12 மே, 2010

நாம் தமிழர் இயக்கம் - என்ன செய்ய வேண்டும் ...


வருகிற மே 18- ஆம் தேதி மதுரையில் மாநாடு நடத்தி தன்னை ஒரு அரசியல் கட்சியாக அறிவிக்கும் நாம் தமிழர் இயக்கம் மேல் ஒரு பயப்பார்வை எல்லா அரசியல் கட்சிகளுக்கும் வந்திருக்கும்.
நாம் தமிழர் இயக்கம்  ஒரு மாபெரும்  கட்சியென்று காட்டப் போகிறார்களா? இல்லை பத்தோடு பதினொன்றா?  என காலம் நிச்சயம் காட்டிவிடும்.

சாதகமானவற்றை பார்க்கலாம்.

1. இன்றைய தேதிக்கு பொது நலன் மட்டுமே கருத்தில் கொள்ளும் கட்சி தமிழ் நாட்டில் இல்லை ( மொத்த இந்தியாவிலும் கூட), இந்த வெற்றிடத்தை நிரப்பும் வாய்ப்பு இந்த இயக்கத்துக்கு உண்டு.

2. சீமான் உணர்ச்சி வசப்பட்டதால் உருவான கட்சி இது, இனிமேல் நிதானம் தேவைப்படும், இல்லையெனில் ம.தி.மு.க போல நோக்கம் சிதைந்து காணாமல் போகலாம்.

3. பிராபாகரன் போலவே சீமான் மட்டுமே தலைவர் , ஒரு வகையில் இது சரிதான், ஆனால்  உடனடியாக கட்டமைப்புகளை ஏற்படுத்தல் வேண்டும்.

4. நடு நிலையாளர்களை கட்சிக்குள் கொண்டு வரவேண்டும், ஈழ தமிழனுக்காக துவங்கும் கட்சி என்ற பார்வை களையப்பட்டு, ஒட்டு மொத்த தமிழனுக்கும் என அறிவிக்கப்பட வேண்டும் 

5. மாணவர்கள் அனைவரையும் கட்சிக்குள் கொண்டு வரலாம்,.

6. நிதி ஆதாரம் எப்படி பெறப் போகிறார்கள்  என்பதில் இருக்கிறது இதன் வெற்றி , எனவே இதனை பற்றிய தெளிவான திட்டம் வேண்டும் 

7. எம்.ஜி.ஆருக்கு பின் வைகோ, விஜயகாந்த் போன்றவர்கள் அந்த இடத்தை நிரப்பும் வாய்ப்பு பெற்றிருந்தார்கள், ஆனால் தவற விட்டார்கள்,  திட்டமிடல் இருந்தால் சீமான் தக்க வைக்கலாம்.

8.  தி.மு.க , அ.தி.மு.க போன்ற பெரும் கட்சிகளுக்கு மாற்றாக கொண்டு வர வேண்டுமெனில் இளைஞர்களை பெருமளவில் கொண்டு வரவேண்டும்.

9. அவசரப்படாமல் நிதானமாக செயல்பட்டால் இந்த இயக்கத்துக்கு எதிர்காலம் உண்டு.

10. இனி ஈழப் பிரச்சினைகளுக்கு மட்டும் குரல் எழுப்பாமல், அடிப்படை பிரச்சினைகளுக்கும் குரல் எழுப்பினால் மக்கள் கவனம் திரும்பும்.

11. பத்திரிக்கையாளர்களின் துணை இருந்தால் வெற்றி நிச்சயம், சீமானுக்கு இது நிரம்ப உண்டு.

12. தமிழர்களுக்கு (தமிழ் பேசும் அனைவரும் தமிழர்களே) உரிய அங்கீகாரம் உலகில் கிடைக்க உங்கள் அனைவரின் தார்மீக ஆதரவை கொடுங்கள் ..


இயக்கத்தின் உறுப்பினர் படிவ உறுதி மொழி 


டிஸ்கி :     கருத்துகள் சொல்வோர் அனைவரும் இந்த கட்சி வளர்வதற்கான ஆலோசனைகளை மட்டும் சொல்லுமாறு வேண்டிக் கொள்கிறேன், தனிப்பட்ட கோபங்களுக்கும், பகடிகளுக்கும் என் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் ...

16 கருத்துகள்:

ராஜ நடராஜன் சொன்னது…

ஆக்கபூர்வமான இடுகை செந்தில்!

சீமானின் பார்வைக்கு செல்லட்டும்.

ஹேமா சொன்னது…

செந்தில் உங்கள் பதிவைத் தாண்டி எங்கோ போய்விட்டது மனம்.கண் கலங்கித் தவிக்கிறோம்.தமிழின் உணர்வோடு கை கோர்ப்போம்.நன்றி செந்தில்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

கண்டிப்பாக ஆதரவு உண்டு..

Unknown சொன்னது…

//ஆக்கபூர்வமான இடுகை செந்தில்! சீமானின் பார்வைக்கு செல்லட்டும்.//

நன்றி ராஜ நடராஜன்

Unknown சொன்னது…

//செந்தில் உங்கள் பதிவைத் தாண்டி எங்கோ போய்விட்டது மனம்.கண் கலங்கித் தவிக்கிறோம்.தமிழின் உணர்வோடு கை கோர்ப்போம்.நன்றி செந்தில்//

உணர்வுக்கும் ஆதரவுக்கும் நன்றி ஹேமா

Unknown சொன்னது…

//கண்டிப்பாக ஆதரவு உண்டு//

நன்றி ரமேஷ்

vinthaimanithan சொன்னது…

கண்டிப்பாக நான் அனுப்பும் எதிர்வினை உங்கள் தனி அஞ்சலுக்குரியதாய்த்தானிருக்கும்...

