25 மே, 2010

யார் குற்றவாளி ?சில கொலைகள்
சில கொலை முயற்சிகள்
சில கள்ளக் காதல்கள்

தினசரி வாசிப்பவன் காதில் ஊரும் 
கற்பனை எறும்புகள்..


கொலைக்கான காரணங்கள் அலசி 
களவு போன கற்பு பற்றி 
விற்பனை பெருக்க, நல்ல பெண்களையும் 
விபச்சாரி ஆக்கும் 
வாரப் பத்திரிகைகள் சில ..

ஈழத்தில் கொல்லப் பட்டவருக்கு 
இரங்கற்பா பாடியும் 
நித்தியின் பஞ்சனை 
சித்திகளைக் காட்டியும் 
மூன்றாம் கண் வாழ்க்கை ..

சிறையில் கிடைக்கிறது 
செல்போன்
கஞ்சா 
இன்னபிற சமாச்சாரங்கள் ..
படித்து பார்ப்பவன் 
இன்னும் கூடுதலாய் சில 
கொலைகள் செய்வான்..

நான்காம் தூண் மட்டும் 
என் செய்வார்கள் ...?
காசுக்கு வேசம்
வேசிக்கு காசு ... 29 கருத்துகள்:

Ahamed irshad சொன்னது…

//படித்து பார்ப்பவன்
இன்னும் கூடுதலாய் சில
கொலைகள் செய்வான்//

ரசித்த வரி.... அருமையான கவிதை....

Unknown சொன்னது…

//அருமையான கவிதை..//

நன்றி .. அகமது இர்ஷாத்

சௌந்தர் சொன்னது…

கொலைக்கான காரணங்கள் அலசி
களவு போன கற்பு பற்றி
விற்பனை பெருக்க, நல்ல பெண்களையும்
விபச்சாரி ஆக்கும்
வாரப் பத்திரிகைகள் சில..

நல்ல வரிகள்

Unknown சொன்னது…

//நல்ல வரிகள்//நன்றி சௌந்தர்

VELU.G சொன்னது…

//நான்காம் தூண் மட்டும்
என் செய்வார்கள் ...?
காசுக்கு வேசம்
வேசிக்கு காசு ...
//

உண்மையான வரிகள் தான் செந்தில்

நல்ல கவிதை

பெயரில்லா சொன்னது…

//கொலைக்கான காரணங்கள் அலசி
களவு போன கற்பு பற்றி
விற்பனை பெருக்க, நல்ல பெண்களையும்
விபச்சாரி ஆக்கும்
வாரப் பத்திரிகைகள் சில ..//

சாட்டையடி..

முதல் முறை வருகை தரும் எனக்கு
உங்கள் பதிவு நல்லதொரு வேட்டை..
வாழ்த்துக்கள்

ஹேமா சொன்னது…

ஊடகச் சுதந்திரம்ன்னு சொல்லுவாங்க செந்தில்.கவனம்.

Unknown சொன்னது…

முதல் வருகைக்கு நன்றி கிறுக்கல்கள்

Unknown சொன்னது…

//உண்மையான வரிகள் //

நன்றி வேலு ..

settaikkaran சொன்னது…

எல்லாமே ஏய்த்துப் பிழைக்கிற வழிகளாய்த் தடம்புரண்டு கொண்டிருக்கிறதோ? :-(
நெத்தியடி!

Unknown சொன்னது…

//ஊடகச் சுதந்திரம்ன்னு சொல்லுவாங்க செந்தில்.கவனம்//

புண்ணாக்கு ...

Unknown சொன்னது…

//எல்லாமே ஏய்த்துப் பிழைக்கிற வழிகளாய்த் தடம்புரண்டு கொண்டிருக்கிறதோ? :-(
நெத்தியடி!//

காசேதான் கடவுளப்பா ..

நன்றி சேட்டைக்காரன் ...

நேசமித்ரன் சொன்னது…

நல்லா இருக்கு செந்தில்

Unknown சொன்னது…

//நல்லா இருக்கு செந்தில்//

நன்றி அண்ணாச்சி..

KUTTI சொன்னது…

NICE TO READ

MANO

Chitra சொன்னது…

நாட்டின் அவலங்கள்...... தெளிவாக உங்கள் கவிதையில் எழுதி இருக்கீங்க...

க ரா சொன்னது…

ரெளத்ரம் தெரிக்கிறது கவிதையில்.

Unknown சொன்னது…

சாட்டையடி கவிதை
மிகவும் அருமை

தமிழ் உதயம் சொன்னது…

நான்காவது தூண் நாசமாகி வெகுகாலம் ஆகிவிட்டது.

அன்புடன் நான் சொன்னது…

நச்!

Unknown சொன்னது…

நன்றி..

மனோ

சித்ரா

இராமசாமி கண்ணண்

கலாநேசன்

தமிழ் உதயம்

சி. கருணாகரசு

Anisha Yunus சொன்னது…

உண்மை. நான்காம் தூணாய் நின்று சமூகத்தை காக்கவேண்டிய பத்திரிக்கைகள் இன்று சமூகத்தை சாக்கடைக்குள் தள்ளி பணம் செய்யவே பார்க்கின்றன. நச்சென்ற வரிகள். நன்கு கொண்டு சென்றிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்

செந்தில்குமார் சொன்னது…

சிறையில் கிடைக்கிறது
செல்போன்
கஞ்சா
இன்னபிற சமாச்சாரங்கள் ..
படித்து பார்ப்பவன்
இன்னும் கூடுதலாய் சில
கொலைகள் செய்வான்..

நான்காம் தூண் மட்டும்
என் செய்வார்கள் ...?
காசுக்கு வேசம்
வேசிக்கு காசு ...


நல்லாயிருக்கு செந்தில்..........கே.ஆர்.பி

Bibiliobibuli சொன்னது…

இந்தியாவின் நான்காம் தூண்!!!! நல்ல கவிதை.

Unknown சொன்னது…

நன்றி ..

ரதி

அன்னு

செந்தில்குமார்

ஜெயந்தி சொன்னது…

நல்லாயிருக்கு கவிதை.

ஜெய்லானி சொன்னது…

//களவு போன கற்பு பற்றி
விற்பனை பெருக்க, நல்ல பெண்களையும்
விபச்சாரி ஆக்கும்
வாரப் பத்திரிகைகள் சில//

ஆட்டம் பாம் பதில் .

Karthick Chidambaram சொன்னது…

நான்காம் தூண் மட்டும்
என் செய்வார்கள் ...?
காசுக்கு வேசம்
வேசிக்கு காசு ...

வரிக்கு வரி ... ரௌத்திரம் ....
தூண் என்று ஒன்றெல்லாம் தரைமட்டமான விசயங்களுக்கு இல்லை.
என்னை பொறுத்த வரை ஒரு செய்தி உண்மையா என்று தெரிந்து கொள்ளவே பல செய்திகள் கேட்க / படிக்க / பார்க்க வேண்டி இருக்கு.
அப்படியும் பொய் வந்து உண்மையை மறைக்குது.

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

நல்லா இருக்கு செந்தில்