24 செப்., 2011

அப்பாடக்கர் யாரு? ...

உள்ளாட்சி தேர்தலில் முதல் ஆளாக கருணாநிதி தனித்துப் போட்டி என அறிவித்ததும். அப்போதே வெற்றி பெற்றதாக தி.மு.க தொண்டர்கள் சந்தோசப்பட்டனர். அது தேர்தல் வெற்றிக்கான சந்தோசம் இல்லை. காங்கிரஸ்காரர்களை விட்டு விலகிவிட்டோம் என்கிற சந்தோசம். தங்கபாலு, ஈரோட்டு இளங்கோவன் போன்ற வெத்து வேட்டு தலைவர்களுக்கெல்லாம் பயப்பட வைத்துவிட்ட தலைவர் தன் தொண்டர்களுக்கு நிஜமாகவே அளித்த தீபாவளி பரிசு அது. ஆனால் கருணாநிதியை நம்பிக்கொண்டிருந்த திருமாவுக்கு அந்த அறிவிப்பு செம அல்வா. சட்டமன்றத் தேர்தலில் பத்து இடத்தைக் கொடுத்ததில் ஒரு இடம் கூட ஜெயிக்காத வருத்தம் அல்லது ராமதாசுடன் கூடிக்குலாவுவதால் வந்த வெருப்பாக கூட இருக்கலாம். எது எப்படியோ யாருக்கும் காவடி தூக்கவேண்டியதில்லை என்பதில் தி.மு.க தொண்டர்கள் நிஜமான சந்தோசத்தில் இருப்பதை பார்க்க முடிகிறது.

அடுத்து ஜெயலலிதா எல்லாத்தொகுதிகளுக்கும் தந்து வேட்பாளர்களை அறிவித்து, அதிமுக கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார். கம்யூனிஸ்டுகள் மட்டுமே இன்னமும் அவர்களிடம் தொங்கிக்கொண்டு இருந்தாலும், விஜயகாந்த் மவுனத்தை உடைத்து தனித்து போட்டி என அறிவித்து வேட்பாளர்களின் பட்டியலையும் வெளியிட்டு வருகிறார். ஆட்சி அதிகாரம் கையில் இருப்பதாலும் கடந்த நூறு நாள் அதிமுக ஆட்சியி சமச்சீர் குளறுபடியைத் தவிர சிறப்பான ஆட்சியை ஜெயலலிதா தந்திருப்பதால் உள்ளாட்சி தேர்தலிலும் முன்னனி வெற்றியை அதிமுக வினர் எதிர்பார்க்கின்றனர்.

எதிர்பாராவிதமாக கடந்த சட்டமன்ற தேர்தலில் 29 இடங்களில் வென்ற தேமுதிக எதிர்கட்சியாக எந்தவித நடவடிகைகளிலும் ஈடுபடவில்லை. ஆளும்கட்சிக்கு ஜால்ரா தட்டுவதில் மட்டுமே குறியாக இருந்ததால் மக்களிடம் இவர்களுக்கான எதிர்பார்ப்பு குறையவே செய்யும். ஆனாலும் சட்டமன்ற தேர்தலைப்போல இந்த உள்ளாட்சி தேர்தலில் ஒரு மேயர் பதவியாவது கிடைத்தால்தான் தன் இருப்பை தொடர்ந்து தக்கவைக்கவும் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி பேரத்தில் முந்தவும் முடியும்.

ராமதாஸ் ஆச்சர்யமாக தனித்து போட்டி என அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இருக்காதா பின்னே இதுவரை யார் முதுகிலாவது சவாரி செய்தே பழக்கப்பட்ட அவர்கள் இப்போது தங்கள் உண்மையான செல்வாக்கை அல்லது பல்புகளை வாங்கப்போகிறார்கள். வார்டு மெம்பர்களாவது கிடைக்க வாழ்த்துவோம்.

வைகோ தனித்து போட்டிதான் என்று முன்னமே சொல்லியிருக்கிறார். இதிலும் போட்டியிடவில்லை என்று சொல்லியிருந்தால் அவர் தனித்துவிடப்பட்டுவிடுவார் என அவ்ருக்கு தெரியும். இருக்கும் கொஞ்ச தொண்டர்களையாவது காப்பாறிக்கொள்ள முயல்கிறார்.

திருமா இன்னமும் மௌனமாக இருக்கிறார். ரொம்பவும் மவுனமா இருந்தா வேட்பாளருக்கான வேட்புமனு தேதி தள்ளிப்போயிடுண்ணே!

காங்கிரஸ் வேட்பாளர்கள் பெயரை வெளியிடும் முன்னமே வேட்டியை கிழித்துக்கொள்ளும். அதன் பிறகு அன்னை சோனியா அல்லது தலைமகன் ராகுல் சொன்ன பட்டியல் வெளியிடப்படும். நிஜமான பல்பு இந்தமுறை காங்கிரசுக்குதான்.

