14 பிப்., 2011

ஆகவே! உங்கள் பொன்னான வாக்குகளை...


ஐயா சாமிகளா!எங்கூட பொறக்காத பொறப்புகளா! நீங்கதான் இதுக்கு ஒரு நல்ல தீர்ப்ப சொல்லணும். நான் யாருன்னு கேக்குறீங்களா? நான்தான் மஞ்சள் கர்சீப்காரன்! அதென்ன மஞ்சள் கர்சீப்காரன்னு நீங்க முழிக்கிறது எனக்கு தெரியுது. நான் ஒரு ஏழை பங்காளனுங்க ( 'பங்களான்' அப்டீன்னு தப்பா படிச்சிடாதிய!) அதாவது நீங்க காருலேயோ, பைக்கிலேயோ சென்னையில போனீங்கன்னா சிக்னலுக்கு சிக்னலு வேகாத வெயிலுல கையில வண்டி தொடைக்கற மஞ்சள் துணிய பத்து ரூவாய்க்கு விப்பாங்க தெரியுமா? அந்த குடும்பங்களும் வாழணுங்கிற நல்ல எண்ணத்துல என் பக்கத்துல உக்காந்து வரும் என் அல்லக்கைக இத எனக்கு வாங்கித்தரும், நானும் எக்கச்சக்கமா அது சேந்து போனதால கர்சீப்பா பயன்படுத்த ஆரம்பிச்சுட்டேன். என்னைப்பார்த்து நெறைய பேரு அத கர்சீப்பா பயன்படுத்துனா அந்த ஏழைங்க குடும்பத்துக்கு நான் வெளக்கேத்துன மாரிங்க...


இப்ப விசயம் என்னன்னா.. ஒரு தலப்பா கட்டுகாரரும் இன்னும் கொஞ்சம் பேரும் சேந்து ஒரு ஊர குத்தகைக்கு எடுத்தோங்க. அதுக்கு குறைந்த பச்ச செயல் திட்டம்ன்னு ஒரு ஒப்பந்தம் போட்டுகிட்டோங்க. வேறொண்ணுமில்லீங்க... அவரு பெரிய நாட்டாமையாவும், நான் சின்ன நாட்டாமையாவும் இருக்கறதா ஒரு ஒப்பந்தம்.அதும்படி தலப்பாக்கட்டோட வேலை என்னன்னா நம்மூருல இருந்து மேக்கால ஒரு ஆறாயிரம் பர்லாங் தூரத்துல இருக்குறாருல்ல பெரீய்ய பெரிய நாட்டாமை... அட..அதாங்க நாமெல்லாம் 'பெரியண்ணன்'னு சொல்லுவோமே, அவருக்கு காலமுக்கி உடுறது, கோமணம் கசக்கிப் போடுறது, பெரியண்ணனோட அல்லக்கையிங்களுக்கு நம்மூரு ஏரிகொளம், தோப்புதொறவு எல்லாத்தையும் திருட்டுத்தனமா பட்டா போட்டுக் கொடுக்குறது... இவ்ளோதாங்க. எம்பங்குக்கு 'பெரியண்ண'னுக்கு பட்டா போட்டது போவ மிச்சம்மீதிய தேத்திக்கிட்டு தலப்பாக்கட்டுக்கு சால்ரா அடிச்சிட்டு இருப்பேன்.அந்த ஒப்பந்தம் போடுற அதே நாளு என்னோடு தாயாதிகள வேற ஒரு நாட்டுல 'போட்டு' தள்ளினாங்க. ஏதோ எசமானுங்க ஊத்துற கஞ்சியோ கூழோ குடிச்சிட்டு இருந்தா அவனுங்களை ஏன் கொல்லப்போறானுங்க? நீங்களே சொல்லுங்க. நானெல்லாம் என்ன மானம் மருவாதியா பாத்துக்கிட்டு இருக்கேன். அதெல்லாம் என் மசுத்துக்கு சமானம்னு தூக்கி எறியல?! சொரணை பாத்தா சொத்துசொகம் கெடைக்குங்களா? காக்காசு பொறாத மானத்துக்காக கஞ்சி வேண்டாம்னு சொல்ற பயலுவ இருந்தா என்ன செத்தா என்ன... அதுல என் குடும்பத்து ஆளுங்க யாருமே இல்லேங்கிற சந்தோசத்துல நானும் மேற்படி தலப்பாக்கட்டுக்காரரோட ஒப்பந்த ஷரத்துகள சரியா படிக்காம கையெழுத்து போட்டேன். ஒப்பந்தப்படி அந்த ஊருல எதாவது அடிப்படை திட்டம் இருந்தா அதே மேம்படுத்துறோம்னு அவனுக காசை எடுத்து பேருக்கு ஏதாச்சும் பண்ணிட்டு மிச்ச இருக்கிற பணத்துல எங்க பேரனுங்க செல்போனுல படம் எடுத்து எல்லோரையும் பாக்க வைப்போங்க, அதுக்கு மேல காசு இருந்தா அதையும் என் குடும்ப வறுமையை போக்கத்தான் பயன்படுத்திக்குவேங்க. உண்மைய சொல்லனுன்னா எனக்கு சொந்தமா ஒரு வீடு கூட இல்லாத அப்பாவிங்க.

