3 பிப்., 2011

நாம நல்லாக் குடிக்கோனும் நாடு முன்னேற!...


கமலா திரையரங்கில் 'ஆடுகளம்' பார்த்துவிட்டு 'ஆடாமல்' வந்தபோது இந்த போஸ்டர் கண்ணில் பட்டது. அடடா...! நம் 'உடன்குடிப்பு'க்களும் குவார்ட்டர் சுப்புகளும் காலங்காலமாய் மனசுக்குள் முணங்கிக் கொண்டிருந்ததை வெளிச்சம் போட்டு... மன்னிக்கவும்...போஸ்டர் போட்டுக் காட்டிய கண்மணிகள் எங்கிருந்தாலும் குவார்ட்டரும் ஊறுகாயும்போல நீடூழி வாழ்க! உடனேபோய் ஒரு குவார்ட்டர் கட்டிங்கைப் போட்டுவிட்டு கண்கள் பனிக்க, இதயம் இனிக்க ஒரு பதிவு எழுதவேண்டும் என்று தோன்றியதால் ஓடோடியும் உருண்டோடியும் வந்து சேர்ந்தேன்.


போஸ்டரைப் பார்த்து குவார்ட்டரைப் போட்டவுடன் ஏறிய சுதி, பொதுவாக மக்களின் கண்ணீர்க் கோரிக்கை மனுக்கள் கக்கூஸ் துடைக்கும் காகிதங்களாகத்தான் பயன்படுத்தப் படுகின்றன என்று நண்பர் கிசுகிசுத்தவுடன் கப்பென இறங்கிப் போனது. கக்கூஸ் என்றவுடன் அந்த உலகமகா சந்தேகமும் நினைவுக்கு வந்து போனது. வேறொன்றுமில்லை...கெவுருமெண்டு நடத்தும் எல்லா நிறுவனங்களும்... அது கார்ப்பொரேஷன் பஸ்ஸாகட்டும், காவல்நிலையங்களாகட்டும், ரேசன் கடைகளாகட்டும் இல்லை டாஸ்மாக்காக ஆகட்டும்... எல்லாமே பராமரிக்கப்படாத பப்ளிக் கக்கூஸைப்போலவே ஏன் இருந்து தொலைக்கின்றன? 


அரசுப்பேருந்துகளுக்கு அடியில் ஆணி சொருகிவிட்டு ஆம்னி பஸ்களுக்கு "ரை..ரைட்..." சொல்வது ஏனென்று கேட்டால் அமைச்சர் பெருமக்கள் 'மக்கள்பணி'யாற்ற வேண்டாமா பின்னே? என்கிறார்கள்!  காவல் நிலையக் கையூட்டுகளுக்குக் காரணம் கேட்டால் காக்கிச் சட்டைக்கு கஞ்சிபோடக் காசு எப்படி வரும் என்கிறார்கள்! ரேசன் கடைகளில் எடைகுறைவது ஏனென்றால் பல மடைகளுக்கு மாற்றப்படும் தண்ணீர் கடைமடைக்குக் கம்மியாகத்தானே வரும் என்கிறார்கள்!


சரி போகட்டும்... பிய்ந்து நொய்ந்துபோன மனசை ஆற்றுப்படுத்தலாம் என்று பிராந்திக்கடையோரம் ஒதுங்கினால் பிச்சைக்காரர்களைவிடக் கேவலமாகப் பீராய்ந்து விடுகிறார்களப்பா! குந்துனாப்புல ஒக்காந்து குவார்ட்டருக்கு ரெண்டுரூவா கூடவெச்சி விற்கும் அநியாயத்தைச் சொல்லவா? பன்றித் தொழுவத்தைவிடக் கேவலமாக மணம்வீசும் டாஸ்மாக் பாரின் 'பெருமை'யைப் பேசவா? இல்லை... ஆஃப் பாயில் சைட் டிஷ்ஷை ஃபுல் சிக்கன் ரேட்டுக்கு விற்று பாக்கெட்டைப் பதம் பார்க்கும் அவலத்தைச் சொல்லவா? எதைச் சொல்ல... எதை விட?!


