2 மே, 2010

ஞானம்ஒரு ஆர்வம் 
பல முயற்சி
திருட்டு மாங்காய்க்கு ருசி 
அதிகமாம் 
அவசர நேரங்களில் ருசி 
அறியா முயக்கம்.ஒரு வெற்றி 
பல பிழைகள் 
மாட்டிக்கொள்ளாதவரை
தவறெனத் தெரியாது ..

ஒரு தவறு 
பல குழப்பம் 
தொடர்வதா ,வேண்டாமா 
அறிந்தபின்னும் தொடரும்
அறியாமை..

ஒரு பார்வை 
பல சந்தேகம் 
உறவுக்கும், ஊருக்கும் 
மௌனங்கள் சொல்லும் 
ஆயிரம் அர்த்தங்கள் 

ஒரு பிரிவு 
பல வருத்தம் 
உனக்கும், எனக்கும்
இல்லாமல் இருந்திருந்தால் 
இதுவெல்லாம் இருக்குமா?

7 கருத்துகள்:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

super boss. arumai

Unknown சொன்னது…

நன்றி..ரமேஷ்

ஜெய்லானி சொன்னது…

//ஒரு வெற்றி
பல பிழைகள்
மாட்டிக்கொள்ளாதவரை
தவறெனத் தெரியாது ..//

சத்தியமான உண்மை.

Unknown சொன்னது…

நன்றி..ஜெய்லானி

Chitra சொன்னது…

Very nice!

ராமலக்ஷ்மி சொன்னது…

அருமை.

Unknown சொன்னது…

நன்றி...

ராமலக்ஷ்மி

சித்ரா