19 ஜூன், 2010

இமிக்ரேசன் அனுபவங்கள் - சுடிதார் விற்பவன் - (இரண்டாம் பாகம்)

அந்த ஐவரும் வந்ததும் அவர்களை என்ன கேட்டாங்க என்றேன்.. எங்களுக்கு ஆங்கிலம் தெரியாது என சொல்லிவிட்டோம், ஒரு ஆபிசர் தமிழில் கேட்டான் அவனோ அரைகுறை நாங்க சொல்றது அவனுக்கு விளங்களை அதனால் அதுக்கு அப்புறம் யாரும் எதுவும் கேட்கலை என்றனர் . எனக்கு கொஞ்சம் நிம்மதி வந்தது. அப்ப அந்த இன்டர்போல் அதிகாரி வந்து அந்த ஐவருக்கும் இரண்டு வாரம் கழித்தும், உனக்கு ஒரு வாரத்திலும் திரும்பி போவதாக டிக்கெட்டில் இருக்கு. நீ உனது டிக்கெட்டை இரண்டு வாரம் கழித்து மாற்றிகொள் என்றார். நான் வேண்டுமானால் அவர்களின் டிக்கெட்டை ஒரு வாரம் இருக்கும்படி மாற்றித்தாருங்கள் என சொன்னேன்.

மோரிசியன் ஏர்லைன்சில் சென்று கேட்டால் ஒரு டிக்கெட்டுக்கு Rs.2500 மோரிசியன் பணம் கேட்டனர். அதிகாரி என்னைக் கட்ட சொன்னார். மீண்டும் கடுப்பான நான், நான்தான் எங்களை திருப்பி அனுப்ப சொல்லிவிட்டேனே பின் எதுக்கு இதெல்லாம் என்னால் பணம் கட்ட முடியாது, அது உங்கள் பிரச்சினை என்று சொல்லிவிட்டேன். காரணம் சென்னையில் இருந்து மொரிசியசுக்கு ஆப் சீசனில்  வாரம் ஒரு விமானம்தான் அதனால் எப்படியும் அவர் எங்களை திருப்பி அனுப்ப முடியாது என்று தெரியும், மும்பைக்கு தினசரி ஒரு விமானம் உண்டு, ஆனால் அதற்கு தனிக் கட்டணம் கட்டவேண்டும், அவர்கள் குழம்பிப் போய் மறுபடி கூடிப் பேசினார்.நான் எங்களுக்கு டீ வேணும் என்றேன். ஒரு அதிகாரி டீ வாங்கி வந்தார். பணம் கொடுத்தேன் வேண்டாம் என மறுத்து விட்டார்.

அதன் பிறகு எங்கள் லக்கேஜை எடுத்து வந்து பிரித்து பார்த்தனர். அவ்வளவும் சுடிதார், அதனைப் பார்த்ததும் எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தனர். அந்த இன்டர்போல் அதிகாரி என்னிடம் வந்து நீ சுடிதார் விற்கப் போகிறோம் என்று சொன்னால் அப்போதே விட்டிருப்போம்,அதை ஏன் எங்ககிட்டே சொல்லல என்றார். பிரச்சினை ஒரு முடிவுக்கு வரட்டும் என சாரி சார் என்றேன் . அவரோ நீ என்னிடம் விவாதம் செய்ததால் உன் பாஸ்போர்ட்டை நாங்களே வைத்துக் கொள்வோம் போகும்போது வாங்கிக்கொள் என்றார். நான் நீங்களே வச்சுகங்க என சொல்லிவிட்டு கிளம்பினோம்.

அப்போது அந்த இன்டர்போல் அதிகாரியும், மற்ற இரண்டு அதிகாரியும் தங்களுக்கு சுடிதார் தேவைப்படுவதாகவும், நாளை ஹோட்டலில் தங்கள் மனைவியுடன் வந்து வாங்கிக்கொள்கிறேன் என்று அவர்கள் மொபைல் எண் தந்தார்கள். ஆச்சர்யமான அதிகாரிகள்.

பிரச்சினை அத்தோடு முடியவில்லை, அந்த ஐவரையும் ஹோட்டலில் ரூம் எடுத்து தங்க வைத்துவிட்டு கிளம்பினேன், அவர்களோ அண்ணே இன்னைக்கு எங்களோடு தங்குங்க நாளைக்கு அவங்க ஆள் வந்ததும் போகலாம் என்று கெஞ்சவே என்னை அழைக்க வந்த நண்பர் ஆக்லூ வின் டிரைவரிடம், இன்றைக்கு ஓய்வு எடுத்துக் கொண்டு நாளை அவர்கள் வீட்டில் வந்து தங்குகிறேன் என அனுப்பிவிட்டேன்.அன்று முழுவதும் அவர்களை யாரும் வந்து அழைக்கவில்லை.

