2 டிச., 2010

தனித்திருப்பவனின் இரவு ...

குளத்தில் எறிந்த 
ஓட்டுச்சில்லுகள்..

தத்தி
தத்தி... தத்தி....
சலனங்கள்..

மனக்குளத்திலும்..

இரவுப் போர்வை
உதறி நடக்கும்
ஒற்றையடிப்பாதையில்
மேகம் விலக்கிப்பார்த்து
வழிசொல்லிப் போனது
நிலா..
எனக்குமுன் ஊர்ந்துபோன 
அரவத்துக்கு..

வாசம் நுகர்ந்த 
தெருநாய்கள்
வீடுவரை வழித்துணையாய்..

மூடிய இமைத்திரைக்குள்
மெல்ல உருக்கொண்டன
துரோகச் சித்திரங்கள்..

44 கருத்துகள்:

Unknown சொன்னது…

//வாசம் நுகர்ந்த
தெருநாய்கள்
வீடுவரை வழித்துணையாய்//
Super! :-)

Unknown சொன்னது…

வாசம் நுகர்ந்து,வீடுவரை
வழித்துணையாய்...
தெருநாய்கள்!

தல! உங்க கவிதையை இப்படி மாற்றினால் ஹைக்கூ(?!) மாதிரி வருமா? தப்பா எடுத்துக்காதிங்க! :-))

Unknown சொன்னது…

கமெண்ட் modaration இல்லையா? sorry தல! நா போஸ்ட் பண்ணினதுக்கு!

மாணவன் சொன்னது…

//இரவுப் போர்வை
உதறி நடக்கும்
ஒற்றையடிப்பாதையில்
மேகம் விலக்கிப்பார்த்து
வழிசொல்லிப் போனது
நிலா..
எனக்குமுன் ஊர்ந்துபோன
அரவத்துக்கு../.

அருமை அருமை...

யதார்த்தங்களுடன் சுவாரசியம் கலந்துள்ளது கவிதை

தொடரட்டும் உங்கள் பணி

Unknown சொன்னது…

//தல! உங்க கவிதையை இப்படி மாற்றினால் ஹைக்கூ(?!) மாதிரி வருமா? தப்பா எடுத்துக்காதிங்க! :-))//

உங்களுக்கு உரிமை இருக்கிறது ...

dheva சொன்னது…

சலனமற்ற இரவில் சலனப்படுத்தும் மனோநிலையில் ஒரு தனிமை...

வழிகாட்டும் நிலவு அரவத்துக்கா...

ஆஹா... செம செம...!

அன்பரசன் சொன்னது…

//குளத்தில் எறிந்த ஓட்டுச்சில்லுகள்..
தத்தி தத்தி... தத்தி....சலனங்கள்..
மனக்குளத்திலும்..//

நல்லா இருக்கு தல.

RK நண்பன்.. சொன்னது…

"""மூடிய இமைத்திரைக்குள்
மெல்ல உருக்கொண்டன
துரோகச் சித்திரங்கள்."""


arumai anna... jaki annan camera, cable anna direction & KRP anna s the script writer, poem writer & screenplay.... eppadi irukkum combination...

சசிகுமார் சொன்னது…

அருமை செந்தில் சார்

தேவன் மாயம் சொன்னது…

மிக்க நன்று...அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள்!!

a சொன்னது…

//
வாசம் நுகர்ந்து,வீடுவரை
வழித்துணையாய்...
தெருநாய்கள்!
//
அட.......... எவ்ளோ நல்லகுணம்.......... நன்றியுள்ள நாய்ன்ணு சும்மாவா சொன்னாங்க..........

THOPPITHOPPI சொன்னது…

பாஸ் படத்துக்கும் கவிதைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா?

vinthaimanithan சொன்னது…

//arumai anna... jaki annan camera, cable anna direction & KRP anna s the script writer, poem writer & screenplay.... eppadi irukkum combination... //

ஏன் இந்த கொலைவெறி?????

vasu balaji சொன்னது…

/மூடிய இமைத்திரைக்குள்
மெல்ல உருக்கொண்டன
துரோகச் சித்திரங்கள்../

ம்ம்

ஜி.ராஜ்மோகன் சொன்னது…

நல்ல கவிதைகள் எப்போதும் கொஞ்சம் புரியாத மாதிரியே இருக்கும் !அருமை!

Raja சொன்னது…

அருமையான கவிதை...வாழ்த்துக்கள் செந்தில்...

