எப்போது வெளியூர்களுக்கு சென்றாலும் அங்கிருக்கும் உள்ளூர் ஆட்களிடம் அந்த ஊரின் நல்ல உணவகம் எது என விசாரித்துதான் சாப்பிடுவேன். ஆனால் பலமுறை காஞ்சிபுரம் சென்றபோதும் அங்கிருக்கும் பலபேர் நம் சென்னை சரவனபவன், சங்கீதா போன்றவைகளின் கிளை உணவகங்களையே கைகாட்டி விடுவார்கள்.
நேற்று நானும், நண்பர் உதயகுமார் ஸ்ரீயும் காஞ்சிபுரம் சென்றோம். உதயகுமார் நீண்டகாலம் அங்கு படித்தவர் என்பதால் அங்கிருக்கும் சரவணா லஞ்ச் ஹோம் கூட்டிப்போனார். மதிய உணவு நல்ல தலை வாழை இலையில் பறிமாறினார்கள். சாம்பார், வத்தல் குழம்பு, மோர் குழம்பு, ரசம், மோர் என வழக்கமான சாப்பாடுதான். ஆனால் ஒவ்வொன்றும் கேபிளின் வார்த்தைகளில் சொன்னால் ’டிவைன்’. அவர்களின் அன்பான கவனிப்பும் நம்மை வழக்கத்தை விடவும் அதிகம் சாப்பிட வைக்கிறது.
மதிய சாப்பாட்டின் விலை :ரூ.55 என்பது இன்னொரு ஆச்சர்யம். இன்னொருமுறை செல்லும்போது டிபன் வகைகளையும் சாப்பிட்டு பார்க்க வேண்டும். எனவே காஞ்சிபுரம் சென்றால் அவசியம் ஒருமுறை சென்று சாப்பிட்டு வாருங்கள்.
ஸ்ரீ சரவணா லஞ்ச் ஹோம் காஞ்சிபுரத்தில், காந்தி சாலையின் மூங்கில் மண்டபம் அருகே இருக்கிறது. தொலைபேசி : 9659356777 , (044) 2722604.

4 கருத்துகள்:
இது சீரியஸ் பதிவா இல்லை வெறும் களாய்பாண்ணே புரியலியே :))
மோகன் வாண்ட்டா வந்து ஜீப்ல ஏறிடாதிங்க...:))
சாப்பாட்டுக்கடை அறிமுகம் தாங்களும் ஆரம்பிச்சாச்சா...
நல்ல தகவல் , சுவை பட கொடுத்து உள்ளீர்கள் !
Gopalan
கருத்துரையிடுக