19 ஜூன், 2010

தமிழ் வலைப்பதிவு குழுமம் - நான் வெளியேறி விட்டேன்..

சமீபத்தில் தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் எதற்காக ஆரம்பிக்கப்பட்டது என்றொரு கேள்வி எழுப்பப் பட்டு அதற்கான ஆரோக்கியமான பதில்களுக்கு பதில் சும்மா மொக்கை போடுகின்றனர்.

என்னால் தினசரி அந்த மின்னஞ்சல்களை நீக்குவதற்கு எரிச்சலாக இருக்கிறது. உங்கள் தனிப்பட்ட மொக்கைகளை உங்கள் தனி மின்னஞ்சல்களுக்கோ அல்லது உங்கள் டிவிட்டரிலோ போட்டுக்கொள்ள வேண்டியதுதானே. ஏன் இங்குவந்து எல்லோரையும் எரிச்சல் படுத்துகிறீர்கள். 

நல்ல விசயங்களுக்கு பயன்படட்டும், மேலும் புதிய பதிவர்கள் வருகை தந்தால் அவர்களை வரவேற்று ஆதரிக்கலாம் என நினைத்து பொறுத்து இருந்தேன். ஆனால் முடியலீங்க..

சரி மொக்கையே போடக்கூடாதா என நீங்கள் கேட்கலாம்.. எதற்கும் ஒரு எல்லை உண்டு.. 

நீங்கள் செய்வது ....?

GOOD BYE...

17 கருத்துகள்:

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

சேம் பிளட் நேற்று நானும் அதிலிருந்து விலகிவிட்டேன்..

Unknown சொன்னது…

எனக்கும் எரிச்சலா தான் இருக்கு.. இதுக்கு பத்து லிங்க் குடுக்குறவங்க எவ்ளவோ தேவலாம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நான் எந்த விதத்திலையாவது உங்களை காயப்படுத்தீருந்தால் மன்னித்து கொள்ளுங்கள்

Unknown சொன்னது…

சந்தர்ப்பங்களே நம்மை சிந்திக்கவும், சிரமப்படவும், சிரிக்கவும் வைக்கின்றன.. பொது வெளி என்று வரும்போது எல்லாவற்றையும் சற்று யோசித்துதான் செய்ய வேண்டியிருக்கிறது.

போரம் பிடிக்கவில்லை எனில் சத்தமில்லாமல் வந்த நான்.. சத்தமில்லாமல் போயிருக்க வேண்டும்..

நிறைய நல்ல விசயங்களை எதிர்பார்த்த இடம் அது...

என் வெளிப்படையான இந்த அறிவிப்பு நண்பர்கள் மனதை சிரமப்படுத்திவிட்டது..

அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்..

ஜோதிஜி சொன்னது…

சந்தர்ப்பங்களே நம்மை சிந்திக்கவும், சிரமப்படவும், சிரிக்கவும் வைக்கின்றன.. பொது வெளி என்று வரும்போது எல்லாவற்றையும் சற்று யோசித்துதான் செய்ய வேண்டியிருக்கிறது.

வேறென்ன வேண்டும்?

ஜானகிராமன் சொன்னது…

நண்பா, உண்மையிலேயே வருத்தம் தரக்கூடிய செய்தி. தமிழ் வலைப்பதிவு குழுமத்தின் மூலமாகவே நான் உங்களைப்பற்றியும் பல நல்ல பதிவர்கள் பற்றியும் அறிந்தேன். இது அடுத்து வரக்கூடிய புதிய பதிவர்களுக்கு இழப்பு. எந்த ஒரு விவாதத்தையும் சம்மந்தமே இல்லாமல் மடைதிருப்பி நீர்த்துப் போகச்செய்வது ரசிக்கக் கூடியது தான் என்றாலும் அளவுக்கு மிஞ்சும் போது நஞ்சாகத் தான் கசக்கிறது. கொஞ்சம் உங்கள் முடிவை மறுபரிசிலனை செய்யுங்கள். நன்றி.

Unknown சொன்னது…

வணக்கம் ஜானகிராமன் அண்ணே ..,
எனக்கு தனிப்பட்ட மின்னஞ்சல்கள் தினமும் ஐம்பதுக்கு மேல் வரும். பொதுவாகவே அத்தனை மின்னஞ்சலகளையும் படிப்பவன் நான். கடந்த சிலநாட்களில் ஐநூறுக்கும் மேல் வந்த மின்னஞ்சல்கள் போரம் பற்றியதுதான்..அது ஒரு நல்ல கேள்வி மற்றும் நல்ல துவக்கம் ஆனால் போகப்போக வெறும் மொக்கை நிரப்பல்கள்.. நான் ஒருமுறை அங்கு சென்று சொல்லிப் பார்த்தேன், அது ஆயிரமாக மாறப் போகும் அபாயம் வேறு.. யாரவது மணி கட்டியே ஆகவேண்டும். நான் கட்டியிருக்கிறேன்..

புதிய பதிவர்கள் தங்கள் பதிவுகளை என் மின்னஞ்சல்களுக்கு அனுப்புங்கள். கட்டாயம் படிப்பேன்..

காலம் சரியாக வரும்போது நான் மறுபடியும் இணைந்து கொள்கிறேன்..

தங்கள் அக்கறைக்கு என் நன்றிகள் ...

நாடோடி சொன்னது…

செந்தில் சார் வ‌ண‌க்க‌ம்... நான் நேற்று தான் அந்த‌ மொக்கையில் க‌ல‌ந்து கொண்டேன்... இன்று உங்க‌ளுடைய‌ அறிவிப்பு!!!!... என்னுடைய‌ செய‌லும் உங்க‌ளை பாதித்திருந்தால் ம‌ன்னித்து விடுங்க‌ள்..

dheva சொன்னது…

Gr8 Decession Boss!

ஜெய்லானி சொன்னது…

என்ன சொல்றதுன்னே தெரியல..

உள்ளேன் ஐயா

ராம்ஜி_யாஹூ சொன்னது…

I have not joined so escaped from this trouble I guess.

Unknown சொன்னது…

செந்தில், நான் வேணும்ன்னே தான் கும்மி அடிச்சேன். சில நேரங்களில் கசப்பு மருந்து அவசியம் ஆகிறது.

சௌந்தர் சொன்னது…

நல்ல முடிவு அண்ணா

அன்புடன் நான் சொன்னது…

உங்க முடிவ நான் ஆதரிக்கிறேன்..... ஆனா நான் அதிலிருந்து வெளியேற மாட்டேன்..... ஏன்னா நான் அந்த சங்கத்தில இல்ல.

Sanjai Gandhi சொன்னது…

இதுக்கெல்லாம் பதிவா? அங்கயே ஒரு மெயில் அனுப்பிட்டு வெளிய வந்துட்டா முடிஞ்சது..

வால்பையன் சொன்னது…

நான் அப்பவே வந்துட்டேன்!
மொக்கை தாங்க முடியாமல்!

Chittoor Murugesan சொன்னது…

ஃபோரம் என்பதே ஜல்லி. கழுகு வலைச்சரத்தில் நான் எழுதிய வல்லரசு கனவுகள் பற்றிய சர்ச்சையில் இந்தியாவுல வறுமையே இல்லைன்னு சாதிச்சாய்ங்க. போடாங்க என்று அம்பேலாகிவிட்டேன்