4 ஜூன், 2010

ஏன் அப்படி செய்தாள்?

எனக்கொரு காதல் இருந்தது 
வெயிலடிக்கும் சித்திரை மாத 
சிறு மழையென 
சட்டென என் முன் வந்தவள் 
அவள் 

எல்லாவற்றுக்கும் 
பதில் வாங்கும் பிடிவாதக்காரி 
வாதத்தில் தோற்க விரும்பாத 
அழுத்தக் காரியும் கூட 

அவளை 
எவ்வளவு பிடிக்குமோ
அவ்வளவு  
வெறுக்கவும் தோணும் 

அவள் 
விரும்பும் யாவும் 
நான் விரும்ப வேண்டும் 

வெட்கப்பட்டு பார்த்ததில்லை 

ஒரு இரவின் மத்தியில் 
அவள் அழைப்பு
எதிர்முனையில் கண்ணீர் 
எப்போதும்போல இன்னொரு நாடகம் 
என்பதாய்
தூக்க அயர்ச்சியில் தொடர்பை 
துண்டிக்க 

மறுநாள் காலை 
துயரமாய் விடிந்தது ....

38 கருத்துகள்:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சரி இப்ப அந்த பொண்ணு எங்க இருக்கு அட்ரெஸ் கொடுங்களேன். ஹி ஹி

ஜெயந்தி சொன்னது…

ஏன் சோகமா முடிச்சிட்டீங்க?

Riyas சொன்னது…

கவிதை நல்லாயிருக்கு..

சௌந்தர் சொன்னது…

போன பதிவில் என்னுடைய கமெண்ட் வரவில்லை

சௌந்தர் சொன்னது…

மறுநாள் காலை
துயரமாய் விடிந்தது ....

என்ன துயரம் அது....

vinthaimanithan சொன்னது…

//அவள்
விரும்பும் யாவும்
நான் விரும்ப வேண்டும்//

எல்லா புள்ளைங்களும் அப்படித்தானா?!! :)

Unknown சொன்னது…

//சரி இப்ப அந்த பொண்ணு எங்க இருக்கு அட்ரெஸ் கொடுங்களேன். ஹி ஹி//

இப்ப அவங்க உயிரோடு இல்லை நண்பா !!

Unknown சொன்னது…

./ஏன் சோகமா முடிச்சிட்டீங்க?//
உண்மையை அப்படியே எழுதிவிட்டேன் ஜெயந்தி

Unknown சொன்னது…

//என்ன துயரம் அது...//
தற்கொலை ..

//போன பதிவில் என்னுடைய கமெண்ட் வரவில்லை//

சரி செய்துவிட்டேன் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி சௌந்தர் ..

Unknown சொன்னது…

நன்றி ரியாஸ்

Unknown சொன்னது…

//எல்லா புள்ளைங்களும் அப்படித்தானா?!! //

சொந்த அனுபவம் இருக்கா ராஜாராம்..

தமிழ் உதயம் சொன்னது…

./ஏன் சோகமா முடிச்சிட்டீங்க?//
உண்மையை அப்படியே எழுதிவிட்டேன் ஜெயந்தி

உண்மைகள் எப்போதும் சோகங்கள் நிறைந்தது.

Unknown சொன்னது…

//உண்மைகள் எப்போதும் சோகங்கள் நிறைந்தது//

உண்மைதான் தமிழ் உதயம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மன்னிச்சிக்கோங்க செந்தில்

Cable சங்கர் சொன்னது…

வலி...:(

Asiya Omar சொன்னது…

கவிதை மனதை தொட்டது,உண்மை நிகழ்வா?

காஞ்சி முரளி சொன்னது…

கவிதை மனதை தொட்டது...

Super...!

Unknown சொன்னது…

நன்றி ..

ரமேஷ் - பரவாயில்லை இந்தக் கவிதை புனைவாக நினைத்து எழுதி விட்டீர்கள்.

கேபிள்

ஆசியா ஓமர் - உண்மைதான்..

காஞ்சி முரளி ..