ஆகா எல்லா அரசியல் கட்சிகளும் தன் பலத்தை சோதிக்கும் இந்த உள்ளாட்சி தேர்தலில் நிறைய இடங்களில் சொந்த செல்வாக்கால் ஜெயிப்பவர்கள் அதிகம் இருந்தாலும். சென்னையில் இப்போதிய மேயர் மா.சு நல்லவர், பெயரைக்கெடுத்துகொள்ளாமல் எளிமையாய் நிர்வாகம் செய்தவர் என்பதால் இவரை எதிர்த்து போட்டியிடும் துரைசாமிக்கு சரியான போட்டியாளராக இருப்பார். ஆனால் இருவரில் யார் வந்தாலும் சென்னைக்கு நன்மையே. இதுபோல நேரடியான போட்டி என்பது திமுக, அதிமுக வுக்குதான் அதனால் மற்றவர்களெல்லாம் தாங்களும் அப்பாடக்கர்தான் என நிரூபிக்க இந்த உள்ளாட்சி தேர்தல் ஒரு நல்ல வாய்ப்பு.காரனம் வர இருக்கிற நாடாளுமன்ற தேர்தலுக்கான ஓவ்வொரு கட்சியும் கூட்டணி பேசும்போது தங்களுக்கான ஒட்டு வங்கியை காட்ட இது உதவும்.

கடந்த சட்டமன்ற தேர்தலைவிடவும் அதிக சுவாரஸ்யங்கள் இந்த தேர்தலில் நமக்கு கிடைக்கப்போகிறது.

11 கருத்துகள்:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அவனுக அப்பாடக்கரா இருந்தாலும் ஆப்புடக்கர் நமக்குத்தான்

SURYAJEEVA சொன்னது…

தமிழக அரசின் பிற சாதனைகள் அதிகாரிகளை பந்தாடியது [ஈரோடு ஆட்சியர்], அமைச்சர்களை ரம்மி விளையாடியது, போராட்ட குரலை இரும்பு கரத்தால் அடக்கியது [பரமக்குடி சேலம்], அரசு கேபிள் டிவி அவசரம் [அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் பெண்மணிகளுக்கு பிடித்த சன் டிவி இல்லை என்ற வதந்தி], கூட்டணியில் நம்பியவர்களின் முதுகில் குத்தியது, மடிக் கணினி வழங்குவதில் தாமதம்.. என்று அடுக்கி கொண்டே போகலாம்... நேர்மையாக தேர்தல் நடந்தால் வோட்டுக்கள் சிதறவும் வாய்ப்புண்டு.. நேர்மையாக நடக்குமா என்பது தான் கேள்வியே

SURYAJEEVA சொன்னது…

தமிழக மக்களுக்கு அனைத்து கட்சிகள் மீதும் வெறுப்பு ஏற்பட்டுள்ளது மட்டும் நிஜம்...

சம்பத்குமார் சொன்னது…

கடைசியில் 49 ஓ சதவீதம் இந்தமுறை எகிறத்தான் போகிறது நண்பரே..

நட்புடன்
சம்பத்குமார்

சக்தி கல்வி மையம் சொன்னது…

என்னதான் நடக்குது தமிழ் நாட்டு அரசியல்ல..

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

காங்கிரஸை விட்டு விலகியது திமுக செய்த நல்ல செயல்...


தேர்தலுக்கு பிறகுதான் தெரியும் யாரு பெரிய அப்பாடக்கருன்னு...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

இரு முனை போட்டி...
மும்முனை போட்டி -ன் கேள்வி பட்டிருக்கேன்...

இது என்னங்க 7 முனை 8 முனை போட்டி...

செம ஹாட் மச்சி...

கோகுல் சொன்னது…

யாரு அப்பாடக்கர் ஆகப்போறாங்கன்னு தெரியல.
மக்கள் யாறாரு மூஞ்சில பூரான் விடப்போராங்களோ?

Yoga.s.FR சொன்னது…

அடடே!எல்லோரும் தனித்துப் போட்டியா?பலே,பலே!!!தெருமா சாரி திருமா கற்பனையிலயே முழுகிட்டாரோ?பாவம்!

Sivakumar சொன்னது…

//கடந்த நூறு நாள் அதிமுக ஆட்சியி சமச்சீர் குளறுபடியைத் தவிர சிறப்பான ஆட்சியை ஜெயலலிதா தந்திருப்பதால்//

அது!

Sivakumar சொன்னது…

//தங்கபாலு, ஈரோட்டு இளங்கோவன் போன்ற வெத்து வேட்டு தலைவர்களுக்கெல்லாம் //

"என்ன ஒரு இறுமாப்பு. டேய் மாப்பு..அலைகடலென திரண்டு வர இயலாவிடினும் அட்லீஸ்ட் டம்ளர் சைஸ் நீரிலாவது நீச்சல் அடித்து வா. கே.ஆர்.பி. என்பவர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஏவலாள் என்பதும், பா.ஜ,க.வின் பதிவுலக பார்ட்னர் என்பதும் அம்பலமாகிவிட்டது. எனவே சீறும் சிங்கமென... "

20 நிமிடங்களுக்கு பிறகு:


"என்ன... ஒரு பயலையும் காணும்"