21 டிச., 2010

காதல்பறவை...

கிளிபோல ஒரு பெண்... 
மைனா போலவும், குயில் போலவும் 
இன்னும் இருவர் 
பேசிப்பழக ஆசைப்பட்டு 
மெல்ல சிரித்து வைத்ததில் 
கிளி போன்ற பெண்ணின்
மூக்குச் சிவக்க முறைக்க 
மைனா போன்றவள் நாணத்தால் 
முகம் கவிழ்ந்தாள்...
குயில் போன்றவள் கலவரமாகி 
அங்கும் இங்கும் பராக்கு பார்க்க 
காகம் போல் வந்த ஆண்கள் இருவர்
கழுகுப்பார்வையால் துளைக்க
அப்பறவைப் பெண்டிருக்கான
பேருந்து வந்துவிடவே 
மாற்று இரைகளைத் தேடின 
எமது கண்களும் ...

32 கருத்துகள்:

vinthaimanithan சொன்னது…

கெண்டைமீன் கண்ணாள்
ஒருத்தி
தங்கமீனாய் மினுமினுக்க
வாளைமீன் சருமம்போல
சடையிரண்டும் தளதளக்க
திமிங்கலமாய் மனம் விழுங்கிச்
செரித்துப்போனாள்

இழுத்தணைத்து இதழ்கோர்க்க
டால்பின் போல நான் தாவ
விலாங்குமீனாய்
வழுக்கிப் போனாள்
துள்ளும் மீன்கள்
தள்ளிப் போக
தூண்டில்காரன்
காத்திருக்கேன்

Unknown சொன்னது…

//மாற்று இரைகளைத் தேடின எமது கண்களும் ...//

இது ஒரு நீண்ட பயணம் போல..

Arun Prasath சொன்னது…

தொடர் கதை சீ கவிதை போலவே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அய் லேடிஸ் அய் லேடிஸ் அய் லேடிஸ் அய் லேடிஸ் அய் லேடிஸ் அய் லேடிஸ் அய் லேடிஸ் அய் லேடிஸ் அய் லேடிஸ் அய் லேடிஸ் அய் லேடிஸ் அய் லேடிஸ் அய் லேடிஸ் அய் லேடிஸ் அய் லேடிஸ் அய் லேடிஸ் அய் லேடிஸ் அய் லேடிஸ் அய் லேடிஸ் அய் லேடிஸ்

Unknown சொன்னது…

செந்தில் சார் பறவையாக, விந்தை மனிதன் மீனாக..
நான் என்னவாக மாறுவது எனத்தெரியாமல் மௌனமானேன்.

அன்பரசன் சொன்னது…

கிளி மைனா குயில் எல்லாரையும் கேட்டதா சொல்லுங்க...

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

தொடரும் தொடர்கதைகள்...

sathishsangkavi.blogspot.com சொன்னது…

//கிளி போன்ற பெண்ணின்
மூக்குச் சிவக்க முறைக்க
மைனா போன்றவள் நாணத்தால்
முகம் கவிழ்ந்தாள்...
குயில் போன்றவள் கலவரமாகி
அங்கும் இங்கும் பராக்கு பார்க்க //

மைனாவ துரத்துங்க...

செல்வா சொன்னது…

அடடா .!!

RVS சொன்னது…

அமர்க்களமான கவிதை செந்தில். மிகவும் ரசித்தேன். என்ன காக்கைகளும் கழுகுகளுமாய் ஆணினம்... அது ஒன்று தான்... பரவாயில்லை கவிதையின் போக்கு அமர்க்களம். நன்றி. ;-)

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

:)))

சத்ரியன் சொன்னது…

இப்பவெல்லாம்
காதல்
இப்படித்தான் ஆகிப்போச்சு செந்தில்.

அருண் பிரசாத் சொன்னது…

கே ஆர் பி அண்ணே, விந்தைமனிதன் சார்....

இரண்டுமே சூப்பர் கவிதை

vasu balaji சொன்னது…

கழுகுபோல் பெண்போலீஸ் வந்து கொத்திப் போனதை பஸ்ஸாக்கிட்டீங்களா:))

வினோ சொன்னது…

அண்ணா தொடரும் வேட்டையா?

பெயரில்லா சொன்னது…

சைட் அடிச்சதை இவ்வளோ அழகா கவிதையாக்கிட்டீங்களே அண்ணே :)

? சொன்னது…

http://www.vinavu.com/2010/12/21/chennai-book-fair/

கீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா!

நூல் வெளியிடுவோர்:
ஓவியர் மருது
மருத்துவர் ருத்ரன்

சிறப்புரை: “படித்து முடித்த பின்…”
தோழர் மருதையன், பொதுச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு

நாள்: 26.12.2010

நேரம்: மாலை 5 மணி

இடம்: செ.தெ. நாயகம் தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி, வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை


அனைவரும் வருக !

arasan சொன்னது…

அருமையா இருக்குங்க

மாணவன் சொன்னது…

வரிகளுக்கேற்ப படமும் அருமை

தமிழ் உதயம் சொன்னது…

சீரியஸ் கவிதைகளுக்கு நடுவே ஒரு சின்ன இளைப்பாறலா.

தினேஷ்குமார் சொன்னது…

அண்ணா நீங்களுமா
கவிதை வரிகள் நல்லாருக்கு

PARTHASARATHY RANGARAJ சொன்னது…

எந்த பஸ் ஸ்டாண்ட் சார்

Bibiliobibuli சொன்னது…

பறவைகள், மீன்கள்.....ம்ம்ம். பறவை பிடிக்கிறவங்க, மீன்பிடிக்கிறவங்க....... என்னமோ போங்கோ.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

அருமையா இருக்கு கவிதை....

ஹேமா சொன்னது…

பறவைக் காதலா !

முனியாண்டி பெ. சொன்னது…

உங்கள் நேர்மை ரெம்ப பிடிச்சுருக்கு.

நிலாமதி சொன்னது…

கிளி மைனா குயில் எல்லாரையும் கேட்டதா சொல்லுங்க..

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

கிளி ,மைனா ,காகம் கூடவே களுக்கும் சேர்த்து இருக்கலாம் ..........

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

rhyme is super,the still is exellent

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

i expect u will come under top 3 this week

"உழவன்" "Uzhavan" சொன்னது…

சூப்பர் தலைவா.. அருமையா எழுதுறீங்க.

அரபுத்தமிழன் சொன்னது…

சே சான்ஸே இல்ல, சூப்பரா இருக்கு Birds Eye View கவிதை.
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சவுக்கியமே, கருடன் சொன்னது ..
அதில் அர்த்தம் உள்ளது.