14 மே, 2010

மீந்த இரவுகள்


இரவுகளை தின்று தீர்க்கும்
தீராக் காமமாய் 
நிலப் பெண்ணுக்கு ஆடை தரும் 
கிருஷ்ணப் பெருமழை  

பசி ருசி அறியாது 
காசுக்குப் போகலாம் 
வேசையால் வரும் வியாதிக்கு பயம் 

சுடலைமாட சுவாமிக்கு 
குளிருது, கொதிக்குது 
ஒற்றையாய் காவல் 
தவிக்குது, தயங்குது 

மரத்தை வச்சவன் தண்ணி ஊத்தல 
சொன்னபடி கேளு மக்கர் பண்ணாத 

அறிந்தபின் மனமே 
தெளிவது நீதி 

போதையில் பகிர 
தெளிந்தபின் பிதற்றுவான் 
நண்பன் 

அதே மழை 
அதே கிருஷ்ணன் 
ராதைகள் அற்ற கிருஷ்ணன்

21 கருத்துகள்:

vinthaimanithan சொன்னது…

ராதைக்கே வழியக்காணும்னு பொலம்பிட்டு ‘ராதைகள்’ வேறயா!!!!

Unknown சொன்னது…

//ராதைக்கே வழியக்காணும்னு பொலம்பிட்டு ‘ராதைகள்’ வேறயா!!!//

தினம் ஒரு கனவு
தினம் ஒரு ராதை
ராதைகள் ...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அருமையான கவிதை.

sathishsangkavi.blogspot.com சொன்னது…

//போதையில் பகிர
தெளிந்தபின் பிதற்றுவான்
நண்பன் //

சரிதான்....

கவிதை நல்லாயிருக்குங்க....

காமராஜ் சொன்னது…

முதல் ரெண்டு பத்தியும்
நெடு நெடு வெனக் கவிதையைத்தூக்கி உயர நிறுத்துகிறது.

மரத்த வச்சவன் தண்ணி ஊத்தல 'புதிய கோணங்கி'.

செந்தில்.. க்ளாஸ் கவிதை செந்தில்

Unknown சொன்னது…

//அருமையான கவிதை.//

நன்றி ரமேஷ்

Unknown சொன்னது…

//கவிதை நல்லாயிருக்குங்க....//

நன்றி சங்கவி சார்

Unknown சொன்னது…

//செந்தில்.. க்ளாஸ் கவிதை செந்தில்//நன்றி காமராஜ் சார்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//செந்தில்.. க்ளாஸ் கவிதை செந்தில் //

ஏம்ப்பா செந்திலுக்கு கிளாஸ் எல்லாம் நியாபக படுத்துறீங்க.

Unknown சொன்னது…

//ஏம்ப்பா செந்திலுக்கு கிளாஸ் எல்லாம் நியாபக படுத்துறீங்க//

அப்பத்தான் கவிதை வரும்ன்னு அவருக்கு தெரிஞ்சிருக்கு...

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

அருமை

Unknown சொன்னது…

//அருமை//

நன்றி ஐய்யா

vinthaimanithan சொன்னது…

ராதை வேற வேணுமா? இருங்க இருங்க... அண்ணிகிட்ட சொல்றேன்

Unknown சொன்னது…

//ராதை வேற வேணுமா? இருங்க இருங்க... அண்ணிகிட்ட சொல்றேன்//

போதையில் பகிர
தெளிந்தபின் பிதற்றுவான்
நண்பன்...

மங்குனி அமைச்சர் சொன்னது…

நல்லாருக்கு சார்

Unknown சொன்னது…

நன்றி....மங்குனி அமைச்சர்

ஹேமா சொன்னது…

ம்ம்ம்..செந்தில் கவிதை தொட்ட கரு அருமை.

VELU.G சொன்னது…

கவிதை அருமை செந்தில்

அன்புடன் அருணா சொன்னது…

அருமை!

நேசமித்ரன் சொன்னது…

//இரவுகளை தின்று தீர்க்கும்
தீராக் காமமாய்
நிலப் பெண்ணுக்கு ஆடை தரும்
கிருஷ்ணப் பெருமழை //

பிணைப்பற்று இருப்பதின் மீதான இந்த வரிகளில் இருக்கும் நிலம் மழை பெண் இரவுப் பிணைப்பு
நன்றாக இருக்கு செந்தில் சார்

Unknown சொன்னது…

நன்றிகள்

ஹேமா

அருணா

வேலு

நேசமித்திரன் சார்