இந்த தலப்பாகட்டுகாரரு இருக்காரே அவரு சரியான ஊமைக்குசும்பனுங்க. செய்யறதையெல்லாம் செஞ்சிப்புட்டு மனுசன் கமுக்கமா ஒரு சிரிப்பு சிரிப்பாரு பாருங்க வெள்ளந்தியா சிரிக்கிறாரா வில்லங்கமா சிரிக்கிறாரான்னுகூட தெரியாதுங்க. அவருக்கு ஒரு மொதலாளியம்மா இருக்காங்க. அவங்க, அவங்களோட பையன் ரெண்டு பேருக்கும் பிசினசுல எப்படி ஆட்டைய போடலான்னு சொல்லிக்கொடுத்த ஆளு நான்தானுங்க. இப்ப பிரச்சினை என்னடான்னா என்னோட ஆளு ஒருத்தன் ஒரு சின்ன டெண்டர நாலஞ்சு கம்பெனிக்கு கொடுத்திருக்கான். அதுல கொஞ்சம் டீக்காசு வாங்கிருக்கான், டீ குடிக்கும்போது தலப்பாவுக்கும் ஒரு டீ சொல்லிட்டுதான் குடிச்சுருக்கான். ஆனா இந்த பசங்க நாட்டுல வெங்காய வெல ஏறிப் போனதுக்கு காரணமே அன்னிக்கு டீ குடிச்சதுதான்னு சொல்றானுங்க. 

நான் இந்த ஊருக்கு பழைய பொஸ்தகக் கடை வச்சி கொடுத்தேன். அதப் பத்தி ஒரு நாதாரியும் பேச மாட்டேங்குது. இளைஞர் முன்னேற ஒரு படம் எடுத்தேங்க. அது குப்பைன்னு எல்லா பய புள்ளையும் எழுதுது. எல்லாரும் நல்லா குடிங்க அப்பத்தான் எல்லாரும் நல்லா சாப்புடலான்னு சொன்னவனுங்க நான். ஆனா என்னோட ஆளு ஒரு டீ குடிச்சதுக்கு அதுவும் வெறும் ஒண்ணேமுக்காலணா டீங்க, அவனைப்போயி அண்டிராயர கயட்டி ஒக்கார வெச்சிட்டாங்க.. பத்தாக்கொறைக்கு என்னோட பட்டாபட்டியும் வேணும்னு புடிவாதம் புடிக்கிறாங்க இந்த டாணாக்காரங்க. இது பத்தி நானே கவலைப்படாம, தலப்பாவோட அடுத்த டெண்டர பத்தி பேசுறப்ப. இந்த பன்னாடைங்க இன்னம் ஒண்ணேமுக்காலணா டீயப் பத்தியே பேசிட்டு இருந்தா தர்மத்துக்கு அடுக்குமாங்க?நீங்களே சொல்லுங்க இப்ப ஏழைங்க கொறஞ்ச வேலையில டீ குடிக்கிறாங்க, அதுக்கு இந்த டெண்டர்தானே காரணம்.

