26 ஜூன், 2010

காலில் மிதிபடும் கடவுள்...

படம் உதவி : சண்முகம் கணேசன் 
அறியப்படாத கடவுளிடம் 
இருக்கின்றன வரங்கள் 
எல்லா வழிமுறைகளிலும் 
முறையிட்டுப் பார்க்கிறோம் 
அசைந்து கொடுக்காத 
கற்சிலையாய், உலோகமாய் 
கடவுள் ..

யாத்திரைகள் செய்து 
படியேறி 
நெரிசல்களின் சிக்கி 
காணிக்கைகளை 
மயிர் உட்பட கொடுத்து 
கடவுள் தரிசனம் 
கரிசனம் காட்டாத 
கடவுள் ..

புரியாத மந்திரங்களின் 
மொழி அறிந்த கடவுளிடம் 
வேண்டுதலை சரியாய் சேர்க்க 
கருவறைக்குள்..?
தீபம் காட்டி 
பிழைப்பவனுக்கும் காணிக்கை..(கையூட்டு அல்ல)

கும்பிடோ ,அர்ச்சனையோ 
காவடியோ ,பலியோ 
தொழுகையோ ,பிரேயரோ
தியானமோ, தவமோ 
நீதான் கடவுளை அடைய 
முயல வேண்டும் 
ஒரு போதும் 
உன்னை அடைய விரும்பாத 
கடவுளிடம்..

எல்லோருக்கும் 
ஏதோ ஒருவகையில் பிழைப்பு 
எனக்கு 
கடவுள் பிழைப்பு..

31 கருத்துகள்:

Swengnr சொன்னது…

சாட்டை அடி! ஆனாலும் எதுவும் கஷ்டம் வந்த அங்கே தானே போய் நிக்க வேண்டிருக்கு!

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

:)))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

கடவுள் நீங்கள் நிறைய இந்த மாதிரி கவிதைகள் எழுத அருள் புரியட்டும்.

Chitra சொன்னது…

கும்பிடோ ,அர்ச்சனையோ
காவடியோ ,பலியோ
தொழுகையோ ,பிரேயரோ
தியானமோ, தவமோ
நீதான் கடவுளை அடைய
முயல வேண்டும்
ஒரு போதும்
உன்னை அடைய விரும்பாத
கடவுளிடம்..


..... அவர் என்னை "கூப்பிடும் போது", அன்னைக்குதான் எனக்கு "சங்கு" என்று சொன்னாங்களே.... அவ்வ்வ்வ்.....

AkashSankar சொன்னது…

நிஜங்கள் சொன்னால் சுடும் காலம் இது...

தமிழ் உதயம் சொன்னது…

கவிதை -வெறும் கவிதை அல்ல. உண்மை, கோபம், குமுறல்.

சசிகுமார் சொன்னது…

good post friend

ரமேஷ் வீரா சொன்னது…

புரியாத மந்திரங்களின்
மொழி அறிந்த கடவுளிடம்
வேண்டுதலை சரியாய் சேர்க்க
கருவறைக்குள்..?
தீபம் காட்டி
பிழைப்பவனுக்கும் காணிக்கை..(கையூட்டு அல்ல)

சாட்டை அடி!bro

ஜோதிஜி சொன்னது…

யுகபாரதிக்கு பிறகு உங்கள் கவிதைகள் ரொம்ப யோசிக்க வைக்குது,

கடவுளுக்கு வருவோம்.

கடவுள் தெய்வம் சாமி சக்தி எல்லாமே ஒரு குறியீடு.

தோற்றுவித்தவர்கள், வளர்த்தவர்கள், இதை மட்டுமே வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்துபவர்கள் என்று எவரிடமாவது போய் என்னை வந்து வணங்கு, மெட்டையடி, நடந்து வா, உருண்டு வா என்று எந்த தெய்வங்களும் கேட்பதும் இல்லை.

