16 செப்., 2011

இது மக்களுக்கான ஆட்சிதானா? ...

கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஏதாவாது ஒரு காரணம் காட்டி தினமும் அதனை நடக்கவிடாமல் பார்த்துக்கொள்வதிலேயே எல்லாக் கட்சிகளும் குறியாக இருந்தனர். ஸ்பெக்ட்ரம் கிட்டதட்ட மறக்கடிக்கப்பட்டுவிட்டது. சோனியா உடல்நிலையை காரணம்காட்டி அமெரிக்காவில் பதுங்கிவிட அவரது பிள்ளை ராகுல் அதிக பல்புகள் வாங்கிக் குவித்தார். அன்னா ஹாசாரே தன் பங்கு காமெடியை முடித்துக் கொண்டார். அடுத்த குண்டு வெடிப்பு நிகழ்ந்து அதன் சோகத்தை தமிழக மக்கள் இம்மானுவேல் சேகரனாலும், சித்தேரி ரயில் விபத்தாலும் ஊடகங்களால் மாற்றப்பட்டு சீரியல்களில் மூழ்க நினைத்தபோது வந்து சேர்ந்திருக்கிறது பெட்ரோல் விலை உயர்வு. கூடவே கேஸ் விலையை ரூ.750 க்கு உயர்த்தும் முடிவை மத்திய அரசாங்கம் அறிவிக்க இருப்பதாக செய்திகளை முன்கூட்டியே கசியவைத்து மக்களை மனதளவில் தயார்ப்படுத்துகிறார்கள். பெட்ரோல் விலை இப்படி தொடர்ந்து ஏறிக்கொண்டே இருப்பது நிச்சயமாக நடுத்தர மக்களையே அதிகம் பாதிக்கும்.

மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் எல்லோருமே லட்சாதிபதிகள் ( அரசு கணக்குப்படி மட்டும்) ஆனால் சாதரண கவுண்சிலரே ஐந்து ஆண்டுகளில் கோடிகளை சம்பாத்தித்து ஸ்கார்ப்பியோவில் பவனி வருகிறார்கள். அடுத்து வருகிறவர்கள் முன்னவர்களைக் காட்டிலும் அதிகம் சம்பாதிக்க ஆசைப்படுகிறார்களே தவிர மக்கள் பிரச்சினைகளை பற்றி யாரும் கவலைப்படுவதே இல்லை. சமீபத்திய அன்னா அசாரே ஆதரவாலர்களில் எத்தனை பேர் வருகிற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவார்கள்?. அவர்களைப் பொருத்தவரை ரேசன் கார்டுக்கு கியூவில் நிற்க கூடாது அவ்வளவுதான். யாராவது ஊழலை ஒழிக்கிறேன் என உண்ணாவிரதம் இருந்தால் ஆகா வந்துவிட்டார் இன்னொரு மகாத்மா என கொடி பிடித்து ஊர்வலம் போனால் எல்லாம் சரியாகிவிடும் என்கிற மனநிலை கொண்டவர்கள் அவர்கள். இவர்களில் எத்தனை பேருக்கு எல்லா அநியாங்களுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்து சிறை செல்லும் எளிய மனிதர்களான கம்யூனிஸ்ட்கள் பற்றி தெரியும். சமீபத்திய சமச்சீர் கல்வி விசயத்தில் உச்ச நீதிமன்றம்வரை சென்று வெற்றி பெற்றவர்கள் இவர்கள்தான் ஆனால் அரசியல் கட்சிகள் தாங்கள்தான் அதற்கு காரனகர்த்தா என கூட்டம் போடுகிறது. சமீபத்தில் பா.ம.க அன்புமணிக்காக அவரின் அடிபொடிகள் ஒரு பேனர் வைத்திருந்தனர் அதில் கொட்டை எழுத்தில் “சமச்சீர் நாயகனே” என அவருக்கு பட்டம் சூட்டியிருந்தார்கள்.

ரூ.70க்கு குறைந்த விலையில் கேளிக்கை நிகழ்ச்சிகளை கொடுக்க நினைக்கும் அரசு, வருமானத்துக்காக மக்களை நிரந்தர குடிகாரர்களாக மாற்றும் அரசு. இலவசம் என்ற பெயரில் அவசியமற்ற பொருட்களின் மேல் கவனம் செலுத்தும் அரசு. மக்களுக்கான உண்மையான அரசாக இருப்பதாக காட்டிக்கொள்ள முயலும் தமிழக அரசு. கல்வி விசயத்தில் ஏகப்பட்ட சொதப்பல்களை அரங்கேற்றி இப்போதுதான் மூன்று பருவத்தேர்வுகளையும் செமஸ்டர் முறைக்கு மாற்றுவோம் என ஒரு நல்ல செய்தி சொல்லியிருக்கிறது. எதிர்கட்சியாக இருக்கும் விஜயகாந்த் ரொம்பவே பம்முகிறார். உள்ளாட்சி தேர்தல் முடியட்டும் பார்ப்போம் புலியா? பூனையா? என.

