22 செப்., 2011

மீந்த இரவுகள்...

இரவுகளை 
தின்று தீர்க்கும்
தீராக் காமமாய் 
நிலப்பெண்ணுக்கு ஆடைபோர்த்தும்
கிருஷ்ணப் பெருமழை..

பசித்தபின்
ருசி தெரியாது 
காசுக்குப் போகலாம் 
வேசையால் வரும் 
வியாதிக்கு பயம்..

சுடலைமாட சுவாமிக்கு 
குளிருது கொதிக்குது 
ஒற்றையாய் நின்று
தவிக்குது தயங்குது..

போதையில் பகிர்ந்ததை
தெளிந்தபின் பிதற்றுவான் 
நண்பன்..

அறிந்தபின் மனமே 
தெளிவது நீதி
மரத்தை வச்சவன் தண்ணி ஊத்தல..
 
அதே மழை 
அதே கிருஷ்ணன் 
அனுதினமும்
ராதைகள் அற்ற கிருஷ்ணன்..

8 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ராதைகள் அற்ற கிருஷ்ணன் கவிதை
நல்லாயிருந்தது...

பெயரில்லா சொன்னது…

வரிகள் அனைத்தும் செதுக்கப்பட்டு...
ரசித்தேன்...

Philosophy Prabhakaran சொன்னது…

தினசரி இடுகைகளை திரட்டிகளில் இணைப்பதற்கு ஒரு அமவுண்ட் போட்டு கொடுத்திடுங்க...

Sivakumar சொன்னது…

போனவாரம் வரைக்கும் நல்லாத்தான் இருந்தாரு...

Yaathoramani.blogspot.com சொன்னது…

போதையில் பகிர்ந்ததை
தெளிந்தபின் பிதற்றுவான் நண்பன்..
அறிந்தபின் மனமே தெளிவது நீதி மரத்தை வச்சவன் தண்ணி ஊத்தல//


அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 3

Unknown சொன்னது…

அழகா இருக்கு அருமை நண்பா

SURYAJEEVA சொன்னது…

இதை விட அற்புதமாய் கிருஷ்ணனை போட்டு தள்ள முடியாது

'பரிவை' சே.குமார் சொன்னது…

//அதே மழை
அதே கிருஷ்ணன்
அனுதினமும்
ராதைகள் அற்ற கிருஷ்ணன்..//


அருமையான கவிதை...