19 மே, 2010

தமிழன் - பயோடேட்டா

பெயர்                                   : தமிழன் 
இயற்பெயர்                : திராவிடர்கள் 
தலைவர்                            : அரசியல் தலைவர்கள், சினிமா ஹீரோக்கள்.. 
துணை தலைவர்       : சாதி தலைவர்கள் 
மேலும் துணைத் தலைவர்கள் : லோக்கல் தாதாக்கள் 
வயது                                   :  கல் தோன்றி, மண் தோன்றா காலத்துக்கு முந்தைய மூத்த குடி ... (எப்பூடி)
தொழில்                           : சினிமா மற்றும் சீரியல் பார்ப்பது, டீக்கடையில் அரசியல், பாராட்டு விழா எடுப்பது, நடிகைக்கு கோவில் கட்டுவது,  
பலம்                                     : உலகம் முழுக்க பரவியது  
பலவீனம்                          : சினிமாவில் தலைவனை தேடுவது , தனித்தனியாய் செயல்படுவது
நீண்ட கால சாதனைகள் : யாதும் ஊரே யாவரும் கேளிர் 
சமீபத்திய சாதனைகள் : காசு வாங்கிட்டு ஒட்டு போடுவது 
நீண்ட கால எரிச்சல்       : ஆங்கிலம் பேசுபவர்கள் 
சமீபத்திய எரிச்சல்            : இருட்டில் ஒன்னும் தெரியல 
மக்கள்                                          : தமிழ் பேசும் அனைவரும் ?.. 
சொத்து மதிப்பு                     : ஒரு கலர் டிவி-யும், 20 கிலோ அரிசியும் 
நண்பர்கள்                               : கடன் கொடுப்பவர்கள் 
எதிரிகள்                                    : பக்கத்துக்கு வீட்டுக்காரர்கள் 
ஆசை                                           : வெளி நாட்டு வேலை 
நிராசை                                     : எனக்கு டிவி கிடைக்கல 
பாராட்டுக்குரியது         எல்லோரையும் நம்புவது 
பயம்                                  நமக்கெதுக்கு வம்பு 
கோபம்                                       : சொரணை உள்ளவனுக்கு இருக்க வேண்டியது  
காணமல் போனவை  : தமிழில் பேசுவது  
புதியவை                                 :  யாருக்காவது சொம்பு தூக்குவது  
கருத்து                                        : சாமியாரோ, சினிமாக்காரனோ, அரசியல்வாதியோ ஒரு தலைவன் தேவை 
டிஸ்கி                               : பக்கத்துல இன அழிப்பு நடந்தபோது எதைபற்றியும் கவலைப் படாமல் சீரியல் பார்த்தவர்கள் நாங்கள்..

27 கருத்துகள்:

Unknown சொன்னது…

நன்று டிஷும் டிஷும் டிஸ்கி

ஹேமா சொன்னது…

செந்தில்.....எங்க பல்லை நோண்டி நாங்களே .....!

ஆனாலும் உண்மைகள்.

ஆனாலும் தேவையானவையே !

Chitra சொன்னது…

டிஸ்கி : பக்கத்துல இன அழிப்பு நடந்தபோது எதைபற்றியும் கவலைப் படாமல் சீரியல் பார்த்தவர்கள் நாங்கள்.


.......பக்கத்துல வீட்டுல ஒண்ணு நடக்கும் போதே, எல்லாம் முடிஞ்ச புறகு வந்து, வேடிக்கை பார்ப்பவர்கள் பற்றியும் தெரியும். ஹூம்..... என்ன செய்ய?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

hey what is this ya. who is tamilan. என்க்கு டமில் தெர்யாது. யார் டமிழன். டெல் மீ யா

Unknown சொன்னது…

//நன்று டிஷும் டிஷும் டிஸ்கி//

வாங்க கலாநேசன் ..

Unknown சொன்னது…

//செந்தில்.....எங்க பல்லை நோண்டி நாங்களே .....!//

இதைபோல இன்னும் எத்தனை எழுதினாலும் சொரணை வராது...

Unknown சொன்னது…

//.......பக்கத்துல வீட்டுல ஒண்ணு நடக்கும் போதே, எல்லாம் முடிஞ்ச புறகு வந்து, வேடிக்கை பார்ப்பவர்கள் பற்றியும் தெரியும். ஹூம்..... என்ன செய்ய?//

அடுத்தவனுக்கு ஒரு உதவி என்றால் ஓடோடி சென்று உதவும் நம் குணம் காணாமல் போய்விட்டது சித்ரா ...