உழைக்கும் மக்களின் பணப்பைகளை 'ஊத்தி'க் கொடுத்தே ஆட்டையைப் போடும் அரசாங்கம் ஓசி டிவியும் ஒரு ரூபாய் அரிசியும் கொடுத்து உலகத்தையே 'தண்ணி' அடிக்காமல் கிறங்க வைக்கும் யோக்கியதையை எவன் வெளிச்சம் போட்டுக் காட்டுவது? கால்வயிற்றுக் கஞ்சிக்கு ஏங்கிச் சாவுகின்றவன் சாவட்டும் கஜானா நிரம்பினால் போதுமென்று கல்லா கட்டும் வித்தை தெரிந்த அரசாங்கம் குறைந்தபட்சம் செய்யும் 'தொழிலு'க்காவது நியாயமாய் இருந்து தொலைத்தால்தான் என்ன? 'சின்னம்மா'வின் மிடாஸ் தொடங்கி டி.ஆர் பாலு வரை சாராயம் விற்றுத்தான் பிழைக்கவேண்டும் என்றானபின்பு ஏன் அரசாங்கம் இன்னும் சத்தியசீலன் வேஷம்கட்ட வேண்டும்? "முழுக்க நனைந்த பின் முக்காடு" தேவையா என்ன?

நடத்துவது மதுக்கடை என்றாலும் அதை சற்றுத் தரமாக நடத்தலாம் அல்லவா? கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்! கும்பி எரிந்து குடல் அழுகிப் போய்விடாத அளவு தரமான மது, சில்லறை சுத்தமான பில், படோபடோபம் இல்லாவிட்டாலும் பாந்தமான சுகாதாரமான பார்... இப்படி மட்டும் இருந்துவிட்டால்...??? இந்தியா ஒளிர்ந்துவிடாதா என்ன?


காலாவதியாகிப் போன காந்தியைக் கட்டிக்கொண்டு அழுதால்மட்டும் இனி கதைக்காகாது என்ற 'புரிதலி'ல் காங்கிரசுத் தோழர்கள் 'குடி'மக்களின் நலன்காக்கத் தோள்தட்டிக் கிளம்பி இருப்பதை வரவேற்கும் அதேநேரம் அரசாங்கம் நல்ல தரமான சாராயக் கடைகளையும், கள்ளுக்கடைகளையும் திறந்து வைத்து 'மக்கள்பணி'யே மகேசன் பணி என்று தொண்டாற்றிட வேண்டுகோள் வைத்து, நாம் எல்லாருமே சிறந்த 'குடி'மக்களாக இருக்க வரம் தர வேண்டும் என 'எல்லாம்' வல்ல மஞ்சள்துண்டு மாமுனிவரைப் பிரார்த்திக்கிறேன்.


'குடி' உயரக் கோன் உயரும் என்பது அவ்வை மொழி!

38 கருத்துகள்:

க ரா சொன்னது…

vilangirum :)

வானம் சொன்னது…

மானமும், அறிவும் மனிதருக்கு அழகு - பெரியார்.
மதுவும், மறதியும் தமிழனுக்கு அழகு - கொலைஞர்.

தமிழ் உதயம் சொன்னது…

நியாயமான கோரிக்கை தான். தேர்தல் ஜுரத்தில் ஆளுங்கட்சி எல்லா கோரிக்கைகளையும் ஏற்று கொண்டு கூட்டணி வைத்தால் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ராமதாசு அவர்களுக்கு தான் கஷ்டமாக இருக்கும்.

மதுரை சரவணன் சொன்னது…

நல்ல பகிர்வு... வாழ்த்துக்கள்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

:) ROFL

Bibiliobibuli சொன்னது…

குவாட்டர் கட்டிங்கிற்குப் பிறகும் ஸ்டெடியான பதிவு.

பெயரில்லா சொன்னது…

என்ன கொடும சார் இது

ஹேமா சொன்னது…

அழகா போஸ்டரையும் படம் பிடிச்சிட்டு வந்து பதிவும் போட்டிருக்கீங்க.நிதானம் இதுவரைக்கும் இருந்திருக்கு.
இதுதான் செந்தில் !

