16 ஆக., 2013

திராவிடம் V/S தமிழ் தேசியம்

சுதந்திரம் கிடைத்த பிறகு தேசிய அரசியலில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் இந்திய தேசத்தை காங்கிரஸ்தான் வழிநடத்தி வருகிறது. நாட்டை அது வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வதற்குப்பதில் கடந்த பத்தாண்டுகளில் கடுமையான வீழ்ச்சியை நோக்கி நகர்த்திவிட்டிருக்கிறது. அதிலும் சோனியாவின் வழிநடத்தலில் மன்மோகன், சிதம்பரம் எனும் பெரிய பொருளாதார மேதைகள் சர்க்கஸ் கோமாளிகளாக மாறிவிட்டனர். ஆனால் தமிகம் உள்ளிட்ட தென் இந்திய மாநிலங்கள் ஓரளவுக்கு வளர்ச்சியாகவே இருக்கிறது. இதற்கு காரனம் இங்கிருக்கும் அரசியல் தலைவர்கள், இயக்கங்கள் போன்றவைதான். ஒப்பு நோக்கலில் தெலங்கானா தவிர்த்த ராயல சீமா, ஆந்திரா பகுதிகள் செழிப்பானவைகவே இருக்கின்றன.

தமிழகத்தை பொருத்தவரை காமராஜருக்கு பின்னால் அண்ணாதுரையிடம் ஒரு மறுமலர்ச்சியை எதிர்பார்த்தே மக்கள் வாக்களித்திருக்கின்றனர். பெரியாருக்கு முன்பு வரைக்குமான தேசிய அரசியல் பெரியாரின் ஆளுமையால் மாறித்தான் போனது. அண்ணா சொற்ப காலமே ஆட்சியில் இருந்தாலும் மாற்றத்திற்கான துவக்கம் அவரிடமிருந்து துவங்கியது. கல்வியில் காமராஜர்தான் முன்னோடி என்பதையும் இங்கு மறுக்க முடியாது. தமிழக மக்கள் கருணாநிதியின் கைகளில் தன்னை ஆளும் பொறுப்பை ஒப்படைத்தமைக்கு திரையுலகில் அவர் தந்த புரட்சிகரமான வசனங்களும், மேடைகளில் அவர் முழங்கிய ஆளுமையான பேச்சும் ஒரு காரனம். இப்போதும் தனது தந்திரத்தால்தான் அவர் இத்தகைய மேன்மை நிலைய அடைந்தார் என விமர்சிப்பவர்கள் உண்டு. ஆனால், அவரின் கடின உழைப்புக்கு ஈடான அரசியல்வாதிகள் இனியும் இருப்பார்களா என்பது சந்தேகமே. ஒட்டு மொத்த தமிழகத்தையும் தன் மூளைக்குள் அடைத்து வைத்த பிதாமகன் அவர். இவர் ஆட்சியில்தான் தமிழகத்தின் அத்தனை அரசாங்க கட்டிடங்களும், பாலங்களும் எழும்பின. தமிழகத்தின் சரித்திரத்தில் இவர் ஒரு அசைக்கமுடியாத எவரெஸ்ட்.

ஆனால் எம்.ஜி.ஆர் வந்தபிறகு அவர் தமிழகத்தை வேறு மாதிரியான பார்வையில் கட்டுக்குள் வைத்திருந்தார். திரையில் தனக்கான இடத்தை வடிவமைத்தவர், அரசியலிலும் அதனையே பின்பற்றினார். ஏழைகளின் இதயத்தில் நிரந்தரமாக குடிபுகும் மேஜிக் ஜாலங்களை நிகழ்த்தினார். தமிழகத்தின் ஓட்டு வங்கி அவர் பாக்கெட்டுக்குள் இருந்தது. ஆனாலும் இத்தனை கல்லூரிகள் வருவதற்கான அஸ்திவாரம் அவர் எழுப்பியதுதான். இப்போதிருக்கும் கல்வி வள்ளல்கள் அவரின் சிஷ்யர்களே. இந்த கல்வி மன்னர்களின் சுவாரஸ்யமான பின்னனியையும் தாண்டி காமராஜருக்கு பின் கல்வியில் பெரிய மாற்றத்துக்கான தொடர்ச்சியை எம்.ஜி.ஆர்தான் செய்தார். அடுத்ததாக ஈழ விவகாரத்தில் வெளிப்படையான, நேர்மையான ஆதரவை தொடர்ந்து காட்டினார். இறுதியில் மக்களின் மனதில் நிரந்தர நாயகனாக தங்கி இன்றுவரைக்கும் அ.தி.மு.க வின் வெற்றி சின்னமாக மாறிவிட்டார்.

