30 ஜூன், 2010

நிர்வாணா - பக்தியில்லாமல் அடைந்த கடவுள் தன்மை 18+..

Courtesy by TED


தொன்மை வாய்ந்த இந்து மதத்தில் கடவுளை அடைய ஏராள வழிகள் ஏராள குருமார்கள் உண்டு . நாம் படித்த, பார்த்த, கேட்ட கதைகளில், உண்மைகள் பற்றி ஆராய்வதே இல்லை, காரணம் கடவுளே நமது பலமும், பலவீனமும். சாதரணமாக கோவிலுக்கோ, சர்ச்சுக்கோ, மசூதிக்கோ போவதில் ஆரம்பித்து அதனை பின்பற்றுவது சாதாரண பக்தி. 

தீவிர பிரார்த்தனை, சேவை மனப்பான்மையுடன் கூடிய கிருத்தவர்கள் பாதிரியாராக மாறிவிடுவதுண்டு, இஸ்லாத்தில் இமாம்களாகவும் இன்னும் சில படிகள் மேலே போய் சூபிக்களாகவும் ஆகின்றனர். 

பொதுவாகவே இஸ்லாத்திலும், கிருத்துவத்திலும் தியானம் சாத்தானின் வேலையாக பார்க்கப்படுகிறது. இந்து மற்றும் பவுத்த மதங்களில் தியானம் முதல் படியாகவும், தவம் இறைவனை அடையும் அல்லது இறையுடன் கலக்கும் வழிமுறையாகவும்  இருக்கிறது. 

இன்று மனிதன் அறிவில், அறிவியலில் வளர்ந்த முற்போக்கான காலத்தில் கூட சாதி சொல்லி கடவுளையே பிரித்து வைக்கும் முட்டாள்தனமும், நான்தான் உயர்ந்தவன், நானே கடவுளுக்கு பூஜை செய்யும் அதிகாரம் உள்ளவன் என்று பார்ப்பனர்கள் இன்று வரை சொல்ல நம்மை கீழே வைத்து பார்க்கும் கடவுள் நமக்கு எதற்கு என யோசிக்காது, கோவில்களில் சிறுபிள்ளை விளையாட்டென கற்சிலைக்கு நடக்கும் கூத்துகளை படித்த மனிதர்களே அரங்கேற்றும் கொடுமை இந்து மதத்தில் அதிகம். என்றாலும் தியானம், யோகா இரண்டும் மதம் கடந்த நல்ல விசயம்..

இங்கு டாக்டர் ஜில் போல்தே டைலர் எந்த கடவுள் நம்பிக்கையும் கொள்ளது, தியானமோ,தவமோ செய்யாது ஒரு பரவச நிலையை (Enlightenment) அடைந்திருக்கிறார். தன் பரவச நிலையை புத்தரின் சொல்லான நிர்வாணா என்று சொல்லி பகிர்ந்து கொள்கிறார். பூஜை புனஸ்காரங்களும், ஆசாரங்களும், கடுமையான கடவுள் பக்தியும், வருத்திகொள்ளும் தவமும் கொண்ட சித்தர்களும் அடைய விரும்பிய பரவச நிலையை இதைபோல் எந்த முயற்சியும் செய்யாது ஒரு பெண்மணி அடைந்திருக்கிறார்.

வெகு சிலரே அதிலும் புத்தர் அவரின் வழிவந்தவர்கள், ஓஷோ மற்றும் விவேகானந்தர் போன்றோரே பரவசநிலை பற்றி சொல்லி சென்றிருக்கிறார்கள்.. இந்தப் பெண்மணி சொல்வது பொய் என்றும் நிறைய கருத்துக்கள் உண்டு.. புதுக்கோட்டை பக்கத்தில் இருக்கும் மெய்வழிச்சாலை இஸ்லாமிய பெரியவர் ஒருவரால் நிறுவப்பட்டது. ஷிர்டி சாய் பாபாவும் இஸ்லாமியரே.. இவர்களும் பரவசநிலையை அடைந்தவர்களே. 

