25 ஜூன், 2010

புறம் பேசுதல் ..


ரகசியங்கள் நிரம்பி வழிகிற 
வாழ்வின் பயணங்களில் 
எதிர்ப்படும் 
உங்களிடம் இருக்கும் கதைகள் 
திசைகளை மாற்றிவிடுகிறது..

எல்லாக் கதைகளிலும் உண்மை 
இருப்பதில்லை 
உண்மையாகவும் நடந்ததில்லை 
எனினும் 
என் மனக்கூட்டில் திரையிடுகிற சோகங்களை 
சுமக்க முடியவில்லை..

பிரதி உபகாரங்களை 
எதிர் பார்க்காவிட்டாலும்  
கேட்கும் மனங்கள் அவசியமாகின்றன 
சில பொழுது போக்கு 
சில வம்பு 
சில கள்ளக் காதல் என 
விரும்பப்படுகின்ற கதைகள் 
சுவாரஸ்யம் கூட்டுபவை 

அவன், இவன் 
நீ, நான் 
எவனுமே சரியில்லை 
டீக்கடை ... சாக்கடை 

இப்படிதான் 
என் கதையும் 
கூட்டியும் ,குறைத்தும்
எனக்குப்  பின்னால் 
பேசப்படும் ..


36 கருத்துகள்:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

போட்டோ ரொம்ப அருமைங்க. எங்க இருந்து எடுக்குறீங்க. சான்ஸ் இல்லை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நான்தான் பர்ஸ்ட்டு

சௌந்தர் சொன்னது…

எப்படி எல்லாம் புரணி பேசுறாங்க. சூப்பர்

க ரா சொன்னது…

போட்டோ சூப்பர் செந்தில். கவிதையும்தான்.

அருண் பிரசாத் சொன்னது…

காட்சியும் கவிதையும் அருமை நண்பரே

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

அந்த psd போட்டோ சூப்பர்ப் செலக்சன்...

ஆனா இந்தகவிதைக்கு இந்த போட்டோ சரியா செந்தில்?

சூடு நிறைய...

AkashSankar சொன்னது…

ரூம் போட்டு யோசிப்பீங்களோ...

ரமேஷ் வீரா சொன்னது…

பிரதி உபகாரங்களை
எதிர் பார்க்காவிட்டாலும்
கேட்கும் மனங்கள் அவசியமாகின்றன
சில பொழுது போக்கு
சில வம்பு
சில கள்ளக் காதல் என
விரும்பப்படுகின்ற கதைகள்
சுவாரஸ்யம் கூட்டுபவை


இப்படிதான்
எனக்கு பின்னால் பேசப்படும்
என் கதையும்
கூட்டியும்
குறைத்தும்...


nengal matumalla bro, nam yelllrumthan............
super photo& super kavithai..................

பெயரில்லா சொன்னது…

kavithaiku ettra photo verynice

நேசமித்ரன் சொன்னது…

தூற்றுதல் என்னும் பொருளில் போட்டோ அமைத்திருப்பது அதையும் கவிதையின் ஒரு வரியாக்குகிறது

VELU.G சொன்னது…

உண்மைதான். ரொம்ப அருமை

க.பாலாசி சொன்னது…

அப்டி பேசுறவங்கப்பார்த்து ‘அடப்போங்கடா’ன்னு போயிட்டேயிருக்கணும்ங்க..

M. Azard (ADrockz) சொன்னது…

இப்படிதான்
என் கதையும்
கூட்டியும் ,குறைத்தும்
எனக்குப் பின்னால்
பேசப்படும் ..
unmaithaan,

ஷர்புதீன் சொன்னது…

is photo is original or graphics?? really super

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

படமும் கவிதையும் அருமை. இந்த போட்டோ எங்க எடுத்தீங்க செந்தில் நல்லாருக்கு..

அன்புடன் நான் சொன்னது…

இப்படிதான்
என் கதையும்
கூட்டியும் ,குறைத்தும்
எனக்குப் பின்னால்
பேசப்படும் ...//

மிக சரி.

அந்த தானியம் தூற்றும் படம் ... கொள்ளையழகு.

ஜெயந்தி சொன்னது…

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…
போட்டோ ரொம்ப அருமைங்க. எங்க இருந்து எடுக்குறீங்க. சான்ஸ் இல்லை//
நான் கேட்க நினைத்ததை ரமேஷ் கேட்டுவிட்டார். கவிதை அருமை.

ஜெயந்தி சொன்னது…

தமிலிஷ் என்னாச்சு?