இவருக்கு பின்னர் மீண்டும் கருணாநிதியே வந்தார். வழக்கம்போல் ஒரு தெளிவான உள்கட்டமைப்பை கொண்டு வந்தார். ஆனால் ராஜிவ் காந்தி படுகொலைக்கு பின்னால் எல்லாம் மாறிப்போனது. யாரும் எதிர்பார்க்காத!, ஏன் ஜெயலலிதாவே!! எதிர்பார்க்காத வகையில் அவர் முதலமைச்சர் ஆனார். அதிகாரத்தின் ருசி அவரின் தலைக்கனத்தில் ஏறி நாட்டியமாடியது. ஒட்டுமொத்த மக்களின் வெறுப்பையும் சம்பாதித்ததோடு மட்டுமல்லாமல் தமிழகத்தில் எந்த வளர்ச்சியுமே நடக்காத இருண்ட காலம் அதுதான். அடுத்த தேர்தலில் மீண்டும் கருணாநிதி ஆட்சிக்கு வந்தார். வந்தவுடன் இன்னொரு ஜெயலலிதாவாக மாறினார். இனி ஜெயலலிதாவுக்கு அரசியல் எதிர்காலமே இருக்கக்கூடாது என அவர்மேல் அத்தனை வழக்குகளையும் போட்டார். இவரின் ஆட்சியும் அலட்சியமான போக்கில் மக்களை வெறுப்பின் உச்சத்துக்கே கொண்டுபோய் மீண்டும் ஜெயலலிதா. கிடைத்த வாய்ப்பை கருணாநிதியை பழிவாங்கவே பயண்படுத்திக்கொண்டார். தமிழகம் மெல்ல பின்னுக்கு தள்ளப்பட்டு முதலாளிகளின் கைகளுக்குள் புகுந்து கொண்டது.

மீண்டும் மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி  கொள்கையுடன் மத்தியில் காங்கிரசும், மாநிலத்தில் தி.மு. கவும் வந்தது. அதுவரைக்கும் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்த மாறன் பிரதர்ஸ் உச்ச வளர்ச்சியை எட்டவே மாநிலத்தின் நலன் பின்னுக்கு தள்ளப்பட்டு குடும்ப வளர்ச்சிக்காக ஒட்டு மொத்தமாக கட்சி, கொள்கை, இனம் என சகலத்தையும் அடகு வைத்தார் கருணாநிதி. எப்படி எம்.ஜி.ஆர். வை.கோ. ஜெயலலிதா என மூவரின் செல்வாக்குக்கும் காரனகர்த்தாவாக மாறினாரோ அதேபோல் கேப்டன் என்று ஒருவரை அரசியலில் குதிக்கவைத்து இன்று எதிர்கட்சி அந்தஸ்த்து வரைக்கும் கிடைக்கச்செய்த பெருமையும் இவரையே சாரும். இவர் ஆட்சியில்தான் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கி மொத்த தமிழகமும் மெல்ல இருளில் மூழ்கியது. தமிழக முதலாளிகள் பின்னுக்கு தள்ளப்பட்டு சர்வதேச பிராண்டுகள் முன்னனிக்கு வந்தன. திருப்பூர் போன்ற தொழில் நகரங்கள் சீரமைக்கப்படுவதற்கு பதிலாக சுற்று சூழலை காரனம் காட்டி மூன்றே மாதத்தில் ஒன்றரை லட்சம் தொழிலாளர்கள் ஊருக்கு மூட்டை கட்டினார்கள்.

கடந்த பத்தாண்டுகளில் எத்தனை ஊழல்கள், வழக்குகள் என தன் ஆதரவில் இயங்கிய மத்திய அரசாலேயே மிரட்டப்பட்டு தி.மு.க எனும் மாபெரும் இயக்கத்தை அதள பாதாளத்துக்கு கொண்டு சென்றார். இவர் செய்த துரோகத்தின் உச்சமே ஈழத்தில் அத்தனை பேரும் செத்து மடிந்தபோது ஆடிய நாடகங்கள்தான். இனம் அழிந்தது ஆனால் பூர்வீகம் தெலுங்காக கொண்ட கருணாநிதிக்கு அது உறுத்தலாக இல்லை.  தன் மகள் ஜெயிலுக்கு போனபோது வடித்த கண்ணீர் கூட அவர் எப்போதும் தமிழனுக்காக சிந்தியதில்லை. எம் இனத்திற்கு என்ன மாதிரியான துரோகத்தை செய்தாரோ அதே துரோகத்தைதான் அவரின் சொந்த மகனான ஸ்டாலினுக்கும் செய்திருக்கிறார். 1996 க்கு பின் அரசியலில், நிர்வாகத்தில் ஒரு ஒழுங்கை கடைபிடிக்கும் முயற்சியில் ஸ்டாலின் சென்னை மேயராக செய்த சாதனைகளும், கடந்த ஆட்சியில் அவரின் தொலைநோக்கு திட்டங்களுமே அதற்கு சாட்சி. ஆனால் கருணாநிதிக்கு என்ன நிர்பந்தமோ சாகும் வரைக்கும் நாற்காலியை விட மறுக்கிறார்.

