10 ஆக., 2013

பிரிவின் கடைசி வினாடிகள்...


வண்ணத்துப் பூச்சிகள் பறக்கும்
வசந்தகாலமொன்றில் உன் 
வருகை நிகழ்ந்தது..

நிறமற்று இருந்த என் மனசு 
நிறமிகளால் சூழப்பெற்றது..

இலக்கியங்கள்
சங்கப்பாடல்கள் 
திரைச்சித்திரங்கள் 
இன்னுமொரு காவியம் நம் 
காதல்..

யாரும் எதிர்க்கவில்லை 
நீயும், நானும் 
நிஜமாய் காதலித்தோம்..

கணங்களை தாண்டி வரமுடியாத 
ஸ்பரிசங்களால் 
வரங்களாய் பரிசளித்து சென்றாய்..

இன்று..

நம் குழந்தையோடு
நீ வந்திருக்கிறாய்
என்னை
முற்றாக மறந்து போக
கற்றுக்கொண்டு விட்டாள்
போலும்,
மணலில்
விரல்களால் நடந்து
விளையாடிக்கொண்டிருந்தாள்
காவ்யா..

இன்னும் சற்று நேரத்தில்
நம் திருமண ஒப்பந்தம்
முடிவுக்கு வரப்போகிறது,
நான்
பார்த்துக்கொண்டிருக்கிறேன்
இப்போதாவது
மன்னிக்கலாமே,,
இறைஞ்சும் என் மனசின்
அழுகுரல்
உனக்கு கேட்கிறதா?

நீ பிடிவாதக்காரி
நான் அதைத்தானே
ரசித்து காதலித்தேன்,
................
இறுதியில்
நான் கையெழுத்து இடுகிறேன்
தயங்கும் உன்னிடம்
பேனாவை நீட்டுகிறேன்
எதற்காகவோ
கலகலவென சிரித்தாள்
காவ்யா..

தெருவில்
ஆறிய தேனிர் குவளையுடன்
ஒரு சிகெரெட்டை
ஆழ உறிஞ்சினேன்
பேரூந்துக்கு
கையாட்டியபடி
கடந்து போகிறாள்
காவ்யா..

5 கருத்துகள்:

ரமேஷ் வீரா சொன்னது…

arumai ... anaa...

அகலிக‌ன் சொன்னது…

ஒரு மனிதனில் இறப்பில் அனைவரும் கண்ணீர் சிந்துவதை கண்டிருக்கிறோம். காரணம் இறந்தமனிதரின் இழப்பிற்காகதான் என்றாலும் அதில் 75 சதவீதம் தன் சொந்தங்களில் நிகழ்ந்திவிட்ட இறப்புக்களையும் தான் மிகவும் நேசிக்கும் உறவை இழந்திவிடுட்டால் என்னவாகும் என்ற கற்பனையும் கலந்துதான் கன்ணீர்ரை வரவைக்கிறது. இதை ஆழமாக கவனித்தால் உணரலாம். இந்த கவிதையும் அப்படியான் மன போக்கை ஏற்படுத்தி ஒரு துளி கண்ணீரை வரவைத்தது.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சிறப்பான கவிதை! அருமை! நன்றி

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஒரு கதையையே கவிதையாக வடித்து விட்டீர்கள் அண்ணே....! சூப்பரு....!

'பரிவை' சே.குமார் சொன்னது…

ஒரு பிரிவை சொல்லும் கதையை... அந்த வலியை உங்கள் எழுத்தில் கவிதையாக்கி இருக்கிறீர்கள்....

அருமை.