7 மே, 2010

நதியின் கரையில்

எல்லாப் பார்வைகளும் 
ஒன்றாய் இருப்பதில்லை 
பைத்தியக்காரன் 
வானத்தை பார்க்க 
காதல் செய்பவள் நிலம் நோக்க 
கடன் கொடுத்தவன் 
தேதி நகர்த்த 
வாங்கியவன் இரவுகளை 
நீட்ட 
பிச்சைக்காரன் 
மழையினை சபிக்க 
விவசாயி வெயிலை 
வெறுக்க 
வியாபாரி வசூலுக்கு 
ஒளிய
பக்தன் கடவுளைத் தேட 
முந்தியவன் 
பிந்தியவனை நகைக்க 
ஓடிகொண்டிருக்கிறது நதி
வற்றிகொண்டிருக்கிறது அணை
அறுவடைக்கு 
தயாராகாத பயிர் 
வம்சவிருத்திக்கு வரும் 
வெளிநாட்டுப் பறவைகள் 
எறிகொண்டிருக்கும் விலைவாசி 
இறங்கிகொண்டிருக்கும் பண்பு 
கவிதை போன்ற இதுவும் 
ஒன்றைப்போல் இருப்பதில்லை 
ஒன்றாய் இருப்பதில்லை....
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx


குடிக்க மினரல் வாட்டர் 
கொப்பளிக்க டாஸ்மாக் பீரு
புகைக்க கணேஷ் பீடி 
பிழைக்க ரேசன் அரிசி 
நகைக்க சிரிப்பொலி 
களிக்க முடியாத 
கரண்ட் கட் 
வோட்டுக்கு துட்டு 
இவ்வளவும் செஞ்சுட்டோம் 
இன்னமும் செய்வோம் 
கிளம்புடா மாநாட்டுக்கு 
அழைகிறார் கட் அவுட்டில்....

10 கருத்துகள்:

Chitra சொன்னது…

/////எல்லாப் பார்வைகளும்
ஒன்றாய் இருப்பதில்லை
பைத்தியக்காரன்
வானத்தை பார்க்க
காதல் செய்பவள் நிலம் நோக்க
கடன் கொடுத்தவன்
தேதி நகர்த்த
வாங்கியவன் இரவுகளை
நீட்ட
பிச்சைக்காரன்
மழையினை சபிக்க
விவசாயி வெயிலை
வெறுக்க
வியாபாரி வசூலுக்கு
ஒளிய////


.....super! very nice.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//கிளம்புடா மாநாட்டுக்கு //

பிரியாணி பொட்டலம் தருவீகளா?

Unknown சொன்னது…

//.....super! very nice.//
நன்றி சித்ரா

Unknown சொன்னது…

//பிரியாணி பொட்டலம் தருவீகளா? //
அது இல்லாமலா? குவாட்டருடன் உண்டு ..

பெயரில்லா சொன்னது…

ரொம்ப நல்லா இருக்குங்க.

Unknown சொன்னது…

//ரொம்ப நல்லா இருக்குங்க. //

நன்றிங்க...

ஹேமா சொன்னது…

பார்வைகள் ஒன்றாக இருந்துவிட்டால் மனநிலைகள் ஒன்றாயிருக்குமே.உலகத்தில பிரச்சனையே இருக்காது செந்தில்.வரிகள் தொடுத்த விதம் அருமை.

குழந்தைநிலாப் பக்கம் வாங்க.குரங்கு கடிக்காது !எவ்ளோ அழகான குரங்கு அது.ஏன் முறைக்குதுன்னுதான் தெரில !

இங்கயே பாருங்க குரங்கைப் பார்க்கிறதிலயே உங்க பார்வையும் என் பார்வையும் வேற வேறயா இருக்கு.

Unknown சொன்னது…

நன்றி..ஹேமா

ஹேமா சொன்னது…

செந்தில் "சே"யின் படம் profile ல இணைச்சிருக்கிருக்கீங்க.பிடிச்சிருக்கு.

Unknown சொன்னது…

//செந்தில் "சே"யின் படம் profile ல இணைச்சிருக்கிருக்கீங்க.பிடிச்சிருக்கு.//

ஹேமா சே என் என் ஆதர்சம் ...