மறுபடியும் ஜெயலலிதா வந்தார். சென்ற பத்தாண்டுகளில் கொட நாட்டில் ஓய்வெடுத்ததை தவிர எதிர்கட்சியாக எதையுமே செய்யாத அவரை கருணாநிதி என்கிற ஒற்றை ஆளுமையின் மீது ஏற்பட்ட தீராத வெறுப்பின் காரனமாக மக்கள் தனிபெரும்பான்மையோடு ஜெயலலிதாவை கொண்டுவந்தனர். வந்தது முதலே ஈழப்பிரச்சினையில் தனிப்பட்ட கரிசனம், நில ஆக்கிரமிப்பு வழக்குகள் என தன் வழக்கமான ஒன்றரை வருட சிறப்பான ஆட்சி கொள்கையை நிலைநாட்டினார். அரசியல் முதிர்ச்சி அவரை தி.மு.க வுடன் இணக்கமாக்கியது. இரண்டு பெரிய கட்சிகள்தான் தமிழ்நாட்டை ஆளவேண்டும் என அவரும் தீர்மானித்துவிட்டார். ஸ்டாலினை இப்போது தி.மு.க வின் அடுத்த தலைவராக்கும் கட்டாயத்தை ஜெயலலிதாவே ஏற்படுத்திகொடுத்தார். அதற்காக அழகிரியை செல்லாக்காசாக்கி விட்டார். விஜயகாந்தை  காலி செய்கிறார். எல்லாரும் மெச்சும்படி மின்சார தட்டுப்பாட்டை முற்றிலுமாக களைந்து விட்டார். ஆனால் மெல்ல தமிழ் தேசியவாதிகளுக்கு எதிராகவும் மாறிவருகிறார். பிரதமர் கனவு அவரை திசை மாற்றுகிறது.

சமீபமாக சீமான் போன்ற தமிழ் தேசியம் பேசும் தலைவர்களுக்கு எதிராக, அவர்கள் வளர்ந்து விடக்கூடாது என தொடர்ந்து அவர்கள்மீது அவதூறு பரப்புகிறார்கள். அப்படி அவதூறு பரப்புகிறவர்களின் பூர்விகத்தை தோண்டினால் தெலுங்கு வாசம் வீசுகிறது. பொதுவாகவே தமிழக மக்கள் தெலுங்கர்களோடு இனக்கமாக இருப்பவர்கள். இங்கிருக்கும்  தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர்கள் தங்கள் தாய்மொழியை தமிழாக மாற்றிக்கொண்டவர்களே. அப்படியிருக்க தி.மு.க. மற்றும் இடது, வலது சாரி கொள்கைகளை பேசும் சிலர் தொடர்ந்து தமிழ் தேசியவாதிகளை கிண்டல் பேசுகிறார்கள். தொடர்ந்து காவிரி பிரச்சினையும், முல்லை பெரியாறும் அரசியலாக்கப்டுகிறது. தமிழக மீனவனும் காயடிக்கப்படுகிறான். திராவிட அரசியல்வாதிகள் ஈழப்பிரச்சினையை ஓட்டு வங்கியாகத்தான் பார்க்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் தமிழகத்தின் பிரச்சினைக்காக தொடர்ந்து குரல் கொடுப்பவர்கள் தமிழ் தேசியவாதிகளே. வை.கோ தவிர்த்த மற்ற திராவிட தலைவர்களின் நேர்மை கேள்விக்குறியது. ஆந்திராவிலோ, கர்நாடாகவிலோ. கேரளத்திலோ யாரும் திராவிடம் பேசாதபோது தமிழ்நாட்டில் மட்டும் ஏன் திராவிடம் எனும் ஓட்டைப்பானையில் தமிழ் நீரள்ளுகிறார்கள்?.