இதெல்லாம் நானும், தலப்பாவோட மொதலாளியம்மாவும் சேர்ந்துதான் இப்படியெல்லாம் பிளான் பண்ணி பண்ணுறோம்னு ஒரு பயலும் நெனச்சு பாக்குறானா? 

அதெல்லாம் ஒருபக்கம் கெடக்கட்டும். எனக்கு இன்னொரு வவுத்தெரிச்ச என்னன்னா... எனக்கு பொறந்த பசங்களுக்குள்ள பிரச்சினை வந்துடப்பிடாதுன்னு முன்கூட்டியே ஒருத்தன தெக்குத்தெருவுக்கும் இன்னொருத்தனை வடக்குத் தெருவுக்கும்  தலையாரி ஆக்கி வெச்சேன். இவிங்க இப்ப என்னடான்னா மொத்த ஊருமே தனக்குத்தான் சேரணும்னு என்னோட டவுசரை கிழிச்சிக்கிட்டு இருக்கானுவ. ஏங்க நீங்களே சொல்லுங்க? அண்ணன் தம்பிக்குள்ள பங்காளித்தகறாரு வந்திச்சினா ஊரு சிரிக்காது?

அப்புறம் காலம்போன கடேசில கொஞ்சூண்டாவது மனசுக்கு எதமா நாலு கலைநிகழ்ச்சியெல்லாம் பாத்து பொழுத போக்கலாம்னு நம்மூரு நாடக குரூப்புல கூத்து கட்ற பயபுள்ளைங்கள அழைச்சிட்டு வந்து ஆட உட்டுப் பாப்பேனுங்க. அது பொறுக்கலைங்க இந்த பேப்பருகாரப் பயலுவளுக்கு. அதுலகூட கண்ணுவெக்கலாங்களா? கொஞ்சங்கூட மட்டுமருவாதியே இல்லாம போச்சுங்க இவிங்களுக்கு. இதுமட்டும் இல்லீங்க, நம்ம பட்டறையில எடுப்புவேல செஞ்சிட்டு இருக்குற பசங்களுக்கு கொஞ்சம் பொறம்போக்கு நெலத்த ஒதுக்கி இதுல குந்துனாப்புல குடிசை போட்டுக்குங்கடான்னு சொல்லி கொடுத்தேங்க. ஞாயமா பாத்தா என்னோட நல்ல மனச பாராட்டத்தானே வேணும்? அதுக்குக்கூட மனசு இல்லீங்க இந்த பேப்பருகாரனுங்களுக்கு.

ஏதோ உங்ககிட்ட இதையெல்லாம் சொல்லி கொஞ்சம் மனசை ஆத்திக்கலாம்னுதானுங்க இதெல்லாம் சொன்னேன். அதுக்காவ நான் மனச உட்டுட்டேன்னு மட்டும் நெனக்காதீங்க. இந்தா இன்னும் நாலு மாசத்துல மறுக்கா நம்மூரு மாரியம்மன் கோயில் கொடையில யாருக்கு பரிவட்டம் கட்றதுன்னு மக்கள் கமிட்டில முடிவுபண்ண போறாங்க. நீங்களும் சேர்ந்துதான் முடிவு பண்ணனுமாம். அதுனால உங்க ஒவ்வொருத்தர் ஊட்டுலயும் கூழுகாச்சி ரெண்டாயிரம் பணமும் கொடுக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேனுங்க. மறக்காம எனக்கே பரிவட்டம் கட்டணும் சொல்லிப்பிட்டேன். பொறவு ஏதாச்சும் மிச்சம்மீதி இருந்தா அடுத்தாப்புல பரிவட்டம் கட்டுறப்ப பாத்துக்கலாம். என்ன நாஞ்சொல்றது? சரிதானுங்களே?