இன்னொருவர் யு.ஜி.கிருஷ்ணமூர்த்தி அவர் ஆன்மீகத்தை கடுமையான வலி என சொல்லியிருக்கிறார். தேவைபட்டால் அது உன்னை வந்தடையும் என்றும், நீ அதை தேடாதே என்றும் சொல்லும் அவர் நாம் நம்பும் நிறைய கருத்துகளை உடைத்து சொன்னவர். அவர் எல்லோரிடமும் சொல்வது MAKE MONEY BE HAPPY. இவர் சொன்னதைபோல்தான் இந்தப் பெண்மணிக்கும் நிகழ்ந்திருக்க வேண்டும்.கடுமையான தியானம், யோகா கட்டுப்பாடு இவைகளை பின்பற்றி கிடைக்கும் பரவசநிலையே சரியானது என நண்பர் வசந்த் சொல்வார். 

இங்கு நான்தான் கடவுள் என சொல்லிக்கொண்ட நித்தியானந்தா,கல்கி பகவான் போன்ற பொறுக்கிகளும் இருக்கிறார்கள்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன...

இணைப்புகள்:

19 கருத்துகள்:

ஜெயந்தி சொன்னது…

தியானம், யோகா எல்லாம் கேள்விப்பட்டதோடு சரி. அது பற்றியெல்லாம் அவ்வளவு அறிவு இல்லை.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

இங்கு நான்தான் கடவுள் என சொல்லிக்கொண்ட நித்தியானந்தா,கல்கி பகவான் போன்ற பொறுக்கிகளும் இருக்கிறார்கள்.
//

ஏமாறும் மக்களும் இருக்கிறார்களே அண்ணா!!!

சசிகுமார் சொன்னது…

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். பதிவு அருமை நண்பா

Chitra சொன்னது…

interesting..... ம்ம்ம்ம்.....

சௌந்தர் சொன்னது…

இங்கு நான்தான் கடவுள் என சொல்லிக்கொண்ட நித்தியானந்தா,கல்கி பகவான் போன்ற பொறுக்கிகளும் இருக்கிறார்கள்.
திருடன். திருடுவதை விட்டு விட்டு சாமியார் ஆகி விடுகிறான். இதுல பேட்டி வேற கொடுறான்.

ஹேமா சொன்னது…

நம்புறவர்கள் இருக்கும்வரை இந்தத் தொழில் தொடர்ந்தபடிதான் இருக்கும் செந்தில்.

VELU.G சொன்னது…

மன்னிக்கவும் செந்தில் ஒரு சின்ன சந்தேகம்

இந்த பரவச நிலை என்பது தண்ணியடிப்பவர்களுக்கு, போதைப்பொருள் உபயோகிப்பவர்களுக்கு வருகிறதே அதுமாதிரியா. ஏனென்றால் ஆன்மிகத்தில் இதுபோன்ற பரவச நிலைகள் எனக்கு பெரும்பாலும் புரிவதே இல்லை.

நாடோடி சொன்னது…

புரித‌ல் தான் முக்கிய‌ம் செந்தில் அண்ணா...

bogan சொன்னது…

ஒரு மாற்றுப் பார்வையை முன்வைப்பதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்.இந்தப் பெண்மணி சொல்லும் பரவசநிலை கிடைப்பதற்காக எல்லோரும் தங்கள் மூளையில் ரத்தக் கசிவு வரும் என்று காத்திருக்கக முடியுமா என்ன..எல் எஸ் டி போன்ற போதைப் பொருட்களுக்கும் இந்த மாதிரியான ஒரு மாற்று இருப்பை பார்வையை சிலசமயம் அளிக்கின்றன என்று பதிவு செய்யப் பட்டிருக்கிறது.அல்டஸ் ஹக்ஸ்லி எழுதிய doors of perception இது தொடர்பாய் நல்ல ஒரு புத்தகம்.யோகா போன்ற உத்திகள் இந்த நிலைமையை பெரிய ஆபத்துகள் இல்லாமல் அடைய உதவுகின்றன.

