18 மே, 2010

எம்.எல்.ஏ எப்ப சாவான்காற்றில் ஏறி விண்ணை சாடும் வீரர்கள்  நாங்கள் 
திரைகளில் காதல் செய்ய, சண்டை போட, பாசம் வைக்க 
எமக்கான  பிம்பங்களாய் அவர்கள்,
பிரதி உபகாரமாய் போஸ்டர் ஒட்ட, பால் ஊற்ற
நாங்கள் 
இந்த மக்களை அவர்களின் துயரத்திலிருந்து மீட்கும் மீட்பராக 
அரசியல் அவதாரம் எடுப்பார்கள் அவர்கள்,
மீட்பருக்கு துணை நிற்கும் ஆடுகள் நாங்கள் ,
பிறந்த நாளோ, இறந்த நாளோ 
ஊரெங்கும் அவர்களின் பாடல்கள் 
செலவு மட்டும் எங்களோட ..
ரத்தத்தின், ரத்தமான 
உயிரின் உயிரான வார்த்தைகளுக்காக 
உயிரையும் எடுப்போம்,கொடுப்போம் 
குடும்பம், பிள்ளை குட்டிகள், உறவினர் படை சூழ 
வளமாகவே வாழ்கிறார்கள் அவர்கள்,
இன்னும் திரை அரங்குகள், தொலைக்காட்சி பெட்டிக்குள் 
இருந்து வெளிவரவில்லை நாங்கள். 
இப்போதைய எதிர்பார்ப்பு, தேவை  
எங்க தொகுதி எம்.எல்.ஏ எப்ப சாவான் ..

5 கருத்துகள்:

Chitra சொன்னது…

கவிதையில் கருத்து, மிளிர்கிறது.

ஹேமா சொன்னது…

கவிதை கொஞ்சம் சிரிக்க வைத்தாலும் உங்கள் ஆதங்கம் சரிதான் !

vasan சொன்னது…

ஊரு ரெண்டுப‌ட்டாத்தான் கூத்தாடிக்கு கொண்டாட்ட‌ம்.
அதுனால‌தான், அவுங்க‌ எப்ப‌வுமே இர‌ட்டை குழாயா,
எம்ஜியார் / சிவாஜி; ர‌ஜினி / க‌மல்; அஜீத் / விஜ‌ய்.
ஊருள்ள, அவ‌ன் ர‌ஜினிக்கு 10 அடி வைச்சு 100 லிட்ட‌ர்
பால் ஊத்துன‌, இவ‌ன் 15 அடி செய்ஞ்சு 150 லிட்ட‌ர்ன‌த்தான்
கெள‌ர‌தி. அவ‌ர் ஒரு ப‌ஸ் ஆளூ அனுப்புன‌, இவ‌ர் ரெண்டு,
இப்படி இவுன‌க‌ போட்டியிலே, கூத்தாடி ம‌வுசு ஏற‌,ஏற
டிஸ்டிபூட்ட‌ரு அள்ளிக் கெடுப்பாரு, முட்டாப்ப‌ய‌ ர‌சிக‌ர்க‌ள்தான்
த‌லைவ‌ரு ப‌ட‌ம்டான்னு தாலிய வித்தும் கொட்டுவான்ல.
டிவீல‌, பேப்ப‌ர்ல‌, தெரு சுவ‌ர்ல‌ன்னு முக‌த்தை பார்த்த‌தும்
நாடே ந‌ம்மதாண்டான்னு ம‌ன‌சு ந‌ம‌நம‌க்கும், அப்புற‌மென்ன‌
முட்டாப‌ய‌ ம‌க்க‌ளுக்கு, வேற‌ க‌தியே கிடையாதுன்னுட்டு
அர‌சிய‌லுக்கு வந்து ரெம்ப‌ நல்ல‌வனா அறிக்கைவிட்டுட்டு,
சொந்த‌ சேன‌ல், ப‌த்திரிக்கை, அர‌சு விள‌ம்ப‌ர‌முன்னு
எல்லாரையும் வ‌லைச்சு விலை பேசிப்புட்டு, த‌லைமுறை
சிந்த‌னை தொட‌ங்க‌ வேண்டிய‌துதான்.
ஆனால், இந்த‌ வ‌லைப்பதிவு ப‌ய‌லுக‌ கொசுக்க‌டி தாங்க‌ முடிய‌லையே?
டேய்..கூப்பிடு, ந‌ம்ம‌ ப‌ய‌லுக‌ள‌..

Unknown சொன்னது…

நன்றி .

ரமேஷ்

சித்ரா

ஹேமா

Unknown சொன்னது…

//ஆனால், இந்த‌ வ‌லைப்பதிவு ப‌ய‌லுக‌ கொசுக்க‌டி தாங்க‌ முடிய‌லையே?
டேய்..கூப்பிடு, ந‌ம்ம‌ ப‌ய‌லுக‌ள‌.//

வாசன் சார், அனுபினாலும் அனுப்புவாங்க ...