33 கருத்துகள்:

கூகுள் ஓனர் சொன்னது…

பாத்து சூதானமா இருந்துக்க அப்பு! அம்புட்டுதான் நான் சொல்வேன்...

உமர் | Umar சொன்னது…

//இந்த தலப்பாகட்டுகாரரு இருக்காரே அவரு சரியான ஊமைக்குசும்பனுங்க//

அவரு மட்டுமா? இந்தப் பதிவுல வர்ற எல்லோரும், ஏன் இந்தப் பதிவேகூட ஊமைக்குசும்புதான்.

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//அதுனால உங்க ஒவ்வொருத்தர் ஊட்டுலயும் கூழுகாச்சி ரெண்டாயிரம் பணமும் கொடுக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேனுங்க. மறக்காம எனக்கே பரிவட்டம் கட்டணும் சொல்லிப்பிட்டேன். //

ஹி ......ஹி .....உங்களுக்கு குசும்பு ஜாஸ்தி .இவ்வளோ குறைச்சலா தந்தா .அது எப்படி பரிவட்டம் கட்ட விடுவோம்.....

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

//அதுனால உங்க ஒவ்வொருத்தர் ஊட்டுலயும் கூழுகாச்சி ரெண்டாயிரம் பணமும் கொடுக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேனுங்க. மறக்காம எனக்கே பரிவட்டம் கட்டணும் சொல்லிப்பிட்டேன். //

கண்டப்ப பரிவட்டம் உங்களுக்குதான்..

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

கவிதை வீதி தங்களை அன்போடு வரவேற்கிறது..

Unknown சொன்னது…

சரிதானுங்க...

இளங்கோ சொன்னது…

/அதுனால உங்க ஒவ்வொருத்தர் ஊட்டுலயும் கூழுகாச்சி ரெண்டாயிரம் பணமும் கொடுக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேனுங்க. மறக்காம எனக்கே பரிவட்டம் கட்டணும் சொல்லிப்பிட்டேன். பொறவு ஏதாச்சும் மிச்சம்மீதி இருந்தா அடுத்தாப்புல பரிவட்டம் கட்டுறப்ப பாத்துக்கலாம்.//
:)

Jana சொன்னது…

கூகுல் ஓனர் சொன்னதை கொஞ்சம் சீரியஸாக எடுத்துக்குங்க அண்ணே..

அன்பரசன் சொன்னது…

நல்ல நக்கல் தல..

vinthaimanithan சொன்னது…

உட்றா உட்றா சுனா பானா... மஞ்ச கர்சீப்ப தூக்கி தலையில போட்டுக்கிட்டு நீ பாட்டுக்கு போயிட்டே இரு... சண்டன்னா நாலு சட்ட கிழியத்தான் செய்யும்...இதெல்லாம் பாத்தா அரசியல் பண்ண முடியுமா?

மாணவன் சொன்னது…

//பொறவு ஏதாச்சும் மிச்சம்மீதி இருந்தா அடுத்தாப்புல பரிவட்டம் கட்டுறப்ப பாத்துக்கலாம். என்ன நாஞ்சொல்றது? சரிதானுங்களே?//

சரிதானுங்கோ.........

ராஜவம்சம் சொன்னது…

ஆரு யென்ன சொன்னாலும் அடுத்த பரிவட்டம் யெங்களுக்கு தா சொல்லிப்புட்டன்.

