28 ஆக., 2013

சாம்பார் வாசனை ...

என் மனக்காடுகளில்
எரியும் தீயை
உன் துயரப்பாடலில்
வழியும் 
கண்ணீரைக் கொண்டு 
அணைக்க முயல்கிறேன்...

 நீ ஒருமுறை
வெறுக்கிறேன் என்றாய் 
அது பற்றி
நினைக்கும்
ஒவ்வொரு முறையும்  
இதயத்தை அறுக்கிறது...

நினைவுக்கு வராத 
நள்ளிரவு கனவைப்போல்
மீளவே இல்லை
நம் காதல்...

நகரத்தில்
புதிதாக நுழைபவனின் 
பையில் இருந்து
தவறிய முகவரித்தாள்
காற்றால்
விலாசம் மாறிய 
வீடுகளுக்கு
சென்று சேர்வதுபோல் 
எங்கோ
உப்புக் குறைவான
சாம்பாருக்கு 
வசவு வாங்கும்
நீ 
அறியப்போவதே இல்லை
என் காதலையும் ..
இக் கவிதையையும்....

3 கருத்துகள்:

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சூப்பர்! கடைசிவரிகள் சூப்பர் பஞ்ச்! வாழ்த்துக்கள்!

சேக்காளி சொன்னது…

சீனு சொன்னது…

காதலில் கவிதையின் தலைப்பை எப்படி இணைப்பீர்கள் என்று வியந்து வியத்தலின் பின் மேலும் வியந்தேன் :-)