மறுநாள் காலை அந்த அதிகாரிகள் தங்கள் மனைவியுடன் வந்து தங்களுக்கு தேவைப்பட்ட சுடிதார்களை வாங்கிக் கொண்டனர். கேட்ட பணத்தைக் கொடுத்ததுடன், எங்கள் அனைவருக்கும் காலை உணவு வாங்கித் தந்தனர்.நான் முதல் நாள் ஏன் அப்படி நடந்து கொண்டீர்கள் என்று கேட்டேன். அவர்களோ நிறைய பேர் இங்கிருந்து சரக்கு கப்பல்களில் ஐரோப்பிய நாடுகளுக்கு திருட்டுத்தனமாக செல்கின்றனர், அங்கு பிடிபடும்போது அவர்கள் மொரிசியசில் இருந்து கப்பலில் ஏறியதாக சொல்வதால் இன்டர்போல் எங்களைக் கண்காணிக்க சொல்கிறது. நீங்கள் ஹோட்டல் புக்கிங் வைத்தில்லை மேலும் சுடிதார் விற்கப் போகிறேன் என்று சொன்னால் அப்போதே விட்டிருப்போம், நாங்கள் எங்கள் கடமையை செய்தோம் என்றனர். எனக்கு இங்கு அலுவலகம் உண்டு என்றேன். அதை ஏன் சொல்லவில்லை என்றனர். எனக்கும் தோணவில்லை மேலும் எதற்காக நீங்கள் என்னை விசாரிக்கிறீர்கள் என தெரியவில்லை என்றேன். இனிமேல் நீ வரும்போது எங்களுக்கு போன் செய்துவிட்டு வா என்றனர். முதல்நாள் அவ்வளவு கடுமையாக பழகிவிட்டு மறுநாள் ஒரு நண்பனைப்போல் நடந்த விதம் வியப்பு .

நண்பர்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டு இரவு மீண்டும் ஹோட்டலில் வந்து தங்குவேன் என உறுதி அளித்துவிட்டு நான் ஆக்லூவுடன் ஊரை சுற்றிப் பார்க்க கிளம்பி விட்டேன். 

அன்று இரவு ஹோட்டல் வந்தால் அவர்கள் ஐவரும் யாரும் வரவில்லை என்றனர். உங்கள் ஏஜென்டிடம் பேசினீர்களா என்றேன். பேசினோம் அவர் இன்னும் இரண்டு நாளில் ஒரு ஆள் வந்து அழைத்துக் கொள்வார் என்று சொன்னார் என்றனர். மேலும் தங்களிடம் காசு இல்லை. அதனால் இரவு சாப்பிடவில்லை என்றனர். நான் அவங்க ஏஜென்டிடம் பேசினேன். அவனோ அண்ணே இன்னும் நீங்க ஏன் அங்க இருக்கீங்க, அவங்கள நான் பாத்துக்கிறேன் நீங்க கிளம்புங்க என்றான். எனக்கு பசங்க ஏமாந்துட்டாங்க எனப்புரிந்தது. 

நான் அனைவருக்கும் இரவு உணவு வாங்கித் தந்துவிட்டு படுங்கள் காலையில் பேசிக்கொள்வோம் என்றேன். அவர்களும் சரியாக தூங்கவில்லை, எந்நாளும் தூங்க முடியவில்லை. இவர்களை இப்படியே விட்டுவிட்டு போக முடியாது. என் வேலை நிறைய இருக்கு என்ன செய்யப் போகிறேன் ..?.

அதற்குப் பிறகு நடந்தவற்றை அடுத்த பதிவில் சொல்கிறேன்.. 

27 கருத்துகள்:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இனிமேல் நீ வரும்போது எங்களுக்கு போன் செய்துவிட்டு வா என்றனர். முதல்நாள் அவ்வளவு கடுமையாக பழகிவிட்டு மறுநாள் ஒரு நண்பனைப்போல் நடந்த விதம் வியப்பு .
//

சிரிப்பு போலிஸோட நண்பர் அப்டின்னு தெரிஞ்சிருக்குமோ???

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//நான் அனைவருக்கும் இரவு உணவு வாங்கித் தந்துவிட்டு படுங்கள் காலையில் பேசிக்கொள்வோம் என்றேன். அவர்களும் சரியாக தூங்கவில்லை, எந்நாளும் தூங்க முடியவில்லை. இவர்களை இப்படியே விட்டுவிட்டு போக முடியாது. என் வேலை நிறைய இருக்கு என்ன செய்யப் போகிறேன் ..?.//

அவர்களை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. பாவம் பாஸ்

ஹேமா சொன்னது…

மொரீஸியஸ் போலீஸ் நல்லவங்க போல இருக்கு !