மேலும் சீமானோ, மற்றவர்களோ அரசியலுக்கு வர ஆசைப்படுவதில் என்ன தவறு இருக்க முடியும். எல்லோரும் அரசியலுக்கு வரவிரும்புவது தனிப்பட்ட ஆர்வமே. கருணாநிதியும், ஜெயலலிதாவும் டாஸ்மாக்கை தெருவுக்கு தெரு திறந்து வைத்து மக்களை குடிகாரர்கள் ஆக்குவதற்குத்தான் பாடுபடுகிறார்கள். அரசாங்கமே மதுவை விற்கும் மோசமான நிலமை தமிழ்நாட்டில்தான் நடக்கிறது. தமிழகத்தின் நலனுக்காக பாடுபட வேண்டிய தலைவர்களான ராமதாசும், திருமாவளவனும் ஜாதித்தலைவர்களாக மாறி தமிழனை இன்னும் பின்னோக்கி இழுத்துச்செல்ல பாடுபடுகிறார்கள். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக அரசாங்கத்தை பயண்படுத்துவதைத்தான் இப்போதைய திராவிட தலைவர்கள் செய்கிறார்கள்.

ஒரு மாற்றம் தேவை. ஜனநாயக நாட்டில் யாருக்கும் அரசியலுக்கு வர உரிமை இருக்கிறது. தமிழ்தேசியம் பேசினால் தமிழ்நாட்டின் ஒருமைப்பாடு குலைந்துவிடும் என சொல்வது எல்லாம் அபத்தம். ஒரு தமிழ்தேசியவாதி முதல்வரானால் மட்டுமே மீனவர் பிரச்சனை முதல் ஈழப்பிரச்சினைவரை தீர்மானமான முடிவை எட்டமுடியும். இனம் அழிந்துகொண்டிருந்தபோது மானாட மயிலாட காட்டியவர்களையோ, போர் என்றால் உயிர்ப்பலி இருக்கும்தான் என கேலி பேசியவர்களையோ தங்கள் வாழ்நாள் மேய்ப்பர்களாக கருதும் பலியாடுகள் இப்போது குரைக்க கத்துக்கொண்டிருக்கின்றன. அடிமைகளே நாங்கள் பேசுவது உங்களுக்காகவும்தான்...

9 கருத்துகள்:

Gujaal சொன்னது…

//ஒரு மாற்றம் தேவை. ஜனநாயக நாட்டில் யாருக்கும் அரசியலுக்கு வர உரிமை இருக்கிறது. //

அந்த உரிமை 'அண்ணா'/'அப்பா' S.A.C-க்கும் உண்டு. எப்பாடுபட்டாகிலும் ம்யாவ்-வின் போர்ப்படை அவரை முதல்வர் நாற்காலியில் அமர்த்துவார்கள்.

viyasan சொன்னது…

//சமீபமாக சீமான் போன்ற தமிழ் தேசியம் பேசும் தலைவர்களுக்கு எதிராக, அவர்கள் வளர்ந்து விடக்கூடாது என தொடர்ந்து அவர்கள்மீது அவதூறு பரப்புகிறார்கள். அப்படி அவதூறு பரப்புகிறவர்களின் பூர்விகத்தை தோண்டினால் தெலுங்கு வாசம் வீசுகிறது. பொதுவாகவே தமிழக மக்கள் தெலுங்கர்களோடு இனக்கமாக இருப்பவர்கள். இங்கிருக்கும் தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர்கள் தங்கள் தாய்மொழியை தமிழாக மாற்றிக்கொண்டவர்களே. அப்படியிருக்க தி.மு.க. மற்றும் இடது, வலது சாரி கொள்கைகளை பேசும் சிலர் தொடர்ந்து தமிழ் தேசியவாதிகளை கிண்டல் பேசுகிறார்கள். தொடர்ந்து காவிரி பிரச்சினையும், முல்லை பெரியாறும் அரசியலாக்கப்டுகிறது. தமிழக மீனவனும் காயடிக்கப்படுகிறான். திராவிட அரசியல்வாதிகள் ஈழப்பிரச்சினையை ஓட்டு வங்கியாகத்தான் பார்க்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் தமிழகத்தின் பிரச்சினைக்காக தொடர்ந்து குரல் கொடுப்பவர்கள் தமிழ் தேசியவாதிகளே. வை.கோ தவிர்த்த மற்ற திராவிட தலைவர்களின் நேர்மை கேள்விக்குறியது. ஆந்திராவிலோ, கர்நாடாகவிலோ. கேரளத்திலோ யாரும் திராவிடம் பேசாதபோது தமிழ்நாட்டில் மட்டும் ஏன் திராவிடம் எனும் ஓட்டைப்பானையில் தமிழ் நீரள்ளுகிறார்கள்?.//