அடுத்த பிரதமர் வேட்பாளராக மோடியும், ராகுலும் களம் இறங்கப்போகிறார்கள் என செய்தி வருகிறது. ராகுலை பொருத்தவரை இதுவரை நான்கு தேர்தல்களை நடத்தி 0% ரிசல்ட் காட்டியிருக்கிறார்.மேலும் காங்கிரஸ் இந்தமுறை செம அடி வாங்கியிருப்பதால் அதற்க்கு இனி சவப்பெட்டிதான்.
மோடியைப் பொருத்தவரை தீவிர இந்துத்துவா என்பதுதான் குஜராத் வண்முறைகளை இஸ்லாமிய மக்கள் ஒருபோதும் மண்ணிக்க மாட்டார்கள் என்பதும் பார்ப்பனர் அல்லாத இவரை பி.ஜே.பி தலமை கடைசி நேரத்தில் கைகழுவலாம். எது எப்படி இருந்தாலும், ராகுலுக்கு ஆயிரம் மடங்கு மேல் மோடி. காரனம் ஊழல் குற்றாச்சாட்டு இல்லாத கட்டை பிரம்மச்சாரி. நல்ல நிர்வாகி. கடைசி நேரத்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறியும் இருக்கும். ஆனால் அடுத்த ஆட்சி மட்டும் காங்கிரஸ் ஆட்சி என்றால் நான் சிங்கப்பூரிலோ, மொரிசியஸிலோ செட்டிலாகிவிடுவேன்.

ராஜீவ் கொலைவழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட மூவரும் அப்பாவிகள் என்பது மற்றவர்களைவிடவும் காங்கிரஸ்காரனுக்குதான் நன்றாகத் தெரியும். ஆனால் தமிழ் நாட்டு காங்கிரஸ்காரனுங்க போடும் ஓவர்சீன்தான் மிகுந்த எரிச்சலை அடைய வைக்கிறது. விசுவாசத்தைக் காட்டுவதில் அ.தி.மு.க அடிமைகளை மிஞ்சிவிட்டனர்.

கடைசியாக அக்பரின் அவைக்கு வந்த அவரது சிற்றரசன் ஒருவன் தன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் கடந்த ஆறு மாதங்களாக எந்த சிறிய குற்றங்களும் நடைபெறவில்லை. மக்கள் மிகுந்த சந்தோசமாக இருப்பதாக சொல்லவும். அவையில் இருந்த பீர்பால் படைதளபதியை கூப்பிட்டு இந்த சிற்றரசன் ஆளுகைக்கு உள்ளிட்ட சில இடங்களில் நம்ம ஆட்களை விட்டு ரகசியமாக தீ வைக்கவும், கொள்ளையிடவும் சொல்லுங்கள் என்றார். சிற்றரசனும், அக்பரும் பதற்றமாக பீர்பாலைப் பார்க்கவும். பீர்பால் நிதனமாக மன்னா! மக்கள் பிரட்சனைகள் இன்றி சுபிட்சமாகவும், சந்தோசமாகவும் இருந்தால் நமக்கு எதற்க்கு வரி கட்டவேண்டும், நாம்தான் இப்பொது நன்றாக இருக்கிறோமே என நினைக்க ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் இப்படி பிரச்சினைகள் இருந்தால்தான் நாம் பாதுகாப்பு கொடுப்போம். ஆஹா மன்னர் இருப்பதால்தான் நமக்கு பாதுகாப்பு என அவர்களும் நமக்குப் பயப்படுவார்கள் என்றார். எனக்கென்னமோ இன்னைக்குவரை அதுதான் நிலமை என தோன்றுகிறது.     

10 கருத்துகள்:

Unknown சொன்னது…

your words are absl. correct.

SURYAJEEVA சொன்னது…

உங்கள் கோபம் நியாயமானதே, சுற்றுச்ச் சூழல் பாதுகாப்பை கருதியும், இயற்கை எரிவாயுவை வீணடிப்பதை கணக்கில் கொண்டும் நடுவண் அரசு இந்த விலை ஏற்றத்தை ஏற்றி உள்ளது.. இனி சைக்கிள் மாட்டு வண்டி குதிரை வண்டி போன்ற வாகனங்களை பயன்படுத்தி சுற்றுப்புற சூழல் மாசடைவதை தடுக்க இந்த ஏற்பாடாம்.. என்னவோ பண்றாங்க? என்னவோ பண்ண போறோம்?