Unknown சொன்னது…

//hey what is this ya. who is tamilan. என்க்கு டமில் தெர்யாது. யார் டமிழன். டெல் மீ யா//

சூப்பர் சார் .....

மரா சொன்னது…

சொத்து தான் சூப்பர் நண்பரே..

Unknown சொன்னது…

//சொத்து தான் சூப்பர் நண்பரே..//

முன்னாடி மானம் , மரியாதை இப்போது இது ...

நன்றி அண்ணாச்சி ..

vasan சொன்னது…

த‌மிழ‌ன் ப‌யோடேட்டா:

100 க்கு 100 செந்தில்.
(லாங்குவேசுக்கு முழு மார்க் போட‌மாட்ட‌ங்க‌னாலும்.
அது எப்ப‌டி த‌மிழ‌னுக்குப் பொருத்த‌மா 'காவ‌டி தூக்க‌ற‌'
சூப்ப‌ர் ப‌ட‌த்தை தேடிப் பொருத்தினிங்க‌.
அதுக்கு ஒரு 25 மார்க் போன‌ஷ்.

Unknown சொன்னது…

//100 க்கு 100 செந்தில்.//

நன்றி அண்ணே ..

பெயரில்லா சொன்னது…

how can you expect us to scream for the people who killed our PM? This is unfair.

mohamedali jinnah சொன்னது…

நல்லா எழுதிருங்கோ ஆனால் உண்மையா

mohamedali jinnah சொன்னது…

நல்லா எழுதிருங்கோ ஆனால் உண்மையா படம் அருமை அதவே ஒரு பயோடேட்டா

Karthick Chidambaram சொன்னது…

தலைவா ! கலக்கல். அப்புறம் உங்களுக்கும் டிவி கிடைக்கலையா ?

Karthick
http://konjamalasalkonjamkirukkal.blogspot.com/

Unknown சொன்னது…

//நல்லா எழுதிருங்கோ ஆனால் உண்மையா படம் அருமை அதவே ஒரு பயோடேட்டா//

வணக்கம் ஐயா, இது நம்ம குல வழக்கம் ..

Unknown சொன்னது…

//தலைவா ! கலக்கல். அப்புறம் உங்களுக்கும் டிவி கிடைக்கலையா ?//வாங்கிக்கல கார்த்திக் ...

Kumar சொன்னது…

பெயரில்லா சொன்னது…
how can you expect us to scream for the people who killed our PM? This is unfair.

20 மே, 2010 10:48 am

Mr Anonymous, that PM only send the peace keeping force and killed many innocent peoples and raped so many girls in sri lanka. Why you ppl dont remember these things. Are you justify this things or will be be speak like this if you are the victim and loose any of your child?

Just look back the history before talk anything...

Thanks,
Kumar

settaikkaran சொன்னது…

தல, தலைவணங்குகிறேன்!

Unknown சொன்னது…

நன்றி சேட்டைக்காரன்

Unknown சொன்னது…

நன்றி குமார் சரியான பதிலை சொல்லியிருக்கிறீர்கள் ,
அனானிகளின் விமர்சனங்களுக்கு நான் பதில் சொல்வதில்லை .

S@theeS சொன்னது…

THIS INDIAN ENA INAMOOOOOOOO? MY GOD...

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

சொத்து மதிப்பு : ஒரு கலர் டிவி-யும், 20 கிலோ அரிசியும்
எனக்கு டி.வி.யும் கிடைக்கல அரிசியும் வாங்கறதில்ல

அத்திரி சொன்னது…

//சொத்து மதிப்பு : ஒரு கலர் டிவி-யும், 20 கிலோ அரிசியும் //நம்மளை நாமே பாத்து சிரிக்கக்கூடாது...........இருந்தாலும் வர்ற சிரிப்பை அடக்கமுடியல

kethirapalu சொன்னது…

ராஜீவ் கொலைக்கு முன்னர் தமிழன் எப்படி இருந்தானாம் சற்று விளக்கவும்.

ராஜ நடராஜன் சொன்னது…

டாக்டர் அப்துல்கலாமை கேட்டால் தன்னம்பிக்கை இழக்க வைக்கும் பயடேட்டா என்பார்:)

ஆனால் யதார்த்தமென்ற கோணத்தில் பயோடேட்டா வெற்றி பெறுகிறது.

இவ்வளவு நாளும் தனிமனித ஆப்புதான்:)