13 மே, 2010

இறைவன் திருவடி சரணம்


அர்ச்சனைகள் ஆயிரம் 
லட்ச  அர்ச்சனைகளும் உண்டு,
ஐயப்பனுக்கு நாப்பது நாள் 
திருப்பதிக்கு மொட்டை 
குலதெய்வத்துக்கு ஆடு 
திரவ்பதி அம்மனுக்கு தீ மிதி 
கந்தனுக்கு காவடி 
சிவனுக்கு பிரதோஷ விரதம்  
பிள்ளையாருக்கு அருகு போதும் 
கிழமைகள் தோறும் 
கிரகங்களுக்கு விளக்கு 
வேளாங்கண்ணிக்கு நடை நேர்த்தி 
நாகூர் ஆண்டவருக்கு காணிக்கை 
இத்தனையும் செய்தும் 
திருப்தியற்ற இறைவன் 
இன்னும் எதிர்பார்க்க 
கோடி அர்ச்சனைக்கு பணம் கட்ட 
வரிசையில் நிற்கிறான் 
பக்தன் ...

12 கருத்துகள்:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நம்ம ஆளுங்க திருந்த மாட்டாங்க பாஸ்

Unknown சொன்னது…

//நம்ம ஆளுங்க திருந்த மாட்டாங்க பாஸ்//

ஊதுற சங்க ஊத்தி வைப்போம் ...

vasan சொன்னது…

திருப்திய‌ற்ற‌வ‌ன் க‌ட‌வுள‌ல்ல‌!!
`ம‌னித‌ன்.` ஒன்று கிடைக்க‌
தெழ‌த்துவ‌ங்கி, வ‌ருசையாய்
வ‌ள‌ரும் ஆசைக்காய், இங்கும் அங்கும்
இன்னும் இன்னும், மேலும் மேலுமாய்
ஆசைக‌ள், தேவைகள், ப்ராத்த‌னைக‌ளை
வள‌ர்த்துகிற‌து.

ஹேமா சொன்னது…

கடவுள் கேட்டாரா.அவர் தாறதா நம்புறாங்க.அவருக்கே குடுக்கிறாங்க.
விடுங்க செந்தில் !

Unknown சொன்னது…

//ஆசைக‌ள், தேவைகள், ப்ராத்த‌னைக‌ளை
வள‌ர்த்துகிற‌து.//

நன்றி வாசன் சார்

Unknown சொன்னது…

//கடவுள் கேட்டாரா.அவர் தாறதா நம்புறாங்க.அவருக்கே குடுக்கிறாங்க.
விடுங்க செந்தில் !//

எதோ நம்மாளனது கவிதை சொல்றோம்..

நன்றி ஹேமா

Aathira mullai சொன்னது…

செல்வம் என்பது சிந்தையின் நிறைவே. எப்போது போதும் என்ற மனம் என்று மனிதனுக்கு வருகிறதோ அப்போது இவையெல்லாம்..குறையும்... நன்றாக ஊதியுள்ளீர்கள். சங்கை... உங்கள் சமுதாயச் சிந்தனைக்குப் பாராட்டுக்கள்.

Unknown சொன்னது…

//உங்கள் சமுதாயச் சிந்தனைக்குப் பாராட்டுக்கள்//

நன்றி ஆதிரா ...

vinthaimanithan சொன்னது…

ஒரு நாதாரிச் சாமியார் சொன்ன வார்த்தைகள் தான்.. ஆனாலும் அர்த்தமுள்ள வார்த்தைகள்....
“தேவைகள் உள்ளவன் வழிபடுகிறான்
தேவைகள் அற்றவன் வழிபடப்படுகிறான்”

Unknown சொன்னது…

//“தேவைகள் உள்ளவன் வழிபடுகிறான்
தேவைகள் அற்றவன் வழிபடப்படுகிறான்”//

சாமி யாருங்கோ ???

அன்புடன் அருணா சொன்னது…

ரொம்ப நல்லாருக்கு!

Philosophy Prabhakaran சொன்னது…

உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்...