தமிழ் உதயம் சொன்னது…

புறம் பேசுதல். பேசுபவனுக்கு சந்தோஷம். கேட்பவனுக்கு கொண்டாட்டம். பாதிக்கப்பட்டவனுக்கு திண்டாட்டம்.

Jeyamaran சொன்னது…

********/ரகசியங்கள் நிரம்பி வழிகிற
வாழ்வின் பயணங்களில்
எதிர்ப்படும்
உங்களிடம் இருக்கும் கதைகள்
திசைகளை மாற்றிவிடுகிறது/******
மிக சிறப்பு

Swengnr சொன்னது…

இன்னா போட்டோ பாஸு! ஏன்னா கவிதை பாஸு!

Chitra சொன்னது…

படமும், கவிதையும் நச். அருமை.

நாடோடி சொன்னது…

க‌விதை ந‌ல்லா இருக்குங்க‌....

Riyas சொன்னது…

நல்ல கவிதை... படம் சூப்பர்

கயல் சொன்னது…

என்ன அழகான கருத்து செந்தில்? மிகமிக அருமை.

//
இப்படிதான்
என் கதையும்
கூட்டியும் ,குறைத்தும்
எனக்குப் பின்னால்
பேசப்படும் ..
//
யதார்த்தம்

Katz சொன்னது…

bitter truth

Jey சொன்னது…

போட்டோவ பார்த்ததும், எனக்கு எங்க ஊரு நெனப்பு வந்திருச்சி சார், கம்பு சோளம், பருப்பு வகைகள களத்தில, இல்லைன தார் ரோட்ல( பஸ் மற்றும் வாகனங்கள் அதன் மேல் செல்வதிலேயே எல்லாம் உதிர்ந்து விடும்) போட்டு தூத்தி எடுப்பாங்க( போட்டொ நம்ம தலைவர் பன்றமாதிரிதான்).

தமிலிஷ்/டமிழ்10, லின்க் சரியா போடுன்க சார் ஓட்டு போடமுடியல( ஆனாலும் உங்க நேர்மை பிடிச்சிருக்கு ஓசி ஓட்டு கூட வேனாம்ன்னுரீங்களே)

ஜெய்லானி சொன்னது…

படமும் கவிதயும் அழகு..!!

ஹேமா சொன்னது…

புறம்பேசுதல் எனபது சிலருக்குப் பொழுதுபோக்கு.அன்றிலிருந்து இன்றுவரை தொடரும் எம் இனத்தின் ஒரு குணாதியத்தில் இதுவுமொன்று !

பெயரில்லா சொன்னது…

செந்தில். கவிதை ரொம்ப கெட்டி.ஆனால் அதைவிட அழுத்தமானது இந்த நிழற்படம். இப்படியொரு நிழற்படம் இந்த காண்டெக்சிட் பாத்ததேயில்லை.

Unknown சொன்னது…

ரசித்தவர்கள் ..

ரமேஷ்

சௌந்தர்

ராமசாமி கண்ணன்

அருண் பிரசாத்

பிரியமுடன் வசந்த்

ராசராசசோழன்

ரமேஷ் குமார்

உமா

நேசமித்திரன்

வேலு

பாலாசி

ஆசாரத்

சர்புதீன்

ஸ்டார்ஜன்

கருனாகராசு

ஜெயந்தி

தமிழ் உதயம்

ஜெயராமன்

சாப்ட்வர் எஞ்சினியர்

சித்ரா

நாடோடி

ரியாஸ்

கயல்

வழிப்போக்கன்

ஜெ

ஜெய்லானி

ஹேமா

காமராஜ் ..

வாசித்து .. பாராட்டிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்..

போட்டோ தந்து உதவிய சண்முகம் கணேசன் அண்ணனுக்கு என் நன்றிகள் ....

சுரேகா.. சொன்னது…

மிக அழகாகக் கூறியிருக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள்!

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

போட்டோ ரொம்ப அருமை
நல்ல கவிதை

vinthaimanithan சொன்னது…

இதுக்குப் பேரு தான் விஷூவல் கவிதையா??!!! கலக்குறீங்க போங்க

ஹுஸைனம்மா சொன்னது…

ஃபோட்டோதான் கவிதை இங்கே!! இந்த மாதிரி எவ்ளோ நாளாச்சு!! ஊருக்குப் போகும்போது தேடிச் சொல்லிக் கொடுக்கணும் பிள்ளைகளுக்கு!!

Pop Shankar சொன்னது…

உண்மைதான். ரொம்ப அருமை popshankar salem