Anisha Yunus சொன்னது…

ஆஹா... இப்ப இவங்களும் யூனியன் ஃபார்ம பண்ணிட்டாங்களா??? சந்தோஷம் :)

Philosophy Prabhakaran சொன்னது…

உண்மையில் இப்படியெல்லாம் போஸ்டர் ஒட்டுவார்களா என்று நம்ப முடியவில்லை...

பெயரில்லா சொன்னது…

>>> போஸ்டர்ல இருக்குற 11 வது பாயின்ட் இருக்கே... சூப்பரு. இதை எழுத 14 பேர் கொண்ட குழு வச்சிருப்பாங்க போல...எப்படி எல்லாம் டெவெலப் ஆயிட்டு போறாங்க இவிங்க..

sathishsangkavi.blogspot.com சொன்னது…

நல்ல பகிர்வு...

bandhu சொன்னது…

// ராமதாசு அவர்களுக்கு தான் கஷ்டமாக இருக்கும்.
//
அன்புமணிக்கு ஒரு ராஜ்யசபா சீட்டு என்றால் ராமதாசே வந்து கூட்டணி அமைச்சுக்க மாட்டாரா?

Unknown சொன்னது…

அட..அட...அட...என்ன ஒரு flow...

settaikkaran சொன்னது…

வாழ்க கு.மு.கழகம்! ஓங்குக டாஸ்மாக் புகழ்!!

Chitra சொன்னது…

புல்லரிச்சு போச்சு!

கார்த்திக் பாலசுப்ரமணியன் சொன்னது…

அட அட அடடா :)

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

கலக்கல் அண்ணா .இப்படி ஒரு திட்டம் வருங்காலத்தில் வந்தாலும் வரும் ....நல்ல வேளை கேமரா ஷேக் ஆகம எடுதீர்களே ...பிறகு பதிவு போடா முடியாம ஆகிருக்கும்

CS. Mohan Kumar சொன்னது…

Interesting post. Bloggers sometimes do what magazines need to do/ write.

Jana சொன்னது…

'குடி' உயரக் கோன் உயரும் என்பது ஒளவை மொழி!

தமிழ் உதயன் சொன்னது…

தலைவரே நீங்க ரொம்ப நல்லவரு....

மங்குனி அமைச்சர் சொன்னது…

வானம் சொன்னது…

மானமும், அறிவும் மனிதருக்கு அழகு - பெரியார்.
மதுவும், மறதியும் தமிழனுக்கு அழகு - கொலைஞர்.////

செருப்பால அடிச்ச மாதிரி சொல்லி இருக்கீங்க வானம் ........

Jayadev Das சொன்னது…

//கள்ளுக்கடைகளையும் திறந்து வைத்து //ஹி...ஹி...ஹி... இது மட்டும் நடக்காதுங்கண்ணோவ்! கள்ளுக்கடையைத் திறந்து விட்டு விட்டால் மஞ்சள் துண்டை தொழில் போட்டுக் கொள்ள முடியாது, தலையில் முக்காடாகப் போடும்படி ஆகி விடும். //'குடி' உயரக் கோன் உயரும் என்பது அவ்வை மொழி!// அருமை...அருமை. அவ்வையார் ஒரு தீர்க்க தரிசி!!

Unknown சொன்னது…

//நாம நல்லாக் குடிக்கோனும் நாடு முன்னேற!//
அம்மாவசை அன்னைக்காவது குளிக்கோணும்

பெயரில்லா சொன்னது…

ஹி ஹி :)

ராஜ நடராஜன் சொன்னது…

இருக்குற பட்டங்களை சுமக்க முடியாமலே தள்ளாடும்போது மஞ்சள் துண்டு முனிவர்ன்னு பட்டமளிப்பு விழா நடத்தி தாத்தாவா?ஆத்தாவான்னு பட்டிமன்றம் நடத்தும் போது தள்ளாத வயதிலும் இதயம் இனிக்கவே செய்கிறது.கட்டுமரமாகி ‘மித’க்கிறேன்.