Unknown சொன்னது…

//கண்டிப்பாக நான் அனுப்பும் எதிர்வினை உங்கள் தனி அஞ்சலுக்குரியதாய்த்தானிருக்கும்//

அனுப்புங்க தம்பி

Bibiliobibuli சொன்னது…

////ஈழ தமிழனுக்காக துவங்கும் கட்சி என்ற பார்வை களையப்பட்டு, ஒட்டு மொத்த தமிழனுக்கும் என அறிவிக்கப்பட வேண்டும்////

இதை கடைசியாக சீமான் கனடா வந்தபோது (அது மாற வேண்டும் என்பது என் விருப்பம், அவா) தெளிவாக குறிப்பிட்டிருந்தார். இது உலகிலுள்ள அனைத்து தமிழர்களுக்குமான ஓர் இயக்கம் என்று தான் ஊடகப்பேட்டிகளில் குறிப்பிட்டார். அரசியல் கட்சியாக மாற்றப்படும் சந்தர்ப்பத்தில் நீங்கள் சொல்லும் அத்தனையும் நாம் தமிழர் இயக்கத்தால் "நிச்சயமாக" கவனிக்கப்படவேண்டும். காலத்திற்கேற்ற பதிவு.

பெயரில்லா சொன்னது…

need a channel and news paper imm.

பெயரில்லா சொன்னது…

9.10.11 kattayam ilyi

சௌந்தர் சொன்னது…

எதாவது காரணத்தை சொல்லி தடை செய்யாமல் இருத்தல் சரி

marai சொன்னது…

nantri aakkapoorvamaana katturai vanakkam

தமிழன் சொன்னது…

நான் இதுவரை ஆதரித்த இயக்கம் தி.மு.க. ஆனால் கருணாநிதி உலகில் யாராலும் இருக்க முடியாத உண்ணாவிரதத்தை (தூ) சாதனை புரிந்த பின்னர் அந்த கட்சியில் நீடிக்க விருப்பம் இல்லை. சீமான் சாதிப்பார் என்று நம்புகிறேன். அதற்கு தமிழர்கள் ஆகிய நாம் ஆதரவு தெரிவிப்போம்.

நீ தமிழன் நான் தமிழன் நாம் தமிழர் என்று உரக்க கூறுவோம்.

பாலா சொன்னது…

//இல்லையெனில் ம.தி.மு.க போல நோக்கம் சிதைந்து காணாமல் போகலாம்//
மதிமுகவின் நோக்கம் சிதைந்தது என்று நீங்கள் எவ்வாறு கூறுகிறீர்கள்..? இணையதளத்திலும் நேரிலும் நான் பார்க்கும் சீமான் கட்சிகாரர்கள் உண்மையான துரோகம் செய்த திமுகவை விட்டு மதிமுகவை களங்கப்படுத்தவே நினைக்கிறார்கள். என்னுடைய பார்வையில் சீமான் கனிமொழியின் ஆசியில் வைகோவின் ஆதரவாளர்களை பிரிக்கும் நோக்கத்தில் நாம் தமிழர் இயக்கத்தை நடத்திகிறார் என்று நினைக்கிறேன். நீங்கள் கூறலாம் ஈழ தமிழருக்காக மும்பையில் எல்லாம் போராட்டம் நடத்தினோம். கனடாவில் கைது செய்யப்பட்டார் என்று.. ஏன் இது திட்டமிட்ட நிகழ்வாக சீமானை ஈழ விசயத்தில் முன்னிலை படுத்தி ஈழ ஆதரவாளர்களை பிரித்தாளும் சூழ்ச்சி ஆக இருக்க கூடாது.. மேலும் வைகோவை விடுங்கள் ஐயா நெடுமாறனுடன் சீமான் இணைந்து செயல்படுவதில் என்ன பிரச்னை.. சீமான் தன்னை களங்கமற்றவர் என்று நிரூபிக்க நிறைய தியாயங்கள் செய்ய வேண்டும். மற்றொருவரை களங்கப்படுத்தி தான் நல்லவராக காட்டி கொள்ளக்கூடாது. சீமானுக்கும் ஜெகத் கஷ்பருக்கும் உள்ள தொடர்பு அனைவரும் அறிந்ததே.. சீமானையும் வைகோவையும் ஒப்புமைபடுத்துவதை நிறுத்தி நேர்மையான வழியில் கட்சியை நடத்துங்கள் வைகோவும் அவரின் தொண்டர்களும் தமிழக மக்களும் உங்களை ஏற்றுகொள்வார்கள். அதை விடுத்து கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல் எரியாதிர்கள்..

ராஜ நடராஜன் சொன்னது…

//அதை விடுத்து கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல் எறீயாதிர்கள்.. //

மறுமலர்ச்சி துவக்க காலத்தில் வை.கோ மீது நிறைய பேருக்கு நிறைய நம்பிக்கை இருந்தது.தனது தவறான வியூகங்களால் எல்லாம் தலைகீழ் விகிதம்.சென்ற பாராளுமன்றத் தேர்வின் போது கூட ஈகோ இல்லாமல் ஒன்றிணைந்திருந்தால் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்திருக்க முடியும்.

வரும் நாட்கள் சீமானை தராசுதட்டில் உட்கார வைக்கும்.