ஆதார பயம் மனதில் இருக்கும் வரைக்கும் இந்த ஆண்டவன் என்ற வார்த்தை பிரபஞ்சம் அழியும் வரைக்கும் இருக்கத் தான் செய்யும்.

என்ன வேண்டுமென்றாலும் கடவுள் மறுப்புக் கொள்கையை சப்தம் போட்டு சொல்லலாம்.
ஆனால் கிராமத்து வாழ்க்கையில் இன்னமும் ஒரு ஒழுங்கு இருப்பதும், இருக்க வைத்துக் கொண்டுருப்பதும் இந்த நம்பிக்கைகள் தான்.

இடையில் சுயநலத்தை புகுத்துபவர்களால் உருவாவது தான் மற்ற விசயங்கள்.

ஆனால் மீனாட்சி அம்மன் கோவிலில் வெளியே ஏலம் எடுப்பதில் தொடங்கி நடந்த கொலை முதல் நேற்று தங்கக்கதவு செய்வதாக சொல்லியுள்ளார். அதனால் சிறப்பு மரியாதை மல்லையாவுக்கு என்று சொல்லும் திருப்பதி வரைக்கும் ஆன்மிகம் என்பது அவசர வியாபாரமாகி விட்டது.

ஒவ்வொரு படமும் பொக்கிஷம்

நாடோடி சொன்னது…

தொட‌ர‌ட்டும் உங்க‌ள் ப‌ணி.....

dheva சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
dheva சொன்னது…

செந்தில்...@ சத்தியமா சீரியஸா கமெண்ட் போட்டு ஏதவது சொல்லலாம்னுதான் வந்தேன்...! சித்ராவோட இந்த கமெண்ட பார்த்தேன்....

// chitra சொன்னது…
கும்பிடோ ,அர்ச்சனையோ
காவடியோ ,பலியோ
தொழுகையோ ,பிரேயரோ
தியானமோ, தவமோ
நீதான் கடவுளை அடைய
முயல வேண்டும்
ஒரு போதும்
உன்னை அடைய விரும்பாத
கடவுளிடம்..


..... அவர் என்னை "கூப்பிடும் போது", அன்னைக்குதான் எனக்கு "சங்கு" என்று சொன்னாங்களே.... அவ்வ்வ்வ்.....//


வயிறு வலிக்க சிரிச்சுட்டு... அப்டியே...திரும்பிட்டேன்....! சித்ரா...உங்க குறும்புக்கு ஒரு அளவே இல்லையா.....ஹா...ஹா...ஹா.... இன்னும் நான் சிரிச்சுகிட்டே இருக்கேன் ..டீ கொண்டு வந்த ஆபிஸ் பாய் ஒரு மாதிரியா என்ன பாத்துட்டு போறான்...!

மூட நம்பிக்கை மறுப்பு... ஒத்துக்குறேன்...!

கடவுள் மறுப்பு ஒத்துக்க மாட்டேன்.... - ஏன்னா கடவுள் எதுன்னு தெரியாம மறுக்குறீங்க பாஸ்!

vinthaimanithan சொன்னது…

வானாகி மண்ணாகி
வளியாகி வெளியாகி
ஊனாகி உயிராகி
உண்மையுமாய் இன்மையுமாய்....!

VELU.G சொன்னது…

//
நீதான் கடவுளை அடைய
முயல வேண்டும்
ஒரு போதும்
உன்னை அடைய விரும்பாத
கடவுளிடம்..
//

நச்சென்னு சொல்லிருக்கிங்க செந்தில்

ஹேமா சொன்னது…

ராத்திரிக்கு சாமி வந்து கண்ணைக்
குத்தப்போகுது செந்தில் !

பாலா சொன்னது…

wow chancless
superunga nanbaa

Katz சொன்னது…

மிகவும் அருமை

Philosophy Prabhakaran சொன்னது…

இது நாத்திக கவிதையா...???

பா.ராஜாராம் சொன்னது…

கவிதையும் படமும் அருமை!