Unknown சொன்னது…

சூப்பருங்கோ!

vasu balaji சொன்னது…

கொடுமைய நீங்களே சொல்லுங்க. இந்த செந்திலு கூட சப்போர்டா எழுதறாமாதிரியே எழுதி மரபக்காக்குற எம் மவராசி மவள சொல்லாம உட்டுட்டாரு. இதுக்கு வேற ஒரு பக்கம் வேட்டிய இழுத்து மிதிப்பாங்க. அவ்வ்வ்வ்

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

:)))

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

பரிவட்டம் தானே கட்டிருவோம்.... அதுமட்டுமா இன்னும் என்னென்ன இருக்கு, அலகு குத்தறது, ஆணில படுக்கறது, அங்கப்பிரதட்சணம் பண்றது... எல்லாத்தையும் செஞ்சே விட்ருவோம், கொடுக்கற காசுக்கு இதுகூட பண்ணலேன்னா எப்பிடி?

Yoga.s.FR சொன்னது…

கொட நாட்டுக்கார அம்மா பத்தி ஒண்ணும் சொல்லலீங்களே?

ஜாஸ்மின்- ப்ரியா சொன்னது…

//கொட நாட்டுக்கார அம்மா பத்தி ஒண்ணும் சொல்லலீங்களே?//

பெண்களின் பிரதிநிதி ஜெயலலிதாவை பற்றி எழுத வேண்டாம். ஆணாதிக்க சமுதாயத்தை எதிர்த்து நின்றவர் அவர். பெண் என்பதால் என்னை அலட்சியமாக எண்ணி விட வேண்டாம். பதிவுலகில் தவறு நடந்தால் கேட்பேன். பச்சை தமிழச்சி என்ற முறையில்.

Philosophy Prabhakaran சொன்னது…

அதானே புதல்வி பற்றி எழுதவே இல்லையே... படமெடுக்குற பேரப் பயலுவள இன்னும் கொஞ்சம் வருத்தெடுத்துருக்கணும்...

ஈரோடு கதிர் சொன்னது…

அந்தக் கோவணத்துக்கு மஞ்சள் கலர் அடிச்சிருக்கலாம்!

vinthaimanithan சொன்னது…

ஜாஸ்மின் பிரியா,

சீரியஸாத்தான் பேசுறீங்களா?

நான் இந்தப் பின்னூட்டத்தை டைப்பிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் அண்ணன் கொடநாட்டுக்கோமகள் பற்றிய அடுத்த பதிவை எழுதிக் கொண்டிருக்கிறார் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

வானம்பாடிகள் சொன்னது…

கொடுமைய நீங்களே சொல்லுங்க. இந்த செந்திலு கூட சப்போர்டா எழுதறாமாதிரியே எழுதி மரபக்காக்குற எம் மவராசி மவள சொல்லாம உட்டுட்டாரு.
//

ஆமாண்ணே.. எந்த ஊரு நாயமிது?
இப்பதான் ஆம்பளை, பொம்பளைக்கு சொத்த பிரிச்சு கொடுக்கனுமுனு சட்டம் வேற வந்தாச்சு.. அம்மிணிய விட்டுப்புட்டாரே?.. கேஸு போட்டு, ராசாவுக்கு துணையா அனுப்பிவைக்கட்டுங்களா?..

ஹி..ஹி.. இப்படிக்கு- சு.சாமி( பழையகடை ஜனதாதளம்..)

sathishsangkavi.blogspot.com சொன்னது…

நல்ல ஆரம்பம்...

தாக்குதல் இல்லாமல் தாக்கி இருக்கறீங்க..

raja சொன்னது…

வேலை பளுதாங்காம..எப்பவாச்சும் ஒலைக்குடிசையில ஒதுங்கி ஒய்வெடுக்கிற எங்க பெரியத்தைய பத்தி ரொண்டொரு வார்த்தை எழுதியிருக்கலாம்.

ஜாஸ்மின்- ப்ரியா சொன்னது…

//ஜாஸ்மின் பிரியா,

சீரியஸாத்தான் பேசுறீங்களா?

