சமீபத்தில் ஒரு பெரியவருடன் பேசிக்கொண்டிருந்தேன் சுவாஸ்யமான பேச்சின் நடுவில் அவர் ஒரு பழமொழி சொல்லி விளக்கம் கேட்டார்.
பழமொழி : ”ஒரு ஆண் உட்கார்ந்தால் எழுந்திருக்க கூடாது, பெண் படுத்தால் எழுந்திருக்ககூடாது”
இதனை சொல்லி முடித்ததும் அவர் பெரியவர் என்பதால் இதில் இரட்டை அர்த்தம் ஏதும் இல்லையே என அவரிடம் கேட்டேன். அவர் சிரித்துவிட்டு இல்லை தம்பி இது வாழ்வியலுக்கான அடிப்படை விசயம் எனவே யோசித்துவிட்டு நாளைக்கு வந்து சொல்லுன்னார். அதன்பிறகு எனக்குத் தெரிந்த நெருக்கமான அனைவரிடமும் கேட்டேன், பெரும்பாலனவர்கள் அவர்களுக்கு தெரிந்த கர்பனைகளை சொன்னார்கள். சிலர் பாலியல் விளக்கங்களை சொன்னார்கள்.
மறுநாள் பெரியவரிடமே சென்று விளக்கம் கேட்டேன்.
விளக்கம் : ஒரு ஆண் உட்கார்ந்தால் எழுந்திருக்க கூடாது என்று சொல்வது. சபைகளில் போடப்பட்டிருக்கும் இருக்கைகளில் ஒரு ஆணானவன் அமர்ந்தபின் அந்த இருக்கையை விழா நடத்துபவர்கள் வேறு ஒருவருக்கு விட்டுத்தரும்படி கேட்ககூடாது. அதனால் தன் நிலை அறிந்து அதற்கான இடத்தில் அமர்வதோடு, சபையின் மரியாதைக்கு உரிய இடத்தில் அமரும் நிலையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும்,
ஒரு பெண் படுத்தால் எழுந்துகொள்ளக்கூடாது என்பதன் விளக்கமாக ஒரு பெண் வீட்டில் எல்லா வேலைளையும் முடித்துவிட்டு உறங்கப்போய்விட்டால் அவள் வேறு எதற்காகவும் இடையில் எழுந்துகொள்ளக்கூடாது. அதாவது நேரம் தவறி வரும் கனவனுக்காக உணவு தயாரிக்கவோ, அல்லது மற்ற அரைகளில் விளக்கை அணைத்துவிட்டோமா, அல்லது ஸ்டவ் ஒழுங்காக அணைக்கபட்டிருக்கிறதா? அல்லது கதவை ஒழுங்காக பூட்டியிருக்கிறோமா என சந்தேகப்பட்டும் எழுந்திருக்ககூடாது. அப்படி அவள் விடிவதற்கு முன் இடையில் இது போன்ற காரனங்களுக்காக எழுந்துகொள்வாள் எனில் அந்த குடும்பத்தில் குழப்பம் நிலவுகிறது என்று அர்த்தம் என விளக்கினார்.
மிக ஆழமான இந்தக்கருத்தினை உங்களுடனும் பகிர்ந்துகொள்ளத் தோன்றியது.

16 கருத்துகள்:
பெரியவர் ராக்ஸ்
உங்களுக்கு மட்டும் எங்கேயிருந்து பழமொழியும், அதற்கான விளக்கமும் கிடைக்கிறதோ, ஆனா நல்லாயிருக்கு.
அது ஒண்ணுமில்லையண்ணே எழுத்துப்பிழை அதான் அகற்றினேன்
பழமொழிகள் எவ்வளவோ பெரிய கருத்துகளை கூட இரண்டு வரிகளில் உணர்த்திவிடும்.நல்ல பதிவு..!!
அருமை
அருமையான பழமொழி...
பெண் பின் தூங்கி முன் எழ வேண்டும் என்று சொல்வார்கள்.
படுத்தால் எழுந்திரிக்ககூடாது என்பதன் விளக்கம் அதற்கும் பொருத்தமாகவே இருக்கிறது.
ஜூப்பர் . . .
:)
நல்ல பழமொழி, நல்ல விளக்கம். ரெண்டுமே நல்லா இருக்கு.
பழமொழி, விளக்கம்...
அருமை.
அண்ணே..கொஞ்சம் தள்ளி உக்காருங்க. சென்னை வலைப்பதிவர் குழுமத்தின் தலைவர் சீட்டுக்கு டிமாண்ட் ஜாஸ்தி ஆகுது.
அண்ணன் பார்முக்கு வந்துட்டார்... இனிமே அந்த தலைவர் போஸ்டுக்கு யாரும் போட்டி போட முடியாது....
அட!!
நல்லாருக்கே..!!
உங்கலுக்கு மட்டும் எப்படி இது போண்ர பளமொலிகள் கிடைக்கின்ரண?
ரொம்ப சூப்பறா இறுக்கு.........
களக்குங்க..........
அருமையான விளக்கம் செந்தில்!
enna logico .. ponga... enakku idai padicha sirippu sirippa varuthu ..
கருத்துரையிடுக