8 பிப்., 2011

முகமற்ற நட்பு...


பூரணி... 
முகமறியா இணையத் தோழி
சாட்டிங் அலுத்துப்போக
தொலைபேசி துணையானது
மணிகணக்கில் நீளும் பேச்சில்
எல்லாமும் இருக்கும்

இருவருக்கும்
இருந்த சந்திக்கும்
விருப்பங்கள்
வருடங்களை விழுங்கின
சில மாதங்களாய்..,
தொடர்பெல்லைக்கு வெளியே
அவளது எண்
உபயோகத்தில் இல்லை
என்னுடைய எண்..  

பிறகொரு நாள் 
தஞ்சைக்குப் போனபோது
பெரிய கோவில்பிரகாரத்தில்
குடும்பத்துடன் அமர்ந்து
குழந்தைகளுக்கு
கதை சொல்லிய குரல் 
எங்கேயோ கேட்ட மாதிரி..
அவளுக்கும் அதேபோல..


கருவூரார் சன்னதியில் 
"நீங்கள் செந்திலா?"
கேட்டவளிடம் 
ஏன் சொன்னேன்
இல்லை என...

28 கருத்துகள்:

செல்வா சொன்னது…

சில சமயங்களில் நட்பு அப்படித்தான் அண்ணா .
வேண்டாம் என்று சொல்லத்தோன்றும் ..
அல்லது தொந்தரவாக நினைக்கக்கூடும் ..

Unknown சொன்னது…

அருமை! ஒருவேளை அப்படித்தான் இருக்கவேண்டுமோ?

மாணவன் சொன்னது…

"முகமற்ற நட்பு..."

நல்லாருக்குண்ணே...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//கருவூரார் சன்னதியில்
"நீங்கள் செந்திலா?"
கேட்டவளிடம்

ஏன் சொன்னேன்
இல்லை என...//


அடடா அருமை அருமை...

மங்குனி அமைச்சர் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பெயரில்லா சொன்னது…

இந்தப் பதிவில் யதார்த்தம் இருக்கிறது. ப்ராக்டிகலா மனிதர்களின் எண்ணங்கள் இப்படித் தான் இருக்கும்.

Yaathoramani.blogspot.com சொன்னது…

உறுதியாக அவருக்குள்ளும்
ஏன் இல்லை எனச் சொன்னார்
என்ற கேள்வியே எழுந்திருக்கும்
எனக்குச் சந்தேகமில்லை ...
உங்களுக்கு ?
நல்ல பதிவு.வாழ்த்துக்கள்

பா.ராஜாராம் சொன்னது…

நல்லாருக்கு செந்தில். :-)

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

நல்லாயிருக்கு அண்ணா..

Unknown சொன்னது…

ம்ம் ....

Ganesan சொன்னது…

அருமை செந்தில் ஜி.

ரசித்து படித்த வரிகள்.

ஹேமா சொன்னது…

இல்லை என்றதுகூட ஒரு பாதுகாப்புத்தான்.
அதுவும் காதல்தான் செந்தில் !

அஞ்சா சிங்கம் சொன்னது…

அடடா சிலிர்க்க வைத்துவிடீர்கள் மனிதம் இப்படிதான் ...................................

Chitra சொன்னது…

ம்ம்ம்ம்.....

http://rkguru.blogspot.com/ சொன்னது…

நம்மிடம் எதிர்ப்பு இல்லாதவரை எல்லோரும் நண்பர்கள்தான்...

உங்கள் எழுத்துகள் என்றும் புரிதலானது தொடருங்கள்....

ஆச்சி ஸ்ரீதர் சொன்னது…

// கருவூரார் சன்னதியில்
"நீங்கள் செந்திலா?"
கேட்டவளிடம்
ஏன் சொன்னேன்
இல்லை என...//

because senthil is gentle man

vasu balaji சொன்னது…

அருமை செந்தில்

Cable சங்கர் சொன்னது…

ஏன் இல்லைன்னு சொன்னீங்க?

Sivakumar சொன்னது…

WHY????????????

Philosophy Prabhakaran சொன்னது…

ஒருவேளை பிகர் நல்லா இல்லையா அண்ணே...

Philosophy Prabhakaran சொன்னது…

என்ன இது எல்லாரும் சீரியஸா பின்னூட்டம் போட்டிருக்காங்க... நான் தான் தப்பு பண்ணிட்டேனோ...

சசிகுமார் சொன்னது…

உண்மை சார்

PARTHASARATHY RANGARAJ சொன்னது…

தலைவரே ! நல்லாருக்கு

vinthaimanithan சொன்னது…

//ஒருவேளை பிகர் நல்லா இல்லையா அண்ணே...// ஒருவேளை அப்படியும் இருக்குமோ? யோவ் பிரபாகரா, அஃபீசுக்கு வாரும்.. ஒரு விசாரணை கமிஷனை வெச்சிருவோம் :))))

'பரிவை' சே.குமார் சொன்னது…

நல்லாருக்குண்ணே...

vasan சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
vasan சொன்னது…

எதிர் பார்த்த‌துல‌ பாதி கூட‌ இல்லையோ செந்தில்?

அருண் சொன்னது…

அதானே ஏன்? நல்லாயிருக்கு.
-அருண்-