ஜானகிராமன் சொன்னது…

ஏன் அப்படி செய்தாள்? நமது இழப்புகள் எல்லாமே அவசியமான தருணங்களில் கண்களையும் காதுகளையும் பொத்திக்கொள்வதாலேயே ஏற்படுகிறது.

நெருஞ்சிமுள் கவிதை.

vinthaimanithan சொன்னது…

//சொந்த அனுபவம் இருக்கா ராஜாராம்..//

அந்தக் கொடுமைய ஏன் கேக்குறிய போங்க!

ஹேமா சொன்னது…

ஏதோ உங்க மனசுக்கு மட்டும் ஆறுதல் தேடியிருக்கீங்க !

vasan சொன்னது…

காத‌ல், அதுவும் முர‌ட்டுக் காத‌லுக்கு
க‌ண‌ நேர‌மென்ப‌து, கால‌ நேர‌ம‌ல்ல‌,
கால‌ன் நேர‌ம்.
அன்புக்காற்றை இன்னும் இன்னும்
எனக் கேட்டுக் கேட்டு விம்மி
உடைந்து சித‌றும் வ‌ண்ண‌ பலூன்.
உற‌க்க‌ம் அறிவீர்க‌ளா?

Unknown சொன்னது…

//அந்தக் கொடுமைய ஏன் கேக்குறிய போங்க!//


கேட்டா சொல்லணும் ராஜாராமன்..

Unknown சொன்னது…

//ஏதோ உங்க மனசுக்கு மட்டும் ஆறுதல் தேடியிருக்கீங்க !//

நன்றி ஹேமா ..

Unknown சொன்னது…

//உற‌க்க‌ம் அறிவீர்க‌ளா?//

அறியவில்லை இன்னும் ...

உங்கள் கவிதை நன்றாக உள்ளது வாசன் சார்.

Unknown சொன்னது…

//நெருஞ்சிமுள் கவிதை//

நன்றி ஜானகிராமன் ..

ராஜவம்சம் சொன்னது…

சில வலிகள் மனதை விட்டு நீங்குவது இல்லை
மரணம் வரை பின் தொடரும்

VELU.G சொன்னது…

நல்ல கவிதை செந்தில் கூடவே சோகமும்

Unknown சொன்னது…

நன்றி...

ராஜவம்சம்

VELU.G

பனித்துளி சங்கர் சொன்னது…

வலிகள் மெல்ல வார்த்தையாய் இறங்கி இருக்கிறது கவிதை எங்கும் . பகிர்வுக்கு நன்றி

Unknown சொன்னது…

நன்றி...

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫

எல் கே சொன்னது…

unmaigal palasamayam sogamaanathu

ஜெய்லானி சொன்னது…

:-((

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

மாப்பு விடியலில் என்ன சோகம் அதையும் சொல்லாமல் சொல்லியிருந்தால் கவிதை நிறைவு பெற்றிருக்கும்...

Karthick Chidambaram சொன்னது…

உளி தந்த சிலை
போல்
கவிதை அழகாய் இருந்தாலும்
வலி தந்த நிலை
வருத்தம் சொல்ல சொல்கிறது.

விடியலில்
ஒரு இருள் படர்ந்திருகிறது.
அடியனுக்கு
அவ்வளவாய்
கவிதை வராது

உங்கள் கவிதையின்
தாக்கம்தான் இது.

Unknown சொன்னது…

நன்றி....

LK

ஜெய்லானி

மாப்பு

Karthick Chidambaram

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

நெருங்கினால் சுடுகிறதே எரிகிறதே என
விலகினால் குளிர்கிறதே வலிக்கிறதே!
இதுவும் ஒருவகை ராட்சசத் தனமானது தான்!
மென்மை அங்கே எடுபடுவதே இல்லை.
சிக்கிக் கொண்டவர்கள் மாண்டபின்பும்
மிச்சமிருக்கும் ஒன்றின் பெயர் காதல்!

Unknown சொன்னது…

//சிக்கிக் கொண்டவர்கள் மாண்டபின்பும்
மிச்சமிருக்கும் ஒன்றின் பெயர் காதல்!//

நிதர்சனம்..

வருகைக்கும் கவிதைக்கும் நன்றி கிருஷ்ணமூர்த்தி சார்