செல்வா சொன்னது…

பதிவை விட உங்க நடைதான் ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா ..
//கட்டிங்கைப் போட்டுவிட்டு கண்கள் பனிக்க, இதயம் இனிக்க ஒரு பதிவு எழுதவேண்டும் என்று தோன்றியதால் ஓடோடியும் உருண்டோடியும் வந்து சேர்ந்தேன்.
//

//சரி போகட்டும்... பிய்ந்து நொய்ந்துபோன மனசை ஆற்றுப்படுத்தலாம் என்று பிராந்திக்கடையோரம் ஒதுங்கினால் பிச்சைக்காரர்களைவிடக் கேவலமாகப் பீராய்ந்து விடுகிறார்களப்பா! //

'பரிவை' சே.குமார் சொன்னது…

Athu sari....
ithukkellam yochikkum thamilan avanaip patri yosikka maranthathean.

Philosophy Prabhakaran சொன்னது…

தலைவா... யுத்தம் செய் விமர்சனம் எழுதியிருக்கேன்... எப்படி இருக்குன்னு பார்த்து சொல்லுங்க...

http://philosophyprabhakaran.blogspot.com/2011/02/blog-post_163.html

ஈரோடு கதிர் சொன்னது…

நாஞ்சில் நாடன் கட்டுரை ஒன்று கவனத்திற்கு வருகிறது

Unknown சொன்னது…

தல ஈரோட்டுல நாங்க எப்பவோ பன்னிட்டோம். பாருங்க

http://www.erodekathir.com/2010/07/blog-post_26.html

மாணவன் சொன்னது…

//உடனேபோய் ஒரு குவார்ட்டர் கட்டிங்கைப் போட்டுவிட்டு கண்கள் பனிக்க, இதயம் இனிக்க ஒரு பதிவு எழுதவேண்டும் என்று தோன்றியதால் ஓடோடியும் உருண்டோடியும் வந்து சேர்ந்தேன்.//

அப்பதான் சரியா எழுத முடியும்..

நல்ல பகிர்வு.. :))

இராமநாதன் சாமித்துரை சொன்னது…

உங்க நடை ரொம்ப பிடிச்சிருக்கு

//கட்டிங்கைப் போட்டுவிட்டு கண்கள் பனிக்க, இதயம் இனிக்க ஒரு பதிவு எழுதவேண்டும் என்று தோன்றியதால் ஓடோடியும் உருண்டோடியும் வந்து சேர்ந்தேன்.
//

//சரி போகட்டும்... பிய்ந்து நொய்ந்துபோன மனசை ஆற்றுப்படுத்தலாம் என்று பிராந்திக்கடையோரம் ஒதுங்கினால் பிச்சைக்காரர்களைவிடக் கேவலமாகப் பீராய்ந்து விடுகிறார்களப்பா! //

excellent.....superb....go ahead.

with love
ramanathan samithurai
4 பிப்ரவரி, 2011 3:19 pm

suneel krishnan சொன்னது…

சமீபத்தில் சேட்டைகாரர் பதிவு ஒன்று படித்தது நினைவுக்கு வருகிறது ,மெய்யாலுமே இப்படி செய்வது !!சூப்பர்

பா.ராஜாராம் சொன்னது…

//நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புவர்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளவும்//

எழ்ங்கே பழிவு தெய்றது தென்தில்ண்ணே? :-)

Unknown சொன்னது…

பகிர்வுக்கு நன்றிண்ணே.....

இந்த துட்ட வச்சி தானே அரசாங்கமே இலவசமா கொடுக்குற விஷயங்கள கொடுக்குறாங்க...........அப்படி இருக்கும்போது இந்த கோரிக்கைகள நெரவேத்தனும் அந்த வீட்டுக்குடிகாரனுங்க.....

சீனிவாசன் சொன்னது…

அண்ணே ..எங்க ஊரு டாஸ்மாக் சேல்ஸ் மேன் ரெண்டு வருசத்துல இருபது ஏக்கர் நிலம் வாங்கி இருக்காப்ல .. எங்க அப்பா சொன்னாங்க .

Unknown சொன்னது…

குவாட்டர் கட்டிங்கிற்குப் பிறகும் ஸ்டெடியான பதிவு.
ஓங்குக டாஸ்மாக் புகழ்!!