19 செப்., 2011

நாட்டு நடப்பு 19/09/2011...

உண்ணாவிரதம்
கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு உண்ணாவிரதம் எட்டாவது நாளாக தொடர்கிறது இதற்க்கான ஆதரவு பெருகிவரும் வேளையில். அதிசயமாக கேப்டனும் குரல் கொடுத்திருக்கிறார். மின் உற்பத்தி தொடங்கும் இறுதிக்கட்ட நேரத்தில் உண்ணாவிரதம் இருப்பது விழலுக்கு இறைக்கும் நீர்தான் என்றாலும் இனி வரும் காலங்களில் நாம் எவ்வளவு முன் எச்செரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்கு இது உதாரணமாய் இருக்கும் என்பதால் அந்தப் பகுதி மக்களுக்கு எனது பாராட்டுக்கள்.

இதேபோல் மோடியும் மூன்று நாள் உண்ணாவிரதம் இருக்கிறார். ஏற்கனவே மூன்று மணி நேர உண்ணாவிரதம் மேற்கொண்ட கருணாநிதியின் உண்ணாவிரதம்போல் இதுவும் ஒரு அரசியல் நாடகமே. பிரதமர் பதவிக்கான ரேசில் முந்தும் முயர்ச்சி.

உள்ளாட்சி தேர்தல்
இந்த தேர்தலில் அனைத்து கட்சியினரும் தனியாக நிற்பதுதான் அவர்களுக்கான உண்மையான பலத்தை தெரிந்து கொள்ள உதவும் என்றாலும் போயஸ் தோட்ட வாசலுக்கு கம்யூனிஸ்டுகள் நடையாய் நடப்பது தோழர்கள் மேலுள்ள மரியாதையை குறைக்கவே செய்கிறது.
ஒரே சந்தோசம் இந்த தேர்தலில் காங்கிரஸ் துடைத்தொழிக்கப்படும் என்பதுதான்.  

அறிவிப்பு
எங்களது ழ பதிப்பகத்துக்கு முதலீட்டாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். கூடிய விரைவில் விரிவான பதிவை இடுகிறேன்.

இலவசம்
தமிழ்நாட்டில் ஜெயலலிதா அறிவித்தபடி இலவசங்களை துவங்கிவிட்டார். கொடைக்கானல், ஊட்டி போன்ற பகுதி மக்களுக்கு மின் விசிறிக்குப்பதில் மின் அடுப்பு வழங்குவதாக சொல்லியிருக்கிறார். இலவசங்களை வழங்குவதில் ஆர்வம் காட்டும் அரசு அப்படியே தமிழக ஆட்டோக்களுக்கும் ஒரு கடிவாளம் போடவேண்டும். அதிலும் சென்னை ஆட்டோ ஓட்டுனர்களின் கட்டணம் எல்லை மீறுகிறது. நான் கால் டாக்சிக்கு மாறி நீண்ட வருடம் ஆகிவிட்டது என்றாலும். சமீபத்தில் சென்னை அம்பத்தூர் எஸ்டேட்டில் இருந்து திருமுல்லைவாயல் சிப்காட் போக ரூ.250 கேட்டார். சரி என வந்தால் இடத்திற்கு வந்தவுடன் ரூ.1000 கொடு என சண்டைபோட ஆரம்பித்தார். கடைசியில் போலிசுக்கு போகலாம் என நான் சொன்னதும் கெஞ்ச ஆரம்பித்து ஒரு மணிநேரம் காத்திருந்து மேற்கொண்டு ரூ.200 கொடுத்தபின்தான் நகர்ந்தார்.

மகிழ்ச்சி
நண்பர் கேபிள் சங்கர் அவர்களால் துவங்கப்பட்ட யுடான்ஸ் திரட்டிக்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்திருக்கிறது. அதில் முதன் முதல் நட்சத்திர பதிவராக தம்பி பிலாசபி பிரபாகரன் தேர்ந்தெடுக்கப்பட்டதற்க்கு வாழ்த்துக்கள். 

10 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

கூடன்குளம் பிரச்சனையில் சுமுகமான ஒரு முடிவு கிடைக்கு என்று எதிர்ப்பார்க்கிறேன்...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

உண்ணாவிரம் தற்ப்போது மேடை நாடகம் போன்று ஆகிவிட்டது அரசியல் வாதிகளுக்கு...

இது எங்கு சென்று முடியுமோ...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

உடான்ஸ் பகுதியில் தொடங்கியுள்ள வாரம் ஒரு பதிவர் வரவேற்க்கதக்கது..

வாழ்த்துக்கள்...

இராஜராஜேஸ்வரி சொன்னது…

முதன் முதல் நட்சத்திர பதிவராக தம்பி பிலாசபி பிரபாகரன் தேர்ந்தெடுக்கப்பட்டதற்க்கு வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

உண்ணாவிரதம் வெற்றி பெறும்

SURYAJEEVA சொன்னது…

போராட்டம் இன்று ஒன்பதாவது நாளில்

சக்தி கல்வி மையம் சொன்னது…

நாட்டு நடப்பு?

உண்ணா விரதமா?

சசிகுமார் சொன்னது…

அட சூப்பரப்பு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

:)

Sivakumar சொன்னது…

உங்களுக்கு 1000 ரூவா எல்லாம் டிப்சு குடுக்குற மாதிரி. இதுக்கு போயி சண்டையா? ஏழை ஆட்டோ டிரைவர் தொப்புள்ள அடிச்சிட்டீங்க.