க ரா சொன்னது…

சூப்பரா போகுதுங்க. தொடருங்க.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொன்னது…

அருமை

தொடருங்க,,,

Chitra சொன்னது…

பாவம்ங்க..... என்ன ஆச்சு? நிச்சயம் நீங்கள் உதவி, நல்லபடியாகத்தான் நடந்து இருக்கும் என்று நம்புகிறேன். :-)

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

பரவாயில்ல மனசுல கொஞ்சூண்டு ஈரமும் இருக்கு மொரிசியஸ் போலீஸ்க்கு...

Santhappanசாந்தப்பன் சொன்னது…

அண்ணே, பொறுமையை ரொம்ப சோதிக்கிறீங்க!

சரியான இடத்துல வைச்சீங்க பாருங்க! அங்கதான்...!

AkashSankar சொன்னது…

மனிதநேயம் இல்லாத மனித விலங்குகள் ஏன் இப்படி ஏமாற்றி பிழைகிறார்களோ....அதுவும் இன்னொரு தேசத்தில்..

முனியாண்டி பெ. சொன்னது…

Very interesting...I'm waiting for next part.

Paleo God சொன்னது…

செந்தில் ஒரு புத்தகமாகவே போட்டுடலாம் போல! தொடருங்கள்..!

ஜானகிராமன் சொன்னது…

நல்ல, சுவாரசியமான பதிவு. எனக்கு புதிய அனுபவமாக இருக்கிறது, தொடருங்கள்.

ஜெய்லானி சொன்னது…

பாவம் அவங்க..!!

எல் கே சொன்னது…

nice expereince

நாடோடி சொன்னது…

ஏமாறுவ‌து ப‌ல‌வித‌ம்.... தொட‌ருங்க‌ள்..

Karthick Chidambaram சொன்னது…

ரொம்ப சஸ்பென்ஸ் வைக்குறீங்க நண்பரே ! தொடுருங்கள்! அருமையாக உள்ளது.

சௌந்தர் சொன்னது…

நல்ல இருக்கு தொடருங்கள்

Sabarinathan Arthanari சொன்னது…

ஆகா பயங்கரமான அனுபவம் போலவே!!

ஜெயந்தி சொன்னது…

அனுபவம் நன்றாக இருக்கிறது. அனுபவங்கள்தான் நிறைய கற்றுத்தரும்.

ரமேஷ் வீரா சொன்னது…

நான் அனைவருக்கும் இரவு உணவு வாங்கித் தந்துவிட்டு படுங்கள் காலையில் பேசிக்கொள்வோம் என்றேன். அவர்களும் சரியாக தூங்கவில்லை, எந்நாளும் தூங்க முடியவில்லை. இவர்களை இப்படியே விட்டுவிட்டு போக முடியாது. என் வேலை நிறைய இருக்கு என்ன செய்யப் போகிறேன் ..?.

pothum brother matravarkalukaka irakam pattathu.................... namakaga...................................................................

pichaikaaran சொன்னது…

truth is stranger than fiction

Jegadeesh Kumar சொன்னது…

நல்ல பதிவு நண்பரே

ரமேஷ் வீரா சொன்னது…

pothum brother, nama matravarkalukaga irakam patathu............................... namalukaga.................

Ahamed irshad சொன்னது…

நல்ல பதிவு ....

அமுதா கிருஷ்ணா சொன்னது…

சரி சரி சுடிதார் எப்படி விக்கணும் அதை சொல்லி குடுங்க அப்படியே..

யூர்கன் க்ருகியர் சொன்னது…

ending with twist ???

oh,... man i'm eagerly waiting for the next..

Unknown சொன்னது…

அனுபவங்களின் விமர்சனங்கள்...

ரமேஷ்

ஹேமா

ராமசாமி கண்ணன்

உலவு

சித்ரா

வசந்த் மாப்ள

சாந்தப்பன்

இராசராச சோழன்

முனியாண்டி

சங்கர்

ஜானகிராமன்

ஜெய்லானி

எல்.கே

கார்த்திக்

நாடோடி

சௌந்தர்

சபரிநாதன்

ஜெயந்தி

ரமேஷ் தம்பி

பார்வையாளன்

ஜெகதீஷ் குமார்

அமுதா கிருஷ்ணன்

அகமது இர்ஷாத்

யூர்கான் கிருகியர் ..

உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ....