15 மே, 2010

மு.க.அழகிரி - பயோடேட்டா

பெயர்                                   : அஞ்சா நெஞ்சன் 
இயற்பெயர்                : மு.க.அழகிரி 
தலைவர்                            : அன்றும்,இன்றும் கலைஞர்  
துணை தலைவர்       : ஸ்டாலின் அல்ல 
மேலும் துணைத் தலைவர்கள் : xxxxxxx
வயது                                   : தலைவர் ஆகும் வயது  
தொழில்                           : அரசியல் மட்டுமல்ல 
பலம்                                     : சொன்னதை செய்வது 
பலவீனம்                          : அதிரடி அரசியல்  
நீண்ட கால சாதனைகள் : மதுரையே...கட் அவுட்டில் மறைந்து போனது 
சமீபத்திய சாதனைகள் : தலைவரை குழப்புவது 
நீண்ட கால எரிச்சல்       : மாறன் பிரதர்ஸ் 
சமீபத்திய எரிச்சல்            : நாடாளு மன்றம் 
மக்கள்                                          : கட்சிகாரர்கள் மட்டும் (எந்தக் கட்சியாகவும் இருக்கலாம்)
சொத்து மதிப்பு                     : அப்பாவிடம் இருக்கு  
நண்பர்கள்                               : தயாளு அம்மாள் மட்டும் 
எதிரிகள்                                    : யாராவது இருகிறார்களா?
ஆசை                                           : தலைவர் பதவி 
நிராசை                                     : முதல்வர் பதவி 
பாராட்டுக்குரியது         பழகுவதற்கு மிக எளிமையான மனிதர் 
பயம்                                  எனக்கா?
கோபம்                                       : கருத்து கணிப்பு 
காணமல் போனவை  : யாரும் என் பெயரை பயன்படுத்தக் கூடாது 
புதியவை                                 :  சூடான பேட்டிகள்  
கருத்து                                        : கட்சியை காப்பாற்றக் கூடிய திறமை இவரிடம்தான் இருக்கு....
டிஸ்கி                               ஸ்டாலினிடம் இருக்கும் நாற்பது வருட அரசியல் அனுபவம், நிர்வாகத் திறமை இவரிடம் இல்லை.

36 கருத்துகள்:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

இருங்க பாஸ் இத மதுரை பக்கம் போஸ்டர் அடிச்சு ஓட்டுறேன். வீட்டுக்கு ஆட்டோ வரும்...

Unknown சொன்னது…

//வீட்டுக்கு ஆட்டோ வரும்...//

நானும் ரவுடி ஆயிட்டேன் ...

Ahamed irshad சொன்னது…

///ஸ்டாலினிடம் இருக்கும் நாற்பது வருட அரசியல் அனுபவம், நிர்வாகத் திறமை இவரிடம் இல்லை///

உண்மைங்க...

Unknown சொன்னது…

//உண்மைங்க..//

நன்றி...அஹமது இர்ஷாத்

mohamedali jinnah சொன்னது…

நல்ல கட்டுரை.உண்மை மாதிரி இருப்பதால் மு.க.அழகிரி இதனை விரும்புவார்
சரியான நேரத்தில் எழுதப்படுள்ளது

Unknown சொன்னது…

//சரியான நேரத்தில் எழுதப்படுள்ளது//

நன்றி ஐய்யா..

ஜானகிராமன் சொன்னது…

செந்தில், அழகிரி பயடேட்டா நல்லாத்தேன் இருக்கு. ஆனா, அவரோ தற்போதய பெயர் அஞ்சாநெஞ்சர். அஞ்சாநெஞ்சன் என்று மதுரை பக்கம் சொன்னால் டவுசர் கிழியும்ணே. சூதானமா இருந்துக்கங்க.

Unknown சொன்னது…

//டவுசர் கிழியும்ணே. சூதானமா இருந்துக்கங்க.//

இன்னும் ஒரு வருடத்துக்கு அந்தப் பக்கம் போகாம பாத்துக்கிறேன்
தகவலுக்கு நன்றி ஜானகிராமன் அண்ணே ...

vasan சொன்னது…

ப‌ய‌ம் ..... என‌க்கா?
அழ‌கிரின‌வுட‌னே எங்க‌ `ப‌ய‌`டேட்டா ஆயிடுமோன்னு நினைச்சேன், ஆனா, ச‌ரியான ப‌யோடேட்டா தான்.
(70,80‍க‌ளில் சும்மா இருந்த‌ ச‌ங்கை, பின்ன‌ர் இவ‌ர்க‌ளே ஊதி ஊதி பெருசாக்கிட்டு, இப்ப‌ குத்துதே, குடையுதேன்னா)
சகோத‌ர‌ யுத்த‌க்க‌ண்காட்சியிலும், அர‌சிய‌ல் சாண‌க்கிய‌ அதிர்வுள்ள‌து.

Unknown சொன்னது…

//சகோத‌ர‌ யுத்த‌க்க‌ண்காட்சியிலும், அர‌சிய‌ல் சாண‌க்கிய‌ அதிர்வுள்ள‌து//
நன்றி அண்ணே..

சொந்த வீட்டில் நடந்தாலும் சகோதர யுத்தம்தான் .. நியூட்டன் மூன்றாம் விதி வேலை செய்யுது ..

மணிஜி சொன்னது…

துணைக்கு ஆள் இருக்கு

Unknown சொன்னது…

//துணைக்கு ஆள் இருக்கு//

வாங்க அண்ணே, இப்பதான் தெம்பு வந்திருக்கு

க.பாலாசி சொன்னது…

//டிஸ்கி : ஸ்டாலினிடம் இருக்கும் நாற்பது வருட அரசியல் அனுபவம், நிர்வாகத் திறமை இவரிடம் இல்லை.//

உங்களுக்கு ஆட்டோ ரெடி...அர்ட்ரஸ் சொல்லுங்க...

மரா சொன்னது…

அண்ணே உங்களுக்கு ரிஸ்க் எடுக்குறதுன்னா ரஸ்க் சாப்புடமாறியா? கொஞ்ச நாளைக்கு லிட்டில் இந்தியா போகாதீங்கண்ணே :)

ராஜ நடராஜன் சொன்னது…

பழகுவதற்கு மிக எளிமையான மனிதர்ன்னு சொல்றீங்க!அப்புறம் ஏன் எல்லோரும் ஆட்டோ!ஆட்டோன்னு கூப்பிடறாங்க?

Paleo God சொன்னது…

//மயில்ராவணன் சொன்னது…
அண்ணே உங்களுக்கு ரிஸ்க் எடுக்குறதுன்னா ரஸ்க் சாப்புடமாறியா? கொஞ்ச நாளைக்கு லிட்டில் இந்தியா போகாதீங்கண்ணே :)//

ஆமா செந்தில் அப்படியே உங்க போன் நம்பர் விலாசம் எல்லாம் போட்டு இங்க இருக்கீங்கன்றத சொல்லிடாதீங்க!! :))

VISA சொன்னது…

போஸ்டர்கள் ரசித்தேன். பயோ டேட்டாவும். நச்

Unknown சொன்னது…

//உங்களுக்கு ஆட்டோ ரெடி...அர்ட்ரஸ் சொல்லுங்க...//

அதெல்லாம் அண்ணனுக்கு பெரிய விசயமா என்ன ...

Unknown சொன்னது…

//அண்ணே உங்களுக்கு ரிஸ்க் எடுக்குறதுன்னா ரஸ்க் சாப்புடமாறியா? கொஞ்ச நாளைக்கு லிட்டில் இந்தியா போகாதீங்கண்ணே ://

அண்ணே நான் சிங்கப்பூர்ல இருக்கிற தைரியத்துலதான் இந்த பதிவ போட்டேன், காட்டி கொடுத்திட்டீங்களே ...

Unknown சொன்னது…

//பழகுவதற்கு மிக எளிமையான மனிதர்ன்னு சொல்றீங்க!அப்புறம் ஏன் எல்லோரும் ஆட்டோ!ஆட்டோன்னு கூப்பிடறாங்க?//

ஆட்டோ எளிமையானவர்களுக்கு மட்டுமே

Unknown சொன்னது…

//ஆமா செந்தில் அப்படியே உங்க போன் நம்பர் விலாசம் எல்லாம் போட்டு இங்க இருக்கீங்கன்றத சொல்லிடாதீங்க!! :)//

என்னை மாட்டி விடருதுல அவ்வளவு சந்தோசம், நடக்கட்டும் ...

Unknown சொன்னது…

//போஸ்டர்கள் ரசித்தேன். பயோ டேட்டாவும். நச்//

ரொம்ப நன்றி சார்

ரவி சொன்னது…

டிஸ்கி : ஸ்டாலினிடம் இருக்கும் நாற்பது வருட அரசியல் அனுபவம், நிர்வாகத் திறமை இவரிடம் இல்லை/////

நாற்பது வருடமாக அழகிரி செவ்வாய்கிரகத்தில் இருந்ததாக கம்பெனி செய்திகள் தெரிவிக்கின்றன.

டிஸ்கி உங்கள் அறியாமையைத்தான் காட்டுகிறது..

Unknown சொன்னது…

//நாற்பது வருடமாக அழகிரி செவ்வாய்கிரகத்தில் இருந்ததாக கம்பெனி செய்திகள் தெரிவிக்கின்றன.//

ரவி அண்ணே, இத நான் சொல்லல திரு.சோ அவர்கள் சொன்னது

Ranga Rasan சொன்னது…

annan azhagirikku nirvaga thiramai illiyaam.. Ippodaya Nilamayil Tamizh natta nivakikka thimai ullavar anna oruvarthaan..

Thenammai Lakshmanan சொன்னது…

நல்லாத்தான் இருக்கு செந்தில்..பயப்பட வேணாமா>>??

Unknown சொன்னது…

நல்லாத்தான் இருக்கு செந்தில்..பயப்பட வேணாமா>>??

வருகைக்கு நன்றி தேனம்மை ...

Aathira mullai சொன்னது…

நீண்ட கால எரிச்சல் : மாறன் பிரதர்ஸ்
இத படிச்சா செந்தில்னு இன்னொருத்தரும் இந்த லிஸ்டில் சேர்ந்துடுவாரு..மதுரைக்கு நீங்க போக வேண்டாம். மதுரை உன்களைத்தேடு வந்துடும் செந்தில். வரவழைக்க இப்படி ஒரு புது திட்டமா? துல்லியமான பயோடேட்டா...சிரித்து...வாழ்த்துக்கள்...

ஜெய்லானி சொன்னது…

ஒவ்வொன்னும் சும்மா நச்சுன்னு இருக்கு செந்தில் .

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) சொன்னது…

பட்டைய கிளப்புது போங்க,,,,நான் ஓட்டு போட்டத வெளிய சொல்லிடாதிங்க !!!!!

பெயரில்லா சொன்னது…

ஐயா, உமக்கு இது தேவையா பயோ டேட்டா வில்லங்கம்
அனேகமாக உனக்கு பயோ டேட்டா ரெடியாவுது
என்று நினைக்கிறேன் ஜாக்கிரதை !!!! !!!!!!!!

Unknown சொன்னது…

நன்றி...

ஆதிரா

ஜெய்லானி

BONIFACE

தாராபுரத்தான் சொன்னது…

ஏதோ நம்மால முடிந்தது...

Unknown சொன்னது…

//ஏதோ நம்மால முடிந்தது...//
உண்மைங்க ...

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

:)))

ஆட்டையாம்பட்டி அம்பி சொன்னது…

///பலவீனம்: அதிரடி அரசியல்///

இது தான் அவரது பலம். இதை அழகிரி, அம்மாவிடம் இருந்துதான் கற்று கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன்! அம்மாவிற்கும் இதே அதிரடி அரசியல் தான் பலம். மருபபீர்களா??


///ஸ்டாலினிடம் இருக்கும் நாற்பது வருட அரசியல் அனுபவம், நிர்வாகத் திறமை இவரிடம் இல்லை.///

உங்களுக்கு எப்படி தெரியும்? பத்தாம் கிளாஸ் படித்த அம்மாவிற்கு எப்படி எதை வைத்து தமிழ் நாட்டின் முதல்வர் பதவியை தூக்கிக் கொடுத்தீர்கள். ஆங்கிலத்தில் பேசினால்? அது அறிவா? பத்திரிக்கைகள் இது மாதிரி நம்மளை மூளை சலவை செய்து வைத்துள்ளது.

கருணாநிதிக்கு, காமராசருக்கு, பெரியாருக்கு, எம்ஜீயாருக்கு ஆங்கிலம் தெரியுமா? எம்ஜீயாருக்கு எதை வைத்து தமிழ் நாட்டின் முதல்வர் பதவியை தூக்கிக் கொடுத்தீர்கள்? அம்மாவிற்கு எப்படி எதை வைத்து தமிழ் நாட்டின் முதல்வர் பதவியை தூக்கிக் கொடுத்தீர்கள்??

பதவி வந்தால் அறிவு வரும். எம்ஜீயாருக்கு, அம்மாவிற்கு வந்தா மாதிரி. திமுககாரன் பதவிக்கு வரணும் என்றால் அவனுக்கு 40 வருட அரசியல் வேணும். அப்படி இருந்தாலும் அழகிரிக்கு 30 வருட அரசியல் அனுபவம் உள்ளதே? ஆனால் வேற எவன் வந்தாலும் அவனுக்கு கருணாநிதியை எதிர்க்க சதி இருந்தால் போதும். அப்ப அரசியல் அனுபவம் அப்புறம் ஒரு வெங்காயமும் தேவை இல்லை.