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

நல்ல கவிதை

வைகை சொன்னது…

நல்லாயிருக்கு செந்தில்!!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

good rhyme <<<மூடிய இமைத்திரைக்குள்
மெல்ல உருக்கொண்டன
துரோகச் சித்திரங்கள்<<, attractive lines

போளூர் தயாநிதி சொன்னது…

parattugal nalla aakkam
polurdhayanithi

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

நல்லா இருக்கு

ஹேமா சொன்னது…

இரவின் தனிமை சொல்லும் அழகான நல்ல வரிகளுள்ள கவிதை செந்தில்.

உங்கள் கவிதைகள் சொல்லும் நிகழ்ச்சியை நேரம் மாத்திவிட்டார்கள் வானொலியில்.அதனால் கேட்க முடிவதில்லை.நிச்சயம் இந்தக் கவிதையும் சேர்த்துக்கொள்வார் புளியடி பரமசிவம்.அந்த வானொலி இரகசியம் மட்டும் சொல்லவே மாட்டேங்கிறீங்க !

செல்வா சொன்னது…

//மேகம் விலக்கிப்பார்த்து
வழிசொல்லிப் போனது
நிலா..//

இது செம ..!!

வினோ சொன்னது…

இரவு கவிதை அருமை அண்ணா.. மன சஞ்சலங்கள் இப்படி தான் வெளிபடுமோ?

Meerapriyan சொன்னது…

iravukkavithai...thurokathil mudiththulleerkal-kavithai arumai-meerapriyan

தினேஷ்குமார் சொன்னது…

ஒற்றையடிப்பாதையில்
மேகம் விலக்கிப்பார்த்து
வழிசொல்லிப் போனது
நிலா..
எனக்குமுன் ஊர்ந்துபோன
அரவத்துக்கு..

வரிகள் பேசுகின்றன என் மனத்திரையில்

Unknown சொன்னது…

//மூடிய இமைத்திரைக்குள்
மெல்ல உருக்கொண்டன
துரோகச் சித்திரங்கள்..//

Unknown சொன்னது…

தலைப்பு அருமை..

தமிழ் உதயம் சொன்னது…

தெரு நாய்களை பார்த்து இனி பயப்பட வேண்டியதில்லை. அதை வழித்துணையாய் பாவிக்கலாமோ.

PARTHASARATHY RANGARAJ சொன்னது…

அட்சர குளத்தில் எறிந்த
வார்த்தை சில்லுகள்..

தத்தி
தத்தி... தத்தி....
சலனங்கள்..... கவிதை ஆனது
நல்ல கவிதை senthil san

Unknown சொன்னது…

ரிச்சு fellow

எஸ்.கே சொன்னது…

//மூடிய இமைத்திரைக்குள்
மெல்ல உருக்கொண்டன
துரோகச் சித்திரங்கள்//
அற்புதம்!

ஜோதிஜி சொன்னது…

மாநில எல்லை தாண்டி புகழ் பரவும் இந்த நேரத்தில் என்னுடைய வாழ்த்துகள்.

Chitra சொன்னது…

நல்லா எழுதி இருக்கீங்க.

Bibiliobibuli சொன்னது…

//arumai anna... jaki annan camera, cable anna direction & KRP anna s the script writer, poem writer & screenplay.... eppadi irukkum combination... //

அடடா கவிதையை படிக்க விடுங்கப்பா. :)

பெயரில்லா சொன்னது…

கடைசிப் பாராவால் மனம் எங்கெங்கோ சுற்றுகிறது அண்ணே :)

ஜெயந்தி சொன்னது…

ரேடியோவிலும் ஒளிபரப்புகிறார்களா? வாழ்த்துக்கள்!

தமிழ் உதயன் சொன்னது…

மெல்ல கரையும் பொன்வான மாலை போல உங்கள் கவிதை அவ்வளவு அழகு

Thoduvanam சொன்னது…

மார்கழி மாதப் பனியாய்,
மனதை நனைத்தது ..
அருமை ...

மாதேவி சொன்னது…

இரவுக் கவிதை அருமை.

ராஜ நடராஜன் சொன்னது…

///மூடிய இமைத்திரைக்குள்
மெல்ல உருக்கொண்டன
துரோகச் சித்திரங்கள்../

ம்ம் //

இது மட்டும் புரிகிற மாதிரி இருக்குது.மற்றவற்றை கவிதை நேசர்களுக்கும் கவிதாயினிகளுக்கும் விட்டு விடுகிறேன்.

pichaikaaran சொன்னது…

கவிதை மூலம் சித்திரம் வரைகிறீர்கள் , மனதில்

THOPPITHOPPI சொன்னது…

என்னனே ஆளையே காணோம் இன்னைக்கு லீவா?

Unknown சொன்னது…

செம..