தமிழ்போராளி சொன்னது…

அருமையான கட்டுரை வாழ்த்துக்கள் தோழரே

செந்தில்குமார் சொன்னது…

ம்ம்ம்ம் ...
நிறைய முறை முயற்ச்சி
செய்திருக்கிரென்
யேகா செய்ய இதுவரை முடியவில்லை செந்தில்

வால்பையன் சொன்னது…

பகிர்தலுக்கு நன்றி தல!

pichaikaaran சொன்னது…

all kind of bliss and super natural experinces are just imagination of mind..

this can be achived through drugs , yoga or surgery ( brain damage also can achive this )

smart சொன்னது…

சாய் பாபா இஸ்லாமியராகயிருந்தாலும், இந்துக்கள் அவரை இந்துவாகப் பார்ப்பது நமது மத நல்லிணக்கத்திற்கு சிறந்த உதாரணம் போல தல

smart சொன்னது…

//இந்த பரவச நிலை என்பது தண்ணியடிப்பவர்களுக்கு, போதைப்பொருள் உபயோகிப்பவர்களுக்கு வருகிறதே அதுமாதிரியா.//
இது உடலைக் கெடுக்கக் கூடிய பொருளால் வருவது, மற்றும் நிலையில்லாதது.

Bibiliobibuli சொன்னது…

ஒரு சாதாரண மனிதனுக்கு இந்நிலை வந்திருந்தால் அவர் பக்தி, நிர்வாணா பற்றி பேசுவாரா அல்லது மருத்துவசதிக்கு தான் பட்ட எட்டு வருட கஷ்டங்களை சொல்வாரா?

தவிர, Schizophrenia பற்றி அதன் தனிமனித, சமூக தாக்கங்களை பற்றி பேசுவார் என்று ஆர்வத்தோடு கேட்கத் தொடங்கினால் stroke வந்தது, நிர்வாணா நிலையை அடைந்தேன் என்பது சப்பென்றாகிவிட்டது.

Karthick Chidambaram சொன்னது…

சும்மா இருத்தல் என்கிற நிலையை பற்றி ஒரு முறை என் பேராசிரியர் சொன்னது நினைவுக்கு வருகிறது.
இந்த பெண் அந்த நிலையை அடைந்திருக்கிறார். சும்மா என்பது அதிக பொருள் பொதிந்த சொல் என்றும் அந்த நிலையை மூளை அடைவது மிகவும் கடினம் என்று அவர் சொன்னார். இந்த அம்மையாருக்கு வாழ்த்துக்கள்.

Kannan சொன்னது…

அப்பா, பிரமாதம். ரமண மகரிஷியின் "நான் யார்?" விளக்கத்தோடு இப்பெண்மணி பெற்ற தன்மை ஒத்து போகிறது!

ரமேஷ் வீரா சொன்னது…

இங்கு நான்தான் கடவுள் என சொல்லிக்கொண்ட நித்தியானந்தா,கல்கி பகவான் போன்ற பொறுக்கிகளும் இருக்கிறார்கள்.

சிறைசாலையிலும் சென்று காலில் விழும் முட்டாள்கள் இருக்கும் வரை இவர்களை போல் இன்னும் ஆயிரம்( நித்தியானந்தா,கல்கி பகவான் ) வந்துகொண்டே இருப்பார்கள் ...................... இதில் என்ன கொடுமை என்றால் இவர்களில் பெரும்பாலோர் படித்த பட்டதாரிகள்!!!!!????? .............இவர்களே இப்படி என்றால் பாமர மக்கள் (படீகாதவர்கள் ) என்ன செய்வார்கள் ????????.....