Sankar Gurusamy சொன்னது…

சவுக்கடி... சரியாக சொன்னீர்கள். இனிமேல் வருகிற தேர்தலில் கம்யூனிஸ்டுகளைத்தான் ஆதரிக்கவேண்டும் என நினைக்கிறேன்... அவர்களும் இவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல. ஆனாலும் எரியிற கொள்ளில இந்த கொள்ளி கொஞ்சம் தேவலை...

பகிர்வுக்கு நன்றி...

http://anubhudhi.blogspot.com/

சதீஷ் மாஸ் சொன்னது…

பெட்ரோல் விலை ஏத்திடாங்கனு செம கடுப்பா இருக்கு... நாளைல இருந்து காலேஜ்க்கு சைக்கிள்ல தான் போகனும்...

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) சொன்னது…

///அடுத்த ஆட்சி மட்டும் காங்கிரஸ் ஆட்சி என்றால் நான் சிங்கப்பூரிலோ, மொரிசியஸிலோ செட்டிலாகிவிடுவேன்///
நல்ல முடிவு,,,வாக்கு மாற கூடாது,,,

அக்கப்போரு சொன்னது…

அடுத்த ஆட்சி மட்டும் காங்கிரஸ் ஆட்சி என்றால் நான் சிங்கப்பூரிலோ, மொரிசியஸிலோ செட்டிலாகிவிடுவேன்


அண்ணே செந்திலன்னே போறப்ப என்னையும் கூட்டிட்டுப் போங்கண்ணே. இன்னொரு தடவ இவய்ங்க ஆட்சினு நெனச்சாலே பதறுதுன்னே

Sivakumar சொன்னது…

//வருமானத்துக்காக மக்களை நிரந்தர குடிகாரர்களாக மாற்றும் அரசு. //

இதை நான் சொன்னா மட்டும் ராக்கிங் பண்றீங்க.. ம்ம்ம்..நடக்கட்டும்!!

ஜோதிஜி சொன்னது…

ராகுலுக்கு ஆயிரம் மடங்கு மேல் மோடி. காரனம் ஊழல் குற்றாச்சாட்டு இல்லாத கட்டை பிரம்மச்சாரி. நல்ல நிர்வாகி. கடைசி நேரத்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறியும் இருக்கும். ஆனால் அடுத்த ஆட்சி மட்டும் காங்கிரஸ் ஆட்சி என்றால் நான் சிங்கப்பூரிலோ, மொரிசியஸிலோ செட்டிலாகிவிடுவேன்.

ஆமா? உங்களுக்கென்ன? எளிதில் ஓடி விடலாம். நாங்க புள்ள குட்டிகள கூட்டிக்கிட்டு எங்கே போறதாம். வண்டியை வெளியே எடுக்கவே பல முறை யோசிக்க வேண்டியதாய் உள்ளது. இதை வைத்தே வீட்டில் பல விசயங்களில் அப்புறம் பார்த்துக்கலாம். ஐந்தாறு வேலைகள் ஒன்றாக வரட்டும் அப்புறம் செல்வோம் என்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரணங்களை சொல்லி தினசரி ஆசைகளை கட்டுப்படுத்தி அல்லது மட்டுப்படுத்தி வாழ பழகிக் கொண்டிருக்கிறோம்.

பொதுவா அரசியல் கட்டுரைகளை தன் சுய நினைவு, தனது அனுபவங்களைக் கொண்டு எழுதுவது மிக மிக குறைவு. ஊன்றி கவனித்தல் என்பதன் மூலம் இந்த கட்டுரை நிகழ்கால எதார்த்த விசயங்களை இன்னும் பல வருடங்கள் கழித்து வந்து படிப்பவர்களுக்கும் உணர்த்தும் அளவுக்கு சிறப்பா எழுதி இருக்கீங்க.

மோடியை ஆதரித்தால் கொலைக்குற்றவாளி போலவே பார்க்குறாங்க. நிச்சயம் அவர் பிரதமராக வந்தால் என்ன மாறுதல் உருவாகும் என்ற ஆசை இப்போது லேசாக துளிர்விட ஆரம்பித்துள்ளது.

Unknown சொன்னது…

சரியா சொல்லீருக்கீங்க

நம் வாக்கு நிச்சயமாக காங்கிரஸ் ஆட்சிக்கு இருக்ககூடாது

RK நண்பன்.. சொன்னது…

என்னவோ போங்க இந்த காங்கிரஸ் ஒளிந்தால் தான் நிம்மதி...

ஒரு காலத்துல 50 பைசா, 1 ருபைனு பெட்ரோல் விலை கூடியது, இப்போ என்னடானா 4 ஓர் 5 ரூபாய்...

ஒண்ணும் சொல்றதுக்குகில்லை....