28 செப்., 2011

கட்டையன் என்கிற சின்னச்சாமி...

சின்னச்சாமிக்கு சொந்த ஊர் கிடையாது
எங்கிருந்து?
எப்படி?
எங்கள் ஊருக்கு வந்து சேர்ந்தான்
எனவும் யாருக்கும் தெரியாது
எல்லார் வீட்டிலும் சொன்ன வேலையை செய்வான்
கொடுத்ததை வாங்கிக்கொள்வான்
மீந்ததை சாப்பிடுவான்
பிள்ளையார் கோவிலில் வாசம் செய்வான்
சின்னச்சாமி என்கிற பெயரும்
என் போன்ற சொற்ப நபர்களுக்கே தெரியும்
மற்றவர்களுக்கெல்லாம்
அவன் கட்டையந்தான்
எப்போதும் அவன்தான் எங்களுக்கு
சரக்கு வாங்கி வருவான்
ஒரு கிளாசில் ஊற்றிக்கொடுத்தால்
மறைவாய் சென்று குடிப்பான்
சாப்பிடும் போது கடைசிக்கவள
சோற்றிற்காய் நம்மையே கவனிக்கும்
வளர்ப்பு நாயென
சுற்றி வருவான்
எங்களைத் தவிர வேறு யாருமே
தனிச்சாப்பாடு வாங்கிக் கொடுத்ததில்லை
அதன்பிறகு ஒருநாள்
கிணற்றில் தவறி விழுந்து செத்துப்போனான்
ஊரார் ‘உச்’ கொட்டி வருத்தம் தெரிவிக்க
நற்பணி மன்றம் சார்பாக
ஆற்றோரம் புதைக்கப்பட்டான்
இப்போதும்
சாப்பிட மறுக்கும் பிள்ளைகளுக்கு
கட்டையனிடம் பிடிச்சு கொடுத்துடுவேன்
என பயங்காட்டி சாப்பிடவைக்கின்றனர்
அம்மாக்கள்
அவசரமாய் விழுங்குகின்றன
கட்டையன் என்கிற சின்னச்சாமியை அறியாத
பிள்ளைகள்...

8 கருத்துகள்:

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) சொன்னது…

அடடா முதல் ஆளா ஓட்டு போடஓட்டுபட்டை இல்லையே!!!!

Philosophy Prabhakaran சொன்னது…

இந்த மாதிரி ஊருக்கு ஒரு கட்டையன் இருக்கிறார்கள்...

Unknown சொன்னது…

Intha mathiri kattayana vachithana kulanthakalukku sappadu kodukka mudiyuthu. Munnadi nila nila nu solluvanga ipo atha yaru kekra

Unknown சொன்னது…

Intha mathiri kattayana vachithana kulanthakalukku sappadu kodukka mudiyuthu. Munnadi nila nila nu solluvanga ipo atha yaru kekra

Unknown சொன்னது…

Sorry for the mob comment

'பரிவை' சே.குமார் சொன்னது…

கட்டையன் கவிதையாய்...
அருமை...
இந்த மாதிரி மனிதர்கள் ஊருக்கு ஒருவர் இருக்கிறார்கள்...

SURYAJEEVA சொன்னது…

உங்கள் மூலம் வரலாற்றில் இடம் பிடித்தான் கட்டையன்..

Unknown சொன்னது…

நினைவுகள் அருமை...