நான் இந்தப் பின்னூட்டத்தை டைப்பிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் அண்ணன் கொடநாட்டுக்கோமகள் பற்றிய அடுத்த பதிவை எழுதிக் கொண்டிருக்கிறார் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்//

தயவு செய்து அவரை பற்றி தவறாக எழுத வேண்டாம், அண்ணா!! பெண்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்!

சசிகுமார் சொன்னது…

//நம்மூரு ஏரிகொளம், தோப்புதொறவு எல்லாத்தையும் திருட்டுத்தனமா பட்டா போட்டுக் கொடுக்குறது... இவ்ளோதாங்க. எம்பங்குக்கு 'பெரியண்ண'னுக்கு பட்டா போட்டது போவ மிச்சம்மீதிய தேத்திக்கிட்டு தலப்பாக்கட்டுக்கு சால்ரா அடிச்சிட்டு இருப்பேன்//

சரியா போச்சு போ அப்ப இவரு மக்களுக்கு சேவை செய்ய வரலியா

சசிகுமார் சொன்னது…

//தெக்குத்தெருவுக்கும் இன்னொருத்தனை வடக்குத் தெருவுக்கும் தலையாரி ஆக்கி வெச்சேன். இவிங்க இப்ப என்னடான்னா மொத்த ஊருமே தனக்குத்தான் சேரணும்னு என்னோட டவுசரை கிழிச்சிக்கிட்டு இருக்கானுவ.//

மொத்த ஊரு இல்ல சார் மொத்த நாடே வேணும் இன்னும் போனா மொத்த உலகத்தை கேட்டாலும் வியப்பதற்கு இல்லை பரம்பரை புத்தி எப்படி மாறும்.

VJR சொன்னது…

when will come about Jigirthanda Jalsarani? then we decide our view.

'பரிவை' சே.குமார் சொன்னது…

நல்ல நக்கல்.

vasan சொன்னது…

மொழி எதிர்ப்புன்னா தீக்குளிச்சுப்புட்டு த‌லைவ‌ன்டான்னு ப‌ரிவ‌ட்ட‌மும் சுத்துற‌ ப‌ன்னாடைகளை, இப்ப‌ இன‌மே அழிஞ்சாலும் அலுங்க‌மா இருக்குற‌ லெவ‌லுக்கு த‌யார் ப‌டுத்திட்டியே த‌லீவா!!

ராஜ நடராஜன் சொன்னது…

பல்லு வெளக்கிற அப்புராணி தாத்தா கோமணத்துகாவது மஞ்சத்தண்ணி ஊத்தியிருக்கலாம்.

அஞ்சா சிங்கம் சொன்னது…

ஒரு மனுசனுக்குள்ள இவளவு கஷ்டமா ஐயஹோ என்னால பொறுக்க முடியவில்லை.

பாவம் நாம இவருக்கு எதாவு செய்யணுமே மஞ்சள் துண்டு மகராசனுக்கு ஒரு வளர்ச்சி நிதி வசூல் பண்ணி தரலாம் .
நீங்க தலைவரா இருங்க எனக்கு இந்த பதவி எல்லாம் ஆசை இல்ல இருந்தாலும் நீங்க வற்புருத்துனா பொருளாளர் பதவி ஏத்துக்குறேன்.....................

அஞ்சா சிங்கம் சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

பரிவட்டம் தானே கட்டிருவோம்.... அதுமட்டுமா இன்னும் என்னென்ன இருக்கு, அலகு குத்தறது, ஆணில படுக்கறது, அங்கப்பிரதட்சணம் பண்றது... எல்லாத்தையும் செஞ்சே விட்ருவோம், கொடுக்கற காசுக்கு இதுகூட பண்ணலேன்னா எப்பிடி?............///////


மாப்ள அவருக்கு பரிவட்டம் கட்டலாம் நமக்கு கோவணம் கட்டுற நாளும் அதே நாள் தானே ...........'