இவ்வளவு தெளிவாக, துணிச்சலாக பேசியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

ஜோதிஜி சொன்னது…

எனது பாராட்டுகளை எழுதிவதில் பெருமையடைகின்றேன்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

//அரசியல் முதிர்ச்சி அவரை தி.மு.க வுடன் இணக்கமாக்கியது. இரண்டு பெரிய கட்சிகள்தான் தமிழ்நாட்டை ஆளவேண்டும் என அவரும் தீர்மானித்துவிட்டார். ஸ்டாலினை இப்போது தி.மு.க வின் அடுத்த தலைவராக்கும் கட்டாயத்தை ஜெயலலிதாவே ஏற்படுத்திகொடுத்தார். அதற்காக அழகிரியை செல்லாக்காசாக்கி விட்டார். விஜயகாந்தை காலி செய்கிறார். எல்லாரும் மெச்சும்படி மின்சார தட்டுப்பாட்டை முற்றிலுமாக களைந்து விட்டார். ஆனால் மெல்ல தமிழ் தேசியவாதிகளுக்கு எதிராகவும் மாறிவருகிறார். பிரதமர் கனவு அவரை திசை மாற்றுகிறது.//

உண்மை அண்ணா...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

இனம் அழிந்துகொண்டிருந்தபோது மானாட மயிலாட காட்டியவர்களையோ, போர் என்றால் உயிர்ப்பலி இருக்கும்தான் என கேலி பேசியவர்களையோ தங்கள் வாழ்நாள் மேய்ப்பர்களாக கருதும் பலியாடுகள் இப்போது குரைக்க கத்துக்கொண்டிருக்கின்றன. அடிமைகளே நாங்கள் பேசுவது உங்களுக்காகவும்தான்..//

பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டு போர் என்றால் உயிர்பலி இருக்கும் என்று தைரியமாக சொன்னவனைஎல்லாம் தமிழன் என்றும், தலைவன் என்றும் நம்பிகொண்டிருக்கும் மறத்தமிழன் வாழ்க...வேற என்னாத்தை சொல்ல அண்ணே....

சாட்டையடி பதிவு...!

டிபிஆர்.ஜோசப் சொன்னது…

கேரளத்திலோ யாரும் திராவிடம் பேசாதபோது தமிழ்நாட்டில் மட்டும் ஏன் திராவிடம் எனும் ஓட்டைப்பானையில் தமிழ் நீரள்ளுகிறார்கள்?.//

தமிழகத்தின் நலனுக்காக பாடுபட வேண்டிய தலைவர்களான ராமதாசும், திருமாவளவனும் ஜாதித்தலைவர்களாக மாறி தமிழனை இன்னும் பின்னோக்கி இழுத்துச்செல்ல பாடுபடுகிறார்கள். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக அரசாங்கத்தை பயண்படுத்துவதைத்தான் இப்போதைய திராவிட தலைவர்கள் செய்கிறார்கள்.//

என்னைப் போன்ற பலரும் சொல்ல நினைத்து தயங்குபவற்றை துணிந்து சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்க்ள.

ஆரூரன் விசுவநாதன் சொன்னது…

நல்லதொரு அலசல்...வாழ்த்துக்கள்

Tirupurvalu சொன்னது…

You show the VAIKO is a good man now in the race .But nobody know what going on inside MDMK.One man show is going still .Anybody include Vaiko know what is his policy for tamilnadu .He start in every meeting the story of EELAM.We support EELAM there is no doubt but we have to live to get or see EELAM rising .For living what VAIKO have policy .No answer from anybody include Vaiko .Please note one 1st time VAIKO met mid election in Perundurai .He got 2nd place DMK 3rd place i think dmk lost deposit .After that i think he went a long march against Jaiyalalitha government but finished in Chennai on J.J legs .He announced alliance and spoke in same perundurai area after he got 2nd place before months .peoples closed their ears because VAIKO gave good certificates to J.J.On that period Sudhakaran marriage ,sasi & co problem all peoples watched .If he stand as a single party on that time he got the C.M post .Still peoples not believe VAIKO as a good man to rule .Still VAIKO also not know this is the reason .He need to open his mouth for all matters to peoples then he will get a chance i think

kamalakkannan சொன்னது…

இந்த முறை எனது ஒட்டு நாம் தமிழர் கட்சிக்குத்தான்