6 டிச., 2010

ஆண்டான் அடிமை ...

கனவுக்குதிரை ஏறி
காற்றில் வாள் வீசும்
வந்தியத்தேவர்கள் நாங்கள்..

எமக்குப் பதிலாய்க்
காதலிக்க, கனிவு செய்ய
கவிதை வார்க்க, கத்தி வீச
திரைப் பிம்பங்களாய்
அவர்கள்..

பதில் மரியாதைக்குப்
போஸ்டர் ஒட்டிப் பாலூற்றுவோம்..

வெள்ளித் திரையில் வீரம் பேசி
விரிந்த கைகளில் மீட்பராய்த் தோற்றம்
அடுத்து அரசியல்,
அரியணைக் கனவு
நாங்கள்
அசட்டு ஆடுகள்
அவர்கள்
அணைக்கும் மீட்பர்கள்..

பிறந்தாலும், செத்தாலும்
ஹாரன் கிழிய அவர்கள் பாட்டு,
அழுக்கு நோட்டு எங்கள் பாடு..

ரத்தத்தின் ரத்தம்
உயிரின் உடன்பிறப்பு
உடல் மண்ணுக்கு

உயிர் அவர்களுக்கு
கொல்வதும் கொடுப்பதும்
கோர்ட்டுக் கூண்டும்
எங்களுக்கு..

பொண்டாட்டி பிள்ளை,
மச்சான், மாமன்,
கக்கூஸில் ஏசி
அவர்களுக்கு..

கலீஜான தியேட்டரில்
சிறுநீர்ப் பெருமழை
நாற்றம் தொலைக்க காஜா பீடி
வீதிக்கு வீதி டாஸ்மாக்
எங்களுக்கு..

பத்து கோடி மட்டும் சொத்து 
பார்த்து எழுதும் கள்ளக்கணக்கு
தந்திரப் புத்தி, எந்திர மனது
அவர்களுக்கு..

புழுத்த அரிசி, புண்ணாக்கு டிவி
இன்னுமிருக்கும் இலவசங்களுக்கும்
மூளை மழுக்கும்
டாஸ்மாக் சரக்குமாய்
தலைவன் புகழ்பாடும்
பிள்ளை உள்ளம்
வெள்ளை மனது
எங்களுக்கு..

அவர்கள் அவர்களே ..
அடிமைகள் நாங்களே!

43 கருத்துகள்:

மாணவன் சொன்னது…

//புழுத்த அரிசி, புண்ணாக்கு டிவி
இன்னுமிருக்கும் இலவசங்களுக்கும்
மூளை மழுக்கும்
டாஸ்மாக் சரக்குமாய்
தலைவன் புகழ்பாடும்
பிள்ளை உள்ளம்
வெள்ளை மனது
எங்களுக்கு..

அவர்கள் அவர்களே ..
அடிமைகள் நாங்களே!//

அருமை அண்ணே,

பொட்டில் அறைந்தார் போன்று உள்ளது
தொடருங்கள்........

Unknown சொன்னது…

//கலீஜான தியேட்டரில்
சிறுநீர்ப் பெருமழை
நாற்றம் தொலைக்க காஜா பீடி
வீதிக்கு வீதி டாஸ்மாக்
எங்களுக்கு//
super boss! :-)

Ravichandran Somu சொன்னது…

Excellent...

தினேஷ்குமார் சொன்னது…

சாட்டை வீசியுள்ளீர்கள் சாக்கடை வாசிகளின் மீது .........

சமத்துவம் என்று சொல்லி
சமூகம் கெடுப்பவர்கள் மீது
சாட்டையடி வீசப்படட்டும்
சாட்டையாக நாமும்
களமிறங்குவோம்.........

வினோ சொன்னது…

உண்மை தான் அண்ணா... மாறினால் நன்றாக இருக்கும்.. ஆனால் எப்பொழுது?

அன்பரசன் சொன்னது…

/எமக்குப் பதிலாய்க்
காதலிக்க, கனிவு செய்ய
கவிதை வார்க்க, கத்தி வீச
திரைப் பிம்பங்களாய்
அவர்கள்..//

:))

எல் கே சொன்னது…

சாட்டையடி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

superbbbbbbbbbbbbb

சிவராம்குமார் சொன்னது…

வார்த்தை சவுக்கு மட்டுமே நம்மால் வீச முடிகிறது.... வாழ்க்கையை பற்றிய பயத்தாலா??? :-(

Unknown சொன்னது…

//பிறந்தாலும், செத்தாலும்
ஹாரன் கிழிய அவர்கள் பாட்டு,
அழுக்கு நோட்டு எங்கள் பாட்டு,//
//அவர்கள் அவர்களே ..//
வழக்கம் போல் அனல் பறக்கிறது.

Unknown சொன்னது…

//வார்த்தை சவுக்கு மட்டுமே நம்மால் வீச முடிகிறது.... //
இதற்கு பதில் சொல்லுங்களேன்...

Unknown சொன்னது…

இன்று அம்பேத்கார் பற்றி பேசுவீர்கள் என நினைத்தோம்..

ஜோதிஜி சொன்னது…

அழுந்த கொட்டினாலும் எங்களுக்கு வலிக்காது.

அம்பிகா சொன்னது…

\\அவர்கள் அவர்களே ..
அடிமைகள் நாங்களே!\\
யதார்த்தம்.

தமிழ் உதயம் சொன்னது…

முயற்சித்து ஏமாத்தினா நாமளும் ஆண்டான் ஆகலாம்.

Chitra சொன்னது…

புழுத்த அரிசி, புண்ணாக்கு டிவி
இன்னுமிருக்கும் இலவசங்களுக்கும்
மூளை மழுக்கும்
டாஸ்மாக் சரக்குமாய்
தலைவன் புகழ்பாடும்
பிள்ளை உள்ளம்
வெள்ளை மனது
எங்களுக்கு..


..... யாரைத்தான் குற்றம் சொல்வது? :-(

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

superb

Unknown சொன்னது…

சாட்டையடியாக இருக்கு... ஒவ்வொரு வரிகளும்..

vasu balaji சொன்னது…

அடிமைகள் நாங்களே. ஆண்டான் அவர்களே:)

a சொன்னது…

nagareega adimaigal nam???

நேசமித்ரன் சொன்னது…

கருத்தியல் ரீதியான உக்கிர வரிகள்

:)

ஹேமா சொன்னது…

கோவம் இப்பிடித் தெறிக்குது செந்தில்.அவங்களுக்கென்ன...உங்களுக்குத்தான் உடம்புக்குக் கூடாது !

காமராஜ் சொன்னது…

//புழுத்த அரிசி, புண்ணாக்கு டிவி
இன்னுமிருக்கும் இலவசங்களுக்கும்
மூளை மழுக்கும்
டாஸ்மாக் சரக்குமாய்
தலைவன் புகழ்பாடும்
பிள்ளை உள்ளம்
வெள்ளை மனது
எங்களுக்கு..//

அருமை செந்தில்.

நோக்கியாக்கள் அவர்களுக்கு கைப்பேசி நம்மளுக்கு.
டிசிஎஸ் அவர்களுக்கு எஞ்சினீயர் கனவு எங்களுக்கு.
இப்படியே நீண்டுகொண்டே போகிறது.

'சாவு தொண்டனுக்கு சரித்திரம் தலைவனுக்கு'
தோழரும் அண்ணனுமான சோலைமாணிக்கம் அடிக்கடிசொல்லுவார்.

Unknown சொன்னது…

ரொம்ப நல்லா இருக்குண்ணே..

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

காரசாரமான கவிதை.

>>>அவர்கள் அவர்களே ..
அடிமைகள் நாங்களே!

சூப்பர் பன்ச்.

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

உண்மையை சொல்லியிருக்கிறீர்கள்..

வைகை சொன்னது…

எத்தன செருப்படி வாங்குனாலும் அந்த நாய்களுக்கு உரைக்காது பாஸ்! அவெங்க எப்பவுமே இப்பிடித்தான் பாஸ்!!

Cable சங்கர் சொன்னது…

ஆளும்கட்சி எதிர்ப்பு கவிதையா..?

Kousalya Raj சொன்னது…

இன்றைய நிலையை அப்படியே உரைக்கிற மாதிரி எழுதி இருக்கீங்க...

இந்த மாதிரியான ஆதங்கம் எல்லாம் ஒரு நாள் புரட்சியாய் வெளிப்படும் என்ற கனவு எனக்கு அடிக்கடி வருகிறது...! :)

RK நண்பன்.. சொன்னது…

Super Anna..... Nethi Adi...

Eppo Thirunthuvano Intha Paavappatta Tamilan...

T

சசிகுமார் சொன்னது…

எப்பவும் போல அருமை

Unknown சொன்னது…

அருமை நண்பரே
-

நீ, நான் = நாம் என்போம்

'பரிவை' சே.குமார் சொன்னது…

உண்மையை சொல்லியிருக்கிறீர்கள்.

Unknown சொன்னது…

உண்மை.

ராஜா பேசுகிறேன் ... சொன்னது…

நல்லாஇருக்கு ரொம்ப நல்லாஇருக்கு....
மாமா எப்டி இப்டியெல்லாம்...

நல்ல பெரிய திருக்கவால எடுத்து ஊரவச்சு காயவச்சு எடுத்து இழுத்தா எப்டிருக்கும்..... அப்டி இருக்கு...

vels-erode சொன்னது…

டாஃஸ் மாக் வழங்க்கிய இதயதெய்வம் புர்டசி தலைவி வாழ்க...(அதான்?)

தேவன் மாயம் சொன்னது…

அசத்தல்! நல்ல கருத்துகள்!

சீனிவாசன் சொன்னது…

அருமை ..

சீனிவாசன் சொன்னது…

அருமை ..

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//எத்தன செருப்படி வாங்குனாலும் அந்த நாய்களுக்கு உரைக்காது பாஸ்! அவெங்க எப்பவுமே இப்பிடித்தான் பாஸ்!!//
இப்பிடித்தான் எப்பவுமே பாஸ்...:]]

"உழவன்" "Uzhavan" சொன்னது…

கூரிய வரிகள்.

பெயரில்லா சொன்னது…

really great!

PARTHASARATHY RANGARAJ சொன்னது…

அட்டகாசம் , அட்டகாசம் ,அட்டகாசம்