பதில் எழுதி கொடுப்பேன் , இடையில் அவன் எதற்கு புரோக்கர் மாதிரி என நானே எழுதினேன் , அது உன் கையில் மாட்டிவிட்டது என அழுதான், மேலும் தன் வீட்டாருக்கு தெரிய வேண்டாம் என மன்றாடினான், நானும் ழ்ழ்’அவனை இந்த கடிதமெல்லாம் பாஸ்கர் உன்னிடம் விளையாண்டிருக்கிறான், அவனை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு” வந்துவிட்டேன்,

இந்த பாஸ்கர் என் மாமாவின் மூத்த பெண்ணின் கணவர் வைத்திருக்கும் கடையில் வேலை செய்தான், அவனிடம் சென்று விசாரித்தேன் , அவனும் முதலில் மறுத்தான் , படையல் ஆரம்பித்தவுடன் ஒப்புக்கொண்டான், அவனும் கம்பனும் ஒரே ஊர் அதனால் கம்பன் அடிக்கடி என் அத்தை பெண்ணை பற்றி விசாரிக்கவும் , சும்மா விளையாட்டுக்கு செஞ்சேன் அவன் இந்த அளவு போவான் என்று தெரியவில்லை என மன்னிப்புக்கேட்டான் , அப்பல்லாம் நான் விஜயகாந்த் மாதிரி, மன்னிப்பு என்னோட அகராதியில் கிடையாது, பாஸ்கர் தன் வாழ்நாளில் அப்படி அடி வாங்கியிருக்க மாட்டான், அடி பின்னி எடுத்திட்டேன்

இனி அந்தக் கடையிலும் வேலை பாக்கக்கூடாது என துரத்திவிட்டேன், இப்போது எல்லாருக்கும் கல்யாணம் ஆகியிருக்கும் , அவர்களும் என்னைப்போல் நினைத்து பார்ப்பார்களா? ஆட்டோகிராப் சேரனைபோல் ஒரு தடவை எல்லோரையும் சென்று பார்த்துவிட்டு வரலாம் என்றிருக்கிறேன்...

சேட்டைகள் தொடரும்...

15 கருத்துகள்:

சக்தி கல்வி மையம் சொன்னது…

அது என்னவோ நீங்க என்ன எழுதினாலும் நல்லாயிருக்கு சார்...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

உங்கள் நினைவலைகளில் இன்னும் திலைக்க காத்திருக்கிறோம்...
தொடரட்டும் உங்கள் சேட்டைகள்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

nadakkattum nadakkattum

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஆட்டோகிராப் நினைவுகள் அசத்தல்.....

அம்பிகா சொன்னது…

சிறு வயது நினைவுகள் பசுமரத்தாணி. தொடருங்கள் உங்கள் சேட்டைகளை.

பெயரில்லா சொன்னது…

//எங்க ஸ்கூல் பாத்ரூம்தான் போலீஸ் ஸ்டேஷன்//

பள்ளிகளில் பொதுவாக விசாரணை நடைபெறும் இடம். பகிர்வுக்கு நன்றி!

ஹேமா சொன்னது…

உங்க சேட்டைகளை நீங்களும் ரசிச்சு எங்களுக்கும் சொல்றீங்க.அந்த நேரத்தில உங்க அம்மா எவ்ளோ கஸ்டப்பட்டிருப்பாங்க செந்தில்.அம்மாதான் பாவம் !

மாணவன் சொன்னது…

நல்லாருக்குண்ணே..

தொடரட்டும் சேட்டைகள் :))

Rathnavel Natarajan சொன்னது…

படிக்கும் போது படிக்கவில்லை.
மற்ற எல்லாம் சிறப்பாக செய்திருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.

Jana சொன்னது…

ஆட்டோகிராப் சேரனைபோல் ஒரு தடவை எல்லோரையும் சென்று பார்த்துவிட்டு வரலாம் என்றிருக்கிறேன்..
:)

Unknown சொன்னது…

கலக்கல் பாஸ்! தொடருங்கள்!

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

நினைவுகள் அசத்தல்.....

Philosophy Prabhakaran சொன்னது…

தாஸ் தாஸ் சின்னப்பதாஸ் தாஸ் தாஸ்...

Philosophy Prabhakaran சொன்னது…

என்னது நம்ம அத்தை பொண்ணுக்கு அடுத்தவன் லெட்டர் கொடுக்குறதா... அவனை நசுக்கிட வேண்டாமா...

sathishsangkavi.blogspot.com சொன்னது…

நல்ல நினைவுகள்...