19 டிச., 2010

ஏன் அப்படி செய்தாள்?...


எனக்கொரு காதல் இருந்தது 
சித்திரை மாதச் சிறு மழையென
சட்டென வந்தவள்
என்னுள்
மொட்டென முகிழ்த்தவள்...

மனதாழம் தோண்டிப்

பதில் வாங்கும் பிடிவாதக்காரி 
சிறு வாதம் செய்தாலும்
தோல்வியை விரும்பாத
அழுத்தக்காரி ..
அவளைப் பிடிக்கின்றபோதே
வெறுக்கின்ற மனசும்
சிரிக்கின்றபோதே
அழுகின்ற ரவுசும்...
என்ன காதலோ?!


அவள்
விரும்பும் யாவும்
நான் விரும்ப வேண்டும்
விருப்பங்களை திணிக்கும் ராட்சசி..

வெட்கப்பட்டு பார்த்ததேயில்லை..

புனைவுகளால் பின்னப்பட்ட
நாடகங்கள் அவள் ..
காற்றும், இலையும்
உறங்கும் இரவொன்றில் 
அவள் அழைப்பு,
எதிர்முனையில் கண்ணீர்
எப்போதும்போல இன்னொரு நாடகம்
என்பதாய்
தூக்க அயர்ச்சியில் தொடர்பை
துண்டிக்க..

மறுநாள் காலை
துயரமாய் விடிந்தது ....

30 கருத்துகள்:

Unknown சொன்னது…

மிகவும் அருமை..

Ram சொன்னது…

வார்த்தைகள் கோர்கப்பட்ட விதம் அழகு...
உள்ளார்ந்து எழுதியுள்ளீர்..

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

நல்லாயிருக்கு அண்ணா..

Paul சொன்னது…

ரொம்ப நல்ல இருக்கு கடைசி வரிகள்..

PARTHASARATHY RANGARAJ சொன்னது…

அடுத்தநாள் காலையில் ஏற்பட்ட விபரீதம் என்ன என்று தெரிந்து கொள்ள ஆவாலாக உள்ளது அன்பரே

'பரிவை' சே.குமார் சொன்னது…

//அவளைப் பிடிக்கின்றபோதே
வெறுக்கின்ற மனசும்
சிரிக்கின்றபோதே
அழுகின்ற ரவுசும்...
என்ன காதலோ?!//

அருமை.

கடைசி வரிகள் மிகவும் அருமை.

தமிழ் உதயம் சொன்னது…

உங்களுக்கு மட்டுமல்ல எல்லா ஆண்களுக்கும் இப்படி காதல் உள்ளது.

வைகை சொன்னது…

நல்லாயிருக்கு செந்தில்! ரசித்தேன்!

அன்பரசன் சொன்னது…

//புனைவுகளால் பின்னப்பட்ட
நாடகங்கள் அவள் ..//

சூப்பர் தல.

வினோ சொன்னது…

அண்ணா சோக கவிதையா? :(

Unknown சொன்னது…

கண்ணீர் நாடகத்தோடு இரவு முடியும் போதெல்லாம், அடுத்த நாள் காலை நிச்சயம் துயரத்தோடு தான் விடியும்.
அருமையான கவிதையாக்கம்.

Unknown சொன்னது…

"சித்திரை மாத சிறுமழையென என்னுள் சட்டென வந்தாள்"...வாவ்....அருமை..அருமை..

Unknown சொன்னது…

கவிதையின் ஆரம்ப வரிகள், பாடல் வரிகளாக இருக்கிறது.

//பிடிக்கின்றபோதே
வெறுக்கின்ற மனசும்
சிரிக்கின்றபோதே
அழுகின்ற காதல்..//

//காற்றும், இலையும்
உறங்கும் இரவொன்றில்//

ரசித்த வரிகள்.

Unknown சொன்னது…

அண்ணே இது மீள்பதிவு தானே...

Ahamed irshad சொன்னது…

வ‌ரிக‌ள் அருமை...

Unknown சொன்னது…

//புனைவுகளால் பின்னப்பட்ட
நாடகங்கள் அவள் ..//
super! :-)

ஈரோடு கதிர் சொன்னது…

ப்ச்!

vasu balaji சொன்னது…

ப்ச்:(

a சொன்னது…

ரசித்தேன்.........

ஹேமா சொன்னது…

எல்லாத்தையும் விளையாட்டா எடுத்துக்கக்கூடாது காதல் விளையாட்டில !

Philosophy Prabhakaran சொன்னது…

கவிதை அருமை தோழரே....

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

கவிதை டாப்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

உங்களுக்கு கட்டுரை,பயோடேட்டா,கவிதை எல்லாமெ சிறப்பாக எழுத வருவது பிரமிப்பூட்டுகிறது

பெயரில்லா சொன்னது…

அண்ணே கடைசி வரியில பல அர்த்தங்களை ஒளிச்சு வச்சிட்டீங்களே :)

அருண் பிரசாத் சொன்னது…

என்ன அண்னே டிராஜடில முடிச்சிட்டீங்க :(

ஜி.ராஜ்மோகன் சொன்னது…

புனைவுகளால் பின்னப்பட்ட
நாடகங்கள் அவள் ..
அருமை செந்தில்

aavee சொன்னது…

கவிதை நன்றாக இருந்தது!!

செழியன் சொன்னது…

அருமையான வரிகள்
//அவளைப் பிடிக்கின்றபோதே
வெறுக்கின்ற மனசும்
சிரிக்கின்றபோதே
அழுகின்ற ரவுசும்...
என்ன காதலோ?!//

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

"மனதாழம் தோண்டிப்
பதில் வாங்கும் பிடிவாதக்காரி சிறு வாதம் செய்தாலும்
தோல்வியை விரும்பாத
அழுத்தக்காரி"
பிடித்த வரிகள்.......
கவிதை மிகவும் அருமை...

தமிழ்க்காதலன் சொன்னது…

மனசுல ஒரு டச் இருக்கு. உண்மையா..? கற்பனையா..? செந்தில் வாழ்க.