ஜெய்லானி சொன்னது…

அட பாவி மக்கா..!!நா போட்டோவை சொன்னேன்..!!

ஜெயந்தி சொன்னது…

அருமை!

தமிழ்போராளி சொன்னது…

இல்லாத கடவுளை தேடுபவர்களுக்கு சரியான சவுக்கடி.தன்னையே காப்பாற்றிக்கொள்ள முடியாத கடவுளிடம் முறையிட்டால் என்ன கிடைக்கும்? ஏ மனிதா மூடநம்பிக்கையில் இருந்து வெளியில் வா! உனக்கு ஆறறிவு உண்டு. உன்னால் எதும் செய்ய முடியும் என்று நம்பிக்கை வை. உன்னை நீ நம்பு உலகம் உனக்கு வசப்படும். கற்சிலையாக ஒரே இடத்தில் இருக்கும் ஒரு கல்லுக்கு அடிமையாகாதே..அருமையான கவிதை தோழரே! இன்னும் இது போன்ற கவிதைகளை எதிர்பார்க்கும் அன்பு தோழன்...

அன்புடன் அருணா சொன்னது…

பூங்கொத்து!

தமிழ் அஞ்சல் சொன்னது…

//எல்லோருக்கும்
ஏதோ ஒருவகையில் பிழைப்பு
எனக்கு
கடவுள் பிழைப்பு..
//


:-)

ரசிகன்! சொன்னது…

nicely said sir!!!

good one :)

Asiya Omar சொன்னது…

கேஆர்பி அருமையான படத்துடன் எழுதும் புரட்சி கவிதைகள் அருமையோ அருமை.சித்ரா கமெண்ட் பார்த்து சிரித்து முடியலை...

Thamizhan சொன்னது…

கோடிகளில் புரண்ட்டிட்ட பில் கேட்சும் துணைவியும்
சென்னையிலே நோய்பட்டக் குழந்தையிடம் கொஞ்சுகின்றார்
அதேநேரம் கோடிமக்கள் கொடுத்துவிட்ட பணத்தைத்தான்
வைரமணி மாலையாக திருப்பதிச் சிலையிடம் வடித்துவிட்டுக் கெஞ்சுகின்றார்
அமிதாப் பச்சன்.
காப்பாற்றியது கண்விழித்த மருத்துவர்தாம் பரிசென்னவோ பயமுறுத்தும் சிலைகளுக்கே!

ராஜா பேசுகிறேன் ... சொன்னது…

மாமா பாவம் கடவுள்!!!!!!!!!

ரமேஷ் வீரா சொன்னது…

கும்பிடோ ,அர்ச்சனையோ
காவடியோ ,பலியோ
தொழுகையோ ,பிரேயரோ
தியானமோ, தவமோ
நீதான் கடவுளை அடைய
முயல வேண்டும்
ஒரு போதும்
உன்னை அடைய விரும்பாத
கடவுளிடம்..

எல்லோரையும் காக்கும் கடவுளை காக்க வாசலில் பெரிய கதவுகள் ??????/?
அருமையான கவிதை அண்ணா , ..................??????

Unknown சொன்னது…

நான் இந்த கவிதைய இது போன்ற கவிதைய ரொம்ப வரவேர்க்கிறேன். நீங்க சொல்ல வந்த கருத்தும் கரெக்ட் தான்

பட்டாசு சொன்னது…

காலில் மிதிபடும் கடவுள்.
கடவுள் என்றல் கட + உள், அதாவது உனக்குள்ளே உள்ளதை காண கடந்து உள் செல்.
கடவுள் என் முன்னே நிற்கிறார்
விரித்த விழி மூடவில்லை,
உள்ளிழுத்த ஆவி வெளிவரவில்லை,
மயிர் கால்கள் குத்திட்டு நிற்க,
'சிலையாய்' நின்றேன்
கடவுள் என் முன்னே நிற்கிறார்.