30 செப்., 2011

தோற்றம் - மறைவு ...

பார்வைகள் தீண்டிக்கொண்ட 
ஒரு நொடியின் மரணத்தில்   
உயிர்த்தது நம் காதல்..

பறிமாறிக்கொண்ட அனைத்திலும்   
மேன்மையானது  
மின்தூக்கித் தனிமையின்  
முதல் எச்சில் வினாடிகள்..

அன்னிய தேசம்   
அலுவல் நிமித்தம்   
அனுப்பப்பட்டோம்,  
அங்கு   
அதிகப்படியான  இரவுகளை     
ஆதி மனிதர்களாய் கடந்தோம்..

இருவரின்
வாழ்வியல் கடமைகள்   
திருமண ஒப்பந்தத்தை   
தள்ளி வைத்து நகர்ந்த காலத்தில்   
ஊடாக வந்த நட்புகளால்   
சந்தேக சங்கடம் ..

நிலவை தொலைத்த   
நாளின் நள்ளிரவில்   
உரத்த குரலெடுத்து  கதறிய 
காதல்  
மறுநாள் அதிகாலை,  
பார்வைகள்  தீண்டத் தயங்கிய 
கணத்தில்    
மரித்துப்போனது..

10 கருத்துகள்:

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//அன்னிய தேசம்
அலுவல் நிமித்தம்
அனுப்பப்பட்டோம்,
அங்கு
அதிகப்படியான இரவுகளை
ஆதி மனிதர்களாய் கடந்தோம்..//

சூப்பர் வரிகள்!

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

கவிதைக்கேற்ற தலைப்பா..
தலைப்புக்கேற்ற கவிதையா..


அருமை..

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

விருந்துக்கு வாங்க நண்பா..

http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_565.htm

காமராஜ் சொன்னது…

நிஜம்.
கவிதையும்,தலைப்பும் பொருத்தம்.

Yaathoramani.blogspot.com சொன்னது…

அனைவர் மனக் காட்டு மறைவுகளிலும்
இப்படி ஒரு மறையாத தோற்ற மறைவுச் சுவடுகள்
கட்டாயம் இருக்கும்.அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள் த.ம 2

சீனுவாசன்.கு சொன்னது…

அட இன்னா பாஸ் நீங்க?
நம்ம சைட்டுக்கு வாங்க!
கருத்து சொல்லுங்க!!
நல்லா பழகுவோம்!!!

Philosophy Prabhakaran சொன்னது…

// நிலவை தொலைத்த
நாளின் நள்ளிரவில்
உரத்த குரலெடுத்து கதறிய
காதல் //

ஹி ஹி நல்லா இருக்கு தலைவரே...

Unknown சொன்னது…

சூப்பர் நண்பா.கவிதைகள் அருமை

'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமையான கவிதை.

அம்பாளடியாள் சொன்னது…

நிலவை தொலைத்த நாளின் நள்ளிரவில் உரத்த குரலெடுத்து கதறிய காதல் மறுநாள் அதிகாலை,
பார்வைகள் தீண்டத் தயங்கிய
கணத்தில் மரித்துப்போனது..

அருமையான உணர்வின் வெளிப்பாடு .
வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு ....